தா, அறி, கெடு இப்படி எதாவது வேர்ச்சொல்லைக் கொடுத்து அதற்கான வினைமுற்று/வினையெச்சம்/வினையாலணையும்/தொழிற்பெயரை கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு விடைகளிலிருந்து சரியானதை தெரிவு செய்ய வேண்டும் .
வினை முற்று
வினை முற்று என்றால் என்ன ?
வினைமுற்று என்பது,
தொழிலையும் (நடந்தான் - இதில் நடக்கின்ற action ஐ உணர்த்துகிறது) ,
காலத்தையும் ( நடந்தான் -இறந்த காலம்) உணர்த்த வேண்டும்.
திணையை கூற வேண்டும் ( நடந்தான் என்பது 'உயர்திணை') ,
பால் காட்டும் விகுதியோடு சொல்லானது முற்று பெற்றிருக்க வேண்டும். ( நடந்தான் - ஆண்பால்)
உதாரணம் :
இருந்தான், நடந்தான், கற்றான், வாழ்ந்தாள். அரும்பியது, தளர்ந்தது
{பொதுவாக வினைமுற்றுகள் ர், ன, ன்,து என்ற எழுத்துகளில் முற்று பெறும்.)
வினையெச்சம்
வினையெச்சம் என்றால் என்ன ?
முடிவு பெறாத வினைச் சொல் வினையெச்சம் ஆகும்.
உதாரணம் :
நடந்து, கண்டு, படித்து.
வினையாலணையும் பெயர்
வினையாலணையும் பெயர் என்றால் என்ன ?
இலக்கண விளக்கம் :
"ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உறுப்பு ஏற்றும், ஏற்காமலும் வேறொரு பயனிலையைக்கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் ஆகும்."
வினையாலணையும் பெயர் தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூன்று இடங்களிலும், மூன்று காலங்களிலும் உணர்த்தி வரும்.
உதாரணம் :
"கொடு" என்பதன் வினையாலணையும் பெயர் எது ?
அ.கொடுத்து
ஆ.கொடுத்த
இ.கொடுத்தல்
ஈ.கொடுத்தவள்
விடை : ஈ.கொடுத்தவள்
(மூன்று இடங்களிலும், மூன்று காலங்களிலும் உணர்த்தி வந்துள்ளது)
ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் வினையாலணையும் பெயர் என்றாலே ஏதோ ஒருவகையில் "அணைத்து" வருவது போல் வரும், எ.கா. அறிந்தவன், படித்தவர்
தொழிற்பெயர்
தொழிற்பெயர் என்றால் என்ன ?
ஒரு தொழிலை செய்வதைக் குறிப்பது தொழிற்பெயர். பாடுதல், ஆடுதல், நடித்தல்.. பொதுவாக தொழிற்பெயர்கள் தல், அல், கை என்றவாறு முடியும்.
உதாரணம் :
'வாழ்' என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் எது ?
அ.வாழ்க
ஆ.வாழ்வீர்
இ.வாழ்ந்தார்
ஈ.வாழ்தல்
விடை :
ஈ. வாழ்தல் (தல் என முடிந்துள்ளது.)
தொழிற்பெயரை - பெயர்ச்சொல் வகையறிதல் பகுதியில் தெளிவாக பார்த்தோம்.
No comments:
Post a Comment