FEBRUARY AWARDS HONOURS 2024 IN TAMIL / பிப்ரவரி விருதுகள் ( தமிழில்) 2024

TNPSC PAYILAGAM
By -
0

 

FEBRUARY AWARDS HONOURS 2024 IN TAMIL
FEBRUARY AWARDS HONOURS 2024 IN TAMIL 

66-வது விருதுகள் வழங்கும் விழா:

  1. இசைக் கலைஞர்களைக் கவுரவிக்கும் விதமாக, அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இசைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் இதில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த முறையில் பங்காற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
  2. இதன், 66-வது விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்றது. 
  3. சங்கர் மகாதேவன் மற்றும் ஜாகிர் ஹுசைனின் 'சக்தி பேண்ட்' இசை விருதுகளில் உயரிய விருதுக்கான கிராமி விருதை வென்றது. குளோபல் மியூசிக் ஆல்பம் பிரிவில் கிராமி விருது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சுறுசுறுப்பான யானைக்கான (ஆக்டிவ் எலிபன்ட்) விருது :

  1. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயில் யானை மங்களத்துக்கு சுறுசுறுப்பான யானைக்கான விருது  வழங்கப்பட்டது. 
  2. தில்லி தன்னார்வ தொண்டு நிறுவன லோத் சந்திரா அவுர் ஜனதா சார்பில் தமிழகத்தில் 38 யானைகள் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தனர். அதில் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் யானை மங்களம் சிறந்த பராமரிப்புக்காக முதல் பரிசு பெற்றது.
  3. கும்பகோணத்தில் இந்து சமய அறநிலையத் துறையைச் சாா்ந்த ஆதிகும்பேசுவரா் கோயிலுக்கு யானை மங்களத்தை காஞ்சி மகா பெரியவா் 1982 ஆம் ஆண்டு வழங்கினாா். தற்போது 56 வயதாகும் இந்த யானை மங்களத்துக்கு ஆரோக்கியமாகவும், ஊட்டச்சத்துடன் இருப்பதற்காகவும் இயற்கை மூலிகைகள், உடற்பயிற்சிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.

இன பாதுகாப்பு விருது:

  1. நாட்டு மாடு இனத்தைப் பாதுகாத்ததற்காக தேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நாட்டு விலங்கின மரபு வாரியம் வழங்கும் இன பாதுகாப்பு விருதை பா்கூா் ஆராய்ச்சி மையம் பெற்றுள்ளது.
  2. நாட்டு மாடுகளைக் காக்கும் விதமாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மூலமாக ஈரோடு மாவட்டம், அந்தியூா் வட்டம், பா்கூா் பகுதியில் பா்கூா் நாட்டு மாடு இனங்களைப் பாதுகாக்க தனி மையத்தை தமிழக அரசு கடந்த 2015-இல் அமைத்து செயல்படுத்தி வருகிறது.
  3. 2012-ஆம் ஆண்டு கணக்கின்படி பா்கூா் நாட்டு மாடுகள் 14,154 இருந்த நிலையில், இந்த மையத்தின் செயல்பாட்டுக்குப் பிறகு 2019-ஆம் ஆண்டு கணக்கின்படி 42,300 பா்கூா் நாட்டு மாடுகள் கணக்கிடப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த மையத்தில் 170 மாடுகள் வளா்க்கப்பட்டு வருகின்றன. இவை இனப்பெருக்கத்திற்காகவும், பால் மற்றும் பால் பொருள்களுக்காகவும், இன பாதுகாப்புக்காகவும் வளா்க்கப்படுகின்றன
ஐசிசி விருது 2024:
  • ஜனவரி மாத சிறந்த வீரர் – ஷமார் ஜோசப் (மேற்கு இந்திய தீவு)
  • ஜனவரி மாத சிறந்த வீராங்கனை – ஏமி ஹண்டர் (அயர்லாந்து)

தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் 2023:

2023 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்வு  மும்பையில் நடைபெற்றது. 
  • ஜவான் படத்தில் நடித்த ஷாருக்கானுக்கு சிறந்த நடிகர் விருதும்
  •  நடிகை நயன்தாராவுக்கு சிறந்த நடிகை விருதும் வழங்கப்பட்டது. 
  • சிறந்த இயக்குநர் விருது அனிமல் படத்திற்காக சந்தீப் ரெட்டி வங்காவிற்கும் 
  • சிறந்த வில்லன் விருது பாபி தியாலுக்கும் (அனிமல்) கொடுக்கப்பட்டது. 
  • சிறந்த இசையமைப்பாளர் விருது அனிருத்துக்கு (ஜவான்) வழங்கப்பட்டது. 
  • சிறந்த இயக்குநர் (விமர்சகர்கள் பரிந்துரை) விருது அட்லிக்கு கொடுத்தனர். 
  • இசைத்துறையில் செய்த மிகப்பெரிய பங்களிப்புக்காக ஜேசுதாஸுக்கும் விருது அறிவிக்கப்பட்டது. 
  • சிறந்த நடிகர் (விமர்சகர்கள் பரிந்துரை) விக்கி கௌஷல் (சாம் பகதூர்), 
  • சிறந்த நடிகை ராணி முகர்ஜி (மிசஸ் சாட்டர்ஜி வெர்சஸ் நார்வே) ஆகியோருக்கு விருது அளிக்கப்பட்டது. 
  • சிறந்த படமாக 12த் பெயில் (12th fail) படமும் 
  • சிறந்த இணையத் தொடராக ஃபார்சி (farzi) தேர்ந்தெடுக்கப்பட்டன. 

தமிழறிஞர்களுக்கு 2022ம் ஆண்டுக்கான விருதுகள்
  • தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், சென்னை, திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கில், விருது வழங்கும் விழா நடந்தது. விழாவில், 2022ம் ஆண்டுக்கான பல்வேறு விருதுகளையும், 10 பேருக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளர்; 38 மாவட்டங்களைச் சேர்ந்த அறிஞர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருதுகளையும், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.
  • 2022ம் ஆண்டுக்கான சிறப்பு விருதுகளை, 15 பேருக்கும், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளை 10 பேருக்கும், தமிழ்ச்செம்மல் விருதுகளை 38 பேருக்கும், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.

2022ஆம் ஆண்டுக்கான ‘அருட்பெருஞ்ஜோதி - வள்ளலார் விருது’

  • தமிழக அரசின் சார்பில் 2022ஆம் ஆண்டுக்கான ‘அருட்பெருஞ்ஜோதி - வள்ளலார் விருது’ ப.சரவணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
  • இவர் எழுதிய நூல்கள் :  ‘அருட்பா × மருட்பா’ போராட்டத்தின் நூலாசிரியரும் அதன் ஆவணங்களின் தொகுப்பாசிரியரும் ஆவார். ‘நவீன நோக்கில் வள்ளலார்’, ‘வாழையடி வாழையென...’ முதலிய அவரது ஆய்வு நூல்கள் சன்மார்க்க உலகின் கவனத்தை ஈர்த்தவை. இவர் வள்ளலாரிய ஆய்வில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். 
  • தமிழக அரசால் கடந்த 2020 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இவ்விருது, ஆண்டுதோறும் சன்மார்க்க அறிஞர் ஒருவருக்கு வழங்கப்பட்டு வருகிறது. முதல் விருது ஊரன் அடிகளாருக்கும் 2021ஆம் ஆண்டுக்கான விருது ரா.சஞ்சீவராயருக்கும் வழங்கப்பட்டது. இவ்விருது ரூ.2 லட்சம், தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவற்றை உள்ளடக்கியது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இலக்கிய விருதுகள்

  • விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கலை இலக்கியப் பிரிவு ஆண்டுதோறும் வழங்கிவரும் இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
  • சிறந்த கவிதை நூலுக்கான விருது பூவிதழ் உமேஷுக்கும் 
  • சிறந்த நாவலுக்கான விருது முத்துராசா குமாருக்கும் 
  • சிறந்த சிறுகதை நூலுக்கான விருது சாரோனுக்கும் 
  • சிறார் இலக்கிய விருது உதயசங்கருக்கும் 
  • சிறந்த பெண் எழுத்தாளர் விருது சு.தமிழ்ச்செல்விக்கும் 
  • சிறந்த பெளத்த இலக்கிய விருது மு.ரமேஷுக்கும் 
  • எழுச்சித் தமிழர் இலக்கிய விருது அரச முருகுபாண்டியனுக்கும் 
  • சிறந்த திடைப்படத்துக்கான விருது மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘மாமன்னன்’ படத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.
கேன்ஸ் திரைப்பட விழா-பிரான்ஸ்
  • சிறந்த ஒளிப்பதிவாளருக்கான பியர் ஏஞ்சனியூ (Pierre Angenieux) விருதானது சந்தோஷ் சிவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இவ்விருதினை பெறும் முதல் இந்தியர் ஆவார்.
எடித் மற்றும் பீட்டர் ஓ'டோனல் விருது:

  • அமெரிக்காவில் வசிக்கும் சென்னையை சேர்ந்த இன்ஜி., மற்றும் பேராசிரியரான அசோக் வீரராகவனை டெக்சாஸ் மாகாணம் கவுரவித்துள்ளது. 
  • அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் மிக உயர்ந்த கல்வி விருதுகளில் ஒன்றான எடித் மற்றும் பீட்டர் ஓ'டோனல் விருது வீரராகவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
  • ஒவ்வொரு ஆண்டும் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வளர்ந்து வரும் ஆய்வாளர்களில் சிறந்தவருக்கு டெக்சாஸ் அகாடமி ஆப் மெடிசின், இன்ஜினியரிங், சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்ற அமைப்பு விருது வழங்கி வருகிறது.

கலைஞர் எழுதுகோல் விருது 2022

  • சிறந்த இதழியலாளர்களுக்கு வழங்கப்படும் கலைஞர் எழுதுகோல் விருது V.N.சாமி-க்கு வழங்கப்பட்டுள்ளது.
  • வி.என்.சாமி பத்திரிகை துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேல் முதிர்ந்த அனுபவம் கொண்டவர். மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த அவர் கடந்த 1931-ல் பிறந்தவர். 92 வயது நிறைந்தவர். இளமையில் தந்தை பெரியாரின் உதவியாளராக இருந்த அவர், தமிழ்நாடு, சுதேசமித்திரன் உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றி கடந்த 1989-ல் ஓய்வு பெற்றார்.
  • எழுதிய நூல் – புகழ் பெற்ற கடற்போர்கள்


‘இலக்கிய மாமணி’விருது 
  • கடந்த 2021 ஜூன் 3-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் ‘இலக்கிய மாமணி’ என்ற விருது உருவாக்கப்படுகிறது. தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் 3 அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும்’’ என்று தெரிவித்தார். அதன்படி, மரபு தமிழ், ஆய்வு தமிழ், படைப்பு தமிழ் ஆகிய வகைப்பாட்டில் ஆண்டுதோறும் இலக்கிய மாமணி விருது வழங்கப்படுகிறது.
  • அந்த வரிசையில், 2022-ம்ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த அரங்க. ராமலிங்கம், (மரபு), விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கொ.மா.கோதண்டம் (ஆய்வு), கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சூர்யகாந்தன் (எ) மா.மருதாச்சலம் (படைப்பு) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
  • கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நேர்வாக,இலக்கிய மாமணி விருதுக்கு நீலகிரிமாவட்டத்தை சேர்ந்த மணி அர்ஜுனன் (மரபு), திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அர.திருவிடம் (ஆய்வு), சென்னை மாவட்டத்தை சேர்ந்த க.பூரணச்சந்திரன் (படைப்பு) ஆகியோர் தேர்வாகினர்.
  • இதேபோல, 2023-ம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுக்கு, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஞா.மாணிக்கவாசகன் (மரபு), திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சு.சண்முகசுந்தரம் (ஆய்வு), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கவிஞர் இலக்கியா நடராசன் (எ) ச.நடராசன் (படைப்பு) ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
  • இலக்கிய மாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட விருதாளர்களுக்கு, ரூ.5 லட்சத்துக்கான காசோலை, ஒரு பவுன் தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை வழங்கி, பொன்னாடை அணிவித்து முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார்.

பிரிட்டன் அரசின் உயரிய விருது

  • பார்தி ஏர்டெல் நிறுவனர், தலைவரான சுனில் பாரதிக்கு பிரிட்டன் அரசின் உயரிய விருதான Knight Commander of the Most Excellent Order விருது வழங்கப்பட்டுள்ளது.



விருதுகள் கௌரவங்கள் 2024 :

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!