Saturday, July 29, 2023

TNPSC TAMIL ILAKKIYAM பகுதி – (ஆ) – இலக்கியம்- கைந்நிலை (ஐந்திணை அறுபது)


பகுதி – (ஆ) – இலக்கியம்- கைந்நிலை (ஐந்திணை அறுபது)


கைந்நிலை (ஐந்திணை அறுபது)
  • ஆசிரியர் = மாறோக்கத்து முள்ளி நாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லாங்காடனார்
  • பாடல்கள் = 60 (5*12=60)
  • திணை = ஐந்து அகத்திணைகளும்
  • பாவகை = வெண்பா
  • இதிலும் வடசொற்கள் பல கலந்துள்ளன.
  • உள்ளடக்கிய பொருள்வகை = அகம்
பெயர்க்காரணம்
  • கை = ஒழுக்கம்
  • ஐந்திணை ஒழுக்க நிலை கூறும் நூல் என்னும் பொருளில் “கைந்நிலை” எனப் பெயர் பெற்றது.
பொதுவான குறிப்புகள்
  • இந்நூலின் சில பாடல்கள் சிதைந்து விட்டன
  • தற்போது உள்ளவை 43 வெண்பாக்களே
  • வடசொல் கலப்பு மிகுந்த நூல்
  • ஆசிரியர் பாண்டியனை “தென்னவன் கொற்கை” என்னும் தொடரால் குறிப்பிடுகிறார்
  • கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எனப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுதியில் அடங்கிய ஒரு நூல். இத் தொகுப்பில் காணப்படும் ஆறு அகப்பொருள் நூல்களுள் இதுவும் ஒன்று.
  • இஃது அறுபது பாடல்களால் ஆனது. ஐந்து தமிழர் நிலத்திணைப் பிரிவுகளைப் பின்னணியாகக் கொண்டு பாடல்கள் வெண்பா பாவகையில் உள்ளன.
  • இதன் காரணமாக இதற்கு ஐந்திணை அறுபது என்ற பெயரும் உண்டு. இதை இயற்றியவர் புல்லங்காடனார் என்னும் ஒரு புலவர்.
  • சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் உரை இந்நூலுக்கு உள்ளது. கை என்றால் ஒழுக்கம். நிலை என்றால் தன்மை.
  • ஆகவே, ஐந்திணையின் ஒழுக்க நிலையைக் கூறும் நூல் என்னும் பொருளில் இந்நூலின் பெயர் கைந்நிலை என அமைந்துள்ளது. இந்நூலில் ஆசை, பாசம், கேசம், இரசம், இடபம், உத்தரம் போன்ற வடசொற்கள் கலந்து காணப்படுகின்றன.
  • கைந்நிலை நூலில் 60 பாடல்கள் உள்ளன. குறிஞ்சி – 12, பாலை – 7, முல்லை – 3, மருதம் – 11, நெய்தல் – 12
  • ஆகிய 45 பாடல்கள் முழுமையான வடிவில் உள்ளன. பிற செல் அரித்த நிலையில் சிதைந்துள்ளன.
மேற்கோள்
  • ஒத்த உரிமையளா ஊடற்கு இனியளாக்
  • குற்றம் ஒரூஉம குணத்தளாக் – கற்றறிஞர்ப்
  • பேணும் தகையாளாக் கொண்கன் குறிப்பறிந்து
  • நாணும் தகையளாம் பெண்

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: