TNPSC TAMIL ELIGIBILITY TEST -4 |
TNPSC Tamil Eligibility Test Questions: A Comprehensive Guide
The TNPSC exam includes a Compulsory Tamil Eligibility Test, which assesses your knowledge of the Tamil language. To excel in this test, it’s essential to practice and understand the types of questions that may appear. In this article, we’ll explore the TNPSC Tamil Eligibility Test, its syllabus, and provide access to previous years’ questions.
1.மாலதி மாலையைத் தொடுத்தாள்.
இது எவ்வகை வாக்கியம் ?
(A) செய் வினை
(B) செயப்பாட்டு வினை
(C) தன் வினை
(D) பிற வினை
விடை :(A) செய் வினை
2.இலக்கணக் குறிப்பறிதல்.
சாலச் சிறந்தது - தொடரின் வகையை அறிக.
(A) இடைச்சொல் தொடர்
(B) விளித் தொடர்
(C) எழுவாய்த் தொடர்
(D) உரிச்சொல் தொடர்
விடை : (D) உரிச்சொல் தொடர்
3.பெயர்ச்சொற்களைப் பொருத்துக.
(a) மல்லிகை 1. சினைப்பெயர்
(b) பள்ளி 2. பண்புப்பெயர்
(c) கிளை 3. இடப்பெயர்
(d) இனிமை 4. பொருள்பெயர்
விடை : (a) (b) (c) (d)
4 3 1 2
4.'கேள்' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.
(A) கேட்டு
(C) கேட்டல்
(B) கேட்ட
(D) கேட்டான்
விடை : (A) கேட்டு
5.'தணிந்தது' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எடுத்து எழுதுக.
(A) தணி
(B) தணிந்த
(C) தணிந்து
(D) தனி
விடை : (A) தணி
6.'தருக' என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிந்து எழுதுக.
(A) தந்த
(B) தரு
(C) தா
(D) தந்து
விடை : (C) தா
7.'சோ' - ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
(A) அரசன்
(B) வறுமை
(C) மதில்
(D) நோய்
விடை : (C) மதில்
8.'மா' - என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
(A) பெரிய
(B) சிறிய
(C) குறைய
(D) நிரம்ப
விடை : (A) பெரிய
9.'பரவை' - இச்சொல்லிற்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
(A) மலை
(B) கடல்
(C) ஆறு
(D) உயிர்வகை
விடை : (B) கடல்
10.மரபு பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக.
(A) கூகை கூவும்
(B) கூகை குனுகும்
(C) கூகை குழறும்
(D) கூகை அலறும்
விடை : (C) கூகை குழறும்
TNPSC Tamil Eligibility Test Syllabus
- பொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்; புகழ் பெற்ற நூல் நாலாசிரியர். READ IT
- தொடரும் தொடர்பும் அறிதல் இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்.
- பிரித்தெழுதுக
- எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
- பிழை திருத்தம் [சந்திப்பிழையை நீக்குதல், ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல்], மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல் / பிறமொழிச் சொற்களை நீக்குதல்.
- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
- ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
- வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
- வேர்ச்சொல்லைக் கொடுத்து / வினனமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை / உருவாக்குதல்.
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
- சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
- பெயர்ச் சொல்லின் வகையரிதல்
- இலக்கணக் குறிப்பறிதல்
- விடைகேற்ற வினாவை தேர்ந்தெடுத்தல்
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
- தன்வினை, பிற, செய்வினை. செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
- எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்
No comments:
Post a Comment