பழமொழி நானூறு
பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இது நானூறு பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர்பெற்றது
பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார். இவர் கி.பி. (பொ.ஆ.) நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர். பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது.
TNPSC EXAM KEY POINTS :
- பாடல் எண்ணிக்கை : 400
- இயற்றப்பட்ட காலம் : கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது
- ஆசிரியர் : முன்றுரை அரையனார்
- பாவகை : வெண்பா
- இந்நூலை பதிப்பித்தவர் = செல்வசேகர முதலியார்
பெயர்க்காரணம்
ஒரு கதையோ, வரலாற்று நிகழ்வோ கட்டி உரைக்கப்பட்டு பாடலின் இறுதியில் பழமொழி நீதி சுட்டப்படுவதாலும்,நானூறு பாடல்களை உடையதாலும் பழமொழி நானூறு எனப் பெயர்பெற்றது.
வேறு பெயர்கள்
- பழமொழி
- உலக வசனம்
ஆசிரியர் குறிப்பு
- இந்நூலின் ஆசிரியர் = முன்றுறை அரையனார்.
- முன்றுறை என்பது ஊர்பெயர்.
- அரையன் என்ற பட்டம் பெற்றவர் என்றும் கூறுவர் சிலர்.
- அரையன் என்ற சொல் அரசனைக் குறிக்கும்.
- முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசனாக இருக்கலாம் அல்லது அரையன் என்பது புலவரின் குடிபெயராக இருக்கலாம்.
நூல் பகுப்பு முறை
- இந்நூலின் பெரும் பிரிவுகள் = 5, இயல்கள் = 34
- பிரிவு 1 = கல்வி, ஒழுக்கம், புகழ் பற்றியது (9 இயல்கள்)
- பிரிவு 2 = சான்றோர், நட்பின் இயல்பு பற்றியது (7 இயல்கள்)
- பிரிவு 3 = முயற்சி, பொருள் பற்றியது (8 இயல்கள்)
- பிரிவு 4 = அரசர், அமைச்சர், பாடல் பற்றியது (6 இயல்கள்)
- பிரிவு 5 = இல்வாழ்க்கை, உறவினர், வீடுநெறி பற்றியது (4 இயல்கள்)
பொதுவான குறிப்புகள்
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள முப்பெரும் அறநூல்கள் = திருக்குறள், நாலடியார், பழமொழிநானூறு
- தொல்காப்பியர் பழமொழியை “முதுமொழி” என்கிறார்.
- பழமொழி என்ற சொல் முதன் முதலில் அகநானூறில் வருகிறது.
- இந்நூலை பதிப்பித்தவர் = செல்வசேகர முதலியார்
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் மிகுதியாக வரலாற்று குறிப்புகளை கூறும் நூல் இதுவே
மேற்கோள்
- அணியெல்லாம் ஆடையின் பின்
- கடன் கொண்டும் செய்வார் கடன்
- கற்றலின் கேட்டலே நன்று
- குன்றின்மேல் இட்ட விளக்கு
- தனிமரம் காடாதல் இல்
- திங்களை நாய்க் குரைத் தற்று
- நுணலும் தன் வாயால் கெடும்