பாஞ்சாலி சபதம் - TNPSC NOTES

TNPSC PAYILAGAM
By -
0

 

பாஞ்சாலி சபதம்
பாஞ்சாலி சபதம் 


பாஞ்சாலி சபதம்

நூற்குறிப்பு

  1. “முப்பெரும் பாடல்கள்” எனப்படும் மூன்றில் ஒன்று
  2. வியாசரின் மகாபாரதத்தைத் தழுவி பாரதியாரால் எழுதப்பட்ட காப்பியம் பாஞ்சாலி சபதம்
  3. சிந்து என்னும் பாவகையில் எளிய தமிழ்நடையினை கொண்டது.
  4. பாஞ்சாலி சபதம் முழுவதும் நொண்டிச்சிந்து என்ற பாவகையைச் சார்ந்தது
  5. இந்திய விடுதலைப் போராட்டத்தை பாரத பேராகவும், பாஞ்சாலியை பாரதத்த தேவியாகவும் உருவகப்படுத்தி படைக்கப்பட்ட நூல்
  6. பாஞ்சாலி சபதம் இரண்டு பாகங்களை கொண்டது. ஐந்து சருக்கங்கள், 412 பாடல்கள் உள்ளன.
  7. முதல் பாகத்தில் சூழ்ச்சிக் சருக்கம், சூதாட்டச் சருக்கம் என இரு சருக்கங்கள் உள்ளன.
  8. இரண்டாம் பாகத்தில் அடிமைச் சருக்கம், துகில் உரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என மூன்று சருக்கங்கள் உள்ளன.
  9. பாஞ்சாலி சபதம் 1919-லேயே பாரதி எழுதி முடித்துவிட்டார் என்பது 05.09.1919-ல் பாரதியார் வயி.ச.சண்முகம் செட்டியாருக்கு எழுதிய கடிதத்திலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.
  10. பாஞ்சாலி சபதத்தின் முதல் பாகம் 1912-ல் பாரதி வாழந்த காலத்திலேயே வெளிவந்தது.
  11. 1924-ல் முழு நூலையும் பாரதி பிரசுராலயம் வெளியிடப்பட்டது.
  12. "தமிழ்மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும் இயலுமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்யப்போகிற வர கவிகளுக்கும் அவர்களுக்குத் தக்கவாறு கைங்கரியங்கள்' செய்யப்போகிற பிரபுக்களுக்கும் இந்நூலைப் பாதகாணிக்கையாகச் செலுத்துகின்றேன் என்று பாஞ்சாலி சபதத்தின் முகவுரையில் பாரதியார் குறிப்பிடுகிறார்.
  13. பாரதியாரின் முப்பெரும் படைப்புகள்: குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம்

ஆசிரியர் குறிப்பு பாரதியார் :

  • இயற்பெயர்: சுப்ரமணிய பாரதியார்.
  • பிறந்த இடம் எட்டயபுரம் (தூத்துக்குடி)
  • பெற்றோர்.சின்னசாமி- இலக்குமி அம்மையார்
  • துணைவி செல்லம்மாள்


மேற்கோள்:

விதுரன் கூற்று:

பேரறமும் பெருந்தொழிலும் பிறங்கும்நாடு

பெண்கள் எல்லாம் அரம்பையர்போல் ஒளிரும்நாடு

வீரமொடு மெய்ஞ்ஞானம் தவங்கள் கல்வி

வேள்விஎனும் இவையெல்லாம் விளங்கும் நாடு

சோரமுதல் புன்மை ஏதும் தோன்றா நாடு

தொல்உலகின் முடிமணிபோல் தோன்றம் நாடு

பாரதர்தம் நாடு”

அர்சூனன் கூற்று:

“தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்

தருமம் மறுபடியும் வெல்லும் எனும் இயற்கை

மருமத்தை நம்மாலே உலகம் கற்கும்”

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை:

“பாட்டுக் ஒரு புலவன் பாரதியடா – அவன்

பாட்டை பண்ணோடு ஒருவன் பாடினானடா

கேட்டுக் கிறுகிறுத்தப் போனேனடா – அந்தக்

கிறுக்கில் உளறுமொழி பொறுப்பையடா”


தொடர்பான செய்திகள்

 


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!