NATTUPURA PATTU TNPSC NOTES

TNPSC PAYILAGAM
By -
0

நாட்டுப்புறப் பாட்டு
நாட்டுப்புறப் பாட்டு 

நாட்டுப்புறப் பாட்டு

நூற்குறிப்பு

  • தமிழ் இலக்கியத்தில் நாட்டுப்புறவியல் வளர்ந்து வரும் துறைகளுள் ஒன்றாகும்.
  • மானிடவியல், உளவியல், தத்துவம், வரலாறு, மொழியியல் ஆகிய துறைகளுடன் பின்னிப் பிணைந்து வளர்ந்த வருகின்றது.
  • ஒரு நாட்டு மக்களின் நாகரிகத்தை, பண்பாட்டை, பழக்க வழக்கங்களை, வரலாற்றை, உண்மையான நிலையில் படம் பிடித்தக் காட்டுவது நாட்டுப்புறவியலாகும்.
  • சிறப்பாக நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் கூறுகளையும், இலக்கியங்களையும், கலைகளையும் ஆராய்வது நாட்டுப்புறவியல் எனலாம்.

நாட்டுப்புறவியல் தோற்றம்

  • நாட்டுப்புற மக்களின் கலை, இலக்கியங்களை ஆராய வேண்டம் என்ற எண்ணம் முதன் முதலில் மேனாட்டாருக்குத்தான் தோன்றியது.
  • பொதுமக்களைச் சார்ந்த மரபு முறைகள் என்றும் பொதுமக்கள் இலக்கியம் என்றும், பொதுப் புராணவியல் என்றும் நாட்டுப்புறவியல் வழங்கப்பட்டது. பின்னர் நாட்டுப்புறவியலைக் குறிக்கும் “Folk lore” என்ற சொல் உருவாக்கப்பட்டது.
  • நாட்டுப்புறவியல் சொல் விளக்கம் என்ற சொல்லையும் பகுப்பையும் தந்த பெருமை வில்லியம் ஜான் தாமஸ் (மேல நாட்டு அறிஞர்) அவர்களையே சாரும். இதற்குப்பின் மனிதனின் சடங்கு முறைகள், நம்பிக்கைகள், கதைப்பாடல்கள், பழமொழி, நாட்டுப்புறப்பாடல் முதலியவற்றை இச்சொல் குறிப்பதாக அவர் கூறியுள்ளார். பழங்காலப் பண்பாட்டின் எச்சம் நாட்டுப்புறவியல் என்பது அவர் கருத்தாகும். Folk lore” என்பது என்ற இரு சொற்களின் இணைப்பு. ஐரோப்பிய நாடுகளில் Folk lore” என்ற சொல் விவசாய மக்களைக் குறித்துப் பின்னர் நாட்டுப்புற மக்களைக் குறித்தது என்பதற்கு மரபு. செய்தித்தொகுதி என்றும் வழக்காறு என்றும் பொருள் கொள்ளலாம். Folk lore” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஈடாக தமிழில் நாட்டுப்பண்பாட்டியல், நாட்டார் வழக்காற்றியல், வாய்மொழி இலக்கியம், ஏட்டில் எழுதாத இலக்கியம், நாடோடி இலக்கியம், நாடோடிக்கலை என வழங்கப்பட்டாலும் நாட்டுப்புறவியல் எனும் சொல்லாட்சியே பெரு வழக்காக வழங்கப்பட்டு வருகின்றது.

தமிழில் வழிகாட்டியவர்கள்:

தமிழில் நாட்டுப்புற இலக்கியங்களில் முதலில் பாடல்களே நேசிக்கப்பட்டன
  • மு. அருணாச்சலம் காற்றிலே மிதந்த கவிதை
  • கருணானந்த சுவாமிகள் பவளக்கொடி மாலை
  • தாண்டவராய முதலியார் கதாமஞ்சரி
  • லாரி வெளியீடு பழமொழிகள்
  • அருணாசல முதலியார் இருசொல் அலங்காரம்
இவை முறையே நாட்டுப்புறப்பாடல், கதைப்பாட்டு, கதை, பழமொழி, விடுகதை ஆகியன நாட்டுப்புற இலக்கியங்களில் முதல் நூல்களாக விளங்ககின்றன.

நாட்டுப்புற இலக்கியத் தொகுப்பர்கள்:

பேச்சு வழக்கில் இருந்த நாட்டுப்புற இலக்கியக் கருவூலங்களைப் பாதுகாத்துத் தொகுத்தவர்களின் பணி பாராட்டுக்குரியது.
  • அன்னகாமு ஏட்டில் எழுதாக் கவிதைகள்
  • கி.வா.ஜ. நாடோடி இலக்கியம், மலையருவி
  • நா. வானமாமலை வீரபாண்டிய கட்டபொம்மன் கதை
  • காத்தவராயன் கதைப்பாடல்
  • முத்துப்பட்டன் கதை
  • தமிழண்ணல் தாலாட்டு
  • ஆறு. அழகப்பன் தாலாட்டு ஐநூறு
  • அழ. வள்ளியப்பா பாமரமக்களின் பரம்பரைப் பாடல்கள்
  • டி.என்.சுப்பிரமணியம் காட்டு மல்லிகை
  • தூரன் காற்றிலே வந்த கவிதை
  • ச.வே.சுப்பிரமணியம் தமிழில் விடுகதைகள்
  • மணலிசோமன் நாட்டுப்புறப் பாடல்கள்
  • மெ.சுந்தரம் நாட்டுப்புறப் பாடல்கள்

நாட்டுப்புறவியலின் வகைப்பாடு:

நாட்டுப்புறவியலை நாட்டுப்புற இலக்கியம், நாட்டுப்புறக் கலைகள் மற்றும் நம்பிக்கைகள் என இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்துக் காணலாம்.

1.நாட்டுப்புறவியலின் வகைப்பாடு:

1. நாட்டுப்புறப் பாடல்கள் (Folk Song)
2. நாட்டுப்புறக் கதைகள் (Folk Tales)
3. நாட்டுப்புறக்கதைப் பாடல்கள் (Folk Ballads)
4. பழமொழிகள் (Proverbs)
5. விடுகதைகள் (Riddles)
6. புராணக்கதைகள் (Myths)

முதலியன நாட்டுப்புற இலக்கிய வகைகளாக அமைகின்றன.

2.நாட்டுப்புறவியலின் வகைப்பாடு

1. நாட்டுப்புறக் கலைகள் (Folk Song)
2. நாட்டுப்புற கைவினைப்பொருட்கள் (Folk Crafts)
3. நாட்டுப்புற பழக்க வழக்கங்கள் (Folk Customs & Habits)
4. நாட்டுப்புற தெய்வங்களும் திருவிழாக்களும் (Folk Dance & Festivals)
5. நாட்டுப்புற ஆடல் (Folk Dance)
6. நாட்டுப்புற விளையாட்டுகள் (Folk Games)
7. நாட்டுப்புற மருத்துவம் (Folk Medicine)

முதலியன நாட்டுப்புறவியலின் கலைகளையும், நம்பிக்கைகளையும் சார்ந்தன. நாட்டுப்புறவியலைச் செயல் வகை, அறிவியல் வகை, மொழியியல் வகை, இலக்கிய வகை என பகுத்துக்காணும் பார்வையும் உண்டு.

தமிழில் வழிகாட்டியவர்கள்
  • பழங்காலப் பண்பாட்டின் எச்சம் எனக் கருதப்படும் நாட்டுப்புறப் பாடல்கள் ஏட்டில் எழுதாக் கவிதைகள் ஆகும்.
  • இவை வழிவழியாகப் பாடப்பட்டுவரும் வாய் மொழி இலக்கியங்களே.
  • பழமொழிகள், விடுகதைகள், கதைப்பாடல்கள், தொழிற்பாடல்கள் முதலியன நாட்டு இலக்கியத்துள் அடங்கும்.
  • தெம்மாங்கு பாடல், களையெடுப்பு பாடல், கதிரறுப்புப் பாடல், மீனவர் பாடல் முதலியன தொழிற் பாடல்கள்
  • ஏட்டில் எழுதப்பட்ட இலக்கிய நயம் மிக்க பல பாடல்கள் கவிஞர்களால் எழுதப்பட்டன. ஆனால் நாட்டுப்புறங்களில் வாழ்ந்த மக்களும் தங்கள் எண்ணங்களை பாடல்களாக வெளிப்படுத்தியுள்ளனர். அவை ஏட்டில் எழுதப்படவில்லை. செவி வழியாக நிலைத்துள்ளன. இவை நாட்டுப்புறப்பாடல்கள் எனப்படும்.
தமிழில் வழிகாட்டியவர்கள்
  • செவி வழியாக வந்த நாட்டுப்புறப் பாடல்களை யாரும் ஏட்டில் எழுதி வைக்கவில்லை.
  • அவை மக்களுடைய உணர்ச்சி பெருக்காக அவ்வப்பாேது எழுந்தவை. எப்பாடல் யாரால் முதன் முதலில் பாடப்பட்டதென்ற கூறக் கூற  முடியாது.
  • எளிய சொற்களும், நடைமுறை வாழ்க்கையை ஒட்டிய ஆழ்ந்த கருத்துகளும் அடங்கியவை இப்பாடல்கள்.
  • இப்பாடல்கள் வேலை செய்யும் போது களைப்பு ஏற்படாமல் இருக்கப் பாடப்படுவன.
  • நாட்டுப்புறவியல் துறையில் பல்வேறு ஆய்வுகள் நடைெபற்ற வண்ணம் உள்ளன.
  • நாட்டுப்புறப்பாடல்கள், படிக்காதவர்களும் ஒரளவு கல்வியறிவு பெற்றவர்களும் பாடுவனவாக உள்ளன.
  • இப்பாடல்கள் செவிவழியாகப் பரவுவன. இவற்றை இன்னாரெனக் கூறவியலாது.
ஏற்றப்பாட்டு
  • நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் சிறந்த உழைப்பாளிகள், உழைப்பின் கடுமையை உணராமல் தெம்பூட்டுவதற்கு அவர்கள் செய்யும் தொழிலுக்கேற்பப் பாடல்களைப் பாடுவது வழக்கம்
  • அவை இசைநயத்தோடு கருத்தாழம் மிக்கவையாகவும் இருக்கும். இது ஏற்றம் இறைக்கும்போது பாடுகின்ற ஒருவகைபாட்டாகும்.

தொடர்பான செய்திகள்

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!