Saturday, November 25, 2023

TODAY CURRENT AFFAIRS IN TAMIL 25.11.2023


 TODAY CURRENT AFFAIRS IN TAMIL 25.11.2023 


புதுச்சேரியில் ஆட்டோ சவாரிக்காக புதிய செயலி

புதுச்சேரியில் ஆட்டோ சவாரிக்காக புதிய செயலியை போக்குவரத்துத்துறை அறிமுகப்படுத்தவுள்ளது. ஒழுங்கற்றக் கட்டண நிர்ணயத்தால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழும் புகார்களைக் குறைக்க இந்த முயற்சியை மேற்கொள்வதாகப் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இந்த மொபைல் செயலியின் மூலம் ஒழுங்கான முறையில் கட்டணம் வசூலிக்கப்படுவதோடு ஆட்டோ ஓட்டுனர்களுக்குச் சமமான ஊதியம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி கேரளாவில் நடைமுறையில் உள்ள 'கேரளா சவாரி'யை ஒத்தது எனப் போக்குவரத்துத்துறை ஆணையர் எ.எஸ். சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

ரூ.5-ல் பயணம்: அதிரடி சலுகையை அறிவித்த சென்னை மெட்ரோ:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதன் நிறுவன நாளை கொண்டாடும் வகையில் சிறப்பு ஒரு நாள் சலுகையை அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 3 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), பேடிஎம், வாட்ஸ்அப் அல்லது ஃபோன்பே ஆகியவற்றைப் பயன்படுத்தி, ஒற்றை பயண இ-க்யூஆர் பயனச் சீட்டுகளை வாங்கும் பயணிகளுக்கு, ரூ.5 என்ற பயணக் கட்டண சலுகையை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

புகார் எண்:

போதைப்பொருள் மற்றும் மனமயக்க பொருள்களின் சட்ட விரோத விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்களை தெரிவிக்க தமிழ்நாடு காவல்துறை சார்பில் 10581 என்ற கட்டணமில்லா உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் எண்: 9498410581

மின்னஞ்சல் முகவரி: spnibcid@gmail.com

உலகளாவிய சர்க்கரைத் துறையை வழிநடத்த இந்தியா 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச சர்க்கரை அமைப்பின் (ISO) தலைவராகிறது:

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச சர்க்கரை அமைப்பின் (ஐ.எஸ்.ஓ) 63-வது கவுன்சில் கூட்டத்தில், 2024ம் ஆண்டிற்கான இந்த அமைப்பின் தலைவராக இந்தியா தேர்வுசெய்யப்பட்டது இது உலகளாவிய சர்க்கரைத் துறையை வழிநடத்துவதற்கும், வளர்ந்து வரும் அந்தஸ்தின் பிரதிபலிப்புக்கும் மிகப்பெரிய சாதனையாகும். 

உலகிலேயே சர்க்கரையின் மிகப்பெரிய நுகர்வோர் மற்றும் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக இந்தியா இருந்து வருகிறது.உலகளாவிய சர்க்கரை நுகர்வில் சுமார் 15 சதவீதத்தையும் உலகளாவிய சர்க்கரை உற்பத்தியில் சுமார் 20 சதவீதத்தையும்  இந்தியா கொண்டுள்ளது.

ISO (International Sugar Organisation) என்பது லண்டனை தளமாகக் கொண்ட 90 உறுப்பு நாடுகளைக் கொண்ட அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும் , இது 1968 இன் சர்வதேச சர்க்கரை ஒப்பந்தத்தால் நிறுவப்பட்டது

அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்குப் பிறகு எத்தனால் உற்பத்தியில் உலகின் 3-வது பெரிய நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு சதவீதம் 2019-20 ஆம் ஆண்டில் 5 சதவீதத்திலிருந்து 2022-23 ஆம் ஆண்டில் 12 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எத்தனால்  உற்பத்தி 173 கோடி லிட்டரிலிருந்து 500 கோடி லிட்டருக்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது.

விவசாயிகளுக்கு அதிக கரும்பு விலையை வழங்கும் நாடு என்ற தனிச்சிறப்பு இந்தியாவிற்கு உண்டு. 

போதைப் பொருள் இல்லாத இந்தியா (Nasha Mukt Bharat Abhiyaan) திட்டம்:

போதைப் பொருள் இல்லாத இந்தியா (Nasha Mukt Bharat Abhiyaan) திட்டத்தின் அமைச்சகம் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை ஆகும் . சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் போதைப்பொருள் தேவை குறைப்புக்கான தேசிய செயல் (NAPDDR) திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் நாடு முழுவதும் 500 க்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகளின் ஈடுபாட்டுடன் போதைப் பொருள் இல்லாத இந்தியா திட்டம் ((Nasha Mukt Bharat Abhiyaan)  செயல்படுகிறது.

கருணா பட்டு :

ஒடிசா மாநிலத்தில் எரி என்னும் பட்டுப்புழுக்களிலிருந்து பட்டு ஆடைகளை உருவாக்கும் கருணா பட்டு என்ற முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இம்முறையில் பட்டுபூச்சிகளை கொல்லாமல் கிடைக்கும் பட்டு இழைகளை பயன்படுத்தி இப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.

முழுமையான மேம்பாடுத்திற்கான அறிவின் செயல்திறன் மதிப்பீடு, மதிப்பாய்வு மற்றும் அறிவுசார் பகுப்பாய்வு (PARAKH) :

முழுமையான மேம்பாடுத்திற்கான அறிவின் செயல்திறன் மதிப்பீடு, மதிப்பாய்வு மற்றும் அறிவுசார் பகுப்பாய்வு (PARAKH)தொடங்கிய அமைப்பு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகும் . தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 ஐ செயல்படுத்துவதன் ஒரு பகுதியாக PARAKH தொடங்கப்பட்டுள்ளது. புதிய மதிப்பீட்டு முறைகள் மற்றும் சமீபத்திய ஆராய்ச்சி குறித்து பள்ளி வாரியங்களுக்கு ஆலோசனை வழங்கவும்,அவற்றுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தவும் ஒரு தர நிர்ணய அமைப்பை இது உருவாக்கியுள்ளது. மாநில கல்வி இயக்குநரகங்கள், மாநில, கல்வி வாரியங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் PARAKH பணியாற்றும், மற்றும் மதிப்பீட்டுத் துறையிலும் பணியாற்றும். தேசிய சாதனை கணக்கெடுப்பு (NAS) உள்ளிட்ட பெரிய அளவிலான மதிப்பீடுகளை நடத்துவதற்கு PARAKH பொறுப்பாகும்.

புவிசார் குறியீடு :

ஜம்மு & காஷ்மீரின் கிஷ்த்வார் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடானது (GI Tag) வழங்கப்பட்டுள்ளது.

‘வாட்டர் ஸ்மார்ட் கிட் பிரச்சாரம்’ :

மேகாலயாவில் இளைஞர் நீர் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக ‘வாட்டர் ஸ்மார்ட் கிட் பிரச்சாரம்’ தொடங்கப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தின் (JJM) கீழ் செயல்படும் இந்த முயற்சி நீர் சேமிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி குழந்தைகளுக்கு கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய ‘ஏ23ஏ’ பனிக்கட்டி:

வேடல் கடல் பகுதியில் சிக்கியிருந்த உலகின் மிகப் பெரிய ‘ஏ23ஏ’ பனிக்கட்டி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக நகரத் தொடங்கியுள்ளது. இது குறித்து ‘பிபிசி’ ஊடகம் தெரிவித்துள்ளதாவது: அன்டாா்டிகா கண்டத்தின் எல்லையிலிருந்து கடந்த 1986-ஆம் ஆண்டு உடைந்து நகரத் தொடங்கிய ஏ23ஏ பனிக்கட்டி, சிறிது காலத்திலேயே வேடல் கடல் பகுதியில் தரைதட்டி நின்றது. அதன் பிறகு அந்தப் பனிக் கட்டி மிகப் பெரிய பனித் தீவாக திகழ்ந்து வந்தது. சுமாா் 4,000 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட அந்தப் பனிக்கட்டி, உலகிலேயே மிகப் பெரியது ஆகும். தில்லியைப் போல் இரண்டரை மடங்குக்கும் மேல் பெரிய இந்தப் பனிக்கட்டி, 400 மீட்டா் உயரம் கொண்டது.

இந்திய நீர் தாக்க உச்சி மாநாடு (India Water Impact Summit) :

புதுதில்லியில் நடைபெறும் 8வது இந்திய நீர் தாக்க உச்சி மாநாட்டினை மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா-இந்தியா தலைமைத்துவ உரையாடல் (AILD):Australia-India Leadership Dialogue 

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் சமீபத்தில் 6 வது ஆண்டு ஆஸ்திரேலியா இந்தியா தலைமைத்துவ உரையாடல் 2023 நடைபெற்றது.ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையேயான முறைசாரா இராஜதந்திரத்திற்கான முதன்மை மன்றமாக ஆஸ்திரேலியா இந்தியா தலைமைத்துவ உரையாடல் உள்ளது.

இந்த உரையாடல் அதன் கருப்பொருளில் ஒன்றாக பரோசாவின் பாலங்களை/Bridges of Bharosa  (நம்பிக்கை) பயன்படுத்தியது.

இது ஆஸ்திரேலிய மற்றும் இந்திய தலைவர்களுக்கு இடையே பரஸ்பர புரிதலை ஆழமாக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பரந்த சூழலில் ஆஸ்திரேலியா-இந்தியா இருதரப்பு உறவுகளுக்கு இது வழி வகுக்கிறது.

3வது உலக இந்து மாநாடானது:

தாய்லாந்தின் பாங்காக்கில் தர்மம் வெற்றியின் உறைவிடம் என்ற கருப்பொருளில் 3வது உலக இந்து மாநாடானது நடைபெற உள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) 2005ன் வரம்பில் இருந்து கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழுவுக்கு (சிஇஆர்டி-இன்) மத்திய அரசு சமீபத்தில் விலக்கு அளித்தது :

Computer Emergency Response Team (CERT-In)

CERT-In , 2004 இல் நிறுவப்பட்டது, கணினி பாதுகாப்பு சம்பவங்கள் நிகழும்போது அவைகளுக்கு பதிலளிப்பதற்கான தேசிய நோடல் ஏஜென்சி ஆகும்.இது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது .

RTI சட்டத்தின் படி, RTI சட்டத்தின் அட்டவணை II இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

இதன் மூலம், IB, R&AW, அமலாக்க இயக்குநரகம், தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு போன்ற 27 உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் ஆர்டிஐயின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

அங்கீகரிக்கப்படாத அந்நிய செலாவணி வர்த்தக தளங்களை எச்சரிக்கைப் பட்டியல்-ரிசர்வ் வங்கி

19 நிறுவனங்களை அங்கீகரிக்கப்படாத அந்நிய செலாவணி வர்த்தக தளங்களை எச்சரிக்கைப் பட்டியலை ரிசர்வ் வங்கி இன்று புதுப்பித்ததால், அதன் மொத்த எண்ணிக்கையை தற்போது 75ஆக உயர்ந்தது.

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999-இன் கீழ் அந்நியச் செலாவணியைக் கையாளவோ அல்லது மின்னணு வர்த்தக தளங்கள் வழிகாட்டுதல்கள், 2018-இன் கீழ் அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகளுக்கான மின்னணு வர்த்தக தளத்தை இயக்கவோ அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின் பெயர்கள் அடங்கிய எச்சரிக்கை பட்டியல் வெளியானது

அட்மிரல் மார்க்கெட், பிளாக்புல், ஈஸி மார்க்கெட்ஸ், என்க்ளேவ் எஃப்எக்ஸ், ஃபினோவிஸ் ஃபின்டெக், எஃப்எக்ஸ் ஸ்மார்ட்புல், எஃப்எக்ஸ் ட்ரே மார்க்கெட், ஃபோர்க்ஸ்4யூ, குரோவிங் கேப்பிடல் செர்விக்ஸ் மற்றும் எச்எஃப் மார்க்கெட்ஸ் ஆகியவையும் மற்ற நிறுவனங்களான எச்.ஒய்.சி.எம். கேப்பிடல் மார்க்கெட், ஜே.ஜி.சி.எஃப்.எக்ஸ், பி.யு. பிரைம், ரியல் கோல்டு கேபிடல், டி.என்.எஃப்.எக்ஸ், யா மார்க்கெட்ஸ், மற்றும் கேட் டிரேட் ஆகியவை இதில் அடங்கும்.

கிருஷி சாகிஸ் (விவசாயி நண்பர்கள்):Krishi Sakhis (Farmer's Friends) :

கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் இணைந்து இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக கிரிஷி சாகிஸ் பயிற்சியை துவக்கியது.

கிரிஷி சாகிகள் சமூக விவசாய பராமரிப்பு சேவை வழங்குநர்கள் (CASPs-Community Agriculture Care Service Providers ).

அவர்கள் விரிவாக்க வல்லுநர்கள் மற்றும் அடிமட்ட அளவில் விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டவர்கள்.

கிரிஷி சாகிஸ் முயற்சி தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய கிராமப்புற வாழ்வாதாரத்தின் கீழ் தொடங்கப்பட்டது .

AUSTRAHIND-23 :

ராஜஸ்தானில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இணைந்து முதல் கூட்டு இராணுவப் பயிற்சி நடைபெற்றுள்ள நிலையில் 2வது கூட்டு இராணுவப் பயிற்சியானது AUSTRAHIND-23 என்னும் பெயரில்  நடத்தப்பட்டுள்ளது.

தாந்தலம்/டான்டாலம் என்ற அரிய உலோகம்:

பஞ்சாபின் ரோபார் நகரில் அமைந்துள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், சட்லஜ் ஆற்றில் தாந்தலம் என்ற அரிய உலோகம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

தாந்தலம் ஆனது மின்னணுவியல் மற்றும் குறைக்கடத்திகளில் பெருமளவில் பயன்படுத்தப் படுகிறது.

ஓர் அரிய உலோகமான தாந்தலம் என்பது மற்றும் சாம்பல் நிற, கனமான, மிகவும் கடினமான, மேலும் துரு எதிர்ப்புத் திறன் கொண்ட உலோகங்களில் ஒன்றாக அறியப் படுகிறது.

இதனை உடையாமல் நீட்டி, இழுத்து, மெல்லிய கம்பி அல்லது இழை போன்று மாற்றலாம்.

இது மிக அதிக உருகுநிலை கொண்டது.

தாந்தலம் ஆனது முதன்முதலில் ஆண்டர்ஸ் குஸ்டாஃப் எகன்பெர்க் என்ற சுவீடன் நாட்டு அறிவியலாளரால் 1802 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

தொந்தரவு செய்யாதீர் (Do Not Disturb App) என்ற செயலி:

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது (டிராய்) கைப்பேசிகளில் ஸ்பேம் மோசடி அழைப்புகளை தடுக்க தொந்தரவு செய்யாதீர் (Do Not Disturb App) என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.

டி20 போட்டிகளில் இந்திய அணி புதிய சாதனை:

டி20 போட்டிகளில் இந்திய அணி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி  (நவம்பர் 23) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான  போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.  இந்திய அணி துரத்திப் பிடித்த 209 ரன்களே இந்திய அணியால் வெற்றிகரமாக துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்காகும். இதற்கு முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 208 ரன்களை துரத்திப் பிடித்ததே இந்திய அணியால் துரத்திப் பிடிக்கப்பட்ட ரன்களே அதிகபட்ச இலக்காக இருந்தது.

டி20 போட்டிகளில் 200 மற்றும் அதற்கு மேற்பட்ட ரன்களை வெற்றிகரமாக அதிகமுறை துரத்திப் பிடித்த அணியாகவும் இந்தியா மாறியுள்ளது. இதுவரை 200-க்கும் அதிகமான ரன்களை இந்திய அணி 5 முறை வெற்றிகரமாக துரத்திப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் 4 முறை 200 மற்றும் அதற்கும் அதிகமான ரன்களை துரத்திப் பிடித்து தென்னாப்பிரிக்கா 2-வது இடத்தில் உள்ளது.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25மீ ரேப்பிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் :

கத்தாரில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலக கோப்பை ஃபைனல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25மீ ரேப்பிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் அனீஷ் பன்வாலா (Anish Bhanwala) வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25மீ ரேப்பிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமயை பெற்றுள்ளார்.


LIST OF IMPORTANT DAYS AND DATES IN NOVEMBER 2023 IN TAMIL 

நவம்பர் 25 - பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25 அன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் 1993 இல் நிறுவப்பட்டது.பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது பாலின அடிப்படையிலான வன்முறை என வரையறுக்கப்படுகிறது, இது பெண்களுக்கு உடல், பாலியல் அல்லது உளவியல் தீங்கு அல்லது அச்சுறுத்தல்கள் உட்பட துன்பத்தை ஏற்படுத்துகிறது.

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:

  1. SUMMITS AND CONFERENCES JUNE 2023 IN TAMIL
  2. SUMMITS AND CONFERENCES JULY 2023 IN TAMIL
  3. SUMMITSAND CONFERENCES AUGUST 2023 IN TAMIL
  4. SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023 IN TAMIL
  5. SUMMITS AND CONFERENCES - OCTOBER 2023 IN TAMIL

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: