சித்தர் பாடல்கள்
சித்தர் பாடல்கள்
சித்தர்களால் இயற்றப்பெற்ற பாடல்கள் சித்தர் பாடல்கள் ஆகும். இவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
- வேதியியல், மருத்துவம், வானியல் போன்ற துறைசார் தகவல்கள் அடங்கிய பாடல்கள்.
- சமூக சீர்சிருத்த கருத்துக்கள் தாங்கிய பாடல்கள்.
- ஆன்மீகப் பாடல்கள்.
பாடல் குறிப்பு
- சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடுமலைகளில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள்
- பாம்பாட்டிச்சித்தர், குதம்பைச் சித்தர், அழுகிணிச் சித்தர் என்பன எல்லாமே காரணப்பெயர்கள்.
- காடுவெளிச்சித்தர், உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியையே கடவுளாக வழிபட்டவர்; எளிய சொற்களில் அறிவுரைகளைக் கூறியவர்
- சிறப்பாக நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் கூறுகளையும், இலக்கியங்களையும், கலைகளையும் ஆராய்வது நாட்டுப்புறவியல் எனலாம்.
பதினெண் சித்தர்
- தமிழ்நாட்டில் எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்தனர்; வாழ்ந்து வருகின்றனர்.
- இவர்கள் மருத்துவம், மந்திரம், இரசவாதம், யோகம், ஞானம் பற்றி உலக வழக்குச் சொற்களைக் கொண்டு நாட்டுப்புறப்பாடல் மரபில் பாடியுள்ளார்.
- இவற்றில் மேற்போக்கான பொருள் ஒன்றாகவும் உட்பொருள் ஒன்றாகவும் இருக்கவும். திருமூலரே முதற்சித்தர் எனப் போற்றப்படுகிறார்.
- சித்த மருத்துவத்தின் முன்னோடிகள் சித்தர்களே. இவர்களை அக்கால அறிவியல் அறிஞர்கள், இயற்கை நிபுணர்கள் எனக் கூறலாம்.
- சித்தர்களின் தலைவராக அகத்தியர் விளங்கினார், சித்தர்களில் மிகுந்த சீர்திருத்தவாதி சிவவாக்கியர்
- அகத்தியர், பலத்தியர், புகண்டர், நந்தி, திருமூலர், காலங்கிநாதனர், போகர், கொங்கணர், உரோம்முனி, சட்டைமுனி, மச்சமுனி, கரூரார், தன்வந்திரி, தேரையூர், பிண்ணாக்கீசர், கோரக்கர் யூசிமணி, இடைகாடர்.
- இவர்களைத் தவிர பாம்பாடடிச்சித்தர், அகப்பேயச்சித்தர், கடுவெளிச்சித்தர், அழுகிணிச் சித்தர், சிவவரக்கியார் போன்றோர்கள் சித்தர்களாக விளங்கி உலக நிலையாமை, மூடநம்பிக்கை, ஒழிப்பு, சடங்கு ஆசாராங்களை வெறுத்தல் என்ற புரட்சிகரமான கருத்துகளை உலகிற்கு வழங்கினார்.
- பத்திரகிரியாரின் பாடல்கள் “மெய்ஞஞானப் புலம்பல்” மிகவும் சிறந்தவை. அழுகிணிச் சித்தரின் பாடல்கள் உள்ளத்தை உருக்குபவை.
- கடவுளைக் காண முயல்பவர்கள் பத்தர்கள் கண்ட தெளிந்தவர்கள் சித்தர்கள் என்று தேவாரம் கூறுகிறது.
சித்தர்களின் பஞ்சமர் (ஐவர்) என்று குறிப்பிடப்படுவார்கள்
1. திருமூலர் 2. சிவவாக்கியர் 3. பட்டினத்தார்
4. திருமாளிகைத் தேவர் 5. கருவூரார்
சித்தர் பாடல்கள் மக்கள் இலக்கியம் என்ற போற்றப்படுகிறது
தொடர்பான செய்திகள்
- மனோன்மணியம் – தொடர்பான செய்திகள்-MANONMANIYAM TNPSC NOTES
- பாஞ்சாலி சபதம் – தொடர்பான செய்திகள்-PANJALI SABATHAM - TNPSC NOTES
- குயில் பாட்டு – தொடர்பான செய்திகள்- KUYIL PATTU TNPSC NOTES
- இரட்டுற மொழிதல் (காளமேகப்புலவர்) – IRATURA MOZHITAL TNPSC NOTES
- அழகிய சொக்கநாதர் -தொடர்பான செய்திகள்-ALAGIYA SOKKANATHAR TNPSC NOTES
- நாட்டுப்புறப்பாட்டு – தொடர்பான செய்திகள்- NATTUPURA PATTU TNPSC NOTES
- சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்-SIDDHAR PADALGAL TNPSC NOTES
No comments:
Post a Comment