வார்த்தைகள் மாற்றி கொடுக்கப்பட்டிருக்கும் சொற்றொடரை சீர் செய்து சரியான சொற்றொடராக மாற்றி அமைத்து தேர்ந்தெடுக்கவேண்டும்
எழுவாய் + செயப்படுபொருள் + பயனிலை என்ற முறைப்படி அமைந்திருந்தால் அதுவே சரியான சொற்றொடர் ஆகும்.
எழுவாய்
ஒரு சொற்றொடரின் பெயர்ச்சொல் எழுவாய் எனப்படும். அவன் வந்தான் என்பதில் அவன் என்பது எழுவாய்
செயப்படுபொருள்
எழுவாய் என்பது பெயர்ச்சொல். பயனிலை என்பது எழுவாய் செய்த வினையை விளக்கும் வினைச்சொல்.
பயனிலை
ஒரு வசனத்தில் பொருள் முடிந்து நிற்கும் வினைச் சொல் (வினை முற்று)நிலை பயனிலை எனப்படுகிறது
( இப்பகுதியில் பழமொழிகள், பொன்மொழிகள், அல்லது பிரபலாமான கவிதை வரிகளும் உள்ளடங்கும் )
வினா : எழுந்தவுடன் சென்றான் மோகன் பள்ளிக்குச் காலையில்
விடை : மோகன் காலையில் எழுந்தவுடன் பள்ளிக்குச் சென்றான்
வினா: பிறர்தர தீதும் வாரா நன்றும்
விடை: தீதும் நன்றும் பிறர்தர வாரா.
வினா: மக்கள் வாழ்வை செயற்க்கை விட்டு இயற்கை வாழ்வை நாடுகின்றனர்
விடை: மக்கள் செயற்கை வாழ்வை விட்டு இயற்கை வாழ்வை நாடுகின்றனர்.
வினா: பொழுது செவல் விழித்தான் கண் கூவி விடிந்தது
விடை: செவல் கூவி கண் விழித்தான் பொழுது விடிந்தது.
வினா: சென்றார் பாரி கபிலர் மகளிரை அழைத்து
விடை: கபிலர் பாரி மகளிரை அழைத்துச் சென்றார்.
வினா: கற்றுக்கொள் ஒன்றை கைத்தொழில்
விடை: கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
வினா :குறைவற்ற செல்வம் நோயற்ற வாழ்வு
விடை: நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்
வினா : பெரிய அவர் வீரர் வாள்
விடை: அவர் பெரிய வாள் வீரர்
No comments:
Post a Comment