பகுதி – (ஆ) – இலக்கியம்- திணைமாலை நூற்றைம்பது
திணைமாலை நூற்றைம்பது
- ஆசிரியர் மாக்காயனார் மாணாக்கன் கணிமேதாவியார்
- ஒவ்வொரு திணைக்கும் 30 பாடல்கள் வீதம் 150 பாடல்கள் அமைந்துள்ளன
- அகத்தினை கருத்துக்கள் அமைந்த இப்பாடல்களில் வடசொற்களும் சில கலந்து வரும்
- திணை = ஐந்து அகத்திணைகளும்
- திணை வைப்பு முறை = குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம்
- பாவகை = வெண்பா
- உள்ளடக்கிய பொருள்வகை = அகம்
- திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது.
- இந்நூல் ஐந்து நிலத்திணைகளினது பின்னணியில் இயற்றப்பட்டுள்ளது
- வரதட்சனை வாங்குவது தவறு என்று கூறும் நூல்
- குறிஞ்சி = 1 தொடக்கம் 31 வரை = 31 பாடல்கள்
- நெய்தல் = 32 தொடக்கம் 62 வரை = 31 பாடல்கள்
- பாலை = 63 தொடக்கம் 92 வரை = 30 பாடல்கள்
- முல்லை = 93 தொடக்கம் 123 வரை = 31 பாடல்கள்
- மருதம் = 124 தொடக்கம் 153 வரை = 30 பாடல்கள்
பெயர்க்காரணம்
திணைக்கு முப்பது பாடல்கள் வீதம் நூற்றைம்பது பாடல்கள் கொண்டதால் திணைமாலை நூற்றைம்பது எனப் பெயர் பெற்றது.
பொதுவான குறிப்புகள்
முக்கிய அடிகள்
- நூலாசிரியர் கணிமேதாவியார் சமண சமயத்தார். ஆனால் சமண சமயத்தார் வெறுத்து ஒதுக்கிய காதல், மணம், குடும்பம் போன்றவற்றின் மீது கொண்ட வெறுப்பு நீங்குமாறு இதனை படைத்துள்ளார்.
- இந்நூலின் ஆசிரியரே ஏலாதி என்னும் நூலையும் எழுதியுள்ளார்.
- இவர் பாண்டிய வேந்தன் ஒருவனால் ஆதரிக்கப்பட்டவர்.
- பதினெண்கீழ்க்கணக்கு அகநூல்களில் இந்நூலே பெரியது.
- இப்பாடலின் சில கருத்துக்கள் சுந்தரர் தேவாரத்திலும், மாணிக்கவாசகரின் திருக்கோவையாரிலும் காணமுடிகிறது.
- நூலில் உள்ள மொதப் பாடல்கள் = 153
- மூன்று பாடல்கள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை
- ஒரு சுடரும் இன்றி உலகு பாழாக
- இருகடரும் போந்தன என்றார்
- பொருள் பொருள் என்றால் சொல்
- பொன்போலப் போற்றி
- அருள் பொருள் ஆகாமையாக – அருளால்
- வளமை கொணரும் வகையினால் மற்றோர்
- இளமை கொணர இசை
- நாள்வேங்கை பொன்விளையும் நன்மலை நன்நாட
- கோள்வேங்கை போல்கொடியார் என்ஐயன்மார் – கோள்வேங்கை
- அன்னையால் நீயும், அருந்தழையாம் ஏலாமைக்கு
- என்னையோ? நாளை எளிது
- பாலையாழ்ப் பாண்மகனே! பண்டுநின் நாயகற்கு
- மாலையாழ் ஓதி வருடாயோ? – காலையாழ்
- செய்யும் இடமறியாய் சேர்ந்தாநின் பொய்ம்மொழிக்கு
- நையும் இடமறிந்து நாடு
No comments:
Post a Comment