TAMIL ILAKKIYAM THIRUKURAL NOTES திருக்குறள் பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள்:

TNPSC  Payilagam
By -
0



திருக்குறள் பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள்:


TAMIL ILAKKIYAM THIRUKURAL NOTES பாடத்திட்டங்கள்:

1.திருக்குறள் தொடர்பான செய்திகள்,மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் பகுதியில் அன்பு, பண்பு, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத்துணைக் கோடல், பொருள் செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல். போன்ற 19 அதிகாரம் மட்டும் இடம் பெற்றுள்ளன.

TAMIL ILAKKIYAM THIRUKURAL NOTES  திருக்குறள்

  • இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
  • மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
  • மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"

TAMIL ILAKKIYAM THIRUKURAL NOTES  நூல் குறிப்பு:

  • திரு + குறள் = திருக்குறள்.
  • திருக்குறள் உலகப்புகழ் பெற்ற இலக்கியமாகும்
  • உலகப்பொதுமறை என்றும் அதனை அழைக்கிறோம்
  • இதனை இயற்றியவர் திருவள்ளுவர்
  • திருக்குறள் இரண்டு அடிகளாலான குறள் வெண்பாக்களால் ஆனது.
  • திருவள்ளுவ மாலை என்பது திருக்குறளின் பெருமை குறித்துச் சான்றோர் பலர் பாடிய பாக்களின் தொகுப்பாகும்.
  • பால்கள் - 3
  • அதிகாரங்கள் - 133
  • குறட்பாக்கள் – 1330
  • பாவகை - வெண்பா
  • திருக்குறளில் 133 அதிகாரங்களும், அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்களாக் 1330 குறட்பாக்கள் உள்ளன.
  • திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பால்களை உடையது.
  • அறத்துப்பால் - 38 அதிகாரங்கள்பொருட்பால் - 70 அதிகாரங்கள்இன்பத்துப்பால் - 25 அதிகாரங்கள்
  • பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது.
  • இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல் மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது
  • ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’ இதில் நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளின் அருமையையும் விளக்குகிறது.
  • மலையச்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 1812-இல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டார்.

திருக்குறளின் சிறப்புப்பெயர்கள்
  1. முப்பால்
  2. பொய்யாமொழி
  3. உலக பொதுமறை
  4. வாயுறை வாழ்த்து
  5. தமிழ்மறை
  6. திருவள்ளுவம்
  7. உத்தரவேதம்
  8. தெய்வநூல்

திருவள்ளுவர்

ஆசிரியர் குறிப்பு:

  • திருவள்ளுவர் வாழ்ந்த காலம் : கி.மு 31

திருவள்ளுவர் ஆண்டு :

  • கிறிஸ்துவ ஆண்டுடன் 31 ஆண்டுகளை கூட்டினால் வரும் ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு ஆகும்.உதாரணமாக 2020 +31 = 2051

திருவள்ளுவரின் சிறப்புப்பெயர்கள் :
  1. செந்நாப்போதார்
  2. நாயனார்
  3. தெய்வப் புலவர்
  4. முதற்பாவலர்
  5. மாதானு பங்கி
  6. பொய்யில் புலவர்
  7. பெருநாவலர்
வள்ளுவர் கூறிய உடைமைகள் :

  1. அன்புடைமை
  2. அடக்கமுடைமை
  3. ஒழுக்கமுடைமை
  4. பொறையுடைமை
  5. அருளுடைமை
  6. அறிவுடைமை
  7. ஊக்கமுடைமை
  8. ஆள்வினையுடைமை
  9. பண்புடைமை
  10. நாணுடைமை

TAMIL ILAKKIYAM THIRUKURAL NOTES திருக்குறள்(19 அதிகாரங்கள்)


TAMIL ILAKKIYAM THIRUKURAL NOTES திருக்குறள் பற்றிய முக்கியமான குறிப்புகள்:

ஒரே எழுத்தில் முடியும் குறள்:

"தொடிற்கடின் அல்லது காமநோய் போல
விடிற்கடின் ஆற்றுமோ தீ"

பகா எண்களை குறிப்பிடும் குறள்:

"ஒருமையுள் ஆமைபோ லைந்தடக்க லாற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து"

பகா எண்கள் : 1, 5, 7

மூன்று நீர்மங்கள் இடம் பெற்றுள்ள குறள் :

"பாலோடு தேன்கலந் த்ற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்"

மூன்று நீர்மங்கள் : பால், தேன், நீர்

துணை எழுத்தே இல்லாத குறள் :

"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக". (391)

ஒரே சொல் 6 முறை இடம் பெற்றுள்ள குறள்:

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு"
  • ஒரே சொல் 5 முறை 5 குறட்பாக்களிலும்,
  • ஒரே சொல் 4 முறை 22 குறட்பாக்களிலும்,
  • ஒரே சொல் 3 முறை 27 குறட்பாக்களிலும் இடம் பெற்றுள்ளன.

TAMIL ILAKKIYAM THIRUKURAL NOTES திருக்குறளின் சிறப்புகள்:

  • திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு- 1812
  • திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
  • திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
  • திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
  • திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
  • திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
  • திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
  • திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
  • திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
  • திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
  • திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
  • திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
  • திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
  • திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
  • திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி
  • திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-வீ,ங
  • திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
  • திருக்குறளில் 50 பிறமொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன .
  • திருக்குறளில் ஒரே பெயரில் அமைந்த 2 அதிகாரங்கள் : குறிப்பறிதல்
  • குறிப்பறிதல - (பொருட்பால் - அதிகாரம் 71)
  • குறிப்பறிதல் - (காமத்துப்பால் - அதிகாரம் 110)
  • திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.
  • திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
  • திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
  • திருக்குறளுக்கு சிறந்த உரை எழுதியவர் பரிமேலழகர் (மேலும் பலர் எழுதியுள்ளனர்)
  • திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
  • திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
  • திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
  • எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
  • ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
  • திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
  • திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.
  • திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது.
  • உலக மொழியில் உள்ள அறநூல்களில் முதன்மையானது திருக்குறள்.
  • விக்டோரியா மகாராணி, காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறள்.
  • திருக்குறளில் முப்பால்களிலும் 120-க்கும் மேற்பட்ட உவமைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
  • திருக்குறளில் அனிச்ச மலர் 4 முறையும், யானை 8 முறையும், பாம்பு 3 முறையும் சுட்டப்பட்டுள்ளன.
  • 46 குறள்களில் உயிரினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
  • அன்னம்,கூகை (ஆந்தை), கொக்கு, காக்கை, புள்(பறவை), மயில், ஆமை, கயல் (மீன்), மீன் (விண்மீன்), முதலை, நத்தம்(சங்கு), பாம்பு, நாகம், என்பிழாது(புழு) ஆகியன இடம் பெற்றுள்ளன.
  • இவரது ஊர் பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை. இவர் சமண மதத்தைச் சார்ந்தவர் என்பது உறுதி.
  • உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரம்ளின் மாளிகையில் உள் சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறளும் இடம் பெற்றுள்ளது.
  • இங்கிலாந்து நாட்டுக் காட்சிச் சாலையில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது.
  • ‘வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே’ என்றும் ‘இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே’ என்றும் பாவேந்தர் பாரதிதாசன் திருக்குறளைப் போற்றிப் புகழ்ந்துள்ளார்.
  • திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது.
  • திருக்குறள் ஏழு சீர்களால் அமைந்த வெண்பாக்களைக் கொண்டது.
  • ஏழு என்னும் எண்ணுப்பெயர் எட்டுக் குறட்பாக்களில் இடம் பெற்றுள்ளது.
  • அதிகாரங்கள் 133 இதன் கூட்டுத்தொகை ஏழு.(1+3+3)
  • மொத்த குறட்பாக்கள் 1330 இதன் கூட்டுத் தொகையும் ஏழு.(1+3+3+0)
  • திருக்குறளில் பத்து அதிகாரப் பெயர்கள் உடைமை என்னும் சொல்லில் அமைத்துள்ளன.

சிறந்த உரை :

  • பரிமேலழகர்
  • மு.வரததாசனார்
  • மணக்குடவர்

உரைசெய்த பதின்மர்:

  • தருமர்
  • தாமத்தர்
  • பரிதி
  • திருமலையர்
  • பரிப்பெருமாள்
  • மணக்குடவர்
  • நச்சர்
  • பரிமேலழகர்
  • மல்லர்
  • காளிங்கர்

 

TAMIL ILAKKIYAM THIRUKURAL NOTES பொதுவான குறிப்புகள் :

  • தமிழகத்தில் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுவது எப்போது - தைத்திங்கள் இரண்டாம் நாள்
  • திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் - ஊழியல் (அதிகாரம்: ஊழ்)
  • அறத்துப்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை - 4 இயல்கள்
  • பொருட்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை - 3 இயல்கள்
  • இன்பத்துப்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை - 2 இயல்கள்
  • வழக்கு என்பதன் பொருள் - வாழ்க்கை நெறி
  • என்பு என்பதன் பொருள் - எலும்பு
  • திருக்குறளில் உள்ள இயல்கள் - 9
  • படிறு என்பதன் பொருள் - வஞ்சம்
  • திருக்குறளை தமிழ்த்தாயின் உயிர்நிலை என்று புகழ்ந்து போற்றியவர் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
  • செம்பொருள் என்பதன் பொருள் - மெய்ப்பொருள்
  • நரிக்குறவ சமுதாயத்தினர் பேசும் வக்கிரபோலி மொழியில் திருக்குறளை மொழி பெயர்த்தவர் - கிட்டு சிரோன்மணி
  • ஆர்வலர் என்பதன் பொருள் - அன்புடையவர்
  • துவ்வாமை என்பதன் பொருள் - வறுமை
  • இனிதீன்றல் என்பதனை பிரித்தெழுதுக - இனிது + ஈன்றல்
  • திருக்குறள் கருத்துக்களை 1794ஆம் ஆண்டு முதன் முறையாக ஆங்கில மொழியில் அறிமுகப்படுத்தியவர் - கின்டெர்ஸ்லே
  • புரை என்பதன் பொருள் - குற்றம்
  • புகழ்பெற்ற தமிழ்மொழி இலக்கியமாகக் குறிப்பிடப்படுவது எது - திருக்குறள்
  • திருக்குறளில் பாயிரம் என்னும் இயலில் எத்தனை அதிகாரங்கள் உள்ளது - நான்கு
  • தமிழ்நாட்டில் ஐயன் திருவள்ளுவர் சிலை எங்கு அமைக்கப்பட்டுள்ளது - கன்னியாகுமரி

திருவள்ளுவமாலை:

ஆசிரியர் குறிப்பு
  • பெயர் – கபிலர்
  • காலம் – கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவரென்றும்ää சங்க காலத்திற்கு பின் வாழ்ந்தவர் என்றும் கூறுவர்.

நூல் குறிப்பு:

  • திருக்குறளின் சிறப்பினை உணர்த்த திருவள்ளுவமாலை என்னும் நூல் எழுந்தது.
  • இந்நூலில் ஐம்பத்தைந்து பாடல்கள் உள்ளன.
  • ஐம்பத்துமூன்று புலவர்கள் பாடியுள்ளனர்.
  •  திருவள்ளுவ மாலை “திணையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்டபனையளவு காட்டும் படித்தால்; – மனையளகு வள்ளைக்(கு) உறங்கும் வளநாட! வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி”. கபிலர்


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!