பகுதி – (ஆ) – இலக்கியம்- சிறுபஞ்சமூலம்
ஆசிரியர் குறிப்பு:
- ஆசிரியர் : காரியாசான்
- மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது.
- இவர் சமண சமயத்தை சார்ந்தவர்.
- இவரும் கணிமேதவியாரும் ஒருசாலை மாணாக்கர்.
நூல் குறிப்பு:
- இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- இந்நூலில் கடவுள் வாழ்த்துடன் 97 வெண்பாக்கள் உள்ளன.
- கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகையின் வேர்களும் உடல் நோயைத் தீர்ப்பன.
- இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் ஐந்து அறக்கருத்துகள் உள்ளன.
- ஐந்து அறக்கருத்துக்களும் மக்கள் மனநோயைப் போக்குவன.
- காரியாசனும் ஏலாதியின் ஆசிரியருமான கணிமேதாவியாரும் மதுரைத் தமிழ் ஆசிரியர் மாக்காயனாரின் ஒரு சாலை மாணவர்கள்.
- இந்நூல் தொல்காப்பியர் குறிப்பிடும் “அம்மை” என்ற வனப்பிற்கு உரியது.
பொதுவான குறிப்புகள்:
- மருந்தின் பெயரால் பெயர் பெற்ற நூல்.
- பஞ்சம் = ஐந்து, மூலம் = வேர்.
- ஐந்து வேர்கள் = கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி.
சிறுபஞ்சமூலம் போன்றே பெருபஞ்சமூலம் என்ற ஒன்றும் உண்டு. அவை
1. வில்வம்,
2. பெருங்குமிழ்,
3. பாதிரி,
4. தழுதாழை,
5. வாகை
சொற்பொருள்
- கண்ணோட்டம் - இரக்கம் கொள்ளுதல்
- எண்வனப்பு - ஆராய்சிக்கு அழகு
- வேந்தன் - அரசன்
- வனப்பு - அழகு
- கிளர்வேந்தன் - புகழுக்குரிய அரசன்
- வாட்டான் - வருத்தமாட்டான்
இலக்கணக்குறிப்பு:
- கண்ணோட்டம், செல்லாமை, உறைதல், என்றல் – தொழிற்பெயர்கள்
- கேட்டார், வாட்டான் - வினையாலணையும் பெயர்
மேற்கோள்கள்
- “கண்வனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை
- எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் - பண்வனப்புக்
- கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் தன்னோடு
- வட்டான்நன் றென்றால் வனப்பு”
- கண்ணுக்கு அழகு கண்ணோட்டம் கொள்ளும் இரக்க உணர்வை வெளிப்படுத்துதல். காலுக்கு அழகு அடுத்தவன் மனையாளை விரும்பிச் செல்லாமை.
- எண் கணக்குக்கு அழகு கூட்டியும் கழித்தும் பெருக்கியும் வகுத்தும் இத்துணை ஆகிறது என்று சொல்லுதல்.
- பண்ணிசைக்கு அழகு கேட்டவர் நன்று என்று பாராட்டல்.
- வேந்தனுக்கு அழகு தன் நாட்டு மக்களை வாட்டாமல் மகிழ்வுடன் வைத்திருக்கிறான் என்று பலரும் சொல்லக் கேட்டல்.
- “நூற்கு இயைத்த சொல்லின் வனப்பே வனப்பு”-நூல்களின் அமைந்துள்ள சொல்லின் அழகே அழகு.
- “பேதைக்கு உரைத்தாலும் செல்லாது உணர்வு”-பேதைக்கு = முட்டாளுக்கு,உரைத்தாலும் = எவ்வளவு சொன்னாலும்,செல்லாது உணர்வு = மண்டையில் ஏறாது
No comments:
Post a Comment