நான்மணிக்கடிகை
நூல் அமைப்பு :
பாடல்கள் = 2 + 104
பாவகை = வெண்பா
வேறு பெயர் -துண்டு
நான்மணிக்கடிகை 104 வெண்பாக்களால் ஆன நூலாகும்.
நான்மணிக்கடிகை பெயர்க்காரணம்
நான்கு + மணி + கடிகை = நான்மணிக் கடிகை
கடிகை = துண்டு, ஆபரணம், தோள்வளை. நான்கு மணிகள் பதிக்கப் பெற்ற தோள்வளை போல் நான்கு நீதி மணிகளால் நிலைநாடாப்பட்ட பாடல்களைக் கொண்ட நூல்.
கடவுள் வாழ்த்து
முதல் இரண்டு கடவுள் வாழ்த்து பாடலிலும் நான்கு கருத்துக்கள் உள்ளன.
கடவுள் வாழ்த்து திருமலைப் பற்றியது.
ஆசிரியர் குறிப்பு
நூலாசிரியர் – விளம்பிநாகனார்
“விளம்பி” என்பது ஊர்ப்பெயர்
“நாகனார்” என்பது புலவரின் இயற்பெயர்
TNPSC EXAM KEY POINTS :
- பாடல் எண்ணிக்கை :2 + 104
- ஆசிரியர் : விளம்பி நாகனார்பாவகை :
- வெண்பாஇயற்றப்பட்ட காலம் : நான்காம் நூற்றாண்டு
- நான்கு + மணி + கடிகை = நான்மணிக்கடிகை
- கடிகை = துண்டு, ஆபரணம், தோள்வளை.
- நான்கு மணிகள் பதிக்கப் பெற்ற தோள்வளை போல் நான்கு நீதி மணிகளால் நிலைநாடாப்பட்ட பாடல்களைக் கொண்ட நூல்.
- முதல் இரண்டு கடவுள் வாழ்த்து பாடலிலும் நான்கு கருத்துக்கள் உள்ளன.
- கடவுள் வாழ்த்து திருமாலைப் பற்றியது.
- ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால் ஆனது
- நூலில் வடமொழி கலப்பு அதிகம்.
- ஜி.யு.போப் இந்நூலின் இரு பாடல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார்.
- நான்கு மணியான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.இதனாலேயே இது நான்குவகை மணிகளால் ஆன ஆபரணம் 'நான்மணிக்கடிகை' என்று அழைக்கப்படுகிறது.
முக்கிய அடிகள்
- “யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி”
- “இந்நிலத்தே மன்னுதல் வேண்டின் இசைநடுக தன்னொடு செல்வது வேண்டின் அறம் செய்க
- வெல்வது வேண்டின் வெகுளிவிடல்”
- “இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம் வளமில்லாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்”
- “ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல் கொண்டானிற் சிறந்த கேளிர் பிறர்இல்”
- “மனைக்கு விளக்கம் மடவாள்
- மடவாளுக்கு விளக்கம் புதல்வர்
- புதல்வர்க்கு விளக்கம் கல்வி
- கல்விக்கு இலக்கம் புகழ்சால் உணர்வு”
No comments:
Post a Comment