TAMIL NADU GOVERNMENT AWARDS LIST 2024 / தமிழக அரசு விருதுகள்: 2024

TNPSC PAYILAGAM
By -
0
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் மொழிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிய 7 தமிழறிஞர்களுக்கு திருவள்ளுவர் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருது2024  முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

TAMIL NADU GOVERNMENT AWARDS LIST 2024 / தமிழக அரசு விருதுகள்: 2024


கலைஞர் எழுதுகோல் விருது 2022

  • சிறந்த இதழியலாளர்களுக்கு வழங்கப்படும் கலைஞர் எழுதுகோல் விருது V.N.சாமி-க்கு வழங்கப்பட்டுள்ளது.
  • வி.என்.சாமி பத்திரிகை துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேல் முதிர்ந்த அனுபவம் கொண்டவர். மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த அவர் கடந்த 1931-ல் பிறந்தவர். 92 வயது நிறைந்தவர். இளமையில் தந்தை பெரியாரின் உதவியாளராக இருந்த அவர், தமிழ்நாடு, சுதேசமித்திரன் உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றி கடந்த 1989-ல் ஓய்வு பெற்றார்.
  • எழுதிய நூல் – புகழ் பெற்ற கடற்போர்கள்


‘இலக்கிய மாமணி’விருது 
  • கடந்த 2021 ஜூன் 3-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் ‘இலக்கிய மாமணி’ என்ற விருது உருவாக்கப்படுகிறது. தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் 3 அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும்’’ என்று தெரிவித்தார். அதன்படி, மரபு தமிழ், ஆய்வு தமிழ், படைப்பு தமிழ் ஆகிய வகைப்பாட்டில் ஆண்டுதோறும் இலக்கிய மாமணி விருது வழங்கப்படுகிறது.
  • அந்த வரிசையில், 2022-ம்ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த அரங்க. ராமலிங்கம், (மரபு), விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கொ.மா.கோதண்டம் (ஆய்வு), கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சூர்யகாந்தன் (எ) மா.மருதாச்சலம் (படைப்பு) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
  • கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நேர்வாக,இலக்கிய மாமணி விருதுக்கு நீலகிரிமாவட்டத்தை சேர்ந்த மணி அர்ஜுனன் (மரபு), திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அர.திருவிடம் (ஆய்வு), சென்னை மாவட்டத்தை சேர்ந்த க.பூரணச்சந்திரன் (படைப்பு) ஆகியோர் தேர்வாகினர்.
  • இதேபோல, 2023-ம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுக்கு, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஞா.மாணிக்கவாசகன் (மரபு), திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சு.சண்முகசுந்தரம் (ஆய்வு), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கவிஞர் இலக்கியா நடராசன் (எ) ச.நடராசன் (படைப்பு) ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
  • இலக்கிய மாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட விருதாளர்களுக்கு, ரூ.5 லட்சத்துக்கான காசோலை, ஒரு பவுன் தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை வழங்கி, பொன்னாடை அணிவித்து முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார்.

2022ஆம் ஆண்டுக்கான ‘அருட்பெருஞ்ஜோதி - வள்ளலார் விருது’

  • தமிழக அரசின் சார்பில் 2022ஆம் ஆண்டுக்கான ‘அருட்பெருஞ்ஜோதி - வள்ளலார் விருது’ ப.சரவணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
  • இவர் எழுதிய நூல்கள் :  ‘அருட்பா × மருட்பா’ போராட்டத்தின் நூலாசிரியரும் அதன் ஆவணங்களின் தொகுப்பாசிரியரும் ஆவார். ‘நவீன நோக்கில் வள்ளலார்’, ‘வாழையடி வாழையென...’ முதலிய அவரது ஆய்வு நூல்கள் சன்மார்க்க உலகின் கவனத்தை ஈர்த்தவை. இவர் வள்ளலாரிய ஆய்வில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். 
  • தமிழக அரசால் கடந்த 2020 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இவ்விருது, ஆண்டுதோறும் சன்மார்க்க அறிஞர் ஒருவருக்கு வழங்கப்பட்டு வருகிறது. முதல் விருது ஊரன் அடிகளாருக்கும் 2021ஆம் ஆண்டுக்கான விருது ரா.சஞ்சீவராயருக்கும் வழங்கப்பட்டது. இவ்விருது ரூ.2 லட்சம், தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவற்றை உள்ளடக்கியது.

குடியரசு தின விழா 2024: விருதுகள் -தமிழ்நாடு

  • குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றினார்.
  • ஆர்.என்.ரவியும் தமிழக முதல்வர் ஸ்டாலினும் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களை விளக்கி உருவாக்கப்பட்ட அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பினை ஏற்றனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
  • அப்போது பல்வேறு பிரிவுகளில் சாதனை புரிந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விருதுகள் வழங்கி கௌரவித்தார்.


தமிழறிஞர்களுக்கு 2022ம் ஆண்டுக்கான விருதுகள்
  • தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், சென்னை, திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கில், விருது வழங்கும் விழா நடந்தது. விழாவில், 2022ம் ஆண்டுக்கான பல்வேறு விருதுகளையும், 10 பேருக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளர்; 38 மாவட்டங்களைச் சேர்ந்த அறிஞர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருதுகளையும், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.
  • 2022ம் ஆண்டுக்கான சிறப்பு விருதுகளை, 15 பேருக்கும், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளை 10 பேருக்கும், தமிழ்ச்செம்மல் விருதுகளை 38 பேருக்கும், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.

திருவள்ளுவர் விருது

திருக்குறள் நெறிபரப்பும் பெருந்தகையாளர்களில் ஒருவருக்கு திருவள்ளுவர் திருநாள் விழாவில் திருவள்ளுவர் விருது வழங்கப்பெறுகிறது.திருக்குறள் நெறி பரப்பும் பெருந்தகையாளர்களில் ஒருவருக்கு திருவள்ளுவர் திருநாள் விழாவில் திருவள்ளுவர் விருது வழங்கப்படுகிறது. விருதுத் தொகை ரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை வழங்கிச் சிறப்பக்கப்பெறுகிறது

  • தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2024-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது- பாலமுருகனடிமை சுவாமி

பேரறிஞர் அண்ணா விருது

பேரறிஞர் அண்ணா விருது (2006 முதல்) தமிழ்ச் சமுதாயம் முன்னேற்றம் காண அயராது பாடுபடும் ஒருவருக்கு அண்ணா விருது வழங்கப்படும். (விருதுத் தொகை ரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)

  • 2023ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது -பத்தமடை பரமசிவம் 

பெருந்தலைவர் காமராஜர் விருது

பெருந்தலைவர் காமராஜர் விருது (2006 முதல்) தெருவெங்கும் பள்ளிகள் திறந்து, இலவசக் கல்வித்திட்டம், சத்துணவுத் திட்டம் முதலிய திட்டங்கள் மூலமாக தமிழ் சமுதாயம் கல்வி எனும்கைவிளக்கு ஏந்தி முன்னேற வழிவகுத்த வரலாறு படைத்த பெருந்தகையாளர் அவர்களின் அடிச்சுவட்டில், தமிழக மக்களுக்கு தொண்டாற்றி வரும் ஒருவருக்கு பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கப்படும். (விருதுத் தொகை ரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)

  • பெருந்தலைவர் காமராசர் விருது- உ. பலராமன்

மகாகவி பாரதியார் விருது

மகாகவி பாரதியார் விருது (1997 முதல்) பாரதியாரின் படைப்புகள் அனைத்தையும் முழுமையாகப் பயின்று ஆய்வு மேற்கொண்டு பாரதியாரைப் பற்றிய கவிதைகள் மற்றும் பாரதியின் புகழ் பரப்பும் வகையில் கவிதை, உரைநடை நூல்கள் படைத்தோர், பிற வகையில் தொண்டு செய்தோர், செய்பவர்களுக்கு மகாகவி பாரதியார் விருது வழங்கப்படுகிறது. (விருதுத் தொகை ரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)

  • மகாகவி பாரதியார் விருது கவிஞர் பழநிபாரதிக்கும், 

பாவேந்தர் பாரதிதாசன் விருது

பாவேந்தர் பாரதிதாசன் விருது (1978 முதல்) சிறந்த கவிஞர் ஒருவருக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்படுகிறது.(விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)

  • பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிஞர் ம. முத்தரசுக்கும், 

தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது

தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது (1979 முதல்) இவ்விருது சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. (விருதுத் தொகை ரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)

  • தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது பேராசிரியர் எஸ்.ஜெயசீல ஸ்டீபனுக்கும்

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது

  • முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது முனைவர் இரா.கருணாநிதிக்கும் 

“தந்தை பெரியார் விருது” 2023
  • தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும், சமூகநீதிக்காகப் பாடுபடுபவர்களைச் சிறப்பு செய்யும் வகையில், சமூக நீதிக்கான “தந்தை பெரியார் விருதினை’’ வழங்கி கௌரவித்து வருகிறது. 
  • அந்தவகையில், 2023-ஆம் ஆண்டிற்கான சமூகநீதிக்கான “தந்தை பெரியார் விருது”-க்கு சமூக நீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • சமூகநீதிக்கான “தந்தை பெரியார் விருது’’ பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ள சுப. வீரபாண்டியன், திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர், 
  • தந்தை பெரியாரின் பற்றாளர். தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவராகச் செயலாற்றி வருகிறார். 
  • அவர் ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் முழக்கத்தை முன்வைத்து, 2007 ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர்.
  • சுப. வீரபாண்டியன் கலைமாமணி விருது பெற்றுள்ளதுடன், இதுவரை 54 நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
டாக்டர் அம்பேத்கர் விருது’’ 2023
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டுவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் “டாக்டர் அம்பேத்கர் விருது’’ வழங்கப்பட்டு வருகிறது. 
  • அந்தவகையில், 2023-ஆம் ஆண்டிற்கான “டாக்டர் அம்பேத்கர் விருது”-க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • “டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது” பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ள பி. சண்முகம், தமிழ்நாட்டில் 32 ஆண்டுகாலமாக மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக பணிவகித்து மலைவாழ் மக்களின் நலனுக்காக பாடுபட்டுள்ளார். 
  • மேலும், தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்தில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்பட்ட வன்கொடுமைகளுக்கு எதிராக பெரும் போராட்டங்களை நடத்தி நீதி பெற்று தந்ததில் பெரும்பங்காற்றியுள்ளார்.
நம்மாழ்வாா் விருது

அங்கக வேளாண்மையைப் பின்பற்றி விவசாயப் பணிகளை மேற்கொண்டுவரும் 3 பேருக்கு நம்மாழ்வாா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த அறிவிப்பின் விவரம்: மண்ணை மாசுபடுத்தாமல் வேளாண் பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு நம்மாழ்வாா் விருது வழங்கப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. விருதுடன் பரிசுத் தொகை, சான்றிதழ், பதக்கம் ஆகியன வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 
  1. தஞ்சாவூா் மாவட்டம் மகா்நோன்புச்சாவடியைச் சோ்ந்த கோ.சித்தா், முதல் பரிசுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அவருக்கு ரூ. 2.50 லட்சம் ரொக்கப் பரிசு, சான்றிதழ், பதக்கம் ஆகியன வழங்கப்படும்.
  2. 2-ஆம் பரிசுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள, திருப்பூா் மாவட்டம் பொங்கலூரைச் சோ்ந்த கே.வெ.பழனிச்சாமிக்கு, ரூ. 1.50 லட்சம் ரொக்கம், சான்றிதழ், பதக்கம் அளிக்கப்பட உள்ளன. 
  3. காஞ்சிபுரம் மாவட்டம் அச்சுக்கட்டு கிராமத்தைச் சோ்ந்த கு.எழிலன் 3-ஆம் பரிசுக்கு தோ்வாகியுள்ளாா். அவருக்கு ரூ. 1 லட்சம் ரொக்கம், சான்றிதழ், பதக்கம் ஆகியன வழங்கப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!