குடியரசு தின விழா 2024: விருதுகள் -தமிழ்நாடு
குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றினார்.
ஆர்.என்.ரவியும் தமிழக முதல்வர் ஸ்டாலினும் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களை விளக்கி உருவாக்கப்பட்ட அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பினை ஏற்றனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
அப்போது பல்வேறு பிரிவுகளில் சாதனை புரிந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விருதுகள் வழங்கி கௌரவித்தார்.
குடியரசு தின விழாவில் முதலமைச்சர் சிறப்பு விருது 2024
மதுரை மாவட்டம், யா.கொடிக்குளம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்துவதற்காக தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை தானமாக வழங்கிய ஆயி அம்மாள் என்ற பூரணத்தை அவரது தன்னலமற்ற்ற கொடை உள்ளத்தை பாராட்டி அவருக்கு முதலமைச்சர் சிறப்பு விருதினை வழங்கினார்.
மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது 2024:
இதில் மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவரும், ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் இணை நிறுவனருமான முஹம்மது ஜுபைருக்கு வழங்கப்பட்டது. முகமது ஜூபேர் ஆல்ட் நியூஸ் என்ற பெயரில் இணையதளத்தைத் தொடங்கி, சமூக ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து உண்மையான செய்திகளை மட்டும் தனது இணையதளத்தில் வெளியிட்டு மக்களுக்கு தொடர்ந்து அளித்து வருகிறார்.
வீரதிரச் செயலுக்கான அண்ணா பதக்கங்கள்:
வீர தீர செயலுக்காக வழங்கப்படும் அண்ணா பதக்கமானது 3 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- சு.சிவக்குமார் (வட்டாச்சியர், ஸ்ரீவைகுண்டம்)
- தே.டேனியல் செல்வசிங் – திருநெல்வேலி
- யாசர் அராஃபத் – தூத்துக்குடி
காந்தியடிகள் காவலர் பதக்கம்:
கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதில், சிறப்பாக பணியாற்றிய, விழுப்புரம் எஸ்.பி., சசாங்சாய்; சென்னை மாவட்டம் மத்திய நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி., காசி விஸ்வநாதன்; செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் முனியசாமி; மதுரை மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவு சப் - இன்ஸ்பெக்டர் பாண்டியன்; ராணிப்பேட்டை அயல் பணி மத்திய நுண்ணறிவு பிரிவு ரங்கநாதன் ஆகியோருக்கு, காந்தியடிகள் காவலர் பதக்கங்களை, குடியரசு தின விழாவில் முதல்வர் வழங்கினார். தலா, 40,000 ரூபாய்க்கான காசோலை மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது :
சென்னையில் நடந்த குடியரசு தினவிழாவில், 2024ஆம் ஆண்டுக்கான அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறையின் சிறப்பு விருதை சி.பாலமுருகனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சேலம் மாவட்டம், பூலாம்பட்டி கிராமம் சின்னப்பில்லுக்குறிச்சியைச் சேர்ந்த சித்தன் மகன் சி.பாலமுருகன் என்ற விவசாயி, இவ்விருதைப் பெற்றார். இவ்விவசாயி வேளாண்மைத்துறையின் மூலம் வழங்கப்பட்ட நவீன தொழில்நுட்ப பயிற்சிகளின் மூலமாக திருந்திய நெல் சாகுபடி முறையை நன்கு கற்று அதனடிப்படையில் திருந்திய நெல் சாகுபடியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, தனது வயலில் CR-1009 என்ற நெல் ரகத்தைப் பயிரிட்டு, திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை கொண்டு தரமான 'CR-1009 ரக நெல் சான்று' விதைகளை உயிர் உரங்கள் மற்றும் உயிரின பூச்சிக்கொல்லிகள் விதை நேர்த்திகளுக்கு உட்படுத்தி, மேட்டுப்பாத்தி நாற்றாங்காலில் விதைப்பு செய்து 16 நாட்கள் வரை நாற்றாங்காலைப் பராமரித்துள்ளார்.
சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் கோப்பைகள்:
- மதுரை மாநகர எஸ்.எஸ்.காலனி காவல் நிலையம்
No comments:
Post a Comment