இந்தியாவை உலகளாவிய பாதுகாப்பு ஆராய்ச்சி, தொழில்நுட்ப மையமாக மேம்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது:
- (i) தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி (TDF) திட்டம்: தொழில்நுட்ப மேம்பாட்டு நிதித் திட்டம் என்பது இந்தியாவில் உற்பத்தி செய்யவும் என்ற முன்முயற்சியின் கீழ் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் முதன்மைத் திட்டமாகும்.
- (ii) டிஆர்டிஓ தொழில்துறை கல்வி சிறப்பு மையம்: அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் பாதுகாப்புக்கான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான நேரடி ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதற்காக பெங்களூரு ஐஐஎஸ்சி, பல்வேறு ஐஐடிக்கள், மத்திய/மாநில பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் நாடு முழுவதும் டிஆர்டிஓ தொழில்துறை கல்வி சிறப்பு மையத்தை டிஆர்டிஓ நிறுவியுள்ளது.
- (iii) பாதுகாப்பு, விண்வெளித் துறைகளில் புதுமையையும், தொழில்நுட்ப வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பாதுகாப்பு சிறப்புக்கான கண்டுபிடிப்புகள் (iDEX) கட்டமைப்பை அரசு தொடங்கியுள்ளது.
- இதுவரை, பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காக டி.டி.எஃப் திட்டத்தின் கீழ் பல்வேறு தொழில்களுக்கு ரூ. 334.02 கோடி செலவில் மொத்தம் 79 திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
PM-KISAN -தணிக்கை:
- நாடு முழுவதும் இதுவரை தகுதியற்ற பயனாளிகளிடமிருந்து (வருமான வரி செலுத்துவோர், அதிக வருமானம் பெறும் குழுக்கள், அரசாங்கத்தால் குறிக்கப்பட்ட தகுதியற்ற விவசாயிகளிடமிருந்து) மொத்தம் ரூ.335 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
- TNPSC EXAM KEY NOTES : PM-KISAN SCHEME DETAILS IN TAMIL
வெங்காய விவசாயிகளுக்கு உதவும் சிறப்பு திட்டம்:
- வெங்காயம் உள்ளிட்ட அழுகும் தோட்டக்கலைப் பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்வதற்காக சந்தை குறுக்கீட்டுத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது.
- TNPSC EXAM KEY NOTES : சந்தை குறுக்கீட்டுத் திட்டம்
ஐ.என்.எஸ் துஷில் கடற்படையுடன் இணைக்கும் நிகழ்ச்சி:
- விமானம் தாங்கி போரக்கப்பலான ஐஎன்எஸ் துஷில் கப்பல் இந்திய கடற்படையில் 2024 டிசம்பர் 09 அன்று ரஷ்யாவின் கலினின்கிராடிலிருந்து அர்ப்பணிக்கப்பட உள்ளது.
- TNPSC EXAM KEY NOTES : INS TUSHIL DETAILS IN TAMIL (Aircraft carrier INS Tushill)
மூன்று புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு இனி சுங்க வரி இல்லை:
- நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை 23.07.2024 தேதியிட்ட அறிவிக்கை 30/2024 மூலம் டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெக்கான், ஒசிமெர்டினிப், துர்வாலுமாப் ஆகிய மூன்று புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான சுங்க வரியை முற்றிலுமாக நீக்கியுள்ளது.
- மேலும், 08.10.2024 தேதியிட்ட அறிவிக்கை எண் 05/2024 மூலம் இந்த புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரிவிகிதங்கள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.
நாட்டில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 312 பேர் காசநோயால் பாதிப்பு:
- இந்தியாவில் காசநோயை ஒழிப்பதில் ஒரு தீர்க்கமான நடவடிக்கையாக, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து, 100 நாள் காசநோய் ஒழிப்பு பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளது.
- இந்தப் பிரச்சாரத்தை ஹரியானாவின் பஞ்ச்குலாவில் இருந்து அம்மாநில முதலமைச்சர் திரு நயப் சிங் சைனி, சுகாதார அமைச்சர் திருமதி ஆர்த்தி சிங் ராவ் ஆகியோர் முன்னிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா 2024, டிசம்பர் 7 அன்று தொடங்கிவைக்கிறார்.
- 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய காசநோய் பாதிப்புகள் மற்றும் இறப்புகளில் இந்தியாவின் பங்கு 26% ஆகும் என்று உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய காசநோய் அறிக்கை 2024 தெரிவித்துள்ளது.
- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மூலம் நாட்டின் பகுதிகளில் காசநோயின் பரவலை மதிப்பிடுவதற்காக 20 மாநிலங்களில் கணக்கெடுப்பை அமைச்சகம் நடத்தியது.
- நாட்டில் அனைத்து வயதினரையும் ஒரு சேர கணக்கில் கொண்டால் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 312 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- TNPSC EXAM KEY NOTES : தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம்
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 7-வது பதிப்பு:The 7th edition of the Smart India Hackathon (SIH):
- ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 7-வது பதிப்பு ஒரே நேரத்தில் 2024 டிசம்பர் 11-ம் தேதி நாடு முழுவதும் 51 மையங்களில் தொடங்குகிறது. மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், இந்த நிகழ்ச்சியை காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.
- ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் என்பது அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சில அழுத்தமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு தளத்தை மாணவர்களுக்கு வழங்குகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் மாணவர் குழுக்கள், 17 கருப்பொருள்களில் ஏதேனும் ஒன்றில் அவர்களது கண்டுபிடிப்பு அல்லது யோசனைகளை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகள் அமையும்.
- ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் நிகழ்ச்சியில், 54 அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், தொழில்துறைகள் 250-க்கும் மேற்பட்ட அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன. இதில் 86000-க்கும் அதிகமான அணிகள்கல்விநிலைய அளவில் பங்கேற்று இருந்தன. இதில் இருந்து சுமார் 49,000 மாணவர் குழுக்கள் தேசிய அளவிலான சுற்றுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அட்டவணை இனத்தினர் மற்றும் பழங்குடியின மக்களின் தாய்-சேய் நலத்துக்கான அரசின் நடவடிக்கைகள்:
- கர்ப்பிணி பெண்கள் சுகாதாரத் திட்டம் என்பது பிரசவங்கள் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் சில நிபந்தனைகளுடன் கூடிய பணப் பரிமாற்றத் திட்டமாகும்.
- பச்சிளங் குழந்தை சுகாதாரத் திட்டம் என்பது பொது சுகாதார நிறுவனங்களில் பிரசவிக்கும் அனைத்து கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு (ஒரு வயது வரை) அறுவை சிகிச்சை உட்பட அனைத்து சிகிச்சைகளும் கட்டணமில்லாமல் கிடைப்பதை உறுதி செய்கிறது. இலவச மருந்துகள், நுகர்பொருட்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறும் காலங்களில் உணவு, பரிசோதனை, போக்குவரத்து, தேவைப்பட்டால் இரத்தம் ஏற்றுதல் ஆகிய கட்டணமில்லா சேவைகளும் இதில் அடங்கும். ஒரு வயது வரை நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கும் இதே போன்ற வசதிகள் நடைமுறையில் உள்ளன.
- தாய் - சேய் நல சேவைகளை வழங்க ஏதுவாக, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன், ஒருங்கிணைந்து ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கிராமப்புறங்களில் துப்புரவு மற்றும் ஊட்டச்சத்து தினங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
- மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் இதனைத் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் பின்வருமாறு:
- ஜனனி சுரக்ஷா யோஜனா (JSY)
- ஜனனி ஷிஷு சுரக்ஷா காரியக்ரம் (JSSK )
- பிரதான் மந்திரி சுரக்ஷித் மாத்ரித்வா அபியான் (பிஎம்எஸ்எம்ஏ )
- உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டம் (UIP)
- ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்த்ய காரியக்ரம் (RBSK ):
டிசம்பர் 6 - பி.ஆர்.அம்பேத்கரின் நினைவுநாள்
- டிசம்பர் 6, 1956 இல், அவர் இறந்தார். சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய மறக்க முடியாத பங்களிப்பையும், அவரது சாதனைகளையும் நினைவுகூரும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு தினமானது (டிசம்பர் 6) மஹாபரிநிர்வான் திவாஸாக அனுசரிக்கப்படுகிறது.
டிசம்பர் 6 - தேசிய மைக்ரோவேவ் ஓவன் தினம்
- அவர்கள் உணவை சமைப்பதற்கும், மீண்டும் சூடுபடுத்துவதற்கும் வசதியாகவும் வேகமாகவும் செய்து அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கிய கண்டுபிடிப்பைக் கொண்டாடுவதற்கும் கௌரவிப்பதற்கும் டிசம்பர் 6 அன்று அனுசரிக்கப்படுகிறது.
டிசம்பர் 7 - ஆயுதப்படைகளின் கொடி நாள்:
- ஆயுதப்படை கொடி தினம் என்பது இது ராணுவ வீரர்களின் நலனுக்காகவும், போரில் உயிரிழந்தோர்களுக்காகவும், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் மீள்குடியேற்றத்திற்காகவும் இந்திய மக்களிடம் இருந்து நிதி சேகரிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறப்பு நாளாகும்,
- இது 1949 முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7 அன்று அனுசரிக்கப்படுகிறது.
டிசம்பர் 7 - சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம்
- மாநிலங்களின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான அதன் முக்கியத்துவம் மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்தில் ICAO வகிக்கும் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக டிசம்பர் 7 ஆம் தேதி சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN GOOGLE DRIVE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..