விளக்கம் :
மாறி மாறி கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களை அகராதிப்படி வரிசைப் படுத்துவதே அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல் எனப்படும் .
உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்துதல்:
முதலில் அ,ஆ,இ,ஈ என உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்த வேண்டும்.
(எ.கா):
ஒட்டகம் , இலை, அரும்பு, ஊஞ்சல்
விடை:
அரும்பு , இலை , ஊஞ்சல் , ஒட்டகம்
மெய்யெழுத்துக்களை வரிசைப்படுத்துதல் :
முதல் எழுத்திற்கு அடுத்த எழுத்து மெய்யெழுத்தாக இருந்தால் அதனை வரிசைப் படுத்தவேண்டும்.
(எ.கா):
நன்மை, நம்பகம் , நல்லது , நட்சத்திரங்கள்
விடை:
நட்சத்திரங்கள், நம்பகம், நல்லது, நன்மை
உயிர் மெய் எழுத்துக்களை வரிசைப்படுத்துதல் :
உயிர் மெய் எழுத்துக்களை க,கா,கி,கீ என்றே வரிசைப் படுத்த வேண்டும்.
குறிப்பாக எக்காரணத்தைக் கொண்டும் க,ங,ச என்ற முறையில் வரிசைப் படுத்தக் கூடாது.
(எ.கா):
மிருகம், முத்து, மௌனம், மதி
விடை:
மதி , மிருகம், முத்து , மௌனம்
No comments:
Post a Comment