பிரதமரின் கிசான் திட்டம்:
- பிரதமரின் கிசான் திட்டம் என்பது நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமரால் தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டமாகும்.
- இந்தத் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை மூன்று சம தவணைகளில் ரூ.6,000/- நேரடி பணப்பரிமாற்றத்தின் மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தப்படுகிறது.
- இத்திட்டம் உலக அளவில் நேரடி பணப் பரிமாற்ற திட்டத்தின் மாபெரும் திட்டமாகும்.
- விவசாயிகளை மையமாகக் கொண்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகள் மூலம் இடைத்தரகர்களின் தலையீடு எதுவும் இன்றி திட்டத்தின் பயன்களை நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளையும் சென்றடைவதை உறுதி செய்துள்ளது.
- பயனாளிகளை பதிவு செய்வதிலும் சரிபார்ப்பதிலும் முழுமையான வெளிப்படைத்தன்மையை பராமரித்தல் மூலம் மத்திய அரசு இதுவரை(2019-2024) 18 தவணைகளில் ரூ.3.46 லட்சம் கோடிக்கு மேல் வழங்கியுள்ளது.
- ஒரு குடும்பத்தில் ஒரே ஒருவர் மட்டுமே PM கிசான் திட்டத்தின் பலன்களைப் பெற முடியும். ஒரு குடும்பத்தில் உள்ள விவசாய நிலம் யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதோ? அவர் மட்டுமே இந்தத் திட்டத்தின் மூலம் நிதி உதவியைப் பெற முடியும்.
- PM-KISAN திட்டத்தின் கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகள் உட்பட நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் அவர்களது நிலத்தின் அளவைப் பொருட்படுத்தாமல் பலன்களைப் பெற தகுதியுடையவர்கள்.
- நாடு முழுவதும் இதுவரை (2019-2024) தகுதியற்ற பயனாளிகளிடமிருந்து மொத்தம் ரூ.335 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.