TNPSC ILAKKANAM TAMIL NOTES FREE STUDY MATERIALS
பகுதி – (அ) – இலக்கணம்
சொற்பொருள் (6th to 12th)
6 TH- STD - சொற்பொருள்
1. நிருமித்த -உருவாக்கிய
2. விளைவு - விளைச்சல்
3. சமூகம் - மக்கள் குழு
4. அசதி -சோர்வு
5. ஆழிப் பெருக்கு -கடல் கோள்
6. மேதினி -உலகம்
7. உள்ள பூட்டு - அறிய விரும்பாமை
8. திங்கள் - நிலவு
9. கொங்கு - மகரந்தம்
10. அலர் - மலர்தல்
11. திகிரி -ஆணைச்சக்கரம்
12. மேரு -இமயமலை
13. நாமநீர் - அச்சம் தரும் கடல்
14. அளி -கருணை
15. சித்தம் -உள்ளம்
16. இயன்றவரை -முடிந்தவரை
17. ஒருமித்து - ஒன்றுபட்டு
18. ஔடதம் - மருந்து
19. மாசற -குறை இல்லாமல்
20. சீர்தூக்கின் -ஒப்பிட்டு ஆராய்ந்து
21. தேசம் -நாடு
22. தூற்றும்படி -இகழும்படி
23. மூத்தோர் - பெரியோர்
24. மேதைகள் -அறிஞர்கள்
25. மாற்றார் -மற்றவர்
26. நெறி -வழி
27. வற்றாமல் -அழியாமல்
28. நட்டல் -நட்புக் கொள்ளுதல்
29. நந்தவனம் -பூஞ்சோலை
30. பார் -உலகம்
31. பண் -இசை
32. இழைத்து -செய்து
33. மல்லெடுத்த -வலிமைபெற்ற
34. சமர் -போர்
35. நல்கும் -தரும்
36. கழனி -வயல்
37. மறம் -வீரம்
38. எக்களிப்பு -பெருமகிழ்ச்சி
39. கலம் -கப்பல்
40. ஆழி -கடல்
41. கதிர்ச்சுடர் -கதிரவனின் ஒளி
42. மின்னல்வழி -மின்னல் கோடுகள்
43. நித்திலம் -முத்து
44. மெய் -உண்மை
45. தேசம் -நாடு
46. தண்டருள் -குளிர்ந்த கருணை
47. கூர் -மிகுதி
48. செம்மையருக்கு - சான்றோருக்கு
49. ஏவல் -தொண்டு
50. பராபரமே -மேலான பொருளே
51. பணி -தொண்டு
52. எய்தும் -கிடைக்கும்
53. எல்லாரும் -எல்லா மக்களும்
54. அல்லாமல் -அதைத்தவிர
55. சுயம் -தனித்தன்மை
56. உள்ளீடுகள் -உள்ளே இருப்பவை
57. அஞ்சினர் - பயந்தனர்
58. கருணை -இரக்கம்
59. வீழும் -விழும்
60. ஆகாது -முடியாது
61. பார் -உலகம்
62. நீள்நிலம் -பரந்த உலகம்
63. முற்றும் - முழுவதும்
64. மாரி - மழை
65. கும்பி -வயிறு
66. பூதலம் - பூமி
67. முக்கனி - மா, பலா, வாழை.
68. முத்தமிழ் -இயல், இசை, நாடகம்.
69. முத்தேன் - கொம்புத்தேன், பொந்துத்தேன்,கொசுத்தேன்.
70. நன்றியறிதல் -பிறர் செய்த உதவியை மறவாமை
71. ஒப்புரவு - பிறருக்கு உதவி செய்தல்
72. அரிச்சுவடி - அகரவரிசை எழுத்துக்கள்
73. மாடங்கள் - மாளிகையின் அடுக்குகள்
74. பொற்கோட்டு - பொன்மயமானசிகரத்தில்
75. ஊழி - நீண்டதொருகாலப்பகுதி
76. காணி - நில அளவைக் குறிக்கும் சொல்
7 TH- STD – சொற்பொருள்
77. ஊக்கிவிடும் - ஊக்கப்படுத்தும்
78. விரதம் - நோன்பு
79. குறி - குறிக்கோள்
80. பொழிகிற - தருகின்ற
81. ஒப்புமை - இணை
82. அற்புதம் - வியப்பு, விந்தை.
83. முகில் - மேகம்
84. உபகாரி - வள்ளல்
85. ஈன்று - தந்து, பெற்று
86. கொம்பு - கிளை
87. அதிமதுரம் - மிகுந்த சுவை
88. களித்திட - மகிழ்ந்திட
89. நச்சரவம் - விடமுள்ள பாம்பு
90. விடுதி - தங்கும் இடம்
91. பரவசம் - மகிழ்ச்சிப் பெருக்கு
92. துஷ்டி கேட்டல் - துக்கம் விசாரித்தல்
93. சிற்றில் - சிறு வீடு
94. கல் அளை - கற்குகை
95. யாண்டு - எங்கே
96. ஈன்ற வயிறு - பெற்றெடுத்த வயிறு
97. சூரன் - வீரன்
98. பொக்கிஷம் - செல்வம்
99. சாஸ்தி - மிகுதி
100. விஸ்தாரம் - பெரும்பரப்பு
101. வாரணம் - யானை
102. பரி - குதிரை
103. சிங்காரம் - அழகு
104. கமுகு - பாக்கு
105. மதலை - தூண்
106. ஞெகிழி - தீச்சுடர்
107. அழுவம் - கடல்
108. சென்னி - உச்சி
109. உரவுநீர் - பெருநீர்ப் பரப்பு
110. கரையும் - அழைக்கும்
111. உரு - அழகு
112. போழ - பிளக்க
113. வங்கூழ் - காற்று
114. நீகான் - நாவாய் ஓட்டுபவன்
115. வங்கம் - கப்பல்
116. எல் - பகல்
117. கோடு உயர் - கரை உயர்ந்த
118. மாட ஒள்ளெரி - கலங்கரை விளக்கம்
119. எத்தனிக்கும் - முயலும்
120. வெற்பு - மலை
121. கழனி - வயல்
122. நிகர் - சமம்
123. பிரிதி - கதிரவன்
124. அன்னதோர் - அப்படிஒரு
125. கார்முகில் - மழைமேகம்
126. துயின்றிருந்தார் - உறங்கியிருந்தார்
127. விச்சை - கல்வி
128. பிரும்மாக்கள் - படைப்பாளர்கள்
129. நெடி - நாற்றம்
130. மழலை - குழந்தை
131. வனப்பு - அழகு
132. பூரிப்பு - மகிழ்ச்சி
133. மேனி - உடல்
134. வண்கீரை - வளமான கீரை
135. முட்டப்போய் - முழுதாகச் சென்று
136. பரி - குதிரை
137. மாரி - மழை
138. வறந்திருந்த - வறண்டிருந்த
139. புகவா - உணவாக
140. மடமகள் - இளமகள்
141. நல்கினாள் - கொடுத்தாள்
142. குழி - நில அளவைப்பெயர்
143. சாண் - நீட்டல் அளவைப்பெயர்
144. மணி - முற்றிய நெல்
145. சீலை - புடவை
146. மடை - வயலுக்கு நீர் வரும் வழி
147. கழலுதல் - உதிர்தல்
148. வையம் - உலகம்
149. வெய்ய - வெப்பக்கதிர் வீசும்
150. இடர்ஆழி - துன்பக்கடல்
151. சொல் மாலை - பாமாலை
152. தகளி - அகல்விளக்கு
153. ஞானம் - அறிவு
154. நாரணன் - திருமால்
155. வித்து - விதை
156. ஈன - பெற
157. நிலன் - நிலம்
158. களை - வேண்டாத செடி
159. பைங்கூழ் - பசுமையான பயிர்
160. வன்சொல் - கடுஞ்சொல்
161. சாந்தம் - அமைதி
162. மகத்துவம் - சிறப்பு
163. பேதங்கள் - வேறுபாடுகள்
164. தாரணி - உலகம்
165. தத்துவம் - உண்மை
166. இரக்கம் - கருணை
167. கால் - வாய்க்கால்,குதிரையின் கால்
168. வைப்புழி - பொருள் சேமித்து வைக்கும் இடம்.
169. கோட்படா - ஒருவரால் கொள்ளப்படாது
170. வாய்த்து ஈயில் - வாய்க்கும்படி கொடுத்தலும்
171. வேயா மாடம் - வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது,திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்
172. சும்மாடு - பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக்கொள்ளும் துணிச்சுருள்
173. முன்றில் - வீட்டின் முன் இடம் (திண்ணை) இங்கு வீட்டைக் குறிக்கிறது
174. சுடர் ஆழியான் - ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்
175. மறித்தல் - தடுத்தல் மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திகட்டுதல். எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல்
8 TH- STD - சொற்பொருள்
176. நிரந்தரம் - காலம் முழுமையும்
177. வண்மொழி – வளமிக்கமொழி
178. வைப்பு – நிலப்பகுதி
179. இசை – புகழ்
180. தொல்லை – பழமை, துன்பம்
181. விசும்பு – வானம்
182. மரபு – வழக்கம்
183. மயக்கம் - கலவை
184. திரிதல் – மாறுபடுதல்
185. செய்யுள் – பாட்டு
186. வழாஅமை – தவறாமை
187. தழாஅல் – தழுவுதல் (பயன்படுத்துதல்)
188. தூண்டுதல் – ஆர்வம் கொள்ளுதல்
189. பயிலுதல் – படித்தல்
190. ஈரம் – இரக்கம்
191. நாணம் – வெட்கம்
192. முழவு – இசைக்கருவி
193. செஞ்சொல் – திருந்திய சொல்
194. முகில் - மேகம்
195. வின்னம் - சேதம்
196. கெடிகலங்கி - மிக வருந்தி
197. வாகு - சரியாக
198. சம்பிரமுடன் - முறையாக
199. காலன் - எமன்
200. சேகரம் - கூட்டம்
201. மெத்த - மிகவும்
202. தீர்வன - நீங்குபவை
203. திறத்தன - தன்மையுடையன
204. உவசமம் - அடங்கி இருத்தல்
205. கூற்றவா - பிரிவுகளாக
206. நிழல்இகழும் - ஒளிபொருந்திய
207. பேர்தற்கு - அகற்றுவதற்கு
208. பிணி - துன்பம்
209. திரியோகமருந்து - மூன்று யோகமருந்து
210. ஓர்தல் - நல்லறிவு
211. தெளிவு - நற்காட்சி
212. பிறவார் - பிறக்கமாட்டார்
213. நித்தம் நித்தம் - நாள் தோறும்
214. வையம் - உலகம்
215. மட்டு - அ்ளவு
216. பேணு்வையேல் - பாதுகாத்தால்
217. சுண்ட - நன்கு
218. திட்டுமுட்டு - தடுமாற்றம்
219. கலன் – அணிகலன்
220. முற்ற – ஒளிர
221. தடம் - அடையாளம்
222. அகம்பாவம் - செருக்கு
223. பண் – இசை
224. மதவேழங்கள் – மதயானைகள்
225. முரலும் – முழங்கும்
226. பழவெய் – முதிர்ந்த மூங்கில்
227. அலந்தவர் - வறியவர்
228. கிளை – உறவினர்
229. செறாஅமை - வெறுக்காமை
230. பேதையார் – அறிவற்றவர்
231. நோன்றல் – பொறுத்தல்
232. மறாஅமை - மறவாமை
233. போற்றார் – பகைவர்
234. பொறை - பொறுமை
235. வாரி - வருவாய்
236. எஞ்சாமை - குறைவின்றி
237. முட்டாது - தட்டுப்பா டின்றி
238. ஒட்டாது – வாட்டம்இன்றி
239. வைகுக - தங்குக
240. ஓதை - ஓசை
241. வெரீஇ - அஞ்சி
242. யாணர் - புதுவருவாய்
243. மறலி - காலன்
244. வழிவர் - நழுவி ஓடுவர்
245. கரி - யானை
246. பிலம் - மலைக்குகை
247. தூறு - புதர்
248. மண்டுதல் - நெருங்குதல்
249. அருவர் - தமிழர்
250. இ்றைஞ்சினர் - வணங்கினர்
251. உடன்றன - சினந்து எழுந்தன
252. முழை - மலைக்குகை
253. சீவன் – உயிர்
254. வையம் – உலகம்
255. சத்தியம் - உண்மை
256. சபதம் – சூளுரை
257. ஆனந்த தரிசனம் – மகிழ்வான காட்சி
258. மோகித்து – விரும்பி
259. நமன் – எமன்
260. நாணாமே – கூசாமல்
261. சித்தம் – உள்ளம்
262. உய்ம்மின் – ஈடேறுங்கள்
263. நம்பர் – அடியார்
264. ஈயில் - வழங்கினால்
265. பகராய் - தருவாய்
266. பராபரம் – மேலான பொருள்
267. ஆனந்த வெள்ளம்– இன்பப்பெருக்கு
268. அறுத்தவருக்கு – நீக்கியவர்க்கு
269. நிறை - மேன்மை
270. அழுக்காறு - பொறாமை
271. பொறை - பொறுமை
272. மதம் - கொள்கை
273. பொச்சாப்பு - சோர்வு
274. இகல் - பகை
275. மையல் - விருப்பம்
276. மன்னும் - நிலைபெற்ற
277. ஓர்ப்பு - ஆராய்ந்து தெளிதல்
278. கனகச்சுனை – பொன் வண்ண நீர்நிலை
279. இருதிணை – உயர்திணை, அஃறிணை
280. பூணாய் - அணிகலன்களைஅணிந்தவளே
281. சூழ்கலி – சூழ்ந்துள்ள அறியாமை இருள்
282. ஐம்பால் – ஆண்பால், பெண்பால்,பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
283. நன்செய் – நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் வி்ளையும் நிலம்
284. புன்செய் – குறைந்த நீரால் பயிர்கள் வி்ளையும் நிலம்
285. வள்ளைப்பாட்டு - நெல்குத்தும்பபோது பாடப்படும் பாடல்
286. காங்கேய நாடு - கொங்குமண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று
287. படமாடக்கோயில் - படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயில்.
9 TH- STD - சொற்பொருள்
288. குந்த – உட்கார
289. கந்தம் - மணம்
290. மிசை – மேல்
291. விசனம் - கவலை
292. மா - வண்டு
293. மது - தேன்
294. வாவி - பொய்கை
295. வளர் முதல் - நெற்பயிர்
296. தரளம் - முத்து
297. பணிலம் - சங்கு
298. வரம்பு - வரப்பு
299. கழை - கரும்பு
300. கா - சோலை
301. குழை - சிறு கிளை
302. அரும்பு - மலர் , மொட்டு
303. மாடு - பக்கம்
304. கோடு - குளக்கரை
305. ஆடும் - நீராடும்
306. மேதி - எருமை
307. துதைந்து எழும் - கலக்கி எழும்
308. சூடு - நெல் அரிக்கட்டு
309. சுரிவளை - சங்கு
310. வேரி - தேன்
311. பகடு - எருமைக்கடா
312. பாண்டில் - வட்டம்
313. சிமயம் - மலையுச்சி
314. நாளிகேரம் - தென்னை
315. நரந்தம் - நாரத்தை
316. கோளி - அரசமரம்
317. சாலம் - ஆச்சா மரம்
318. தமாலம் - பச்சிலை மரங்கள்
319. இரும்போந்து - பருத்த பனைமரம்
320. சந்து - சந்தன மரம்
321. நாகம் - நாகமரம்
322. காஞ்சி - ஆற்றுப்பூவரசு
323. யாக்கை - உடம்பு
324. புணரியோர் - தந்தவர்
325. புன்புலம் - புல்லிய நிலம்
326. தாட்கு - முயற்சி, ஆளுமை
327. சமயக் கணக்கர் - சமயத் தத்துவவாதிகள்
328. குழீஇ - ஒன்றுகூடி
329. தோம் - குற்றம்
330. கோட்டி - மன்றம்
331. பொலம் - பொன்
332. வேதிகை - திண்ணை
333. தூணம் - தூண்
334. தாமம் - மாலை
335. விலோதம் - துணியாலான கொடி
336. வசி - மழை
337. செற்றம் - சினம்
338. கலாம் - போர்
339. களர்நிலம் - பண்படாத நிலம்
340. நவிலல் - சொல்லல்
341. வையம் - உலகம்
342. மாக்கடல் - பெரிய கடல்
343. இயற்றுக - செய்க
344. மின்னாள் - ஒளிரமாட்டாள்
345. தணல் - நெருப்பு
346. தாழி - சமைக்கும் கலன்
347. அணித்து - அருகில்
348. தவிர்க்கஒணா - தவிர்க்க இயலாத
349. யாண்டும் - எப்பொழுதும்
350. மூவாது - முதுமை அடையாமல்
351. நாறுவ - முளைப்ப
352. தாவா - கெடாதிருத்தல்
353. மைவனம் - மலைநெல்
354. முருகியம் - குறிஞ்சிப்பறை
355. சிறை - இறகு
356. சாந்தம் - சந்தனம்
357. பூவை - நாகணவாய்ப் பறவை
358. பொலம் - அழகு
359. கடறு - காடு
360. பொலி - தானியக்குவியல்
361. உழை - ஒரு வகை மான்
362. வாய்வெரீஇ - சோர்வால் வாய் குழறுதல்
363. குருளை - குட்டி
364. இனைந்து - துன்புறுதல்
365. உயங்குதல் - வருந்துதல்
366. படிக்குஉற - நிலத்தில் விழ
367. கோடு - கொம்பு
368. கல் - மலை
369. முருகு - தேன், மணம், அழகு
370. மல்லல் - வளம்
371. செறு - வயல்
372. கரிக்குருத்து - யானைத்தந்தம்
373. போர் - வைக்கோற்போர்
374. புரைதப - குற்றமின்றி
375. தும்பி - ஒருவகை வண்டு
376. துவரை - பவளம்
377. மரை - தாமரை மலர்
378. விசும்பு - வானம்
379. மதியம் - நிலவு
380. தீபம் - விளக்கு
381. சதிர் - நடனம்
382. தாமம் - மாலை
383. தெங்கு - தேங்காய்
384. இசை - புகழ்
385. வருக்கை - பலாப்பழம்
386. நெற்றி - உச்சி
387. மால்வரை - பெரியமலை
388. மடுத்து - பாய்ந்து
389. கொழுநிதி - திரண்ட நிதி
390. மருப்பு - கொம்பு
391. வெறி - மணம்
392. கழனி - வயல்
393. செறி - சிறந்த
394. இரிய - ஓட
395. சூல் - கரு
396. அடிசில் - மசாறு
397. மடிவு - சோம்பல்
398. கொடியனார் - மகளிர்
399. நற்றவம் - பெருந்தவம்
400. வட்டம் - எல்லை
401. வெற்றம் - வெற்றி
402. அள்ளல் - சேறு
403. பழனம் - நீர் மிக்க வயல்
404. வெரீஇ - அஞ்சி
405. பார்ப்பு - குஞ்சு
406. நாவலோ - நாள் வாழ்க என்பது போன்ற வாழ்த்து
407. இசைத்தால் - ஆரவாரத்தோடு கூவுதல்
408. நந்து - சங்கு
409. கமுகு - பாக்கு
410. முத்தம் - முத்து
411. புரில் - மதில்
412. அனங்கு - தெய்வம்
413. சில்காற்று - தென்றல்
414. புழை - சாளரம்
415. மாகால் - பெருஙகாற்று
416. முந்நீர் - கடல்
417. பனை - முரசு
418. கயம் - நீர்நிலை
419. ஓவு - ஓவியம்
420. நியமம் - அஙகாடி
421. விண் - வானம்
422. ரவி - கதிரவன்
423. கமுகு - பாக்கு
424. அறம் - நற்செயல்
425. வெகுளி - சினம்
426. ஞானம் - அறிவு
427. விரதம் - மேற்பகொண்ட நன்னெறி
428. நசை - விருப்பம்
429. நல்கல் - வழங்குதல்
430. பிடி - பெண்யானை
431. வேழம் - ஆண்யானை
432. பொளிக்கும் - உரிக்கும்
433. ஆறு - வழி
434. மின்னாளை - மின்னலைப் போன்றவளை
435. கதலிகைக் கொடி - சிறு சிறு கொடியாகப் பல கொடிகள் கட்டியது
436. காழூன்று கொடி - கொம்புகளில் கட்டும் கொடி
437. நெருங்கு வளை - நெருங்குகின்ற சங்குகள்
438. கன்னி வாளை - இளமையான வாளைமீன்
439. பாடைமாக்கள் - பல மொழிபேசும் மக்கள்
440. பூஞ்சினை - பூக்களைஉடைய கிளை
441. யா - ஒரு வகை மரம்.பாலை நிலத்தில் வளர்வது
442. முக்குழல் - கொன்றை ,ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன குழல்கள்
443. துருத்தி - ஆற்றிடைக்குறை (ஆற்றின் நடுவே இருக்கும் மணல்திட்டு).
444. தள்ளா தோர் இவண் தள்ளாதோரே - குறை வில்லாது நீர் நிலை அமைப்பவர்கள் குறைவில்லாது புகழுடையவர்களாக விளங்குவார்கள்.
10 TH- STD - சொற்பொருள்
445. துய்ப்பது – கற்பது, தருதல்
446. மயலுறுத்து – மயங்கச்செய்
447. ப்ராண– ரஸம் – உயிர்வளி
448. லயத்துடன் - சீராக
449. நேமி - சக்கரம்
450. கோடு - மலை
451. தூஉய் - தூவி
452. விரிச்சி - நற்சொல்
453. சுவல் - தோள்
454. அருகுற – அருகில்
455. அசைஇ – இளைப்பாறி
456. அல்கி – தங்கி
457. கடும்பு – சுற்றம்
458. நரலும் – ஒலிக்கும்
459. ஆரி - அருமை
460. படுகர் – பள்ளம்
461. வயிரியம் – கூத்தர்
462. வேவை – வெந்தது
463. இறடி – தினை
464. பொம்மல் – சோறு
465. சுடினும் – சுட்டாலும்
466. மாளாத - தீராத
467. மாயம் – விளையாட்டு
468. விசும்பு – வானம்
469. ஊழி – யுகம்
470. ஊழ் – முறை
471. தண்பெயல் – குளிர்ந்த மழை
472. பீடு – சிறப்பு
473. ஈண்டி – செறிந்து திரண்டு
474. தார் – மாலை
475. முடி - தலை
476. முனிவு - சினம்
477. அகத்து உவகை - மனமகிழ்ச்சி
478. தமர் – உறவினர்
479. நீபவனம் – கடம்பவனம்
480. மீனவன் – பாண்டிய மன்னன்
481. நுவன்ற – சொல்லிய
482. என்னா – அசைச் சொல்
483. பண்டி - வயிறு
484. அசும்பிய - ஒளிவீசுகிற
485. அரைநாண் - இடையில் அணிவது
486. சுட்டி - நெற்றியில் அணிவது
487. சூழி - தலையில் அணிவது
488. சுண்ணம் – நறுமணப்பொடி
489. காருகர் – நெய்பவர் (சாலியர்)
490. தூசு – பட்டு
491. துகிர் – பவளம்
492. வெறுக்கை – செல்வம்
493. நொடை – விலை
494. பாசவர் – வெற்றிலை விற்போர்
495. மண்ணீட்டாளர் – சிற்பி
496. கிழி – துணி
497. சேக்கை – படுக்கை
498. யாக்கை – உடல்
499. பிணித்து – கட்டி
500. வாய்ந்த – பயனுள்ள
501. இளங்கூழ் – இளம்பயிர்
502. தயங்கி – அசைந்து
503. காய்ந்தேன் – வருந்தினேன்
504. கொம்பு – கிளை
505. புழை – துளை
506. கான் – காடு
507. தேம்ப – வாட
508. அசும்பு – நிலம்
509. உய்முறை – வாழும் வழி
510. ஓர்ந்து – நினைத்து
511. கடிந்து - விலக்கி
512. உவமணி – மணமலர்
513. படலை – மாலை
514. துணர் – மலர்கள்
515. நறுவீ - நறுமணமுடைய மலர்கள்
516. கொடுஞ்செலவு - விரைவாகச் செல்லுதல்
517. மேவலால் – பொருந்துதலால்,பெறுதலால்
518. ஓசுநர் – எண்ணெய் விற்போர்
519. ஆர்தருபு – வெள்ளத் தில் மூழ்கிக் கிடந்த
520. நனந்தலை உலகம் - அகன்ற உலகம்
521. குண்டலம், குழை- காதில் அணிவது
522. மண்ணுள் வினைஞர் – ஓவியர்
523. கேள்வியினான் – நூல் வல்லான்
524. கேண்மையினான்– நட்பினன்
525. சிலம்பு,கிணகிணி - காலில் அணிவது
526. முச்சி - தலையுச்சிக் கொண்டை
527. முகமன் – ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொற்கள்
528. கவரி – சாமரை ( கவரிமாவின் முடியில் செய்த விசிறியாகிய அரசச் சின்னம்
DOWNLOAD PDF :SIZE : LESS 1 MBPAGES : 9
No comments:
Post a Comment