Monday, July 17, 2023

TNPSC ILAKKANAM TAMIL NOTES -பொருத்தமான பொருளை தேர்வு செய்தல்



TNPSC ILAKKANAM TAMIL NOTES FREE STUDY MATERIALS 

பகுதி – (அ) – இலக்கணம்


1.பொருத்தமான பொருளை தேர்வு செய்தல்

இப்பகுதில் பிரிவு அ வில் உள்ள 4 சொற்களுக்கு ஏற்ற சரியான பொருளை பிரிவு ஆ வில் உள்ள 4 சொற்களுக்கும் பொறுத்த வேண்டும்.

இதிலிருந்து மூன்று முதல் ஐந்து கேள்விகள் கேட்கபடுகிறது, எனவே நீங்கள் இதற்காக நன்கு பயிற்சி எடுத்துகொள்ளவேண்டும்.இதற்கு நீங்கள் 6 to 10 புத்தகத்தில் உள்ள செய்யுள்களின் பாடல்வரிகளின் பொருளை நன்கு புரிந்து படிக்கவேண்டும்.


புகழ் பெற்ற நூல் நாலாசிரியர்:6 TO 12 BOOK 

6ஆம் வகுப்பு தமிழ்:

1.கனிச்சாறு,ஐயை,கொய்யாகனி,பாவியக்கொத்துபள்ளி பறவைகள்,நூறாசிரியம்- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

2.     இன்பத்தமிழ் என்னும் தலைப்பில் பாடலை பாடியவர் - பாரதிதாசன்

3.     சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்

4.     மணிமேகலை - சீத்தலை சாத்தனார்

5.     சீவக சிந்தாமணி - திருத்தக்கதேவர்

6.     குண்டலகேசி - நாதகுத்தனார்

7.     வளையாபதி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை

8.     பாஞ்சாலி சபதம்கண்ணன் பாட்டுகுயில் பாட்டு -பாரதியார்

9.     கிழவனும் கடலும் (The Oldman and the Sea) என்னும் புதினத்தை எழுதியவர் -எர்னெஸ்ட் ஹெமிங்வே

10.   ஆத்திசூடியை இயற்றியவர் - ஔவையார்

11.   புதிய ஆத்திசூடியை இயற்றியவர் - பாரதியார்

12.   அறிவியல் ஆத்தி சூடியை இயற்றியவர் - நெல்லை சு. முத்து

13.   மூதுரை என்னும் நூலை எழுதியவர் - ஔவையார்

14.   ஔவையார் எழுதிய நூல்கள் - ஆத்திச்சூடிகொன்றைவேந்தன்நல்வழிமூதுரை

15.   துன்பம் வெல்லும் கல்வி என்னும் தலைப்பில் பாடலை பாடியவர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

16.   ஆசாரக்கோவையின் ஆசிரியர் - பெருவாயின் முள்ளியார்

17.   நானிலம் படைத்தவள் - முடியரசன்

18.   பூங்கொடிவீரகாவியம்காவியப்பாவை - முடியரசன்

19.   நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நாலை தொகுத்தவர் -சு. சக்திவேல்

20.   புதிய விடியல்கள்இது எங்கள் கிழக்குவிரல் நுனி வெளிச்சங்கள்தாராபாரதியின் கவிதைகள் - தாராபாரதி

21.   தமிழ்க்கையேடு என்ற நூலை எழுதியவர் - ஜி.யு.போப்

22.   பராபரக்கண்ணி என்னும் பாடலை எழுதியவர் - தாயுமானவர்

23.   தீர்க்கதரிசி என்னும் நூலை மொழிபெயர்த்தவர் - கவிஞர் புவியரசு

24.   உபபாண்டவம்கதாவிலாசம்தேசாந்திரிகால் முளைத்த கதைகள் - எஸ். இராமகிருஷ்ணன்

25.   லைட் ஆஃப் ஆசியா என்னும் ஆங்கில நூலை எழுதியவர் - எட்வின் அர்னால்டு

 7ஆம் வகுப்பு தமிழ்

26.   மலைக்கள்ளன்நாமக்கல் கவிஞர் பாடல்கள்என்கதை,சங்கொலி- நாமக்கல் கவிஞர்

27.   நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர் – உடுமலை நாராயணகவி

28.   அமுதும் தேனும்தேன்மழைதுறைமுகம் - சுரதா

29.   சிறந்த தமிழ் கவிதைகளை தொகுத்து கொங்குதேர் வாழ்க்கை என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளவர் - ராஜமார்த்தாண்டம்

30.   சங்கக்கால மக்களின் வீரத்தை கருப்பொருளாக கொண்டு புலி தங்கிய குகை என்னும் தலைப்பில் பாடலை பாடியவர் - காவற்பெண்டு

31.   காவற்பெண்டு பாடிய ஒரே ஒரு பாடல் எந்த நூலில் உள்ளது - புறநானூறு

32.   வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்னும் நூலை எழுதியவர் - நா. வானமாமலை

33.   ஆங்கில மொழியில் ஆலன் எழுதிய அறிவு நூல்களில் ஒன்றை மனம் போல் வாழ்வு என்றுதமிழில் மொழிபெயர்த்தவர் - வ.உ.சி

34.   பெய்யறிவுமெய்யறம் ஆகிய நூல்களை எழுதியவர் - வ.உ.சி

35.தமிழின்பம்,ஆற்றங்கரையினிலே,கடற்கரையினிலே,தமிழ் விருந்து,தமிழகம் - ஊரும் பேரும்,மேடைப்பேச்சு- இரா.பி. சேது

36.   பத்துப்பாட்டில் பெரும்பாணாற்றுப்படைபட்டினப்பாலை - கடியலூர் உரத்திரங்கண்ணனார்

37.   திருமுருகாற்றுப்படை - நக்கீரர்

38.   பொருநராற்றுப்படை - முடத்தாம கண்ணியார்

39.   பெரும்பாணாற்றுப்படை - கடியலூர் உருத்திரங்கண்ணனார்

40.   சிறுபாணாற்றுப்படை - நல்லூர் நத்தத்தனார்

41.   முல்லைப்பாட்டு - நப்பூதனார்

42.   மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார்

43.   நெடுநல்வாடை - நக்கீரர்

44.   குறிஞ்சிப்பாட்டு - கபிலர்

45.   பட்டினப்பாலை - கடியலூர் உருத்திரங்கண்ணனார்

46.   மலைபடுகடாம் - பெருங்கௌசிகனார்

47.   கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள 35 பாடல்களையும் பாடியவர் - மருதன்இளநாகனார்

48.   மருதத்தினை பாடுவதில் வல்லவர் - மருதன் இளநாகனார்

49.   எண்பது நாளில் உலகத்தை சுற்றிபூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம்,ஆழ்கடலின் அடியில்- ஜீல்ஸ் வெர்ன்

50.   இன்பத்தமிழ் என்னும் தலைப்பில் கவிதை எழுதியவர் - பாரதிதாசன்

51.   பாண்டியன் பரிசு,அழகின் சிரிப்பு,இசையமுது,இருண்ட வீடு,குடும்ப விளக்கு,கண்ணகி புரட்சிக் காப்பியம்- பாரதிதாசன்

52.   நாலடியார் நாலின் ஆசிரியர் - சமண முனிவர்

53.   வள்ளுவர் உள்ளம்வள்ளுவர் காட்டிய வழிதிருக்குறளில் நகைச்சுவைஉலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்சிந்தனை களஞ்சியம் ஆகிய நூல்களை எழுதியவர் - திருக்குறளார் வீ. முனிசாமி

54.   பள்ளி மறுதிறப்பு என்னும் கதையை எழுதியவர் - சுப்ரபாரதிமணியன்

55.   குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புஇயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துகளை வலியுறுத்திச் சிறுகதைபுதினம்கட்டுரை முதலியவற்றை எழுதியவர் - சுப்ரபாரதிமணியன்

56.   பிள்னல்,வேட்டைதண்ணீர் யுத்தம்,புத்துமண்,கதை சொல்லும் கலை,பள்ளி மறுதிறப்பு- சுப்ரபாரதிமணியன்

57.   நன்னூலை எழுதியவர் - பவணந்தி முனிவர்

58.   மண்வாசல்வெள்ளை ரோஜாபெய்து பழகிய மேகம்- தேனரசன்.

59.   திருவானைக்கா உலா,சரசுவதி மாலை,பரபிரம்ம விளக்கம்,சித்திர மடல்,தனிப்பாடல்கள்- காளமேகப்புலவர்

60.   பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் - முன்றுறை அரையனார்

61.   மயை அருவி - கி.வா. ஜகந்நாதன்

62.   திருப்புகழ் பாடியவர் - அருணகிரிதாதர்

63.   காவடிச்சிந்தைப் பாடியவர் - அண்ணாமலையார்

64.   குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் - திரிகூடராசப்பக் கவிராயர்

65.   இதய ஒலி என்னும் நாயை எழுதியவர் - டி.கே. சிதம்பரநாதர்

66.   நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதியை பாடியவர் -பொய்கையாழ்வார்

67.   நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியவர் -பூதத்தாழ்வார்

68.   நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தை பாடியவர்கள் - பன்னிரு ஆழ்வார்கள்

69.   நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தை தொகுத்தவர் - நாதமுனி

70.   அறநெறிச்சாரம் என்னும் நூலை எழுதியவர் - முனைப்பாடியார்

71.   நாயன்மார் அடிச்சுவட்டில்,குறட்செல்வம்,ஆலயங்கள் சமுதாய மையங்கள்- குன்றக்குடி அடிகளார்

72.   இயேசுகாவியத்தை எழுதியவர் - கண்ணதாசன்

73.   மலைப்பொழிவு என்னும் தலைப்பில் நமக்கு வந்துள்ள பாடல் எந்த நூலில்இடம்பெற்றுள்ளது - இயேசுகாவியம்

74.   மழை பற்றிய பகிர்தல்கள்,வீடு முழுக்க வானம்,மகளுக்குச் சொன்ன கதை- சே. பிருந்தா

75.   தன்னை அறிதல் என்ற கவிதை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது - மகளுக்குச் சொன்ன கதை

76.   வேர்கள் தொலைவில் இருக்கின்றன,நேற்று வாழ்ந்தவர்கள்,கடலோர வீடு,பாய்மரக்கப்பல்,மீசைக்கார பூனை,பிரயாணம்- பாவண்ணன்

 8ஆம் வகுப்பு தமிழ்

77.   கவிதைகள் மட்டுமன்றிசந்திரிகையின் கதைதராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும் வசன கவிதைகளையும் சீட்டுக்கவிகளையும் எழுதியவர் - பாரதியார்

78.   தமிழ்மொழி மரபு - தொல்காப்பியர்

79.   தொல்காப்பியத்தின் ஆசிரியர் - தொல்காப்பியர்

80.   தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் - தொல்காப்பியம்

81.   இலக்கண வரலாறு,தமிழிசை இயக்கம்தனித்தமிழ் இயக்கம்,  தமிழின் தனிப் பெருஞ் சிறப்புகள்- இரா இளங்குமரனார்

82.   தேவநேயம் என்னும் நூலை தொகுத்தவர் - இரா இளங்குமரனார்

83.   தமிழச்சி,கொடிமுல்லை,தொடுவானம்,எழிலோவியம்குழத்தை இலக்கியம்- வாணிதாசன்

84.   கோணக்காத்துப் பாட்டு - வெங்கம்பூர் சாமிதாதன்

85.   கோணக்காத்துப் பாட்டு என்னும் தலைப்பில் அமைந்துள்ள பாடல் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது - காத்து நொண்டி சித்து

86.   காத்து நோண்டி சிந்து பாடலை பாடியவர் - வெங்கம்பூர் சாமிநாதன்

87.   வெங்கம்பூர் சாமிநாதன் இயற்றிய காத்து நொண்டிச் சிந்து பாடல் எந்த நூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது - பஞ்சக்கும்மிகள்

88.   பஞ்சக்கும்மிகள் என்னும் நூலை தொகுத்தவர் - செ. இராசு

89.   தமிழகப் பழங்குடிகள் என்னும் நூலை எழுதியவர் - பக்தவத்சல பாரதி

90.   நிலம் பொது என்னும் கட்டுரை எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது – தமிழகப் பழங்குடிகள்

91.   காடர்களின் கதைகள் சிலவற்றைத் தொகுத்தவர்கள் - மணிஷ் சாண்டிமாதுரி ரமேஷ்

92.   காடர்களின் கதைகளை தமிழில் யானையோடு பேசுதல் சான்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்தவர்- வ. கீதா

93.   வெட்டுக்கிளியும் சாகுமாலும் என்னும் கதை எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது - யானையோடு பேசுதல்

94.   திருக்குறளின் பெருமையை உணர்த்தும் நூல் - திருவள்ளுவ மாலை

95.   வருமுன் காப்போம் - கவிமணி தேசிக விநாயகனார்

96.   ஆசியஜோதி,மருமக்கள் வழி மான்மியம்,மலரும் மாலையும்,கதர் பிறந்த கதை- கவிமணி தேசிக விநாயகனார்

97.   உமர்கய்யார் பாடல்கள் கான்னும் நூல் மொழி பெயர்த்தவர் - கவிமணி தேசிக விநாயகனார்

98.   வருமுன் காப்போம் என்னும் தலைப்பில் அமைந்துள்ள பாடல் - மலரும் மாலையும்

99.   இனிய எந்திரா,மீண்டும் ஜீனோ,ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்,தூண்டில் கதைகள்,தலைமைச்செயலகம்- சுஜாதா

100.  தலைக்குள் ஓர் உலகம் என்னும் உரைநடைப் பகுதி எந்த நூலில் இருந்துஎடுக்கப்பட்டுள்ளது - தலைமைச்செயலகம்

101.  கந்தர் கலிவெண்பா,கயிலைக் கலம்பகம்,சகலகலாவல்லி மாலை,மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்,முத்துகுமாரசுவாமி பிள்ளைத்தமிழ்,நீதிநெறி விளக்கம்- குமரகுருபரர்

102.  இயற்கை ஓவியம் என்று அழைக்கப்படும் நூல் - பத்துப்பாட்டு

103.  இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை

104.  இயற்கை வாழ்வில்லம் - திருக்குறள்

105.  இயற்கை தவம் - சிந்தாமணி

106.  இயற்கைப் பரிணாமம் - கம்பராமாயணம்

107.  இயற்கை அன்பு - பெரிய புராணம்

108.  இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் - சிலப்பதிகாரம்மணிமேகலை

109.  இயற்கை இறையறையுள் - தேவார திருவாசக திருவாய் மொழிகள்

110.  -மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்,பெண்ணின் பெருமை,தமிழ்ச்சோலை,பொதுமை வேட்டல்,முருகன் அல்லது அழகு,இளமை விருந்து- திரு.வி.க

111.  ஜெயகாந்தனோடு நெருங்கிப்பழகி ஜெயகாந்தனோடு பல்லாண்டு என்னும் நூலைஎழுதியவர் - பி.ச. குப்புசாமி

112.  ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் என்னும் நூலை எழுதியவர் - பி.ச. குப்புசாமி

113.  தேவாரப் பாடல்களில் பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையை பாடியவர் -சுந்தரர்

114.  திருத்தொண்டத் தொகையை இயற்றியவர் - சுந்தரர்

115.  பெரியபுராணத்தை இயற்றியவர் - சேக்கிழார்

116.  திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் -பெரிய புராணம்

117.  தேவாரத்தை பாடியவர்கள் - திருஞானசம்பந்தர்திருநாவுக்கரசர்சுந்தரர்

118.  தேவாரத்தை தொகுத்தவர் - நம்பியாண்டார் நம்பி

119.  கவித்தொகையை தொகுத்தவர் - நல்லந்துவனார்

120.  நெய்தற்கலிப் பாடல்களை இயற்றியவர் - நல்லந்துவனார்

121.  பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் நூலின் பதிப்பாசிரியர் - அ. கௌரன்

122.  கொங்கு மண்டலச் சதகம் என்னும் நூலை எழுதியவர் - கார்மேகக் கவிஞர்

123.  கன்னிவாடிகுணச்சித்திரங்கள்,உப்புக்கடலைக் குடிக்கும் பூனை - கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார்

124.  காலம் உடன் வரும் கதையை எழுதியவர் - கன்னவாடி சீரங்கராயன் சிவக்குமார்

125.  கலிங்கத்துப் பரணியின் ஆசிரியர் - செயங்கொண்டார்

126.  விடுதலைத் திருநாள் - மீரா

127.  விடுதலைத் திருநாள் என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள பாடல் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது - கோடையும் வசந்தமும்

128.  ஊசிகள்,குக்கூ,மூன்றும் ஆறும்,வா இந்தப் பக்கம்,கோடையும் வசந்தமும்- மீரா.

129.  திருமந்திரத்தை இயற்றியவர் - திருமூலர்

130.  எக்காளக் கண்ணி,மனோன்மணிக் கண்ணி,நந்தீசுவரக் கண்ணி,குணங்குடியார் பாடற்கோவை- குணங்குடி மஸ்தான் சாகிபு

131.  அயோத்திதாசர்  பதிப்பித்த நூல்கள்- போகர் எழுநூறுஅகத்தியர் இருநூறு,

132.  புத்தரது ஆதிவேதம்இந்திர தேச சரித்திரம்,சிமிட்டு இரத்தினச் சுருக்கம்,விவாக விளக்கம்,பாலவாகடம் புத்தர் சரித்திரப்பா- அயோத்திதாசர் எழுதிய நூல்கள்

133.  திருவள்ளுவர்ஔவையார் ஆகியோரின் படைப்புகளுக்குப் பௌத்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியுள்ளவர் - அயோத்திதாசர்

134.  கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்சாபவிமோசனம்,பொன்னகரம்,ஒருநாள் கழிந்தது- புதுமைப்பித்தன்

135.  திருவெம்பாவை இயற்றியவர் - மாணிக்கவாசகர்

136.  கன்னிப்பாவை என்னும் நூலை எழுதியவர் - இறையரசள்

137.  கண்ணீர்ப் பூக்கள்,ஊர்வலம்,சோழநிலா,மகுடநிலா,ஆகாயத்துக்கு அடுத்த வீடு,மு. மேத்தா கவிதைகள்- மு.மேத்தா

138.  அச்சில் வெளிவந்த அம்பேத்கரின் முதல் நூல்: இந்தியாவில் சாதிகளின் தோற்றமும்வளர்ச்சியும்

139.  அம்பேத்கர் எழுதிய புத்தரும் அவரின் தம்மமும் என்னும் புத்தகம் அவரது மறைவுக்கு பின்எந்த ஆண்டு வெளியானது - 1957

140.  புத்த சமயம் தொடர்பாக அம்பேத்கர் எழுதிய நூல் - புத்தரும் அவரின் தம்மமும்

141.  கோமகள் எழுதிய புதினம் தமிழ்நாடு அரசின் விருதினைபெற்றுள்ளார்- அன்னை பூமி

142.  உயிர் அமுதாய்,நிலாக்கால நட்சத்திரங்கள்,அன்பின் சிதறல்,அன்னை பூமி- கோமகள்

 ஆம் வகுப்பு தமிழ்

143.  ஹைக்கூசென்ரியுலிமரைக்கூ எனப் புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களைத்தந்துள்ளவர் - ஈரோடு தமிழன்பன்

144.  இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல் - பிங்கலநிகண்டு

145.  வணக்கம் வள்ளுவ! தமிழோவியம்- ஈரோடு தமிழன்பன்

146.  1856 திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் - கால்டுவெல்

147.  தமிழ்விடுதூது என்னும் நூயை முதன்முதலில் உ.வே.சா பதிப்பித்த ஆண்டு - 1930

148.  மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும் என்னும் நூலை எழுதியவர் - மணவை முஸ்தபா

149.  தமிழ்நடைக் கையேடு மாணவர்களுக்கான தமிழ் என்னும் நூலை எழுதியவர் -என்.சொக்கன்

150.  கால் முளைத்த கதைகள் என்னும் நூயை எழுதியவர் - எஸ். இராமகிருஷ்ணன்

151.  பட்டாரம் என்னும் தலைப்பில் கவிதை எழுதியவர் - கவிஞர் தமிழ் ஒளி

152.  நிலைபெற்ற சிலை,வீராயி,கவிஞனின் காதல்,மே தினமே வருக,கண்ணப்பன் கிளிகள்,குருவிப்பட்டி,தமிழர் சமுதாயம்,மாதவி காவியம்- கவிஞர் தமிழ் ஒளி

153.  பட்டமரம் என்னும் கவிதை எந்த நூலில் இடம் பெற்றுள்ளது - தமிழ் ஒளியின் கவிதைகள்

154.  திருத்தொண்டத் தொகை என்னும் நூலை எழுதியவர் - சுந்தரர்

155.  திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலை எழுதியவர் - நம்பியாண்டர் நம்பி

156.  திருத்தொண்டத் தொகைதிருத்தொண்டர் திருவந்தாதி ஆகிய இரண்டு நூல்களையும் அடிப்படையாக கொண்டு சேக்கிழாரால் ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வோர் அடியாராக 63 பேரின் சிறப்புகளை விளக்கி பாடப்பட்ட நூல் - திருத்தொண்டர் புராணம்

157.  திருத்தொண்டர் புராணத்தின் பெருமை காரணமாக எவ்வாறு அழைக்கப்பட்டது -பெரிய புராணம்

158.  பண்டைத் தமிழர்களின் அரிய வரலாற்றுச்செய்திகள் அடங்கிய பண்பாட்டு கருவூலமாகதிகழும் நூல் - புறநானூறு

159.  சிறுபஞ்சமூலம் நூலின் ஆசிரியர் - காரியாசன்

160.  தண்ணீர் என்னும் தலைப்பில் கதையை எழுதியவர் - கந்தர்வன்

161.  கந்தர்வன் எழுதிய சிறுகதைகள் - சாசனம்ஒவ்வொரு கல்லாய்கொம்பன்

162.  அழகின் சிரிப்பு நூலின் ஆசிரியர் - பாரதிதாசன்

163.  தண்ணீர் தண்ணீர் நூலின் ஆசிரியர் - கோமல் சுவாமிநாதன்

164.  தண்ணீர் தேசம் நூலின் ஆசிரியர் - வைரமுத்து

165.  வாய்க்கால் மீன்கள் நூலின் ஆசிரியர் - வெ. இறையன்பு

166.  மழைக்காலமும் குயிலோசையும் என்னும் நூலின் ஆசிரியர் - மா. கிருஷ்ணன்

167.  கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும் என்னும் நூலை எழுதியவர்- மா.அமரேசன்

168.  சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி என அழைக்கப்படும் நூல் - மணிமேகலை

169.  மணிமேகலை காப்பியத்தை இயற்றியவர் - கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்

170.  நன்னூலை இயற்றியவர் - பவணந்தி முனிவர்

171.  தமிழர் நாகரிகமும் பண்பாடும் - அ. தட்சிணாமூர்த்தி

172.  தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் -மா. இராசமாணிக்கனார்

173.  தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் - க. ரத்னம்

174.  தொல்லியல் நோக்கில் சங்க காலம் என்னும் நூலை எழுதியவர் - கா. ராஜன்

175.  தமிழர் சால்பு என்னும் நூலை எழுதியவர் - சு. வித்யானந்தன்

176.  என் சமகாலத் தோழர்களே! - வைரமுத்து கவிதைகள் தொகுப்பு - வைரமுத்து

177.  தமது அறிவியல் அனுபவங்களை கையருகே நிலா என்னும் நூலாக எழுதியவர் – மயில்சாமி அண்ணாதுரை

178.  அக்கினிச் சிறகுகள் நூலை எழுதியவர் - அப்துல் கலாம்

179.  மின்மினி என்னும் நூலை எழுதியவர் - ஆயிஷா நடராஜன்

180.  ஏன்எதற்குஎப்படி  என்னும் நூலை எழுதியவர் - சுஜாதா

181.  சூரியன்பரமானுப் புராணம்: போன்ற அறிவியல் நூல்களை எழுதியவர் - ஈ.த. இராஜேஸ்வரி

182.  குடும்ப விளக்கு என்னும் நூலின் ஆசிரியர் - பாரதிதாசன்

183.  பாண்டியன் பரிசு,அழகின் சிரிப்பு,இருண்ட வீடு,குடும்ப விளக்கு,தமிழியக்கம்- பாரதிதாசன்

184.  சிறுபஞ்ச மூலத்தின் ஆசிரியர் - காரியாசான்

185.  சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்இன்பஒளி ஆகிய நூல்களை எழுதியவர் - பேரறிஞர்அண்ணா

186.  அண்ணாவின் சிறுகதைத் திறன் நூலை எழுதியவர் - முனைவர் பெ. குமார்

187.  சீவகசிந்தாமணி - காப்பிய இலக்கியம் - திருத்தக்க தேவர்

188.  நா. காமராசனின் கவிதை நூல் - கருப்பு மலர்கள்

189.  திரைப்படமாக வெளிவந்த கோமல் சுவாமிநாதனின் நாடகநூல் - தண்ணீர் தண்ணீர்

190.  நோபல் பரிசு பெற்ற எர்னஸ்ட் ஹெமிங்வேளின் குறுநாவல் - கிழவனும் கடலும்

191.  சாகித்திய அகாதெமி பரிசுபெற்ற சிற்பியின் கவிதை நூல் - ஒரு கிராமத்து நதி

192.  எஸ். ராமகிருஷ்ணனின் சிறார் நாவல் - சாக்ரட்டீசின் சிவப்பு நூலகம்

193.  ஓய்திருக்கலாகாது - கல்வி சிறுகதைகள் – (தொகுப்பு: அரசி - ஆதிவள்ளியப்பன்)

194.  முதல் ஆசிரியர் என்னும் நூலை எழுதியவர் - சிங்கிஸ் ஐத்மாத்தவ்

195.  கல்வியில் நாடகம் என்னும் நூலை எழுதியவர் - பிரளயன்

196.  கரும்பலகை யுத்தம் நூலை எழுதியவர் - மலாலா

197.  மதுரைக்காஞ்சியின் ஆசிரியர் - மாங்குடி மருதனார்

198.  நாட்டுப்புறவியல் ஓர் அறிமுகம் - முனைவர் சு. சக்திவேல்

199.  தரங்கம்பாடி தங்கப் புதையல் - பெ.தூரன்

200.  இருட்டு எனக்குப் பிடிக்கும்: (அன்றாட வாழ்வில் அறிவியல்) - ச. தமிழ்ச்செல்வன்

201.  இராவண காவியம் - புலவர் குழந்தை

202.  புலவர் குழந்தை யாருடைய வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார் - பெரியார்

203.  நாச்சியார் திருமொழிதிருப்பாவை ஆகிய பாடல்களை பாடியவர் - ஆண்டாள்

204.  ஆண்டாள் பாடிய திருப்பாவைநாச்சியார் திருமொழி எந்த நூலில் உள்ளது – நாலாயிர திவ்விய பிரபந்தம்

205.  செய்தி என்னும் சிறுகதையை எழுதியவர் - தி.ஜானகிராமன்

206.  தனது ஜப்பான் பயண அனுபவங்களை உதயசூரியன் என்னும் தலைப்பில் சுதேசமித்திரன் வார இதழில் எழுதியவர் - தி.ஜானகிராமன்

207.  ஜப்பான் பயண அனுபவங்களை உதயசூரியன் என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்த ஆண்டு - 1967

208.  தி.ஜானகிராமன் ரோம்செக்கோஸ்லோவோக்கியா சென்ற அனுபவங்களை கருங்கடலும் கலைக்கடலும் என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்ட ஆண்டு - 1974

209.  தமது காவிரிக்கரை வழியான பயணத்தை நடந்தாய் வாழி காவேரி என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டவர் - தி.ஜானகிராமன்

210.  அடுத்த வீடு ஐம்பது மைல் என்னும் பயணக்கட்டுரையை எழுதியவர் - தி.ஜானகிராமன்

211.  புதிய ஆத்திச்சூடி என்னும் நூலை எழுதியவர் - பாரதியார்

212.  நட்புக்காலம் என்னும் நூலை எழுதியவர் - கவிஞர் அறிவுமதி

213.  திருக்குறள் கதைகள் என்னும் நூலை எழுதியவர் - கிருபானந்தவாரியார்

214.  கையாஉலகே ஒரு உயிர் என்னும் நூலை எழுதியவர் - ஜேம்ஸ் லவ்வாக்தமிழில் சா. சுரேஷ்

 சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள்

 215.  அன்பளிப்பு சிறுகதைகள் - கு. அழகிரிசாமி - 1970

216.  சக்தி வைத்தியம் சிறுகதைத் தொகுப்பு - தி.ஜானகிராமன் - 1979

217.  முதலில் இரவு வரும் சிறுகதைத் தொகுப்பு - ஆதவன் - 1987

218.  அப்பாவின் சிநேகதர் சிறுகதைத் தொகுப்பு - அசோகமித்ரன் - 1996

219.  மின்சாரப்பூ சிறுகதைகள்- மேலாண்மை பொன்னுசாமி - 2008

220.  சூடிய பூ சூடற்க சிறுகதைகள் - நாஞ்சில் நாடன் - 2010

221.  ஒரு சிறு இசை சிறுகதைகள் - வண்ணதாசன் - 2016

222.  இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு நூலை எழுதியவர் - மா.சு. அண்ணாமலை

223.  தமிழர் உணவு என்னும் நூலை எழுதியவர் - பக்தவச்சல பாரதி

224.  ஆகாயத்துக்கு அடுத்த வீடு - மு. மேத்தா

225.  தமிழ்ப் பழமொழிகள் - கி.வா. ஜகன் நாதன்

226.  இருட்டு எனக்குப் பிடிக்கும் (அன்றாட வாழ்வில் அறிவியல் - ச. தமிழ்செல்வன்

227.  ஒளியின் தலைப்பில் கவிதை எழுதியவர் - ந. பிச்சமூர்த்தி

228.  புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்என்னும் நூலை எழுதியவர் -அ.வல்லிக்கண்ணன்

229.  பாரதியாரின் வசன கவிதையை தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில்ஈடுபட்டவர் - ந. பிச்சமூர்த்தி

230.  ந. பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை - சயன்சுக்கு பலி

231.  லாவோட்சு கவிதையை தமிழில் மொழி பெயர்த்தவர் - சி. மணி

232.  மகனுக்கு எழுதிய கடிதம் என்ற கதையை எழுதியவர் - நா. முத்துக்குமார்

233.  பெரியாரின் சிந்தனைகள் - வே. ஆனைமுத்து

234.  அஞ்சல் தலைகளின் கதை – எஸ்.பி சட்டர்ஜி (மொழிபெயர்ப்பு - வீ.மு. சாம்பசிவன்)

235.  தங்கைக்கு - மு. வரதராசன்

236.  தம்பிக்கு - அறிஞர் அண்ணா

237.  பரந்த ஆளுமையும் மனித நலக் கோட்பாடும் என்ற கூற்றை கூறியவர் - இலத்தீன் புலவர்தெறென்ஸ்

238.  திருக்குறளின் பண்புடைமை என்னும் அதிகாரத்திற்கு உரை கண்டவர் - பரிப்பெருமாள்

239.  புலரிமுன்பின்ஆதிஅந்நியமற்ற நதிமணல்உள்ள ஆறு- கல்யாண்ஜி

240.  அகமும் புறமும் என்ற கட்டுரை தொகுப்பை எழுதியவர் - கல்யாண்ஜி

241.  சில இறகுகள் சில பறவைகள் என்ற பெயரில் கடிதத்தை எழுதியவர் - கல்யாண்ஜி

242.  கல்யாண்ஜி எழுதிய சிறுகதை தொகுப்புகள் -கலைக்க முடியாத ஒப்பனைகள்,தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்,உயரப் பறத்தல்,ஒளியிலே தெரிவது

243.  ஒரு சிறு இசை என்ற சிறுகதை தொகுப்பிற்காக கல்யாண்ஜிக்கு சாகித்திய அகாதாமி விருது வழங்கப்பட்ட ஆண்டு - 2016

244.  இந்த காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல் - அமுதோன்

245.  பிம்பங்களற்ற தனிமையில் ஒன்றிலொன்று முகம் பார்த்தன சலூன் கண்ணாடிகள் - நா.முத்துக்குமார்

246.  குறுந்தொகையை தொகுத்தவர் - பூரிக்கோ

247.  தாய்மைக்கு வறட்சி இல்லை என்னும் தலைப்பில் எழுதியவர் -சு. சமுத்திரம்

248.  வளத்தப்பா என்ற கதையை எழுதியவர் - சு. சமுத்திரம்

249.  என் கதைகளின் கதைகள் என்ற நூலை எழுதியவர் - சு .சமுத்திரம்

250.  வாடாமல்லிபாலைப்புறா,மண்சுமைதலைப்பாகைகாகித உறவு- சுசமுத்திரம் சிறுகதை தொகுப்புகள்

251.  சு. சமுத்திரம் எழுதிய வேரில் பழுத்த பலா என்னும் புதினம் எந்த விருதை பெற்றது -சாகித்திய அகாதமி விருது

252.  சு. சமுத்திரம் எழுதிய குற்றம் பார்க்கில் என்னும் சிறுகதைத் தொகுதி எந்த பரிசை பெற்றது - தமிழக அரசின் பரிசை

253.  வண்ணதாசனுக்கு சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நூல் - ஒரு சிறு இசை -2016

254.  பாஞ்சாலி சபதம் நூலை எழுதியவர் - பாரதியார்

255.  இலக்கிய நோக்கில் கம்பர் நூல் எவ்வாறு காவியம் எனச் சிறக்கிறது என்பதை விரிவாகஆராய்ந்தவர் - பேராசிரியர் அ. பாண்டுரங்கன்

256.  சிற்பியின் மகள் என்ற நூலை எழுதியவர் - பூவண்ணன்

257.  அப்பா சிறுவனாக இருந்தபோது என்னும் நூலை எழுதியவர் - அலெக்சாந்தர் ரஸ்கின்(தமிழில் நா. முகமது செரீபு)

 10ஆம் வகுப்பு தமிழ்

258.  உலகியல் நூறுபாவியக்கொத்துநூறாசிரியம் கனிச்சாறுஎண்சுவை எண்பது,மகபுகுவஞ்சி,பள்ளிப் பறவைகள்- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

259.  பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தமிழுக்கு கருவூலமாய் அமைந்துள்ளது- திருக்குறள் மெய்ப்பொருளுரை

260.  இலக்கண வரலாறு,தமிழிசை இயக்கம்,தனித்தமிழ் இயக்கம்,பாவாணர் வரலாறு,குண்டலகேசி உரை,யாப்பருங்கலம் உரை,புறத்திரட்டு உரை ,திருக்குறள் தமிழ் மரபுரை,காக்கைப் பாடினிய உரை,தேவநேயம்- இரா. இளங்குமரனார்

261.  தேவநேய பாவாணரின் சொல்லாய்வு கட்டுரைகள் நூலில் உள்ள தமிழ்ச்சொல் வளம் என்னும் கட்டுரையின் சுருக்கம் பாடமாக இடம்பெற்றுள்ளது.

262.  ரோமன் எழுத்துருவில் வெளிவந்த கார்டிலா நூலின் முழு பெயர் - Carthila de lingoa Tamul e Portugues

263.  பெத்த கைலமும் பேனலால் - நித்தம் அரை கிடந்தே சங்கத் தனர் காக்க ஆழிக்கு இணைகிடந்த தேதமிழ் ஈண்டு - தனிப்பாடல் திரட்டு - தமிழழகனார்

264.  காசிக்காண்டம்,நறுந்தொகை (வெற்றிவேற்கை)நைடதம்லிங்கபுராணம்,வாயு சம்கிதை,திருக்கருவை அந்தாதி,கூர்ம புராணம்- அதிவீரராம பாண்டியர்

265.  பெருமாள் திருமொழி - குலசேகர ஆழ்வார்

266.  நீதிவெண்பா - கா.ப. செய்குதம்பிப் பாவலர்

267.  திருவிளையாடற்புராணம்,வேதாரண்யப் புராணம்,திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா,மதுரை பதிற்றுப்பத்தந்தாதி- பரஞ்சோதி முனிவர்

268.  முல்லைப்பாட்டு - நப்பூதனார்

269.  பூத்தொடுத்தல் - உமா மகேஸ்வரி

270.  நட்சத்திரங்களின் நடுவே,வெறும் பொழுதுகற்பாவை- உமா மகேஸ்வரி

271.  கந்தர் கலிவெண்பா,மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்,மதுரை கலம்பகம்சகலகலாவல்லிமாலைநீதிநெறி விளக்கம்,திருவாரூர் மும்மணிக்கோவை- குமரகுருபரர்

272.  சரசுவதி அந்தாதி,கம்பராமாயணம்,சடகோபர் அந்தாதி,திருக்கை வழக்கம்,ஏரெழுபது,சிலை எழுபது- கம்பர்

273.  ஞானம்மீட்சி விண்ணப்பம்- தி.சொ. வேணுகோபாலன்

274.  சித்தாளு - நாகூர் ரூமி

275.  கப்பலுக்கு போன மச்சான் என்னும் நாவலை எழுதியவர் - நாகூர் ரூமி

276.  நதியின் கால்கள்,ஏழாவது சுவை,சொல்லாத சொல்- நாகூர் ரூமி

277.  தமிழின் முதல் சதுரகராதிதொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்)சிற்றிலக்கியங்கள்,உரைநடை நூல்கள்,பரமார்த்தக் குருகதைகள்,மொழிபெயர்ப்பு நூல்கள்- வீரமாமுனிவர்

278.  உலகியல் நூறுபாவியக்கொத்துநூறாசிரியம்கனிச்சாறு,எண்சுவை என்பது,மகபுகுவஞ்சி,பள்ளிப் பறவைகள்- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

279.  பத்மகிரி நாதர் தென்றல் விடுதூது - பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.

280.  குருபீடம்,யுகசந்தி,ஒரு பிடி சோறு,உண்மை சுடும்,இனிப்பும் கரிப்பும்,தேவன் வருவாரா,புதிய வார்ப்புகள்- ஜெயகாந்தன்

281.  ஜெயகாந்தன் எழுதிய குறும்புதினங்கள்: பிரளயம்,கைவிலங்கு,ரிஷிமூலம்,பிரம்ம உபதேசம்,யாருக்காக அழுதான்,கருணையினால் அல்ல,சினிமாவுக்கு போன சித்தாளு

282.  ஜெயகாந்தன் எழுதிய புதினங்கள்: பாரீசுக்குப் போ,சுந்தர காண்டம்,உன்னைப் போல் ஒருவன்,கங்கை எங்கே போகிறாள்,ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்,இன்னும் ஒரு பெண்ணின் கதை,ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

283.  ஜெயகாந்தன் மொழிபெயர்த்த நூல்கள்:வாழ்விக்க வந்த காந்தி ( பிரெஞ்சு மொழியில் வந்த காந்தி வாழ்க்கை வரலாற்றின் தமிழாக்கம்)

284.  ஜெயகாந்தன் மொழிபெயர்த்த நூல்கள்:ஒரு கதாசிரியனின் கதை (முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு)-

285.  ஜெயகாந்தன் எழுதி திரைப்படமான படைப்புகள்- சில நேரங்களில் சில மனிதர்கள்,ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்,ஊருக்கு நூறு பேர்,உன்னைப் போல் ஒருவன்,யாருக்காக அழுதான்

286.  நாம் என் தமிழ் காக்க வேண்டும் - முனைவர் சேதுமணி மணியன்

287.  தவறின்றித் தமிழ் எழுதுவோம் - மா. நன்னன்

288.  பச்சை நிழல் - உதய சங்கர்

289.  குயில்பாட்டு - பாரதியார்

290.  அதோ அந்தப் பறவை போல - ச. முகமது அலி

291.  உலகின் மிகச் சிறிய தவளை - எஸ். ராமகிருஷ்ணன்

292.  திருக்குறள் தெளிவுரை - வ.உ. சிதம்பரனார்

293.  சிறுவர் நாடோடிக் கதைகள் - கி. ராஜநாராயணன்

294.  ஆறாம் திணை - மருத்துவர் கு. சிவராமன்

295.  பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள் - நீலமணி

296.  அன்றாட வாழ் வியல் - ச. தமிழ்ச்செல்

297.  காலம் - ஸ்டீபன் ஹாக்கிங்

298.  சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று - தமிழில் வல்லிக்கண்ணன்

299.  குட்டி இளவரசன் - தமிழில் வெ. ஸ்ரீராம்300.  ஆசிரியரின் டைரி - தமிழில் எம்.பி. அகிலா

301.  தேன்மழை - சுரதா

302.  திருக்குறள் நீதி இலக்கியம் - க.த. திருநாவுக்கரசு

303.  நாட்டார் கலைகள் - அ.கா. பெருமாள்

304.  என் கதை - நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்

305.  வேருக்கு நீர் - ராஜம் கிருஷ்ணன்

306.  நாற்காலிக்காரர் - ந. முத்துசாமி

307.  அறமும் அரசியலும் - மு. வரதராசனார்

308.  அபி கவிதைகள் - அபி

309.  எண்ணங்கள் - எம். எஸ். உதயமூர்த்தி

310.  யானை சவாரி- பாவண்ணன்

311.  கல்மரம் - திலகவதி                                   

312.  அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் - ந. முருகேசபாண்டியன்

313.  குறிஞ்சிப்பாட்டின் ஆசிரியர் - கபிலர்

314.  குறிஞ்சிமலர் நூலின் ஆசிரியர் - நா. பார்த்தசாரதி

315.  மழையும் புயலும் என்னும் நூலை எழுதியவர் - வா. ராமசாமி

316.  நாட்டுப்பற்று கட்டுரையை எழுதியவர் - மு.வரதராசனார்

317.  இனிக்கும் நினைவுகள்எங்கெங்கு காணினும்யாதுமாகி நின்றாய்- எழில் முதல்வன்

318.  புதிய உரைநடை நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் - எழில்முதல்வன்

319.  நாம் என் தமிழ் காக்க வேண்டும் - முனைவர் சேதுமணி மணியன்

320.  தவறின்றித் தமிழ் எழுதுவோம் - மா. நன்னன்

321.  பச்சை நிழல் - உதயசங்கர்

322.  புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் - புயலிலே ஒரு தோணி

323.  புயலிலே ஒரு தோணி என்னும் புதினத்தை எழுதியவர் - ப. சிங்காரம்

324.  குயில்பாட்டு நூலின் ஆசிரியர் - பாரதியார்

325.  அதோ அந்தப் பறவை போல என்னும் நூலின் ஆசிரியர் - ச. முகமது அலி

326.  உலகின் மிகச்சிறிய தவளை என்னும் நூலின் ஆசிரியர் - எஸ். ராமகிருஷ்ணன்

327.  கோபல்லபுரத்து மக்கள் கதையின் ஆசிரியர் - கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.

328.  கோபல்லபுரத்து மக்கள் என்னும் நூல் இந்திய விடுதலைப் போராட்டத்தின் பின்னணியை கொண்டது.

329.  கோபல்லபுரத்து மக்கள் என்னும் நூலுக்கு எந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது - 1991

330.  கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கியவர் - கி.ராஜநாராயணன்

331.  திருக்குறள் தெளிவுரை என்னும் நூலை எழுதியவர் - வ.உ.சிதம்பரனார்

332.  சிறுவர் நாடோடிக் கதைகள் என்னும் நூலை எழுதியவர் - கி.ராஜநாராயணன்

333.  ஆறாம்: திசை என்னும் நூலை எழுதியவர் - மருத்துவர் கு. சிவராமன்

334.  புதிய நம்பிக்கை - கமலாலயன்

335.  சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று என்ற நூலை எழுதியவர் - தமிழில் வல்லிக்கண்ணன்

336.  குட்டி இளவரசன் என்ற நூலை எழுதியவர் - தமிழில் வெ. ஸ்ரீராம்

337.  ஆசிரியரின் டைரி என்னும் நூலை எழுதியவர் - தமிழில் எம்.பி. அகிலா

338.  தக்கையின் மீது நான்கு கண்கள் என்ற சிறுகதை தொகுப்பை எழுதியவர் - சா. கந்தசாமி

339.  சாயாவனம்: புதினத்தால் எழுத்துலகில் புகழ் பெற்றவர் - சா. கந்தசாமி

340.  விசாரணைக் கமிஷன் என்னும் புதினத்திற்கு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் - சா.கந்தசாமி

341.  சுடுமண் சிலைகள் என்ற குறும் படத்திற்கு அனைத்துலக விருதையும் பெற்றவர் - சா.கந்தசாமி

342.  சா. கந்தசாம் எழுதிய புதினங்கள் -தொலைந்து போனவர்கள்,சூர்யவம்சம்சாந்தகுமாரி,விசாரணைக் கமிஷன்,சாயாவனம்,

343.  தேன்மழை நூலின் ஆசிரியர் – சுரதா

344.  திருக்குறள் நீதி இலக்கியம் என்ற நூலின் ஆசிரியர் - க.த. திருநாவுக்கரசு

345.  நாட்டார் கதைகள் என்னும் நூலை எழுதியவர் - அ.கா. பெருமாள்

346.  ம.பொ.சிவஞானம் எழுதிய வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்னும் நூலுக்காக 1966 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.

347.  வேருக்கு நீர் (சாகித்திய அகாதெமி விருது)பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி - அனைவராலும் பாராட்டப் பெற்ற புதினம்-ராஜம் கிருஷ்ணன் எழுதிய புதினங்கள்:

348.  தூத்துக்குடியில் பல மாதம் தங்கியிருந்து உப்பளத் தொழிலாளர்களின் உவர்ப்பு வாழ்க்கை புதினம் - கரிப்பு மணிகள்

349.  நீலகிரிபடுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்களை குறித்த புதினம்- குறிஞ்சித் தேன்

350.  கடலோர மீனவர் வாழ்வின் சிக்கல்களை பேசும் புதினம்- அலைவாய்க் கரையில்

351.  அமைப்புசாரா வேளாண் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதை சுட்டிக்காட்டிய புதினங்கள்- சேற்றில் மனிதர்கள்வேருக்கு நீர்

352.  குழந்தைகளை தீப்பெட்டி தொழிலில் முடக்கிதீக்குச்சிகளை அந்த பெட்டியில் அடைப்பதை போன்றுகுழந்தைகளின் உடலையும்மனத்தையும் நொறுக்கும் அவல உலகை காட்டும் புதினம்- கூட்டுக் குஞ்சுகள்

353.  பெண்குழந்தைக் கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து எழுதிய புதினம்- மண்ணகத்துப் பூந்துளிகள்

354.  என்கதை என்ற நூலின் ஆசிரியர் - நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்

355.  வேருக்கு நீர் என்ற நூலின் ஆசிரியர் - ராஜம் கிருஷ்ணன்

356.  நாற்காலிக்காரர் என்ற நூலின் ஆசிரியர் - ந.முத்துசாமி

357.  அறமும் அரசியலும் என்ற நூலை எழுதியவர் - மு.வ

358.  அபி கதைகள் என்னும் நூலை எழுதியவர் - அபி

359.  எண்ணங்கள் என்னும் நூலை எழுதியவர் - எம். எஸ். உதயமூர்த்தி

360.  யானை சவாரி என்ற நூலை எழுதியவர் - பாவண்ணன்

361.  கல்மரம் என்ற நூலை எழுதியவர் - திலகவதி

362.  அற்றைத் திங்கள் அவ்வெண்ணியனில் என்ற நூயை எழுதியவர் - ந. முருகேசபாண்டியன்.

 

 பொருத்துதல்

  • அக்கம் - தானியம்
  • அங்கண் - அழகிய இடம்
  • ஆமா - காட்டுப்பசு
  • ஆற்றுணா - கட்டுச்சோறு
  • இருந்தி - பெருஞ்செல்வம்
  • இரும்பை - பாம்பு
  • ஈட்டம் - கூட்டம்
  • ஈங்கதிர் - சந்திரன்
  • உரன் - திண்ணிய அறிவு
  • உலண்டு - கோற்புழு
  • உகுநீர் - ஒழுகும் நீர்
  • ஊழை - பித்தம்
  • எழினி - இருதிரை
  • எறும்பி - யானை
  • எருத்தம் - பிடரி, கழுத்து
  • கவர்தல் - நுகர்தல்
  • ஈன்றல் - தருதல், உண்டாக்குதல்
  • சிறுமை - துன்பம்
  • மறுமை - மறுபிறவி
  • நன்றி - நன்மை
  • அல்லவை - பாவம்
  • துவ்வாமை - வறுமை
  • அமர்ந்து - விரும்பி
  • அகன் - அகம், உள்ளம்
  • படிறு - வஞ்சம்
  • செம்பொருள் - மெய்ப்பொருள்
  • பீற்றல் குடை - பிய்ந்த குடை
  • கடையர் - தாழ்ந்தவர்
  • விழுச்செல்வம் - சிறந்த செல்வம்
  • நுனி - மிகுதி
  • முழவு - மத்தளம்
  • வனப்பு - அழகு
  • தூறு - புதர்
  • மெய்ப்பொருள் - நிலையான பொருள்
  • வண்மை - கொடைத்தன்மை
  • புரை - குற்றம்
  • குழவி - குழந்தை
  • ஆடுபரி - ஆடுகின்ற குதிரை
  • துன்னலர் - பகைவர்
  • கலைமடந்தை - கலைமகள்
  • நீரவர் - அறிவுடையார்
  • அகம் - உள்ளம்
  • அல்லல் - துன்பம்
  • புனைதல் – புகழ்தல்


புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்


பத்துப்பாட்டு நூல்கள்: 10 பாடல்கள்

1. திருமுருகாற்றுப்படை- நக்கீரர்

2. பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார்

3. சிறுபாணாற்றுப்படை - நல்லூர் நத்தத்தனார்

4. பெரும்பாணாற்றுப்படை - கடியலூர் உருத்திரங்கண்ணனார்

5. முல்லைப்பாட்டு - நப்பூதனார்

6. குறிஞ்சிப்பாட்டு - கபிலர்

7. பட்டினப்பாலை - உருத்திரங்கண்ணனார்

8. நெடுநல்வாடை - நக்கீரர்

9. மலைபடுகடாம்; - பெருங்கௌசிகனார்

10. மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் : 18 பாடல்கள்

1. நாலடியார் - சமணமுனிவர்கள்

2. நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்

3. இன்னா நாற்பது - கபிலர்

4. இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்

5. திரிகடுகம் - நல்லாதனார்

6. ஏலாதி - கணிமேதாவியார்

7. முதுமொழிக்காஞ்சி - கூடலூர்க்கிழார்

8. திருக்குறள் - திருவள்ளுவர்

9. ஆசாரக்கோவை - பெருவாயின் முள்ளியார்

10.பழமொழியின் நானூறு - முன்றுரை அரையனார்

11. சிறுபஞ்சமூலம் - காரியாசான்

12. ஐந்திணை ஐம்பது - மாறன் பொறையனார்

13. ஐந்திணை எழுபது - மூவாதியார்

14. திணைமொழி ஐம்பது - கண்ணன்; சேந்தனார்

15. திணைமாலை நூற்றைம்பது - கணிமேதாவியார்

16. கைந்நிலை - புல்லங்காடனார்

17. கார்நாற்பது - கண்ணங்கூத்தனார்

18. களவழி நாற்பது - பொய்கையார்

ஐம்பெரும்காப்பியங்கள்:

1. சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்

2. மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்

3. சீவக சிந்தாமணியை - திருத்தக்க தேவர்

4. குண்டலகேசியை - நாதகுத்தனார்

5. வளையாபதியை - ஆசிரியர் பெயர் தெரியவில்லை

இலக்கண நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள்

1. காக்கை பாடினியம் - காக்கைபாடினியார்

2. இறையனார் களவியல் - இறையனார்

3. புறப்பொருள் வெண்பாமாலை - ஐயனாரிதனார்

4. யாப்பருங்கலம் - அமிதசாகரர்

5. வீரசோழியம் - புத்தமித்திரர்

6. நேமிநாதம் - குணவீரபண்டிதர்

7. நன்னூல் - பவணந்தி முனிவர்

8. நவநீதப் பாட்டியல் - நவநீதநடனார்

9. சிரம்பரப் பாட்டியல் - மஞ்சோதியர்

10. பிரயோக விவேகம் - சுப்பிரமணிய தீட்சிதர்

11.மாறன் அகப்பொருள் - திருக்குருகைப்பெருமாள் கவிராயர்

12. இலக்கண கொத்து - சாமிநாத தேசிகர்

13. தொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்

14. பிரபந்த தீபிகை-முத்துவேங்கடசுப்பைய நாவலர்

15. சுவாமிநாதம் - சுவாமிக் கவிராயர்

புகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்

1. ஊரும் பேரும் - ரா.பி சேதுப்பிள்ளை

2. குற்றாலக் குறவஞ்சி - திரிகூடராசப்பக் கவிராயர்

3. ஜீவகாருண்ய ஒழுக்கம் - இராமலிங்க அடிகளார்

4. எழிலோவியம் - வாணிதாசன்

5. சீறாப்புராணம் - உமறுப்புலவர்

6. பாரததேசம் - மகாகவி பாரதியார்

7. நான்மணிக்கடிகை - விளம்பிநாகனார்

8. இசையமுது - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

9. திருத்தொண்டத் தொகை - சுந்தரர்

10. சாகுந்தலம் - காளிதாசர்

11. திண்ணையை இடித்துத் தெருவாக்கு - தாராபாரதி

12. ஏலாதி - கணிமேதாவியார்

13. செய்யும் தொழிலே தெய்வம - பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம்

14. அந்தக்காலம் இந்தக் காலம் - உடுமலை நாராயண கவி

15. ஓர் இரவு - அறிஞர் அண்ணா

 

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: