Friday, July 28, 2023

TNPSC TAMIL ILAKKIYAM பகுதி – (ஆ) – இலக்கியம்-திரிகடுகம்

பகுதி – (ஆ) – இலக்கியம்-திரிகடுகம்

திரிகடுகம்
  • திரிகடுகம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. பாடல்கள் : 100 + 1
  • பாவகை : வெண்பா
  • கொல்லாமை, ஊன் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல் போன்ற இவ்வுலகிற்குரிய நல்வழிகளையும்,
  • அவாவறுத்தல், மெய்யுணர்தல் போன்ற மறுமைக்குரிய நல்வழிகளையும் இந்த நூல் எடுத்துக்காட்டுகின்றது.
  • இது மனித சமுதாயத்திற்கு இம்மைக்கும் மறுமைக்கும் நல்ல வழியினைக் காட்டும் நூலாகும்.
  • ஒவ்வொரு வெண்பாவிலும் மூன்று அறக்கருத்துகள் சொல்லப்படுகின்றன.
  • இந்நூலில் அறத்தின் உயர்வும் சிறப்பும் எடுத்துரைக்கப்படுகிறது.
  • இல்லறம் நல்லறமாக ஆவதற்குக் கணவனும் மனைவியும் எப்படி வாழ்தல் வேண்டும் என்பது 100 பாடல்களில் 35 இடங்களில் கூறப்படுகிறது.
பெயர்க்காரணம்
  • திரி = மூன்று
  • கடுகம் = காரமுள்ள பொருள்
  • சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் உடல் நோயைத் தீர்ப்பான.
  • அதனை போன்று இந்நூலில் அமைந்துள்ள ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்களும் உள்ளந்தின் நோயைத் தீர்க்கும்.
ஆசிரியர் குறிப்பு
  • ஆசிரியர் : நல்லாதானர்
  • இயற்பெயர் – ஆதனார்
  • ‘நல்’ என்பது அடைமொழி
  • காலம் - கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
  • இவர் வைணவ சமயத்தவர்.
  • இவர் திருநெல்வேலி மாவட்டம் “திருத்து” என்னும் ஊரை சேர்ந்தவர்.
  • “செருஅடுதோள் நல்லாதன்” எனப் பாயிரம் குறிப்பிடுவதால் இவர் போர் வீரராய் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது
பொதுவான குறிப்புகள்
  • “திரிகடுகம் = சுக்கு, மிளகு, திப்பிலி” என திவாகர நிகண்டு கூறுகிறது.
  • இந்நூலின் கடவுள் வாழ்த்து திருமாலைப் பற்றி கூறுகிறது.
  • இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் “இம்மூன்றும்” அல்லது “இம்மூவர்” என்னும் சொல் வருகிறது.
  • மருந்தின் பெயரால் பெயர் பெற்ற நூல்.
  • இந்நூலில் 66 பாடகளில் நன்மை தருபவை எவை என்பது பற்றிக் கூறப்பட்டுள்ளது.
  • இந்நூலில் 34 பாடல்களில் தீமை தருபவை எவை எனக் கூறப்பட்டுள்ளது.
  • கணவன் மனைவி வாழ்க்கை பற்றியே 35 பாடல்கள் உள்ளன.
  • 300 அறக்கருத்துக்கள் இந்நூலில் கூறப்பட்டுள்ளது
முக்கிய அடிகள் :

“1.உண்பொழுது நீராடி யுண்டலும் என்பெறினும்
பால்பற்றிச் சொல்லா விடுதலுந் - தோல்வற்றிச்
சாயினுஞ் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றுந்
தூஉய மென்பார் தொழில்”.
நீராடி யுண்பதும், ஒருபக்கச் சார்பு சொல்லாமலிருப்பதும், உயிர் நீங்கினும் சான்றாண்மை நீங்காதிருப்பதும் தூயவர் செயல்கள்.

2.“இல்லர்க்கொன் றீயும்  உடைமையும், இவ்வுலகில்
நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – எவ்வுயிர்க்கும்
துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்
நன்றறியும் மாந்தர்க் குள”.
வறியவர்க்கு பொருளை அளித்தல், இவ்வுலகத்துப் பொருள்களின் நிலையாமையை அறிந்து நல்வழி நிற்றல் , எவ்வுயிரையும் துன்புறுத்தாத நிலையில் வாழ்தல் என்னும் இம்மூன்றும் அறவழியில் நடக்கும் மக்களுக்கே என்றும் உண்டு.

3.“முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்
        நிறையிலான் கொண்ட தவமும் - நிறைஒழுக்கம்
        தேற்றாதான் பெற்றவனப்பும் இவைமூன்றும்
        தூற்றின்கண் தூவிய வித்து.”.
முறையறிந்து செய்யாத தலைவனும், உறுதி இல்லாதவன் தவமும், ஒழுக்கமில்லாதவன் அழகும், ஆகிய இம்மூன்றும், புதரில் தூவிய வித்துக்களாகும்.

சொற்பொருள் :
  • பால்பற்றி – ஒருபக்கச் சார்பு
  • சாயினும் – அழியினும்
  • தூஉயம் – தூய்மை உடையோர்
  • ஈயும் – அளிக்கும்
  • நெறி – வழி
  • மாந்தர் – மக்கள்
  • வனப்பு – அழகு
  • தூறு – புதர்
  • வித்து – விதை
“1. நெஞ்சம் அடங்குதல் வீடாகும் ”
நெஞ்சம் – மனம்,
அடங்குதல் – அடங்குதலால்,
வீடு ஆகும் – முத்தி உள்ளதாகும்

“2. தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதான்”
முயற்சியை ஆளக் கூடிய திறமையுடைய ஒருவன் தான் பிறருக்கு கடன்படாது வாழ்பவன்; பயிர்த்தொழில் புரிந்து,சமூகத்திற்கே உதவியாக இருப்பவன், விருந்தினர் வந்து காத்திருக்க, தான் மட்டும் தனியே உண்ணாதவன்;

“3. நிறை நெஞ்சம் உடையானை நல்குரவு அஞ்சும் ”
நிறைவுடைமை நெஞ்சம் கொண்டவனைக் கண்டு வறுமை அஞ்சும்.

4. உப்பின் பெருங் குப்பை, நீர் படின், இல்லாகும்;
நட்பின் கொழு முளை, பொய் வழங்கின், இல்லாகும்;
செப்பம் உடையார் மழை அனையர்; - இம் மூன்றும்
செப்ப நெறி தூராவாறு."
உப்பின் குவியல் மீது நீர் படிந்தால் உப்பு கரைந்து போகும். நட்பில் பொய் வந்தால் கெட்டுப் போகும். நடுநிலைமையுடையர் மழை போல் எல்லோருக்கும் உதவி செய்வர். இம்மூன்றும் நல்ல நெறிகளைக் கெடுக்கா முறைகள் ஆகும்.

5. “கொண்டான் குறிப்பரிவாள் பொண்டாட்டி

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: