TNPSC TAMIL ILAKKIYAM பகுதி – (ஆ) – இலக்கியம்- அறநூல்கள்

TNPSC  Payilagam
By -
0



பகுதி – (ஆ) – இலக்கியம்- அறநூல்கள்

அறநூல்கள் பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட பதினெண் கீழ்க்கணக்குநூல்கள் படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

பாடத்திட்டங்கள்:அறநூல்கள் - நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.

பதினெண் கீழ்க்கணக்குநூல்கள்

சங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு நூல்களைச் சேர்த்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்று வழங்கலாயிற்று.தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள் ஆகும்.நம் முன்னோர்கள் உருவாக்கிய, மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அறங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நூல்கள் அறநூல்கள் என்று அழைக்கப்படுகின்றன.தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்குநூல்கள் என அழைக்கப்படுகின்றன.இவை ஒவ்வொன்றும் பல்வேறு புலவர்களால் தனித்தனியான பாடப்பட்டவை.

பதினெண் கீழ்க்கணக்குநூல்கள் யாவை

  1. நாலடியார்
  2. நான்மணிக்கடிகை
  3. இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று)
  4. இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று)
  5. கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று)
  6. களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று)
  7. ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
  8. ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
  9. திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று
  10. திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
  11. திருக்குறள்
  12. திரிகடுகம்
  13. ஆசாரக் கோவை
  14. பழமொழி
  15. சிறுபஞ்சமூலம்
  16. கைந்நிலை
  17. முதுமொழிக் காஞ்சி
  18. ஏலாதி

அறநூல்கள் – 11
அகநூல்கள் – 6
புறநூல் – 1

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!