- 2023 ஆம் ஆண்டுக்கான பாரிவேந்தர் பைந்தமிழ் விருது- தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி
- புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது -தமிழ்செல்வி (சிலாவம் )
- பாரதியார் கவிதை விருது - ரவி சுப்பிரமணியன் (நினைவின் ஆழியில் அலையும் கயல்கள் )
- அழ . வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது - அருண் (பெரிய தாத்தா ) மற்றும் சி . சரிதா (கடலுக்கு அடியில் மர்மம் )
- ஜி .யூ .போப் மொழிபெயர்ப்பு விருது- எம் . பூபதி (பாஸ்டியன் பட்டு )
- ஏ .பி .ஜே . அப்துல்கலாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருது - க. மகதமூடி (இதம் தரும் இதயம் )
- பரிதிமாற் தமிழ் அறிஞர் தமிழ் ஆய்வு அறிஞர் - தமிழ்மல்லன் (தனித்தமிழ் இயக்கம் -ஒரு நூற்றாண்டு வரலாறு )
- முத்தமிழறிஞர் கலைஞர் சமூக நீதி விருது - சிவ. இளங்கோ (நிலத்தியில்பின் அரசியல் )
- சுதேசமித்ரா தமிழ் இதழ் விருது - மானுடம் இதழ் நிறுவனம்
- தொல்காப்பியர் தமிழ் சங்க விருது - மயிலை திருவள்ளுவர் தமிழ் சங்கம்
- அருணாச்சல கவிராயர் விருது - மறத்தமிழன் கலைக்குழு.
ஐ.நா சபையின் சிறந்த தொழில் முதலீடு ஊக்குவிப்பு விருது:2023
ஐ.நா சபையின் சிறந்த தொழில் முதலீடு ஊக்குவிப்பு விருது தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி (Guidance TN) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அபுதாபியில் நடந்த உலக முதலீட்டுமன்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன தலைமை செயல் அதிகாரி விஷ்ணு இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.
புதுப்பித்தக்க ஆற்றல் சார் முதலீடுகளை அதிகரிப்பதில் ஆற்றிய சிறப்பான பணிகளுக்காக ஐ.நா. அமைப்பின் மதிப்புமிகு முதலீட்டு ஊக்குவிப்பு விருது-2023ஐப் பெற்றுள்ள தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி (Guidance TN) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது
மாவட்ட ஆட்சியர்கள், வனத்துறை அமைச்சர்கள் மாநாடு விருதுகள் 2023 :
சென்னையில் மாவட்ட ஆட்சியர்கள், வனத்துறை அமைச்சர்கள் மாநாடானது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் வழங்கப்பட்ட விருதுகள்:
பசுமை விருதுகள்
- தீபக் ஜேக்கப் (தஞ்சாவூர்)
- ஆர்.வி. சஜீவனா (தேனி)
- பி.என்.ஸ்ரீதர் (கன்னியாகுமரி)
வன மேலாண்மை விருதுகள்
- எஸ்.ஆனந்த் (ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர்)
- பகான் ஜெகதீஸ் (ராமநாதபுரம் வன உயிரின காப்பாளர்)
- எம்.இளையராஜா (கன்னியாகுமரி வன உயிரின காப்பாளர்)
முதலமைச்சர் விருது
சாம்சன் (தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு)
கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது 2023 :செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினை க. ராமசாமிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிக் கௌரவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.9.2023) தலைமைச் செயலகத்தில், 2023-ஆம் ஆண்டிற்கான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்ட இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் முன்னாள் துணை இயக்குநர் க. ராமசாமிக்கு கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், வெண்கலத்தாலான கலைஞர் மு.கருணாநிதியின் திருவுருவச்சிலையும் வழங்கிக் கௌரவித்தார்.
2023-ம் ஆண்டிற்கான தகைசால் தமிழர் விருதானது கி.வீரமணிக்கு வழங்கப்பட்டுள்ளது
எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழ் பெண்ணான நா.முத்தமிழுக்கு கல்பனா சாவ்லா விருதானது வழங்கப்பட்டுள்ளது
வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக கணினி துறை பேராசிரியரான வசந்தா கந்தசாமிக்கு ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருதானது வழங்கப்பட்டுள்ளது
சென்னை அரசு மறுவாழ்வு மருத்துவமனை இயக்குநரான த.ஜெயக்குமாருக்கு மாற்று திறனாளி நலன் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த தொண்டு நிறுவனமான கன்னியாகுமரியின் சாந்தி தொண்டு நிறுவனத்திற்கும் விருது வழங்கப்பட்டள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு வங்கிக்கு சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி விருதும் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தின் சமூக சேவகர் டி.ஸ்டாலிபீட்டருக்கும் சின்ன சேலத்தின் கிராமத்தின் ஒளி தொண்டு நிறுவனத்திற்கு மகளிர் நலன் விருதானது தமிழக முதல்வரால் வழங்கப்பட்டது.
சுதந்திர தின விழாவில் தமிழக அரசு விருதுகள்: 2023 -விருது பெற்றவர்கள் விபரம்
தமிழ்நாடு கிராம ஊராட்சி விருது 2023
2021 – 22, 2022-23 ஆம் ஆண்டுகளுக்கான கிராம ஊராட்சி விருதானது தமிழக முதல்வரால் வழங்கப்பட்டுள்ளது.
2021 – 2022 ஆண்டுக்கான ஈராேடு மாவட்டத்தின் குளூர் கிராம ஊராட்சி, திண்டுக்கல் மாவட்டத்தின் தி.பஞ்சம்பட்டி கிராம ஊராட்சி, தூத்துக்குடி மாவட்டத்தின் – நட்டாத்தி கிராம ஊராட்சி போன்றவற்றிற்கு வழங்கப்பட்டுள்ளது.
2022 – 2023 ஆண்டுக்கான கோயம்புத்தூர் மாவட்டத்தின் நாயக்கன் கிராம ஊராட்சி, செங்கல்பட்டு மாவட்டத்தின் மேல்மருவத்தூர் கிராம ஊராட்சி, ராமநாதபுரம் மாவட்டத்தின் அரியேனந்தல் கிராம ஊராட்சி போன்றவற்றிற்கு வழங்கப்பட்டுள்ளது.
TAMIL NADU GOVERNMENT AWARDS LIST 2023 / தமிழக அரசு விருதுகள்: 2023
1.திருவள்ளுவர் விருது
திருக்குறள் நெறிபரப்பும் பெருந்தகையாளர்களில் ஒருவருக்கு திருவள்ளுவர் திருநாள் விழாவில் திருவள்ளுவர் விருது வழங்கப்பெறுகிறது.திருக்குறள் நெறி பரப்பும் பெருந்தகையாளர்களில் ஒருவருக்கு திருவள்ளுவர் திருநாள் விழாவில் திருவள்ளுவர் விருது வழங்கப்படுகிறது. விருதுத் தொகை ரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை வழங்கிச் சிறப்பக்கப்பெறுகிறது
திருவள்ளுவர் விருது 2023 - இரணியன் நா.கு.பொன்னுசாமி:சங்க இலக்கியத்தில் சமூக அறம், புலரும் (கவிதை). காற்றும் துடுப்பும் (கவிதை), தந்தை பெரியாரின் தமிழ்த் தேசியம், தேசிய இன விடுதலையும் சிறுபான்மையினர் உரிமையும், தமிழ்ப் பாட்டாளியரின் உயிர்ப்பு ஆகிய நூல்களைப் படைத்தவர்.கோவையில் திருவள்ளுவர் பேரவை என்ற அமைப்பை 1995 திசம்பர் 3ஆம் நாள் சிங்காநல்லூரில் தொடங்கி திருக்குறள் வாழ்வியல் நூலாகக் கற்பித்தல், திருக்குறள் மாநாடுகள், திருக்குறள் தொடர் சொற்பொழிவுகள், மாணவர்களுக்கான திருக்குறள் போட்டிகள் நிகழ்த்துதல், சமூக விடிவுக்கான ஒரு வாழ்வியல் நூலாகத் திருக்குறளை மக்கள் சிந்தனைக்கு முன்வைத்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருபவர்.
பேரறிஞர் அண்ணா விருது 2023 - உபயதுல்லா பெருந்தலைவர்:எண்ணப்பூக்கள், வண்ணங்கள், தூறல், தோரணம், சின்னஞ்சிறு கண்மணிகளுக்கு, அலைகள். கதம்பம் முதலான தலைப்புகளுடன் கூடிய தன்னம்பிக்கை ஊட்டும் கையடக்க நூல்களை வெளியிட்டுள்ளார்.தஞ்சையில் இலக்கியம் மற்றும் சமுதாயப் பணியாற்றிய சான்றோர்களைப் பற்றிய நூல்களையும் தொகுத்துப் பதிப்பித்துள்ளார். தஞ்சையில் வணிக நிறுவனங்களை நிறுவிப் பலருக்கும் வேலை வாய்ப்பை வழங்கியவர்.
3.பெருந்தலைவர் காமராஜர் விருது
பெருந்தலைவர் காமராஜர் விருது (2006 முதல்) தெருவெங்கும் பள்ளிகள் திறந்து, இலவசக் கல்வித்திட்டம், சத்துணவுத் திட்டம் முதலிய திட்டங்கள் மூலமாக தமிழ் சமுதாயம் கல்வி எனும்கைவிளக்கு ஏந்தி முன்னேற வழிவகுத்த வரலாறு படைத்த பெருந்தகையாளர் அவர்களின் அடிச்சுவட்டில், தமிழக மக்களுக்கு தொண்டாற்றி வரும் ஒருவருக்கு பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கப்படும். (விருதுத் தொகை ரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)
காமராசர் விருது 2022 - ஈ.வெ.கி.ச இளங்கோவன்:1984-1987 வரை சத்தியமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், 2004ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் வெற்றி பெற்று 2009ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். மேலும், ஒன்றிய அரசின் பெட்ரோலியம், தொழில் மற்றும் வர்த்தகம், ஜவுளித் துறை ஆகிய துறைகளில் இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். இரண்டு முறை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் ஒரு முறை செயல் தலைவராகவும் பதவி வகித்தவர்.திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களின் அரும் பணியினைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு 2022ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் "காமராசர் விருது" வழங்கி, இரண்டு இலட்சம் உரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கிச் சிறப்பிக்கின்றது.
4.மகாகவி பாரதியார் விருது
மகாகவி பாரதியார் விருது (1997 முதல்) பாரதியாரின் படைப்புகள் அனைத்தையும் முழுமையாகப் பயின்று ஆய்வு மேற்கொண்டு பாரதியாரைப் பற்றிய கவிதைகள் மற்றும் பாரதியின் புகழ் பரப்பும் வகையில் கவிதை, உரைநடை நூல்கள் படைத்தோர், பிற வகையில் தொண்டு செய்தோர், செய்பவர்களுக்கு மகாகவி பாரதியார் விருது வழங்கப்படுகிறது. (விருதுத் தொகை ரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)
மகாகவி பாரதியார் விருது 2023 - டாக்டர் இ.ரா.வேங்கடாசலபதி:பாரதி: கவிஞனும் காப்புரிமையும் என்ற நூலின் வாயிலாக பாரதியைக் குறித்து அறியப்படாத பல தகவல்களை நுண்ணிய வரலாற்றுப் பின்னணியுடனும் சமூகக் கண்ணோட்டத்துடனும் வரைந்த பெருமைக்குரியவர் இவர் எழுதுகின்ற ஆய்வு நூல்கள் அனைவரும் படிக்கும் வகையில் புதின நடையில் அமையப்பெறுவது இவரின் நூலாக்கத்தின் தனிச் சிறப்பாகும்.
5.பாவேந்தர் பாரதிதாசன் விருது
பாவேந்தர் பாரதிதாசன் விருது (1978 முதல்) சிறந்த கவிஞர் ஒருவருக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்படுகிறது.(விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)
பாவேந்தர் பாரதிதாசன் விருது 2023 -வாலாஜா வல்லவன் :பாவேந்தர் பாரதிதாசன் தொடக்க காலத்தில் எழுதிக் குவித்தப் புதுவை முரசு இதழ் தொகுப்பை 2400 பக்கங்களில் வெளியிட்டவர். ஆதி திராவிடர் மாநாடுகள் எனும் நூலையும் தொகுத்து வெளியிட்டவர். ஆதிதிராவிடர்களைப் பற்றிய வரலாற்று குறிப்புகள் மற்றும் எம்.சி.ராசா வாழ்க்கைச் சுருக்கமும் எழுத்தும் பேச்சும் ஆகிய நூல்களை மொழிபெயர்த்து வெளியிட்டவர்.அண்ணல் அம்பேத்கர், பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் 43 நாள்கள் தொடர் கூட்டங்களை நடத்தி உரையாற்றியவர். திராவிடர் இயக்க வரலாறு, இட ஒதுக்கீடு தொடர்பான பயிலரங்கில் பாடம் நடத்தி வருகிறார்.
6.தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது
தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது (1979 முதல்) இவ்விருது சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. (விருதுத் தொகை ரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)
திரு.வி.க.விருது 2023- நாமக்கல் - பொ.வேல்சாமி:தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தினமணி, காலச்சுவடு, தீராநதி, உங்கள் நூலகம், கவிதாசரண், புத்தகம் பேசுது உள்ளிட்ட பல இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். 1990களில் தமிழ்ச் சூழலில் மிகப் பெரும் அதிர்வை ஏற்படுத்திய நிறப்பிரிகை இதழின் ஆசிரியர் குழுவில் அமார்க்ஸ், ரவிக்குமார் ஆகியோரோடு இணைந்து இயங்கியவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரவாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கமாகும்.
7.கி.ஆ.பெ. விசுவநாதம் விருது
கி.ஆ.பெ. விசுவநாதம் விருது (2000 முதல்) இவ்விருது சிறந்த தமிழ் அறிஞர் ஒருவருக்கு வழங்கப்பட்டு வருகிறது. (விருதுத் தொகை ரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)
கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது 2023 - கவிஞர் மு.மேத்தா: நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தேன்சொட்டும் பாடல்களை எழுதிய பெருமைக்குரியவர். தமிழ்க் கவிதை வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர். இவரின் கவிதைப் பாதையைப் பின்பற்றி ஏராளமான இளங் கவிஞர்கள் உருவாகியுள்ளனர். தமிழ் மொழிக்காகவும், தமிழ் இனத்திற்காகவும் இவர் எழுதிய பாட்டு. தமிழ்ப் பகைவர்களுக்கு வேட்டு எனப் பலர் போற்றுதலுக்கு உரியவராவார்.
8.சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது
தமிழ்நாடு அரசின் விருதுகளில் ஒன்றாகும். இந்த விருது தந்தை பெரியார் ஈ. வெ. ராமசாமி அவர்கள் மற்றும் அவர்தம் வாழ்நாள் பெருந்தொண்டான சமூகநீதியும்,பெண் அடிமைத்தனம் ஒழிய சனாதன சதிகளை எதிர்த்து போராடிய போராட்டம்...மேலும் தந்தை பெரியாரின் பகுத்தறிவு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பெரியார் கருத்துக்களைப் பரப்புவதில் பணியாற்றிய ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இவ்விருதுக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூபாய் ஒரு இலட்சம் பணமுடிப்பும் எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.
பெரியார் விருது 2022 - கவிஞர் கலி.பூங்குன்றன்:தந்தை பெரியாரின் கொள்கைகளான சமூக நீதி, சாதி மறுப்பு. சுய மரியாதை, பெண் கல்வி மற்றும் பெண் உரிமைகளை உறுதியுடன் செயல்படுத்த வேண்டும் என்பதிலும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.சமூக நீதிக்காக தொடர்ந்து ஆற்றி வரும் சீரிய பணிகளை பாராட்டும் வகையில் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு 2022ஆம் ஆண்டிற்கான "தந்தை பெரியார் விருது” அளித்து, ஐந்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையையும். தங்கப் பதக்கத்தையும், தகுதியுரையையும் வழங்கிச் சிறப்பிக்கின்றது.
11.டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது (Dr APJ Abdul Kalam Award)
முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவாக தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட விருதாகும். இவ்விருது அமைக்கப்பட்ட செய்தியினை அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா, ஜூலை 31, 2015 அன்று வெளியிட்டார்.அத்துடன் அப்துல்கலாமின் பிறந்தநாளான அக்டோபர் 15 ஆம் திகதியானது, தமிழ் நாட்டில் இளைஞர் எழுச்சி நாளாக (Youth Awakening Day) கடைப்பிடிக்கப்படும் எனவும் தமிழக முதல்வர் அறிவித்தார்.இவ்விருதாக தமிழ்நாடு அரசு சார்பில் ரூபாய் ஐந்து இலட்சம் ரொக்கத்துடன் கூடிய பாராட்டுச் சான்றிதழும், தங்கப் பதக்கமும் (8 கிராம்) வழங்கப்படும்.
- 2015 - ந. வளர்மதி (இஸ்ரோ திட்ட இயக்குனர்)
- 2016 - சண்முகம் (மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி)
- 2017 - எஸ்.பி.தியாகராஜன் (ஒரு சிறந்த விஞ்ஞானி - சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை அதிபர்)
- 2018 - தக்ஷா குழு (ஆளில்லா விமானம் குறித்த ஆய்வுகள்)
- பா.வீரமணி-2018
- அசோகா சுப்பிரமணியன் (எ) சோ. கா. சுப்ரமணியன்-2019
- ஆ. அழகேசன்-2020
- மதுக்கூர் இராமலிங்கம்-2021
13.இலக்கிய மாமணி விருது
இலக்கிய மாமணி (2021 முதல்) தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் வளம் சேர்க்கும் வகையில் பல்வேறு படைப்புகளைப் படைத்தும் பன்முக நோக்கில் தொண்டாற்றி வரும் தமிழ் அறிஞர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இலக்கியமாமணி விருது வழங்கப்படும். (விருதுத்தொகை ரூ.5.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)
இலக்கிய மாமணி விருது 2021ஆம் ஆண்டுக்கு கோணங்கி, கு.சின்னப்ப பாரதி, புலவர் இரா. கலியபெருமாள் ஆகியோருக்கு இலக்கிய மாமணி விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு நாளான இன்று இவ்விருது வழங்கப்படுவது கூடுதல் சிறப்பு. கோணங்கி 1980 முதல் எழுதி வருகிறார். ‘கல்குதிரை’ சிற்றிதழின் ஆசிரியராக இருந்து வருகிறார். ‘மதினிமார்கள் கதை’, ‘சலூன் நாற்காலியில் சுழன்றபடி’, ‘பாழி’, ‘பிதிரா’ போன்ற நூல்களை எழுதியுள்ளார். அவருக்கென தனித்த எழுத்து நடையை உருவாக்கியவர்.
- தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட ஒரு பெண் துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்தமைக்காக இப்பதக்கம் வழங்கப்பட வேண்டும். இப்பதக்கம் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட வேண்டும்.
- இவ்விருது பதக்க வடிவில் “துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது” எனப் பெயரிடப்பட்டிருக்க வேண்டும்
- இப்பதக்கம் 83 மிமீ.விட்டம் மற்றும் 8 மிமீ. தடிமன் கொண்ட வட்ட வடிவத்தில் இருக்க வேண்டும். இப்பதக்கம் தங்க மூலாம் பூசிய வெள்ளியால் தயாரிக்க வேண்டும். இப்பதக்கத்திற்கான செலவு ரூ.5000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) ஆக இருக்க வேண்டும்.
- இப்பதக்கத்துடன் கூடுதலாக ரூ.5.00 லட்சத்திற்கான (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் விருதாளருக்கு வழங்கப்படவேண்டும்.
- வருடத்திற்கு ஒரு பதக்கம் வழங்கப்பட வேண்டும். விருதாளரின் பெயர் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படவேண்டும்.
- இவ்விருதிற்காக அரசால் அமைக்கப்பட்ட தேர்வுக்குழுவால் விருதாளர் தேர்வு செய்யப்பட்டு அவரது பெயர் அரசால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
- பா. ஜோதி நிர்மலா சாமி 2008- துணிச்சலான வருவாய்த்துறை வட்டார அலுவலர்
- எஸ். சங்கீதா 2011 - துணிச்சலான வருவாய்த்துறை வட்டார அலுவலர்
- ராஜலக்சுமி, அவரின் மகள் சிவரஞ்சனி 2012
- சுகி பிரமிளா 2013 -கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் கடத்தலை தடுத்தவர்
- ஆர். பொன்னி 2014 துணிச்சலான காவற்துறை அதிகாரி
- ஜோதிமணி 2015 பார ஊர்தி ஓட்டுநர்
- சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் அஸ்ரா கார்க்,
- கோவை மாவட்ட எஸ்.பி., பத்தி நாராயணன்,
- தேனி மாவட்ட எஸ்.பி -பிரவீன் உமேஷ் டோங்கரே,
- சேலம் ரெயில்வே டி.எஸ்.பி-குணசேகரன்,
- நாமக்கல்லைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் முருகன்,
- காவலர் குமார்
- நாகை மகப்பேறு இறப்பை குறைத்தல் மற்றும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகித மேம்பாட்டினை சிறப்பாக செயல்படுத்திய கடலூர் மாவட்ட ஆட்சியாளரான அருண் தம்புராஜ்
- பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய கோவை ஊரக காவல் கண்காணிப்பாளர் வி.பத்ரி நாராயணன்
- சென்னை அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற கைவிடப்பட் பிரத்யேக பிரிவினை அமைத்து மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துக்கல்லூரி முதல்வர் இ.தேரணிராஜன்
- உதிரம் கொடுத்து உயர்த்துவோம் திட்டம் மூலம் வளரிளம் பெண்களின் இரத்த சோகை நோயை கண்டறிந்து குணப்படுத்தும் முன்னோடி திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய கரூர் மாவட்ட ஆட்சியாளர் டி.பிரபு சங்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
- முதல்வரின் காலை சிற்றுண்டி திட்ட செயலி மற்றும் மின்னணு தகவல் பலகை மூலம் கண்காணிக்கும் பணியை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு மின்னாளுமை முகமையும் நல்லாளுமை விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது
No comments:
Post a Comment