Friday, July 28, 2023

TNPSC TAMIL ILAKKIYAM பகுதி – (ஆ) – இலக்கியம்- திணைமொழி ஐம்பது

பகுதி – (ஆ) – இலக்கியம்- திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது
  • ஆசிரியர் = கண்ணஞ் சேந்தனார்
  • பாடல்கள் = 50 (5*10=50)
  • திணை = ஐந்து அகத்திணைகளும்
  • திணை வைப்பு முறை = குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்
  • பாவகை = வெண்பா
  • உள்ளடக்கிய பொருள்வகை = அகம்
பெயர்க்காரணம்
  • திணைக்கு பத்து பாடல் வீதும் ஐம்பது பாடல்களைக் கொண்டதால் திணைமொழி ஐம்பது எனப் பெயர்பெற்றது.
பொதுவான குறிப்புகள்
  1. அகத்தினை ஐந்திற்கும் தலைக்கு பத்துப் பாடல் வீதம் 50 வெண்பாங்களை அமைந்த நூலாததலால் திணைமொழி ஐம்பது எனப் பெயர் பெற்றது.
  2. இதில் அமைந்துள்ள உவமைகள், அறிந்து இன்புறத்தக்கவை.
  3. இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
  4. இந்நூலில் 46 பாடல்கள் இன்னிசை வெண்பா ஆகும்.
  5. 4 பாடல்கள் நேரிசை வெண்பா ஆகும்
  6. குறிஞ்சித் திணையை முதலாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
  7. சேந்தனாரின் தந்தை சாத்தந்தையார் என்பார் சோழன் போரவைக்கொப்பெருனற் கிள்ளியை பாடியவர் என உ.வே.சா கூறுகிறார்.
  8. திணைமொழி ஐம்பது என்பது கண்ணன் சேந்தனார் என்னும் புலவர் பாடிய ஐம்பது அகப்பொருட் பாடல்களைக் கொண்ட நூல்.
  9. சங்கம் மருவிய காலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கு நூல் தொகுப்பில் அடங்கியது இது. கி.பி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது.
  10. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணும் வழக்கிற்கு அமைய அகப்பொருள் இலக்கியமான இது ஐந்து நிலத்திணைகளையும் பின்னணியாக வைத்து எழுதப்பட்டுள்ளது.
  11. இதிலுள்ள ஐம்பது பாடல்களும் திணைக்குப் பத்துப்பாடல்களாக அமைக்கப்பட்டுள்ளன.
  12. நூலின் அனைத்துப் பாடல்களும் எதுகை, மோனை கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.
  13. நச்சினார்கினியரரால் இந்நூலின் சில பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன
முக்கிய அடிகள்
  • அரிபரந்த உண்கண்ணாள் ஆற்றாமை நும்மின்
  • தெரிவார்யார் தேடும் இடத்து
  • துணிகடல் சேர்ப்பான் துறந்தான்கொல் தோழி!
  • தணியும் என்தோள் வளை
  • புன்னை பொரிமலரும் பூந்தண் பொழிலெல்லாம்
  • செங்கண் குயில்அக வும்போழ்து கண்டும்
  • பொருள்நசை உள்ளம் துரப்பத் துறந்தார்
  • வருநசை பார்க்கும்என் நெஞ்சு

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: