கங்கை செயல் திட்டம்
- கங்கை செயல்திட்டம் (Ganga Action Plan GAP) என்பது கங்கை ஆற்றினைத் சுத்தப்படுத்துவதற்காக 1986 இல் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியால் கொண்டுவரப்பட்ட திட்டம். இத்திட்டத்தின்கீழ் 9017 மில்லியன் ரூபாய் செலவு செய்த பின்னரும்கூட கங்கையை மாசற்றதாக்க எடுத்துக்கொள்ளப்பட்ட முயற்கள் வெற்றியடையவில்லை.அதனால் மார்ச் 31, 2000 இல் இத்திட்டம் கைவிடப்பட்டது.
- மாசுச் சுமையைக் குறைத்து, சுயபராமரிப்பின் கீழ் சாக்கடை நீர் சுத்திகரிப்பு நிலையங்களைத் தோற்றுவித்துக் கங்கை நீரின் தரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
முதல் கட்டம்
முதற்கட்டமாக கீழுள்ள எண்வகைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன:
- ஏற்கனவே உள்ள சாக்கடை நீர் சுத்திகரிப்பு நிலையங்களை புதுப்பித்தல்
- சாக்கடை நீரைக் குறுக்கிட்டுத் தடுக்கும் சாதனங்கள் மற்றும் சாக்கடைக் குழாய்களை அமைத்தல்
- ஏற்கனவே உள்ள முக்கிய சாக்கடை நீர்க் குழாய்களைப் புதுப்பித்தல்
- கங்கை நதிக்குள் விடப்பட்ட எடுக்கப்படாத மனிதச் சடலங்கள் மற்றும் கால்நடைச் சடலங்களை நீர் வாழ் முதலைகளும் ஆமைகளும், உணவாக்கி கொள்ளும் விதத்தில் உயிரியப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
- குறைந்த செலவில் அடிப்படை சுகாதார வசதிகளை ஏற்படுத்துதல்
- குறுமணல் குவிப்பு, மணல் அரிப்பைத் தடுக்கும் விதமாக நதியோரங்களில் கட்டடங்கள் கட்டுதல், காடுகள் வளர்த்தல்
- முறைப்படுத்தும் நிறுவனங்களுடன் இணைந்து முழுமையான ஒத்துழைப்பு நல்கி தொழிலக மாசினை கட்டுப்படுத்துதல்
- குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நதிநீரின் தரத்தினை மதிப்பீடு செய்தல்
இரண்டாவது கட்டம்
இரண்டாவது கட்டம் நால்வகை செயல்பாடுகள் கொண்டது.
- UASB ( Upflow Anacrobic Sludge Blanket) தொழில்நுட்ப உதவியுடன் சாக்கடை நீரைச் சுத்திகரித்தல்.
- யமுனை, கோமதி, தாமோதர் போன்ற கங்கை நதியின் மூன்று துணை நதிகளைத் தூய்மைப்படுத்துதல்
- முதல் கட்டத்தில் நிறைவுபெறாத திட்டங்களைப் பூர்த்தி செய்தல்.
- நதி நீர்த் தரச் சோதனை நிலையங்களை ஏற்படுத்துதல்.
No comments:
Post a Comment