STATE GOVERNMENT SCHEMES

TAMIL NADU GOVT SCHEMES
தமிழ்நாடு அரசுத் திட்டங்கள்/TAMIL NADU GOVT SCHEMES 



Welcome to our blog post on State Government Schemes. This post is designed to help aspirants of various competitive exams like Banking, SSC, Railways, Insurance, UPSC, and TNPSC Exams stay updated with the latest schemes launched by the state governments.

Here are some of the key schemes implemented by the Tamil Nadu state government:

  • Adi Dravidar and Tribal Welfare Department: This department implements schemes for the upliftment of Adi Dravidar and tribal communities.
  • Agriculture - Farmers Welfare Department: This department focuses on the welfare of farmers and the development of agriculture.
  • BC, MBC & Minorities Welfare Department: This department is responsible for the welfare of Backward Classes, Most Backward Classes, and Minorities.
  • Co-operation, Food and Consumer Protection Department: This department ensures the availability of essential commodities and protects consumer rights.
  • Finance Department: This department is responsible for the financial administration of the state.
  • Handlooms, Handicrafts, Textiles and Khadi Department: This department promotes the handloom, handicraft, textile, and Khadi industries.
  • Labour Welfare and Skill Development Department: This department focuses on the welfare of laborers and the development of skills.

 


LIST OF TAMILNADU GOVERNMENT SCHEME IN TAMIL


பாதம் பாதுகாப்போம் திட்டம் 2024:
  • நீரிழிவு நோயாளிகளின் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு பார்வை பயணத்தில் "பாதம் பாதுகாப்போம் திட்டம்" அரசின் ஒரு முன்னோடித் திட்டமாகும். 
  • KEY POINTS: பாதம் பாதுகாப்போம் திட்டம் 2024

நீங்கள் நலமா?” திட்டம்:
  • “அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பயன்கள் உரிய முறையில் மக்களை சென்றடைகிறதா என்பதை உறுதி செய்வதற்காக "நீங்கள் நலமா?” திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது” என்ற புதிய திட்டத்தை வரும் 6ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்க இருக்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்
  • “அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பயன்கள் உரிய முறையில் மக்களை சென்றடைகிறதா என்பதை உறுதி செய்வதற்காக "நீங்கள் நலமா?” திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், தலைமை செயலாளர், அனைத்து துறைச் செயலாளர்கள் மக்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கருத்துகளைக் கேட்டறிவார்கள். முதல்வராகிய நானே நேரடியாக மக்களை தொடர்புகொண்டு பேசுவேன் எனத் தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

மணற்கேணி இணையதளம் Manarkeni Web
  • 1-12 வரை பள்ளி மாணக்கர்கள் பாடங்களை காணொளி வாயிலாக கற்க தமிழக அரசு மணற்கேணி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இதற்கான இணையதள முகவரி; https://manarkeni.tnschools.gov.in.

தமிழக பட்ஜெட்டில் 2024-25 திட்டங்கள் அறிமுகம்

‘முதலமைச்சரின் தாயுமானவர்’ என்ற புதிய திட்டம் அறிமுகம்:              
  • நிதி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 2.2% மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற அரசு முடிவு. மிகவும் வறிய நிலையில் உள்ள 5 லட்சம் ஏழைக் குடும்பத்தினருக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு உறுதி.
‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம் :
  • குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம் அறிமுகம். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு. 2030-க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். ஒரு கான்கிரீட் வீட்டுக்கு ரூ.3.50 லட்சம் ஒதுக்கப்படும்.
தொல்குடி என்கிற திட்டம் :
  • பழங்குடியினத்தவரை மேம்படுத்த ரூ.1,000 கோடி செலவில் தொல்குடி என்கிற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
பேராசிரியர் அன்பழகன் திட்டம்:
  • ரூ.1,000 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும். பேராசிரியர் அன்பழகன் திட்டம் என்கிற பெயரில் இது செயல்படுத்தப்படும்.
நீலக்கொடி கடற்கரைச் சான்றிதழ் திட்டம் :
  • தமிழகத்தில் கடற்கரைகளை மேம்படுத்த நீலக்கொடி கடற்கரைச் சான்றிதழ் திட்டம் அறிமுகம்.


பள்ளி போக்குவரத்து தன்னார்வலர்கள் திட்டம் :

  1. பள்ளிகளைச் சுற்றி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைக் குறைக்கும் வகையில் சென்னை போக்குவரத்து போலீஸார், ‘பள்ளி போக்குவரத்து தன்னார்வலர்கள்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளனர். 
  2. இதை, தி.நகரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்  தொடங்கி வைத்தார்.
  3. முதல் கட்டமாக இத்திட்டம் 4 பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது.

அல்பெண்டசோல்’ எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்டம் :
  1. தமிழகம் முழுவதும் 1.16 லட்சம் இடங்களில் குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெறும் விழாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், மாநிலத்தில் 19 வயது வரை உள்ள அனைவருக்கும், 30 வயது வரை உள்ள பெண்களுக்கும் ‘அல்பெண்டசோல்’ எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளாா். 
  2. மாநிலம் முழுவதும் நிகழாண்டில் 2.69 கோடி பேருக்கு அந்த மாத்திரைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக அங்கன்வாடி மையங்கள், அரசுப் பள்ளிகள், அரசுசாா் மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்கள், மக்கள் கூடும் பகுதிகள் என மொத்தம் 1.16 லட்சம் இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  3. பிப்ரவரி 10 - தேசிய குடற்புழு நீக்க நாள்

தொழில்நுட்பக் கல்வி கற்றலுக்கு துணை நிற்றல்/ TEALS – Technology Education and Learning Support:

நம் நாட்டிலேயே முதல்முறையாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயிற்றுவிப்பதற்காக ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்துடன் இணைந்து ‘டீல்ஸ்’ எனும் திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை தொடங்கியுள்ளது.


நெய்தல் மீட்சி இயக்கம் / Neithal Recovery Movement

கடலோர வளங்களை மீட்டெடுத்து பாதுகாக்க ‘நெய்தல் மீட்சி இயக்கம்’ தமிழக அரசு சாா்பில் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களில், 1076 கிலோமீட்டர் தூரத்தை மையமாகக் கொண்டு, வரும் ஐந்து ஆண்டுகளில் உலக வங்கியின் நிதி உதவியுடன் நெய்தல் மீட்சி இயக்கம் செயல்படுத்தப்படும். 

மக்களுடன் முதல்வர்” திட்டம் 

அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 18-12-2023  கோயம்புத்தூரில் தொடங்கி வைத்தார்

தென்னை நார் கொள்கை 2024:

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் 04.01.2024 தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் போட்டிகளை உணர்ந்தும்,தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்களின் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திடவும் தயாரிக்கப்பட்டுள்ள “தென்னை நார் கொள்கை 2024”-ஐ வெளியிட்டார். 

“உங்களை தேடி உங்கள் ஊரில்” :

  1. அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 23-11-2023 அன்று அறிவித்தார். அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, இத்திட்டம் 31.01.2024 புதன்கிழமை நடைமுறைக்கு வருகிறது.
  2. ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம், சென்னை மாவட்டம் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பிட்ட வட்டத்தில், ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். மேலும், முகாம் நடைபெறும் வட்டம் குறித்த தகவல், மாவட்ட ஆட்சித் தலைவரால் முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.
  3. இத்திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள், காலை 9 மணி முதல், மறுநாள் காலை 9 மணி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் தங்கி, பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வர். கள ஆய்வின் போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்கள், மேம்பட்ட சேவைகள் வழங்குதல், திட்டங்களை விரைவுபடுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண்பர். மேலும் அன்றையதினம், மாவட்ட ஆட்சியர்கள் மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களைப் பெற்று அவற்றின்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

இ-லியர்னிங் (e-learning)

  1. தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம், பொது நூலகத் துறை, அண்ணா நூலகம் இணைந்து e-learning என்னும் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
  2. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு (TNPSC), ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு (TRB), மத்திய அரசுப் பணியாளர் தேர்வு (UPSC), வங்கி, ரயில்வே போன்ற பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு மாதிரி வினாத்தாள்களை மாணவர்கள் இலவசமாக பயன்படுத்த அறிமுகம் செய்யப்பட்ட திட்டமாகும்
  3. இணைய தள முகவரி – https://elms.annacentenarylibrary.org/

‘டால்பின் திட்டம்’:

  1. மத்திய அரசின் வனவிலங்கு வாழ்விடங்களின் ஒருங்கிணைந்த மேம்பாடு திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு டால்பின்களை பாதுகாக்கும் நோக்கில் டால்பின் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது. 
  2. மேலும் இந்த திட்டம் ரூ.8.13 கோடியில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடல்வாழ் உயிரினங்களில் 9-க்கும் மேற்பட்ட டால்பின் வகைகள் காணப்படுகின்றன. குறிப்பாக மன்னாா் வளைகுடா உயிா்க்கோள காப்பகத்தில் இவற்றின் முக்கிய வாழ்விடங்கள் உள்ளன. சுற்றுச்சூழலை சமநிலையில் வைத்திருப்பதில் டால்பின்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 
  3. KEY POINTS :டால்பின் திட்டம்’

மொழி ஆய்வக திட்டம்:

  1. தமிழகத்தில் அரசு பள்ளியில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கேட்டல் , பேசுதல் படித்தல் ,எழுதுதல் திறன்களை மேம்படுத்தவதற்காக 2023 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் நாளில் “மொழி ஆய்வக திட்டம் ” தொடங்கப்பட்டது .
  2. இதன்மூலம் மாணவர்கள் தங்கள் கணினி மற்றும் செல்போன் வாயிலாக டிஜிட்டல் உள்ளடக்கத்தை பயன்படுத்தி மொழி அறிவை மேம்படுத்தி கொள்ள முடியும் . அக்டோபர் மாதம் முதல் 6,029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் “மொழி ஆய்வக திட்டம் ” செயல்படுத்த உள்ளது.
ஹெத்வாக் (Health Walk):

  • நவம்பர் 4 முதல் தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களிலும் ஹெத்வாக் என்னும் ஆரோக்கிய நடைபயணத் திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

மெய்புலம்:

  • தமிழக அரசானது வனவிலங்குகளின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக  மெய்புலம் என்ற திட்டத்தினை தொடங்கப்பட்டுள்ளது.

விதைப் பண்ணை திட்டம்:

  • உழவன் செயலி வாயிலாக தமிகழத்தில் மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ள விதைப் பண்ணை திட்டத்தில் இணைய விண்ணப்பிகலாமென தமிழக அரசு  சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 05.05.2018 முதல் வேளாண்துறை மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்த விவரங்களை விவசாயிகள் அறிந்து கொள்ள உழவன் செயலியானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மிழ்நாடு அரசுத் திட்டங்கள்:

அம்மா இரு சக்கர வாகனம்: 

  1. இத்திட்டம் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினத்தின் போது (2018, பிப்ரவரி 24) தொடங்கி வைக்கப்பட்டது. 
  2. பணியில் இருக்கும் பெண்களுக்காக ரூ. 25,000 வரை 50 சதவிகித மானியம் அளிக்கப்படும்.ஓட்டுநர் உரிமம், எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஆண்டு வருமானம் 2.5 இலட்சம் ஆகியன இத்திட்டத்திற்கான தகுதிகள். 
  3. வயது வரம்பு 18 வயது முதல் 40 வயதுடைய பெண்கள். 
  4. மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவரும் இத்திட்டத்தில் உள்ளடங்குவர்.

குடிமராமத்துத் திட்டம்

  1. இத்திட்டம் உள்ளூர் விவசாயிகளின் உதவியுடன் அணைகள், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் போன்ற தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  2. 2018 ஆம் ஆண்டு ஜூலை 04 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி இத்திட்டத்தைக் கண்காணிப்பதற்கு 7 இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  3. தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி 2017 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் கிராமத்தில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  4. இது கால்வாய்கள், தொட்டிகள், அடைப்புக் கதவுகள் ஆகியவற்றைப் பராமரித்தல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  5. இத்திட்டத்தின் முதல் நிலையில் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  6. இத்திட்டத்தின்படி, பயனாளிகள் அல்லது விவசாயிகள் தமது பங்காக 10 சதவிகித நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
  7. இந்த பங்களிப்பானது நிதி, உழைப்பு அல்லது பொருள் என எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம்.
  8. மேலும் இத்திட்டமானது உலக வங்கியிடமிருந்தும் நிதியுதவியைப் பெறுகிறது.
  9. நீர் நிலைகளில் உள்ள களைகளை அகற்றுதல் மற்றும் நீர்நிலைகளை வலுப்பெறச் செய்தல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

சத்துணவுத் திட்டம்

  • இது மதிய உணவுத் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது 1982 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதி ஆரம்ப நிலைப் பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்காகவும் கிராமப் புறங்களில் உள்ள பள்ளிப் பருவத்திற்கு முந்தைய நிலையிலான 2 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்காகவும் தொடங்கப்பட்டது.
  • 09.1982லிருந்து நகர்ப்புறங்களில் உள்ள சத்துணவு மையங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
  • 1984 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து 10 வயது முதல் 15 வயது வரை உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
  • ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஆண்டு முழுவதும் சத்துணவைப் பெறுவர் (விடுமுறை நாட்களைத் தவிர).
  • ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் மதிய உணவைப் பெறுவர்.

குறிக்கோள்கள்

  • மாநில அளவில் ஆரம்பக் கல்வி நிலையை அடைதல், கல்வி கற்பதை மேலும் ஊக்குவித்தல், பள்ளியில் சேருவதை ஊக்குவித்தல், கல்வி கற்பதைத் தக்க வைத்தல் மற்றும் இடை நிற்றலைக் குறைத்தல்.
  • பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளுக்குச் சத்துணவை கிடைக்கச் செய்வதன் மூலம் குழந்தைகள் இறப்பு, நோயுற்ற தன்மை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றை குறைக்க முடியும்.
  • ஊட்டச்சத்தின் நிலையை மேம்படுத்துவதன் மூலம் குழந்தைகளின் கற்றல் திறனை வளர்ச்சி பெறச் செய்தல்.
  • குறைபாடுகளினால் ஏற்படும் நோய்கள் உட்பட அனைத்து நோய்களையும் எதிர்த்துப் போராடுதல்.
  • கல்வி கற்றலில் உள்ள பாலின இடைவெளியைக் குறைத்தல்.
  • பல்வேறு மதங்கள் மற்றும் சாதிகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கூட்டாக உணவு பரிமாறுவதன் மூலம் நேர்மறை சிந்தனைகள் மற்றும் சகோதர உணர்வு ஆகியவற்றை ஏற்படுத்த முடியும்.

தினம் மற்றும் உணவுப் பட்டியல்

  • திங்கள் : வெள்ளை சாதம், வேக வைக்கப்பட்ட 1 முட்டையுடன் காய்கறி சாம்பார் (முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு 1 வாழைப்பழம்)
  • செவ்வாய் : வெள்ளை சாதம், வேக வைக்கப்பட்ட 1 முட்டையுடன் காய்கறி சாம்பார் (முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு 1 வாழைப்பழம்) மற்றும் வேக வைக்கப்பட்ட 20 கிராம் பச்சைப் பயிறு அல்லது கொண்டைக் கடலை.
  • புதன் : வெள்ளை சாதம், வேக வைக்கப்பட்ட 1 முட்டையுடன் காய்கறி சாம்பார் (முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு 1 வாழைப்பழம்).
  • வியாழன் : வெள்ளை சாதம், வேக வைக்கப்பட்ட 1 முட்டையுடன் காய்கறி சாம்பார் (முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு 1 வாழைப்பழம்).
  • வெள்ளி : வெள்ளை சாதம், வேக வைக்கப்பட்ட 1 முட்டையுடன் காய்கறி சாம்பார் (முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு 1 வாழைப்பழம்) மற்றும் 20 கிராம் வேக வைக்கப்பட்ட உருளைக் கிழங்கு.

தமிழ்நாடு முதல்வர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்

முன்பு சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் என்று அழைக்கப்பட்டது.

பெண் குழந்தையின் கல்வியை ஊக்குவித்தல்.

பெண் சிசுக் கொலையை ஒழித்தல்

ஆண் குழந்தைக்கான முன்னுரிமையை தடுத்தல்.

ஏழ்மையான குடும்பங்களில் உள்ள பெண் குழந்தையின் நலனை ஊக்குவித்தல் மற்றும் பெண் குழந்தையின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

18 வயதிற்கு மேல் மட்டுமே பெண்கள் திருமணம் செய்து கொள்வதை ஊக்குவித்தல்.

தகுதி வரம்புகள்: 

ஆண் குழந்தை இல்லாமல் ஒரேயொரு பெண் குழந்தை மட்டுமே உள்ள குடும்பம்.

இத்திட்டத்தின்கீழ் குழந்தையைச் சேர்க்கும் நேரத்தில் குழந்தை 3 வயதுக்குக் குறைவாக இருக்க வேண்டும்.

குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72,000ற்கு மேல் இருக்கக் கூடாது.

குழந்தையின் பெற்றோரில் எவரேனும் ஒருவர் தனது 35 வயதிற்குள் கருத்தடை செய்திருக்க வேண்டும்.

திட்டம் - I

08.2011 அன்று அல்லது அதற்கு மேல் பிறந்த பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.50,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

தமிழ்நாடு ஆற்றல் நிதி மற்றும் கட்டமைப்பு வளர்ச்சிக் கழக நிறுவனத்தின் மூலம் வைப்பு நிதியாக இந்நிதி சேமித்து வைக்கப்படும்.

இது ஒரேயொரு பெண் குழந்தையுள்ள குடும்பங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இந்த வைப்பு நிதிக்கான பற்றுச் சீட்டின் இரசீது பெண் குழந்தையின் குடும்பங்களுக்கு அளிக்கப்படும்.

திட்டம் - II

08.2011 அன்று அல்லது அதற்கு மேல் பிறந்த இரு பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.25,000 வங்கிக் கணக்கில் இருப்பு வைக்கப்படும்.

தமிழ்நாடு ஆற்றல் நிதி மற்றும் கட்டமைப்பு வளர்ச்சிக் கழக நிறுவனத்தின் மூலம் வைப்பு நிதியாக இந்நிதி சேமித்து வைக்கப்படும்.

இது இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இந்த வைப்பு நிதிக்கான பற்றுச் சீட்டின் இரசீது குழந்தைகளின் குடும்பங்களுக்கு அளிக்கப்படும்.

இரு திட்டங்களுக்கும் சேர்த்து

ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும் இந்த வைப்பு நிதி புதுப்பிக்கப்பட வேண்டும்.

குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்த பின்னர் இந்த வைப்புத் தொகை மற்றும் அதற்கான வட்டி ஆகியவை அந்த பெண்ணிற்கு அளிக்கப்படும்.

இந்தப் பயனைப் பெற அந்த பெண் குழந்தை பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதியிருக்க வேண்டும்.

எனவே இந்த முதிர்வுத் தொகையானது அந்தப் பெண் உயர் கல்வி பயில உதவி செய்யும்.

இந்த வைப்புத் தொகை இருப்பு வைக்கப்பட்ட 6-வது ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ரூ.1800 அந்தப் பெண்ணிற்கு ஊக்கத் தொகையாக அளிக்கப்படும்.

வருடாந்திர வருமான வரம்பு ரூ.72,000/- ஆகும்.

முடிவுகள் 

பெண் கல்வியானது 2001 ஆம் ஆண்டில் 64.55%லிருந்து 2011 ஆம் ஆண்டில் 73.44% ஆக உயர்ந்துள்ளது.

பெண் குழந்தைகளின் கல்வி இடை நிற்றல் குறைந்துள்ளது.

தொட்டில் குழந்தைத் திட்டம்

இந்த திட்டம் 1992 ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

2001 ஆம் ஆண்டில் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.

2011 ஆம் ஆண்டில் கடலூர், அரியலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.

குறிக்கோள்கள்

பாலின சமத்துவம் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் பெண் சிசுக்கொலையை ஒழிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பெண் குழந்தைகளுக்கு சமூக மேம்பாட்டை அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பயனாளிகள் 

கைவிடப்பட்ட மற்றும் சரணடைந்த பெண் குழந்தைகள்

தகுதிகள் 

கைவிடப்பட்ட பெண் குழந்தைகளைப் பெறுவதற்காக வரவேற்பு மையங்கள், மாவட்ட சமூக நல வாரிய அலுவலகங்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள், அனாதை இல்லங்கள் மற்றும் குழந்தைகள் நல இல்லங்களில் இந்த தொட்டில்கள் வைக்கப்படும்.

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள்/மையங்களில் வைக்கப்பட்ட கைவிடப்பட்ட குழந்தைகள் தகுதியுள்ள பெற்றோர்களால் தத்தெடுக்கப்படும்.

தத்தெடுப்பிற்கு வழங்கப்படாத நிலையில் உள்ள மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள், அவர்களது பராமரிப்புக்காகவும் பாதுகாப்பிற்காகவும் சிறப்பு பாதுகாப்பு நல மையங்களுக்கு அளிக்கப்படும்.

அரசு சாரா அமைப்புகள்/குடிமக்கள் ஆகியோர் இந்த தொட்டிலில் குழந்தைகளை வைப்பதற்கு ஊக்கப்படுத்தப் படுகிறார்கள்.

மாவட்ட சமூக நல அதிகாரிகள் மற்றும் சமூக நல மேம்பாட்டு அதிகாரிகள் ஆகியோர் பயனாளிகளுக்குத் தகவல்களை அளிக்கும் அதிகாரிகளாவர்.

இந்த தொட்டில் குழந்தை மையங்களை அமைப்பதற்கான மொத்த செலவு ரூ.47.45 இலட்சமாகும். ஒவ்வொரு மையமும் ஒரு கண்காணிப்பாளர், ஒரு துணை செவிலியர், ஒரு துணை உதவியாளர், இதர பணியாளர்கள் மற்றும் தேவையான பால் பொடி, மருந்துகள் மற்றும் ஆடைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

முடிவுகள்

குழந்தை பாலின விகிதம் 2001 ஆம் ஆண்டில் 942/1000 என்பதிலிருந்து 2011 ஆம் ஆண்டில் 943/1000 ஆக உயர்ந்துள்ளது.

தாய் திட்டம்

இது தமிழ் நாடு கிராம உறைவிட மேம்பாடு என்று அழைக்கப்படுகிது.

இது 2011-12 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு கிராம வளர்ச்சி நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது.

இது வளங்களை சமமற்ற முறையில் வழங்குதலில் உள்ள குறைபாடுகளைக் களைகிறது. மேலும் இது அனைத்து உறைவிடங்களுக்கும் குறைந்தபட்ச அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை வழங்குகிறது.

உறைவிட வளர்ச்சியின் மீது கவனத்தை செலுத்தும் ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும். மேலும் இந்தியாவில் உள்ள எந்தவொரு மாநிலமும் இந்த மாதிரியான ஒரு புத்தாக்கத் திட்டத்தைச் செயல்படுத்துவதில்லை.

குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகள்

குடிநீர் விநியோகம்

தெரு விளக்குகள்

சிமெண்ட் கான்கிரீட் சாலைகள்

இணைப்புச் சாலைகள்

மயானம்/எரியூட்டு இடங்கள்

எரியூட்டு இடத்திற்குச் செல்லும் வழிகள்

 

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!