காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது:
- COVID-19 தொற்றின்போது கடந்த 2021, பிப்ரவரியில் இந்தியா, டொமினிகாவுக்கு 70 ஆயிரம் டோஸ் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை அன்பளிப்பாக வழங்கியது. அதோடு, டொமினிகாவின் சுகாதரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் இந்தியா உதவிகளை அளித்தது.
- இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தங்கள் நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்க உள்ளதாக டொமினிகா அறிவித்துள்ளது.
மாலத்தீவில் நடைபெற்ற 15வது உலக ஆணழகன் போட்டி 2024:
- 60 கிலோ எடை பிரிவில் சேலத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் 4 ஆவது இடத்தையும்
- 80 கிலோ எடை பிரிவில் கன்னியாகுமரியை சேர்ந்த ஜிஜோ மரியோ வெள்ளி பதக்கமும்
- 90 கிலோ எடை பிரிவில் நாமக்கலை சேர்ந்த சரவணன் தங்கப் பதக்கமும் வென்றனர்.
சர்க்கரை நோய் குணப்படுத்த முடியும் - ஆராய்ச்சியில் சீனா வெற்றி:
- சர்க்கரை நோய் தொடர்பான ஆராய்ச்சியில் சீனா முக்கியமான ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. இதுவரை ‘சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியும்; ஆனால், குணப்படுத்த முடியாது’ என்று இருந்த நிலைமையை சீனா மாற்றிக்காட்டியுள்ளது.
- அதாவது, ‘ஸ்டெம் செல் சிகிச்சை’ (Stem Cell Therapy) மூலம் சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியும் என்று இதுவரை விலங்கினங்களில் மட்டுமே உறுதிசெய்யப்பட்டிருந்த ஆய்வை முதன்முறையாக மனிதர்களிடம் மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளது.
- இது சர்க்கரை நோய்க்கான சிகிச்சையில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் இந்தச் சாதனைதான் இப்போது உலகளாவிய மருத்துவர்களிடம் பேசுபொருளாகியுள்ளது.
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!
No comments:
Post a Comment