ரெப்போ வட்டி விகிதத்தில் 6-ஆவது முறையாக மாற்றமில்லை
- வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எந்த மாற்றத்தையும் இந்திய ரிசாவ் வங்கி (ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை. தொடர்ந்து ஆறாவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.5 சதவிகிதமாக தொடரும் எனவும், பணவீக்கம் இலக்கை நெருங்கி வருவதாகவும், எதிர்பார்த்ததை விட வளர்ச்சி சிறப்பாக இருப்பதாகவும் ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
- இதன்மூலம் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்கள் மீதான வட்டி உயர வாய்ப்பில்லை. அதே நேரத்தில் வங்கிகளில் நிரந்தர வைப்புக்கு வட்டியும் அதிகரிக்கப்படாது.
- நடப்பு நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவிகிதமாகவும் இருக்கும் என்று கணித்துள்ளது. நடப்பு 2023-24 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.6 வேகமாக சதவிகிதம் வளர்ச்சியடைந்து, வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது. ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவிகிதமாக இருந்தது.
- ரெப்போ என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி குறுகிய காலத்தில் வழங்கும் நிதிக்கான வட்டி விகிதம் ஆகும். இந்த வட்டி விகிதத்தை உயர்ந்தாமல் இருப்பதால், பொதுமக்கள் வங்கிகளில் வாங்கியுள்ள கடனுக்கான வட்டியும் உயராது. அதாவது வீட்டுக்கடன், வாகனக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை வங்கிகள் வழங்கி வருகின்றன
திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்ட உறவுகள்:உத்தரகண்டில் பொது சிவில் சட்டம்
- நாட்டில் ஒவ்வொரு மதத்திலும் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசுரிமை ஆகியவற்றில் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதற்குப் பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தைப் பின்பற்ற வழியமைக்கும் ‘பொது சிவில் சட்டத்தை’ நாடு முழுமைக்கும் கொண்டுவர மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. இந்த நிலையில், நாட்டில் முதல் மாநிலமாக உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- இந்த சட்டத்தின்படி,திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்ட உறவுகள் என்ற பிரிவில், தந்தை சகோதரியின் மகன்மகள் மற்றும் தாய் சகோதரரின் மகன்மகள் என்ற உறவுமுறையும் இடம்பெற்றுள்ளது.
- முக்கிய அம்சங்கள்: உத்தரகண்ட் சட்டப்பேரவை பொது சிவில் சட்ட (யுசிசி) மசோதா
மத்திய அரசுக்கு எதிராக தில்லி ஜந்தர்மந்தரில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான போராட்டம் தொடங்கியது.
- கேரளத்தின் கடன் வாங்கும் வரம்பு மற்றும் வருவாய் பற்றாக்குறை மானியத்தை குறைத்த மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் மாநிலத்தின் கடன் வரம்பு 3.5 சதவீதமாக இருந்த நிலையில், அதை 2 சதவீதமாகக் குறைத்து நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
- இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு, கேரள மாநில ஆளுநரைக் கண்டித்தும், மாநில உரிமைகள், கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்கும் வகையிலும் தில்லி ஜந்தர்மந்தரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள மாநில இடது ஜனநாயக அரசு போராட்டம் நடத்தி வருகிறது.
- கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தில், மாநில அமைச்சர்கள், ஆளுங்கட்சியின் எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர்
- மாநிலங்களின் கடன் வரம்புகள் பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான முறையில் நீதி ஆயோக் பரிந்துரைகளின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது.
- நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், சட்டப் பிரிவு 293(4)-இன் கீழ் மாநிலங்களுக்கான பொதுக் கடன் வரம்பு நிா்ணயம் செய்யப்படுகிறது.
ஒருங்கிணைந்த பொது குறைதீா் மற்றும் கண்காணிப்பு அமைப்பு (சிபிஜிஆா்ஏஎம்எஸ்-CPGRAMS) என்னும் வலைதளம்:
- மத்திய, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுத் துறைகள் தொடா்பான தங்களின் குறைகளை ‘ஒருங்கிணைந்த பொது குறைதீா் மற்றும் கண்காணிப்பு அமைப்பு (சிபிஜிஆா்ஏஎம்எஸ்-CPGRAMS)’-(Centralised Public Grievance Redress and Monitoring System)’ என்னும் வலைதளம் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.
- https://pgportal.gov.in இந்த வலைதளத்துடன் மத்திய மற்றும் மாநில/யூனியன் பிரதேச அரசின் அனைத்துத் துறைகளுக்கும் அணுகல் உள்ளது. இந்த வலைதளத்தில் தெரிவிக்கப்படும் குறைகள் அந்தந்த துறை அதிகாரிகளால் தீா்த்துவைக்கப்பட்டு வருகின்றன.
- நாட்டின் 19 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் குறைதீா்க்கும் வலைதளங்களுடன் இந்த வலைதளம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
வழக்கு தாக்கலின்போது மனுதாரரின்மதம், ஜாதியை குறிப்பிட வேண்டாம்: உச்சநீதிமன்றம்:
- ‘உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றங்களிலோ அல்லது மாவட்ட நீதிமன்றங்களிலோ வழக்கு தாக்கலின்போது மனுதாரா் தங்களின் மதம் அல்லது ஜாதியைக் குறிப்பிடவேண்டிய அவசியம் எதுவும் தென்படவில்லை. இது தவிா்க்கப்படவேண்டும். எனவே, அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கு தாக்கலில் மனுதாரா்கள் தங்களின் மதம் அல்லது ஜாதி விவரங்களை குறிப்பிட வேண்டியதில்லை என உத்தரவிடப்படுகிறது’ என்று உத்தரவிட்டது.
- நீதிபதி ஹிமா கோலி தலைமையிலான உச்சநீதிமன்ற அமா்வு இது தொடா்பான உத்தரவை பிறப்பித்தது. ராஜஸ்தான் மாநில குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த திருமண விவாகரத்து வழக்கு விசாரணை இடமாற்றத்துக்கான மனுவைப் பரிசீலித்தபோது இந்த உத்தரவைப் பிறப்பித்தது. அந்த மனுவில் மனுதாரா்களான கணவன் மற்றும் மனைவி இருவரின் ஜாதியும் குறிப்பிடப்பட்டிருந்தது.
82 வந்தே பாரத் ரயில்கள்
- 2024, ஜனவரி 31 நிலவரப்படி நாட்டில் தற்போது வரை 82 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் சில வழித்தடங்களில் ரயிலின் வேகத்தை மணிக்கு 160 கி.மீ. தொலைவு பயணிக்கும் வகையில் அதிகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
- 2022-23-ஆம் நிதியாண்டில் வந்தே பாரத் ரயில்களில் சராசரியாக பயணிப்போரின் எண்ணிக்கை 96.62 சதவீதமாக உள்ளது.
பாகிஸ்தானின் 16-ஆவது நாடாளுமன்ற தோ்தல் :
- பாகிஸ்தானின் 16-ஆவது நாடாளுமன்ற உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இந்த மாதம் 08/02/24-ஆம் தேதி நடைபெறும் என்று தோ்தல் ஆணையத்தால் கடந்த 15/12/2023-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
- அதன்படி, 08/02/24-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கவிருக்கும் வாக்குப் பதிவு இடைவேளை இல்லாமல் மாலை 5 மணி வரை நடைபெறவிருக்கிறது.
- நாடு முழுவதும் உள்ள 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் நடைபெறும் இந்தத் தோ்தலில் வாக்களிக்க 12.85 கோடி போ் பதிவு செய்துள்ளனா்.
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:பிப்ரவரி2024
நடப்பு நிகழ்வுகள் 2024
MONTH WISE TNPSC GK NOTES IN TAMIL 2024:
விருதுகள் கௌரவங்கள் 2024 :
- JANUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / ஜனவரி விருதுகள் ( தமிழில்) 2024
- FEBRUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / பிப்ரவரி விருதுகள் ( தமிழில்) 2024
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL | நடப்பு நிகழ்வுகள்:2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-ஜனவரி 2024
- நடப்பு நிகழ்வுகள் கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்-பிப்ரவரி 2024
முக்கியமான நாட்களின் பட்டியல் 2024
- ஜனவரி 2024 இன் முக்கியமான நாட்களின் பட்டியல் / LIST OF IMPORTANT DAYS IN JANUARY 2024 IN TAMIL
- பிப்ரவரி 2024 இல் முக்கியமான நாட்கள், நிகழ்வுகள் பட்டியல்/FEBRUARY 2024-LIST OF IMPORTANT DAYS IN TAMIL