அழகிய சொக்கநாதப் புலவர்
அழகிய சொக்கநாதப் புலவர்
ஆசிரியர் குறிப்பு:
- காலம் 19-ம் நூற்றாண்டு
- திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூரில் வன்னியர்க்கு மகனாகப் பிறந்தார்
- முன்சீப் நீதிமன்றத்தில் பிரதி எழுதும் பணி. மாதம் பத்து ரூபாய் சமபளம். “எனக்கு மாசம்பத்து வருகிறது” என இரட்டுற மொழிவார் (மாசம் – பத்து, மாசம்பத்து)
- சங்கரநயினார் கோவிலுக்கு “இராசைமாநகர்” என்ற பெயர் உண்டு
- இராசை கோமதி அம்மைபதிகனம், முத்துசாமிப்பிள்ளை, காதற்பிரபந்தம், காந்தியம்மை கும்மி, கோதைக் கும்மிப் பாடல்கள் எனப் பல நூல்களை இயற்றியவர்.
படைப்புகள்:
- காந்தியம்மை பிள்ளைத்தமிழ்
- ராசி கோமதி அம்மைபதிகம்
- முத்துசாமி பிள்ளை காதல் பிரபந்தம்
- கந்தியம்மை கும்மி
- கோதை கும்மி
சிறப்பு:
- காந்தியம்மைப் பிள்ளைத்தமிழ் பாடியததற்காக இராசவல்லிபுர வள்ளல் முத்துசாமி இவருக்கு வைரக்கடுக்கன் பரிசாக வழங்கினார்
- சிலேடை பாடுவதில் வல்லவர்
மேற்கோள்:
இவர் பாடிய மாமரத்திற்கும் கிழிந்த குடைக்கும் உள்ள சிலேடை பின்வருமாறு.
பிஞ்சு கிடக்கும்; பெருமழைக்குத் தாங்காது;
மிஞ்ச அதனுள் வெயில் ஒழுகும்; -தஞ்சம் என்றோர்
வேட்டது அருள் முத்துசுவாமித்துரை ராஜேந்திரா கேள்
கோட்டுமரம் பீற்றல் குடை
திருமாலும் கைக்கடிகாரமும்
சக்கரத்தி னாலரவந் தாங்தலி னோடுமுள்ளெட்(டு)
அக்கரத்தி னால்வேலை யார்வதினால் – மிக்ககவன்பர்
முக்கியமாய்க் கைக்கொளலால் முத்துசா மித்துரையே
கைக்கடியா ரந்திருமால் காண்.
தொடர்பான செய்திகள்
- மனோன்மணியம் – தொடர்பான செய்திகள்-MANONMANIYAM TNPSC NOTES
- பாஞ்சாலி சபதம் – தொடர்பான செய்திகள்-PANJALI SABATHAM - TNPSC NOTES
- குயில் பாட்டு – தொடர்பான செய்திகள்- KUYIL PATTU TNPSC NOTES
- இரட்டுற மொழிதல் (காளமேகப்புலவர்) – IRATURA MOZHITAL TNPSC NOTES
- அழகிய சொக்கநாதர் -தொடர்பான செய்திகள்-ALAGIYA SOKKANATHAR TNPSC NOTES
- நாட்டுப்புறப்பாட்டு – தொடர்பான செய்திகள்- NATTUPURA PATTU TNPSC NOTES
- சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்-SIDDHAR PADALGAL TNPSC NOTES
No comments:
Post a Comment