IRATURA MOZHITAL TNPSC NOTES

TNPSC PAYILAGAM
By -
0

இரட்டுறமொழிதல்
இரட்டுறமொழிதல்


இரட்டுறமொழிதல்

நூல் குறிப்பு:

ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டுறமொழிதல் அணி எனப்படும்.இரண்டு பொருள்பட மொழிதலால் இரட்டுறமொழிதல் என கூறப்பட்டது.இதனைச் சிலேடையணி என்றும் அழைப்பர்.

காளமேகப்புலவர் ஆசிரியர் குறிப்பு

  • பெயர் : காளமேகப்புலவர்
  • இயற்பெயர் : வரதன்
  • பிறந்த ஊர் : கும்பகோணத்துக்கு அருகில் உள்ள நந்திக்கிராமம் எனவும், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள எண்ணாயிரம் எனவும் கூறுவர்.
  • பணி :  திருவரங்கக்கோவில் மடைப்பள்ளியில் பணிபுரிந்தார். வைணவ சமயத்தில் இருந்து சைவசமயத்திற்கு மாறினார். 
  • சிறப்பு : கார்மேகம் போல் கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால், இவர் காளமேகப்புலவர் என அழைக்கப் பெற்றார். இவர், இருபொருள் அமைய நகைச்சுவையுடன் பாடுவதில் வல்லவர்.

காளமேகப் புலவர் எழுதிய தனிப்பாடல் 

  • பெரும்பாலான பாடல்கள் இருநூறு முதல் முந்நூறு ஆண்டுகளுக்குள் பாடப்பட்டவை. புலவர் பலரின் பாடல்களின் தொகுப்பே தனிப்பாடல் திரட்டு ஆகும்.
  • இவர், இருபொருள் அமைய அதாவது இரட்டுற மொழிதல் பாடுவதில் வல்லவர். 
  • ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது சிலேடை எனப்படும். இதனை, 'இரட்டுறமொழிதல்' எனவும் கூறுவர். 
  • இரண்டு + உற + மொழிதல் = இரட்டுறமொழிதல். 
  • இரட்டுறமொழிதல் என்பது இருபொருள்படப் பாடுவது.

அவருடைய குதிரையும், காவிரியும் பற்றிய இரட்டுற மொழிதல் பாட்டு ஒன்று கீழே.  

ஓடும் சுழிசுத்தம் உண்டாகும் துன்னலரைச் 

சாடும் பரிவாய்த் தலைசாய்க்கும் - நாடறியத்   

தேடு புகழான் திருமலைரா யன்வரையில்   

ஆடுபரி காவிரியா மே.  

– காளமேகப் புலவர்

பொருள் : 

ஆடுபரியும் காவிரியும் ஒன்று என்பதனைக் காளமேகப் புலவர் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்

குதிரை

புகழ்பெற்ற மன்னன் திருமலைராயன் நாட்டில், விரைந்து ஓடுவதால், தெளிந்த (சுத்தமான) சுழி உடையதால், பகைவரைத் தாக்குவதால், அன்போடு தலை சாய்ப்பதால் குதிரையும்,

காவிரி

வெள்ளத்தால் ஆறு விரைந்து ஓடுவதால், ஓடுகிறபொழுது நீரில் சுழிகள் உடையதால், மலர்களை அலைத்துச் செல்வதால், பயிர்களுக்கு வளம் சேர்ப்பதால் காவிரியும் ஒன்றாகும்.

சொற்பொருள்: 

சுழி - உடல்மீது உள்ள சுழி, நீர்ச்சுழி: 

துன்னலர் - பகைவர், அழகிய மலர்: 

பரிவாய் - அன்பாய்; 

சாடும் - தாக்கும், இழுக்கும்; 

ஆடுபரி - ஆடுகின்ற குதிரை.


தொடர்பான செய்திகள்


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!