Thursday, July 27, 2023

TNPSC TAMIL ILAKKIYAM பகுதி – (ஆ) – இலக்கியம்-முதுமொழிக்காஞ்சி



 முதுமொழிக்காஞ்சி

முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின் துறைகளுள் ஒன்று.இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.இந்நூலை அறவுரைக்கோவை எனவும் கூறுவர்.இந்நூலில் பத்து அதிகாரங்களும், அதிகாரத்திற்கு பத்துச் செய்யுள் வீதம் நூறு பாடல்களும் உள்ளன.

பாடல்கள் = 100

பாவகை = குறள் 


தாழிசைஒவ்வொன்றும் பத்து அடிகளைக் கொண்ட பத்துப் பாடல்களை மட்டுமே கொண்டுள்ளது.ஒவ்வொரு பத்தும், “ஆர்கலி உலகத்து” என்று தொடங்குகிறது.

இதன் பாடல்கள் குறள்வெண்பா செந்துறை என்ற யாப்பால் ஆனவை.

பத்துப் பிரிவும்பிரிவுக்கு பத்து பாடலுமாக உள்ளது.

பெயர்க்காரணம் :
  • முதுமொழி = மூத்தோர் சொல்,
  • காஞ்சி = மகளிர் இடையணி
  • மூத்தோர் சொற்கள் பலவற்றைக் கோர்த்த கோவை முதுமொழிக்காஞ்சி எனப்படுகிறது.

வேறு பெயர்

  • அறவுரைக்கோவை
  • ஆத்திச்சூடியின் முன்னோடி
நூல் பயன்:

முதுமொழிக்காஞ்சி கற்போரின் குற்றங்களை நீக்கி அறம், பொருள், இன்பங்களை அடைவதற்கான வழிமுறைகளை அறிவுரைகளாகக் கூறி நல்வழிப்படுத்தும்.

ஆசிரியர் குறிப்பு

பெயர்: மதுரை கூடலூர் கிழார்.

பிறந்த ஊர்: கூடலூர்

காலம்: சங்க காலத்திற்குப்பின் வாழ்ந்தவர்.

ஆசிரியர் சிறப்பு

இவர் தம் பாடல்களை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்கள் மேற்கோள்களாக கையாண்டுள்ளர்கள்.

சொற்பொருள்

ஆர்கலிநிறைந்த ஓசையுடைய கடல்

காதல்அன்பு, விருப்பம்

மேதைஅறிவு நுட்பம்

வண்மைஈகை, கொடை

பிணிநோய்

மெய்உடம்பு


மேற்கோள்கள்:

1."ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -

 ஓதலின் சிறந்தன்று, ஒழுக்கம் உடைமை."

ஆர்கலிகடல்

ஓதலின் - கற்றலைப் பார்க்கிலும்

ஓசையினை உடைய கடல் சூழ்ந்த உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் ஒழுக்கத்துடன் இருப்பது சிறந்ததாகும்.

2. "காதலின் சிறந்தன்று, கண் அஞ்சப்படுதல்

காதலின் - பிறரால் அன்பு செய்யப்படுவதைக் காட்டிலும்

சிறந்தன்றுசிறப்புடையது

பிறர் அன்பு பாராட்டும்படி நடத்தலை விட அவர் மதிக்கும்படி நடத்தல் மேலானது.

3. "மேதையின் சிறந்தன்று, கற்றது மறவாமை."

கற்றது - கற்ற பொருளை

மறவாமைமறவாதிருத்தல்

புதிதாக ஒன்றை அறிந்துகொள்வதை விட கற்றதை நினைவில் வைத்திருப்பது மேலானது.

4. "வண்மையின் சிறந்தன்று, வாய்மை உடைமை"

வண்மையின் - வளமையோடிருத்தலை விட

செல்வத்தினும் சிறப்புடையது உண்மை வாழ்க்கையாகும்.

5. "இளமையின் சிறந்தன்று, மெய் பிணி இன்மை"

மெய்உடம்பு

பிணி இன்மைநோயில்லாமலிருத்தல்

நோயில்லாமல் இருத்தல் இளமையினும் சிறப்பானது.

6. "நலன் உடைமையின் நாணுச் சிறந்தன்று"

நலன் உடமையின் - அழகுடைமையை விட

நாணுநாணமுடைமை

அழகைக் காட்டிலும் வெட்கம் சிறப்பானது.

"7. குலன் உடைமையின் கற்புச் சிறந்தன்று."

குலன் உடைமையின் - நல்ல குணத்தையுடைமை யினும்

கற்பு - கல்வியுடைமை

உயர்ந்த குலத்தைக் காட்டிலும் கல்வி மேன்மை யானது.

"8.கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று"

கற்றாரை - கற்ற பெரியாரை

வழிபடுதல் - போற்றியொழுகுதல்

கற்றலை விடக் கற்றாரை வழிபட்டொழுகுதல் மேலானது.

"9. செற்றாரைச் செறுத்தலின் தற் செய்கை சிறந்தன்று." 

செற்றாரை - பகைவரை

செறுத்தலின் - வெல்லுவதைவிட

பகைவரை வெல்லுவதைவிட தன்னை மேம் படுத்திக் கொள்வது சிறப்பானது.

"10. முன் பெருகலின் பின் சிறுகாமை சிறந்தன்று." 

முன் பெருகலின் - முன்பு பெருகிப் பின் அழிதலைக் காட்டிலும்

சிறுகாமை - நின்ற நிலையில் குறையாதிருத்தல்

செல்வம் பெருகி அழிவதைவிட, பெருகாமல் நிலையாக இருத்தல் நன்று.

 


No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: