மனோன்மணியம்:-TNPSC TAMIL NOTES

TNPSC PAYILAGAM
By -
0

மனோன்மணியம்:
மனோன்மணியம்:



மனோன்மணியம் நூல் குறிப்பு

  1. நாடகத்தமிழ் நூல்களுள் தலையாய சிறப்பு உடையதாக விளங்குவது மனோன்மணீயம் ஆகும்
  2. வடமொழி நாடகங்களுக்கு ஈடாக நடிப்புச் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்ற நூல் இது.
  3. இந்நாடகம் லிட்டன் பிரபு என்பார் ஆங்கிலத்தில் எழுதிய “இரகசிய வழி” என்ற நூலைத் தழுவி அமைந்தது.
  4. எனினும் இது வழிநூல் என என்னாது முதல் நூல் எனவே கொள்ளப்படும் சிறப்புடையது.
  5. நன்னூல் மரபு = அங்கங்களையும் காட்சிகளையும் அமைத்து எழுதுவது நாடக நன்னூல் மரபு
  6. இந்நாடகம் 5 அங்கங்களையும், 20 காட்சிகளையும் கொண்டு விளங்குகிறது.
  7. இடையே “சிவகாமி சரிதம்” என்னும் துணைக் கதை ஒன்றும் உள்ளது.
  8. மனோன்மணியம் ஆசிரியப்பாவால் ஆனது.
  9. தமிழில் இலக்கியத் தரம் வாய்ந்த நாடகம் இல்லாத குறையை போக்கியது மனோன்மணியம்
  10. “நீராரும் கடலுடுத்த” எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து இடம் பெற்ற மனோன்மணியம்
  11. தமிழ்த்தாய் வாழ்த்த பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா என்ற பாவில் இயற்றப்பட்டது.
  12. தமிழ்தாய் வாழ்வத்திற்கு இசை அமைத்தவர் மெல்லிசை மன்னன் எம்.எஸ். விஸ்வநாதன்.
  13. தமிழைத் தெய்வமாகப் போற்றிய நூல்
  14. தமிழ்த்தாய்க்குக் கோயில் உள்ள ஊர் காரைக்குடி
  15. ஜீவகன், மனோன்மணி, குடிலன், புருசோத்தமன், வாணி, நடராசன், சுந்தர முனிவர், கருணாகரர் நிஷ்டாபரர் போன்ற பாத்திரங்கள் இடம் பெறும் நூல்.
  16. பாண்டிய மன்னன் ஜீவகன்.
  17. ஜீவகனின் குரு சுந்தர முனிவர்
  18. ஜீவகனின் அமைச்சர் குடிலன்
  19. மனோன்மணியை மணந்தவன் சேர மன்னன் புருஷோத்தமன்
  20. மனோன்மணியின் தோழி வாணி
  21. வாணியின் காதலன் நடராசன்
  22. சுந்தர முனிவரின் சீடர்கள் கருணாகர், நிஷ்டாபரர்
  23. சிவகாமி சரிதம் என்ற கிளைக்கதை இடம் பெற்ற நூல் மனோன்மணியம்
  24. நாடகத்துள் நாடகமாகத் திகழ்வது சிவகாமி சரிதம்
  25. தத்துவப் பொருள் கொண்டது சிவகாமி சரிதம்
  26. சிவகாமி சபதம் என்பது கல்கி எழுதிய வரலாற்று நாவல்

மனோன்மணியம் சுந்தரனார் ஆசிரியர் குறிப்பு

  • ஊர் = கேரள மாநிலம் ஆலப்புழை
  • பெற்றோர் = பெருமாள் பிள்ளை, மாடாத்தி அம்மையார்
  • இவர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
  • கோடாக நல்லூர் சுந்தர ஸ்வாமிகள் என்பவரைத் தமது ஞானாசிரியராகப் கொண்டு ஒழுகி வந்தார்

மனோன்மணியம் சுந்தரனார் சிறப்பு பெயர்

  • ராவ்பகதூர்
  • தமிழ் செய்யுள் நாடக இலக்கியத்தின் தந்தை
  • மனோன்மணியம்
  • மனோன்மணீயம் சுந்தரனார்  படைப்புகள்
  • நூல் தொகை விளக்கம்
  • திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி
  • திருவிதாங்கூர்ப் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி

மனோன்மணீயம் சுந்தரனார் சிறப்பு

  1. அந்நாளைய சென்னை மாகாண அரசு இவருக்கு ராவ்பகதூர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது
  2. தமிழ்நாடு அரசு மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என்னும் பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவி பெருமை படுத்தியுள்ளது.
  3. இவரின் “நீராருங்கடலுடுத்த” என்ற தமிழ் வாழ்த்துப்பாடல் தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்கப்பட்டுள்ளது
  4. இவரின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு இசை அமைத்தவர் = எம்.எஸ்.விசுவநாதன்
  5. இவரைத் “தமிழ் செய்யுட் நாட இலக்கியத்தின் தந்தை” எனப் போற்றுவர்
  6. கா.சு.பிள்ளை கூற்று: ‘தமிழ் இலக்கியத்தில் கால ஆராய்ச்சியைத் தொடங்கி வைத்த பெருமை இவருடையதே” என்கிறார்.
  7. மொழிப்பெயர்ப்பு நூல்கள்:இவர் திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்
நூல்கள் :
  • திருஞான சம்பந்தர் கால நிர்ணயம்
  • நூற்றொகை விளக்கம்
  • சேரநாட்டுப் பழங்கால அரசர்கள்
  • ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டவை : திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி


தொடர்பான செய்திகள்

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!