TNPSC GK குறிப்புகள் தமிழ் நவம்பர் - 2023

TNPSC PAYILAGAM
By -
0



TNPSC GK குறிப்புகள் தமிழ் நவம்பர் - 2023

 

நீலக்கொடி கடற்கரை திட்டம் : 

தமிழகத்தில் நீலக்கொடி கடற்கரை திட்டத்தின் கொள்கைகளின்படி செங்கல்பட்டில் உள்ள கோவளம் கடற்கரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. நீலக் கொடி திட்டம் சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை (FEE) ஆகும் . இது டென்மார்க்கில் தலைமையகத்தைக் கொண்ட ஒரு அரசு சாரா அமைப்பால் நடத்தப்படுகிறது.

இந்தியா புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ், ஆசியா புக் ஆப் ரெக்காா்ட்ஸ் ஆகிய 2 சாதனை புத்தகங்களில் சிறுவா்கள்: 

ஈரோட்டைச் சோ்ந்த 7 சிறுவா்கள், 5 நாள்களில் 197 கி.மீ. தொலைவுக்கு குதிரை சவாரி செய்து சாதனை புத்தகங்களில் இடம்பிடித்தனா்இளைய தலைமுறையினரின் உடல் ஆரோக்கியம் மற்றும் தன்னம்பிக்கை மேம்பாடு என்ற தலைப்பில் ஈரோட்டைச் சோ்ந்த தனியாா் அமைப்பு 14 வயதுக்குள்பட்ட சிறுவா்களுக்கான குதிரை சவாரி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சி கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோபாலபுரத்தில் உள்ள கேரள மாநில எல்லையில் கடந்த மாதம் 27 -ஆம் தேதி காலை தொடங்கியது 

இதில், ஈரோட்டைச் சோ்ந்த நிலா (8), அத்விக் (9), வெண்பா (11), பவ்யாஸ்ரீ (13), ஆதித்ய கிருஷ்ணன் (12), மிருத்லா (9), ஷா்வன்(12) ஆகிய 7 போ் தனித்தனி குதிரைகளில் சவாரியைத் தொடங்கினா். 

கோபாலபுரத்தில் இருந்து தொடங்கிய குதிரை சவாரி நெகமம், பல்லடம், அவிநாசி :, விஜயமங்கலம் வழியாக ஈரோடு நசியனூா் சாலை செம்மாம்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது 

மொத்தம் 197 கி.மீ. தொலைவுக்கு குதிரை சவாரி செய்து இந்தியா புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ், ஆசியா புக் ஆப் ரெக்காா்ட்ஸ் ஆகிய 2 சாதனை புத்தகங்களில் சிறுவா்கள் இடம்பிடித்தனா்.

ஏரோஜெல் உறிஞ்சு:

கழிவுநீரிலிருந்து மாசுக்களை அகற்றுவதற்கான ஏரோஜெல் உறிஞ்சுகளை சென்னை ஐஐடி மற்றும் இஸ்ரேலின் டெல் அவிவ் நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ளன. 

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) மற்றும் இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து கழிவுநீரில் இருந்து மாசுபாட்டை அகற்றுவதற்கான ஏரோஜெல் உறிஞ்சியை உருவாக்கியுள்ளனர் .உலக மக்கள் தொகையில் 18 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்தியா, உலகளவிலான நீர்ஆதாரங்களில் வெறும் 4 சதவீத அளவுக்கு மட்டுமே இருப்பதால் பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளது. எனவேதான் நீர் மாசுபாட்டை சரிசெய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக நீர் சார்ந்த தொழில்களான மருந்து மற்றும் ஜவுளி உற்பத்தித் துறைகளில் இந்த முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜவுளி உற்பத்தித் துறையில் மட்டும் ஆண்டுதோறும் ஏறத்தாழ 10 லட்சம் டன் அளவுக்கு நச்சு செயற்கை சாயங்கள் வெளியேற்றப்படுகின்றன. நீர்வாழ் உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் இதனால் கடும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

முதல் பாரம்பரிய ரயில் :

ஏக்தா நகர்-அகமதபாத் வழியாக குஜராத் மாநிலத்தின் முதல் பாரம்பரிய ரயிலானது (First Heritage Train) தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியா-வங்கதேசம் இடையேயான புதிய ரயில் சேவை:

இந்தியா-வங்கதேசம் இடையேயான புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இன்று தொடங்கிவைத்தனர். 1.11.2023 பிரதமர் மோடியும், ஷேக் ஹசீனா ஆகியோர் காணொளிக் காட்சி மூலமாக இந்தியாவின் உதவியுடனான மூன்று வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தனர்

இதில், அகர்தலா-அகவுரா குறுக்கு எல்லை ரயில் இணைப்பு, குல்னா-மோங்லா துறைமுக ரயில் பாதை மற்றும் வங்கதேசத்தின் ராம்பாலில் உள்ள மைத்ரீ சூப்பர் அனல் மின் நிலையத்தின் அலகு 2 ஆகும்.

இந்தியாவின் அகர்தலாவிலிருந்து வங்கதேசத்தின் அகவுரா வரை 15 கி.மீதூரத்துக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 5 கி.மீ. தூரம் இந்தியாவிலும், 10 கி.மீ. தூரம் வங்கதேசத்திலும் ரயில் பாதை போடப்பட்டுள்ளது.

உலகளவிலான படைப்பூக்கமிக்க நகரங்கள் பட்டியல் 2023

யுனெஸ்கோ கிரியேட்டிவ் சிட்டிஸ் நெட்வொர்க் (UCCN) :

உலக நகரங்கள் தினத்தன்று (அக். 31 ) 55 படைப்பு நகரங்களின் புதிய பட்டியலை யுனெஸ்கோ வெளியிட்டுள்ளது , இதில் 2 இந்திய நகரங்களான கோழிக்கோடு மற்றும் குவாலியர் சேர்க்கப்பட்டுள்ளன.

அக்.31 உலக நகரங்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது, ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ

கேரளத்தில் உள்ள கோழிக்கோடும் மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரும் இந்தப் பட்டியலில் இணைகின்றன. கலாச்சாரம், படைபூக்கம் மற்றும் புத்தாக்க நகர மேம்பாட்டுக்கான அங்கீகாரமாக உலகம் முழுவதுமிருந்து 55 நகரங்களை இந்தப் பட்டியலில் புதிதாக சேர்த்துள்ளது, யுனெஸ்கோ.

·        KEY POINTS உலகளவிலான படைப்பூக்கமிக்க நகரங்கள் பட்டியல்

இந்தியாவில் சாலை விபத்துகள் அறிக்கை, 2022:

இந்தியாவில் சாலை விபத்துகள் குறித்த வருடாந்திர அறிக்கை சமீபத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது.

சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம்:

நாட்டிலேயே அதிக சாலை விபத்துகள் நிகழ்ந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் 64,105 சாலை விபத்துகள் பதிவாகி உள்ளனஉயிரிழப்புகளில் உத்தர பிரதேசம் முதலிடத்திலும், அடுத்தபடியாக தமிழகமும் உள்ளன

·        KEY POINTS : இந்தியாவில் சாலை விபத்துகள் அறிக்கை, 2022:

ஒரே நாடு ஒரு பதிவு தளம் :

மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கான ஒழுங்குமுறை அமைப்பான தேசிய மருத்துவ ஆணையம் (NMC), ஒரே நாடு, ஒரே பதிவுத் தளத்தைத் தொடங்க உள்ளது.

இது நகல், சிவப்பு நாடா ஆகியவற்றை அகற்றுவதையும், இந்தியாவில் பணிபுரியும் எந்த மருத்துவர் பற்றிய தகவலையும் பொதுமக்கள் அணுகுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த தளம் அனைத்து பயிற்சி மருத்துவர்களுக்கும் UIDகளை உருவாக்கும்.

கொசுக்களின் மாதிரியில் ஜிகா வைரஸ் :

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளபூர் மாவட்டத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட கொசுக்களின் மாதிரியில் ஜிகா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, மாநிலம் முழுவதும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. சித்லகட்டா தாலுகா, தலகயலபேட்டா கிராமத்தில் கடந்த செப்டம்பர் மாதம் சேகரிக்கப்பட்ட கொசுக்களின் மாதிரியில் ஜிகா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் சிக்கபள்ளபூர் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று வருகிறார்கள்

இந்த நிலையில், ஜிகா வைரஸ் தடுப்பு எச்சரிக்கைகள் மாநிலம் முழுவதும் விடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 68 இடங்களில், பல்வேறு வகைகளிலும் கொசுக்களின் மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில் ஜிகா வைரஸ் கடந்த ஒரு சில மாதங்களாகவே பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜிகா வைரஸ் என்பது கொசுக்களால் பரவும் வைரஸ் ஆகும், இது 1947 இல் உகாண்டாவில் ரீசஸ் மக்காக் குரங்கில் கண்டறியப்பட்டது, அதைத் தொடர்ந்து 1950 களில் பிற ஆப்பிரிக்க நாடுகளில் மனிதர்களுக்கு தொற்று மற்றும் நோய்க்கான சான்றுகள் உள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து ஒரு புதிய காளான் இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்:

திருவனந்தபுரத்தில் உள்ள பலோடேவில் உள்ள ஜவஹர்லால் நேரு வெப்பமண்டல தாவரவியல் தோட்டம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (JNTBGRI) வளாகத்தில் தேனீ-மஞ்சள் நிற 'தொப்பி கொண்ட ஒரு சிறிய, மென்மையான தோற்றமுள்ள காளான் ஒன்று புதிய இனமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 

முக்கிய குறிப்புகள்:

இந்த புதிய உயிரினம் இனத்தைச் சேர்ந்தது. கேண்டோலியோமைசஸ்

அதன் பைலஸ் அல்லது தொப்பியில் வெள்ளை கம்பளி அளவு போன்ற அமைப்புகளுக்காக இந்த இனத்தின் பெயர்

காண்டோலியோமைசஸ்அல்போஸ்குவாமோசஸ் 'அல்போஸ்குவாமோசஸ்என்று பெயரிடப்பட்டது.

மென்மையான கட்டமைப்பில் உள்ள இந்த காளான் சுமார் 58 மிமீ உயரத்திற்கு வளரும் தன்மை உடையது

உலக உணவு இந்தியா கண்காட்சி 2023 :

புதுதில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இரண்டாவதுஉலக உணவு இந்தியா 2023′ என்ற மாபெரும் உணவு கண்காட்சித் திருவிழாவைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03-11-2023) தொடங்கி வைத்தார். சுய உதவிக் குழுக்களை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ஆரம்பகட்ட மூலதன உதவிகளையும் அவர் வழங்கினார். விழாவில் அமைக்கப்பட்ட கண்காட்சியைப் பிரதமர் மோடி பார்வையிட்டார். இந்தியாவை உலகின் உணவுக் கூடைஎன்று காட்டுவதையும்2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கொண்டாடுவதையும் இந்த நிகழ்ச்சி முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

·        KEY POINTS : உலக உணவு இந்தியா கண்காட்சி 2023

இந்திய நன்கொடையாளர் பட்டியல் 2023:

ஹுருன் இந்தியா நிறுவனம் 2022 - 2023 நிதியாண்டில் அதிக நன்கொடை அளித்தவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தனி நபராகவும் குடும்பமாகவும் 119 பேர் ரூ.5 கோடிக்கும் மேல் பல்வேறு உதவிகளுக்காக நன்கொடைகளை வழங்கியுள்ளனர். இதில், ரூ.2042 கோடியை அளித்து நாட்டில் அதிக நன்கொடை அளித்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார். நிதியாண்டு கணக்கிற்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.5.6 கோடியை நன்கொடையாக அளித்திருக்கிறார்.

·        KEY POINTS : இந்திய நன்கொடையாளர் பட்டியல் 2023:

ஆந்திர மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு:

ஆந்திர மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புமக்களின் பொருளாதாரம், சமூகம், கல்வி, வாழ்வாதாரம் ஆகிய முதன்மையான தரவுகளைச் சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதா மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் ஸ்ரீனிவாச வேணுகோபால கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

சாணக்யா பாதுகாப்பு உரையாடல்-2023:

புதுடெல்லியில் உள்ள மானெக் ஷா மையத்தில் நடைபெற்ற சாணக்யா பாதுகாப்பு உரையாடல்-2023 நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் உரையாற்றினார். அப்போது அவர், உலகளாவிய பாதுகாப்பு மற்றும் அமைதிக்கான சமகாலச் சவால்களை பகுப்பாய்வு செய்வதற்கான இந்தச் சிந்தனை மன்றத்தின் கருத்தாக்கத்துக்காக ராணுவத்தைப் பாராட்டுகிறேன். தெற்காசியா மற்றும் இந்தோ-பசிபிக்கில் உள்ள பாதுகாப்பு சிக்கல்கள் குறித்த ஆழமான பகுப்பாய்வுகளுக்கு இது மிகவும் பொருத்தமான தளம்.

·        KEY POINTS : சாணக்கிய பாதுகாப்பு உரையாடல் 2023

டெல்லியில் காற்றின் தரம்:

AQI 400 மீறுவதால் டெல்லியில் காற்றின் தரம் 'கடுமையான' வகைக்கு சரிந்ததால், கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்ஷன் பிளான் (GRAP) 3வது கட்டம் இயக்கப்பட்டது.

·        KEY POINTS : காற்றுத் தரக் குறியீடு (AQI)

இந்திய உற்பத்தி கண்காட்சி:

கர்நாடகாவின் பெங்களூருவில் நடைபெற்ற மூன்று நாள் இந்திய உற்பத்தி கண்காட்சியை பாதுகாப்பு அமைச்சர் திறந்து வைத்தார். விண்வெளி மற்றும் பாதுகாப்பு பொறியியல், ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆளில்லா வான்கலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்கள் தொழில்நுட்பங்கள், உபகரணங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டைக் காண்பிப்பதற்கான ஒரு மதிப்புமிக்க தளமாக இந்தியா உற்பத்தி கண்காட்சி செயல்படுகிறது. இந்த நிகழ்ச்சி சிறந்த தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் பங்கேற்பாளர்களிடையே வணிக மற்றும் அறிவு பகிர்வுக்கான வாய்ப்புகளை வழங்குகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட் எடுத்த இந்தியர்:

முகமது சமி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தன்னுடைய 45வது விக்கெட்டினை வீழ்த்தி ஜாகிர்கான்  சாதனையை முறியடித்துள்ளார்

மேலும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட் எடுத்த இந்தியர் என்ற  சாதனையை புரிந்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்தார்:

உலகக் கோப்பையில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். ஒருநாள் போட்டிகளில் இது அவருடைய 49-வது சதமாகும். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்கள் விளாசி முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணியின் முன்னாள் வீரர் டெண்டுல்கரின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். சிறப்பாக விளையாடிய விராட் கோலி 119 பந்துகளில் சதம் விளாசினார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும்

சச்சின் டெண்டுல்கர் 452 போட்டிகளில் இந்த சாதனையை படைத்திருந்த நிலையில், தற்போது விராட் கோலி 277 போட்டிகளில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

எல்லை பாதுகாப்பு பணியில் தேனீக்கள்:

இந்திய எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்), மேற்கு வங்காளத்தில் உள்ள எல்லைப்புற பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு தேனிக்கூடுகளை அமைக்கவுள்ளனர். இந்தப் புதிய முயற்சியின் மூலமாக எல்லையைத் தாண்டி கால்நடை மற்றும் மற்ற பொருட்கள் கடத்தி வரப்படுவதைத் தடுக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் எல்லை பாதுகாப்பு படையினர்.

·        KEY POINTS: எல்லை பாதுகாப்பு பணியில் தேனீக்கள்

தலைமைத் தகவல் ஆணையராக முதல் தலித் நபர் பதவியேற்பு:

இந்தியாவின் தலைமைத் தகவல் ஆணையராக ஹீராலால் சமாரியா இன்று (நவம்பர் 6) பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹீராலால் சமாரியாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ராஜஸ்தானைச் சேர்ந்த ஹீராலால் சமாரியா மத்திய உரம் மற்றும் வேதிப்பொருட்கள் துறையின் இணைச் செயலாளராகவும், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மத்திய தகவல் ஆணையத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ள முதல் தலித் நபர் என்ற பெருமையை ஹீராலால் சமாரியா பெற்றுள்ளார். இதற்கு முன்பு இப்பதவியில் இருந்த ஒய்.கே.சின்ஹாவின் பதவிக்காலம் அக்டோபர் 3-ஆம் தேதியுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஒரு மாத காலமாக இப்பதவி காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய வகை கெக்கோ இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது:

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் புதிய வகை கெக்கோ இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிராவின் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி சங்கத்தைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானி அமித் சயீத், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் குழுவை வழிநடத்தினார், முன்னர் ஆவணப்படுத்தப்படாத உயிரினங்களுக்கு தனது தந்தை பேராசிரியர் ரஷீத் சயீத்தின் பெயரை Cnemaspis rashidi என்று பெயரிட்டுள்ளார்.

புதிய இனங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரை ஏசியன் ஜர்னல் ஆஃப் கன்சர்வேஷன் பயாலஜியில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது .

இதுவரை, 93 வகையான கெக்கோக்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன, இது 94 வது இனமாகும். புதிய இனம் ரஷித்தின் குள்ள கெக்கோ என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது இனத்தில் சிறியது. "அதன் மூக்கில் இருந்து வெளியேறுவதற்கு தோராயமாக இரண்டு அங்குல நீளம் உள்ளது".

பான்கோரியஸ் செபாஸ்டியானி-புதிய வகை:

பான்கோரியஸ் செபாஸ்டியானி என்ற புதிய வகை ஜம்பிங் சிலந்தி, கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள செந்தூர்னி வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இது பான்கோரியஸ் சைமன், 1902 மற்றும் சால்டிசிடே குடும்பத்தைச் சேர்ந்தது.

ஆசிய ஜம்பிங் சிலந்திகளின் பான்கோரியஸ் இனமானது தென்கிழக்கு ஆசியாவில் முதன்மையாக விநியோகிக்கப்படுகிறது.

இதுவரை இந்தியாவில் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளுக்கு மட்டுமே அதன் விநியோகம் இருந்தபோதிலும், புதிய இனங்கள் தெற்கிலிருந்து முதலில் பதிவாகியுள்ளன.

முதல் கல்வி மற்றும் திறன் கவுன்சில் கூட்டம்:

குஜராத்தின் காந்திநகரில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான முதல் கல்வி மற்றும் திறன் கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.

கிழக்கு இந்தியாவின் மிகப்பெறிய வண்ணத்துப்பூச்சிகள் பூங்கா :

ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சிக்கு அருகில் உள்ளது க்வான் பிர்சா உயிரியல் பூங்கா. அங்கு 20 ஏக்கர் பரப்பளவில் வண்ணத்துப்பூச்சிகளுக்கென தனியாக திறந்தவெளி பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா நவம்பர் 7 அன்று வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரான எல்.கியாங்க்ட் அவர்களால் பார்வையாளர்களுக்கு துவக்கிவைக்கப்பட்டது.

·        KEY POINT : கிழக்கு இந்தியாவின் மிகப்பெறிய வண்ணத்துப்பூச்சிகள் பூங்கா 

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீடு (SFSI) 2022-2023: 

நுகர்வோர் அதிகாரமளிக்கும் முயற்சிகளில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது, அதைத் தொடர்ந்து கேரளா மற்றும் மத்தியப் பிரதேசம் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன .இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீடு (SFSI) 2022-2023 வெளியிட்டது .

இது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்திறனை மதிப்பிடுகிறது.உணவு பரிசோதனை உள்கட்டமைப்பு பிரிவில், குஜராத் மற்றும் கேரளா முதலிடத்திலும், ஆந்திரா கடைசி இடத்தில் உள்ளதுஇணக்கப் பிரிவில் பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் அதிக மதிப்பெண்களைப் பெற்றன மற்றும் ஜார்க்கண்ட் மிகக் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றது. 

நீருக்காகப் பெண்கள், பெண்களுக்காக நீர் இயக்கம்” :

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கமும் புத்துயிரூட்டல் மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் இயக்கம் எனப்படும் அம்ருத் திட்டமும் இணைந்துநீருக்காகப் பெண்கள், பெண்களுக்காக நீர் இயக்கம்என்ற முற்போக்கான முன்முயற்சியை அறிமுகப்படுத்துகின்றன

நீர் நிர்வாகத்தில் பெண்களை இணைப்பதற்கான தளத்தை வழங்குவதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. வீட்டு நீர் மேலாண்மையில் பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். நீர் சுத்திகரிப்பு செயல்முறைகள் மற்றும் உள்கட்டமைப்பு பற்றிய தகவல்களை பெண்களுக்கு வழங்குவதன் மூலம், அவர்களின் திறனை மேம்படுத்துவதை வீட்டுவசதி அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது. துறைகளில் உள்ளடக்கம் மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதன் மூலம் பாலின சமத்துவத்தின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதை இந்த முன்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

செயற்கை மழை” :

இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) கான்பூரில் நச்சுக் காற்றில் அவதிப்படும் புது டெல்லி பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் அதன் அண்டைப் பகுதிகளுக்கு செயற்கை மழைமூலம் காற்று மாசு மற்றும் மாசுபடுத்திகள் அகற்றும் புத்தாக்க தீர்வை கண்டுள்ளது .உலகில் காற்று மாசுபாட்டில் முதலிடம் வகிக்கும் புது டெல்லி இந்த தீர்வு மூலம் காற்று மாசுபாடு குறைக்க உதவும் .

தேசிய விளையாட்டு போட்டி 2023 – கோவா

கோவிவாவில் நடைபெற்ற 37வது தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு 77 பதக்கங்களுடன் 10வது இடத்தை பிடித்துள்ளது.

மகாராஷ்டிரா அணி 228 பதக்கங்கள் ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப்பையும், முதலிடத்தையும் பிடித்துள்ளது.

·        KEY POINTS : தேசிய விளையாட்டு 2023 மாநில வாரியாக பதக்க எண்ணிக்கை

உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் வெளியீடு:

பிரபல கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவிரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. அதிகமான உயா்கல்வி நிறுவனங்களுடன் இந்தியா முதன்முறையாக சீனாவை பின்னக்குத் தள்ளி முன்னிலை பெற்றுள்ளது. உலக பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 100 தரவரிசையில் மொத்தம் ஏழு இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன

KEY POINTS : உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியல்  

இந்தியாவில் உள்ள நடன வடிவங்களின் பட்டியல் /List of Dance Forms in India - Folk & Classical Dances of All States 

இந்தியா அதன் வளமான கலாச்சார பாரம்பரியத்திற்காக அறியப்படுகிறது. பல்வகைமையே நாட்டின் அடையாளம். இந்திய நடனம் நமது கலாச்சாரத்தின் மிகவும் மதிக்கப்படும் அடையாளங்களில் ஒன்றாகும். இந்தியாவில், நடன வடிவங்களை பரவலாக 2 வகைகளாகப் பிரிக்கலாம்

1.பாரம்பரிய மற்றும் 2.நாட்டுப்புற நடன வடிவம்.

·        KEY POINTS : இந்தியாவில் உள்ள நடன வடிவங்களின் பட்டியல்

ஸ்மார்ட் சிட்டி தரவரிசை (Smart City Ranking):

திட்டங்கள் நிறைவு மற்றும் நிதி பயன்பாடு அடிப்படையில், ‛ஸ்மார்ட் சிட்டி ' தர வரிசை பட்டியலில் குஜராத்தில் சூரத் நகரம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தின் மதுரை நகரம் 8 வது இடத்தை பிடித்துள்ளது. முதல் 10 இடங்களில் வேறு எந்த தமிழக நகரங்களும் இடம் பிடிக்கவில்லை.

·        KEY POINTS : ஸ்மார்ட் சிட்டி தரவரிசை (Smart City Ranking)

ஒரு நபா் குழு பரிந்துரை:

தமிழகத்திலுள்ள கூா்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள், பாதுகாப்பு இல்லங்களின் செயல்பாடுகள் மற்றும் நிா்வாகத் திறன்களை மேம்படுத்த தமிழ்நாடு அரசால் ஒரு நபா் குழு கடந்த ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. உயா் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான, இந்தக் குழு தனது பணிகளை கடந்த மே 2-இல் தொடங்கியது. அவா் மாநிலத்தில் உள்ள கூா்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, 500 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கையைத் தயாரித்த கே.சந்துரு, அதனை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு..ஸ்டாலினிடம் வழங்கினாா்

·        KEY POINTS : ஒரு நபா் குழு பரிந்துரை:

புதிய தாவர இனங்கள்:

மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்கு முனையில் உள்ள பசுமையான காடுகளில் இருந்து இரண்டு புதிய தாவர இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய தாவரவியல் ஆய்வு (BSI) விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

புதிய இனங்கள்  Musseanda conferta  மற்றும்  Rungialongistachya  ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

·        KEY POINTS : புதிய தாவர இனங்கள்:Musseanda conferta மற்றும் Rungialongistachya

டைம் அவுட் முறையில் தனது விக்கெட்டினை பறிகொடுத்த முதல் சர்வதேச கிரிக்கெட் வீரர் :

இலங்கை அணியின் கிரிக்கெட் வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட் முறையில் தனது விக்கெட்டினை பறிகொடுத்த முதல் சர்வதேச கிரிக்கெட் வீரராகியுள்ளார்.

கிரிக்கெட் போட்டியில் ஒரு வீரர் ஆட்டமிழந்த பின் அடுத்த வீரர் அடுத்த 3 நிமிடங்களுக்கு அவரது முதல் பந்தினை சந்திருக்க வேண்டும். இல்லையெனில் டை அவுட் முறையில் தனது விக்கெட்டினை பறிகொடுப்பார்.

உலகக் கோப்பையில் அதிக வீரர்களை போல்டாக்கிய வீரர் என்ற சாதனை

உலகக் கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும்  போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷகிதியை போல்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பினார் மிட்செல் ஸ்டார்க். இந்த விக்கெட்டின் மூலம் உலகக் கோப்பையில் ஸ்டார்க் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். உலகக் கோப்பையில் அதிக வீரர்களை போல்டாக்கிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதுவரை 26 விக்கெட்டுகளை போல்டு மூலம் மிட்செல் ஸ்டார்க் கைப்பற்றியுள்ளார்.

மிட்செல் ஸ்டார்க் - 26 விக்கெட்டுகள் ,வாசிம் அக்ரம் - 25 விக்கெட்டுகள் ,லாசித் மலிங்கா - 18 விக்கெட்டுகள் ,முத்தையா முரளிதரன் - 17 விக்கெட்டுகள் , கிளன் மெக்ராத் - 15 விக்கெட்டுகள்

எலியின் மீது நடத்தப்பட்ட வயதைக் குறைக்கும் சோதனை:

வயதான எலியின் மீது நடத்தப்பட்ட வயதைக் குறைக்கும் சோதனை கிட்டத்திட்ட 70 சதவிகிதம் வெற்றி அடைந்துள்ளதாகஜிரோசயின்ஸ்’(புவி அறிவியல்) என்ற இதழில் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பது: “பன்றிகளின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாக்கள் மற்றும் நானோ துகள்களை எடுத்து வயதான எலிகளுக்கு செலுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது5’ எனப்படும் வயதைக் குறைக்கும் வயது எதிர்ப்பு சிகிச்சையானது கிட்டத்திட்ட 70 சதவிகிதம் வெற்றி அடைந்துள்ளது. எலியின் மரபணுவில் நம்ப முடியாத அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதயம், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளின் வயது பாதியாக குறைந்துள்ளது. இந்த சோதனை மனிதர்கள் மீது நடத்தப்பட்டால் 80 வயது முதியவரை 26 வயது இளைஞராக மாற்ற முடியும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் வெளியீடு:

பிரபல கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவிரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. அதிகமான உயா்கல்வி நிறுவனங்களுடன் இந்தியா முதன்முறையாக சீனாவை பின்னக்குத் தள்ளி முன்னிலை பெற்றுள்ளது. உலக பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 100 தரவரிசையில் மொத்தம் ஏழு இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

·        KEY POINTS : உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் 

பிகாரில் இட ஒதுக்கீட்டு வரம்பை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தும் மசோதா:

பிகார் சட்டப்பேரவையில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பிகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை  வெளியிட்டுப் பேசிய முதல்வர் நிதீஷ்குமார், மாநிலத்தில் இட ஒதுக்கீட்டு வரம்பை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். உயர்சாதி வகுப்புகளுக்கு வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு சேர்த்து 75% ஆக உயர்த்தும் முடிவை முன்வைத்தார்.

பிகாரில் இட ஒதுக்கீட்டு வரம்பை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தும் மசோதா சட்டப்பேரவையில் 09.11.2023 தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து பிகார் மாநிலத்தில் உயர்சாதியினருக்கான இட ஒதுக்கீடு 10% சேர்த்து தற்போது இட ஒதுக்கீடு 75% ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரளய் ஏவுகணை

350 கி.மீ முதல் 500 கிமீ தொலைவில் தரையில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் பிரளய் ஏவுகணையை (Pralay Missile) வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

இந்த ஏவுகணையானது 500 கிலோ முதல் 1000 கிலோ எடை வரை எடையுள்ள குண்டுகளை சுமந்து செல்லும் தன்மை உடையது.

பி.பாலசுப்பிரமணியன் மேனன்-கின்னஸ் சாதனை

கேரளா, பாலக்கோட்டிலுள்ள பி.பாலசுப்பிரமணியன் மேனன் 73 ஆண்டுகள், 60 நாட்களாக வழக்கறிராக பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

1950-முதல் தன் பணியை தொடங்கியுள்ளார்

பெயர் மாற்றம்

உத்திர பிரதேசத்திலுள்ள அலிகர் மாவட்டத்தின் பெயரை ஹரிகர் என மாற்ற செய்ய நகரசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியுள்ளது.

நெல் ரகம் அறிமுகம்

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனமானது (IARI) அதிக மகசூல் தரும் குறுகிய கால நெல் ரகமான பூசா-2090 (PUSA-2090)-வை அறிமுகம் செய்துள்ளது.

01 ஏப்ரல் 1905-ல் IARI (Indian Agricultural Research Institute) உருவாக்கப்பட்டது.

பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரிட்டன் கட்டடப் பொறியாளளர் :

பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரிட்டன் கட்டடப் பொறியாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனுஷா ஷா (Anusha Shah) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உலகின் முதல் சிக்கன்குனியா தடுப்பூசி:

உலகின் முதல் சிக்கன்குனியா தடுப்பூசியான Ixchiq தடுப்பூசிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

மிகா ரோபா

மனிதனை போன்று செயல்படும் செயற்கை நுண்ணறிவு ரோபாவான மிகா (MIKA)-வினை  தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி தடை

இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் அனைவரையும் நீக்கம் செய்யும் தீர்மானத்தினை இலங்கை அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளதால் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசி தடை விதித்துள்ளது.

கிரிக்கெட் விதியை மீறி இலங்கை அரசு மீறியுள்ளதால் இந்த நடவடிக்கையை ஐசிசி (ICC) எடுத்துள்ளது.

ஏர் இந்தியா:AI விர்ச்சுவல் ஏஜென்ட்

ஒரு நாளில் 6,000 கேள்விகளுக்கு நான்கு மொழியில் பதிலளிக்கும் வகையில் AI விர்ச்சுவல் ஏஜென்ட்டை ஏர் இந்தியா நிர்வாகம் பணி அமர்த்தியுள்ளது.

உலகின் முதல் AI விர்ச்சுவல் ஏஜென்ட்டான இதற்கு மகாராஜா என பெயரிடப்பட்டுள்ளது

கின்னஸ் சாதனை:

தீபாவளி பண்டிகைக்காக 22 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் கின்னஸ் சாதனை சாதனையானது படைக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி சாதனை:

ஆப்கானிஸ்தான் அணியாது ஒரு உலக கோப்பை தொடரில் சுழற்பந்துவீச்சாளர்கள் கொண்டு 268.5 ஓவர்கள் பந்து வீசி சாதனை படைத்துள்ளது. 

கங்கா தேவி

இமாச்சலபிரதேச மாநிலத்தின் மூத்த வாக்களாராக கருதப்படும் கங்கா தேவி (104) காலமானார்.

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் - முதல் இந்திய வீராங்கனை:

முன்னாள் இந்திய மகளிா் அணியின் கேப்டன் டயானா எடுல்ஜி, அதிரடி தொடக்க பேட்டா் வீரேந்திர சேவாக், இலங்கை ஜாம்பவான் அரவிந்த டி சில்வா உள்ளிட்டோா் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

முதல் இந்திய வீராங்கனை: இந்நிலையில், இந்திய முன்னாள் கேப்டனும், பௌலா், நிா்வாகி என்ற சிறப்புகளைப் பெற்றுள்ள டயானா எடுல்ஜி (67) ஹால் ஆஃப் ஃபேமில் சோ்க்கப்பட்டுள்ள முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளாா்

வீரேந்திர சேவாக் (45) : அதிரடி பேட்டரான சேவாக், 1999 முதல் 2013 வரை 23 டெஸ்ட் சதங்களை விளாசியுள்ளாா். 104 டெஸ்ட்களில் 8586 ரன்களையும், 400 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளாா். 251 ஒருநாள் ஆட்டங்களில் 8273 ரன்களை விளாசி, 96 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளாா். மேலும் 2011 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல காரணமாக இருந்தாா். 19 டி20 ஆட்டங்களில் 394 ரன்களை விளாசி உள்ளாா்

அரவிந்த டி சில்வா (58) : 1996 உலகக் கோப்பை வென்ற இலங்கை அணியில் இடம் பெற்றிருந்த அரவிந்த டி சில்வா, 1984-2000 காலகட்டத்தில் 20 டெஸ்ட் சதங்களையும், 11 ஒருநாள் சதங்களையும் விளாசியுள்ளாா். 1996 இறுதி ஆட்டத்தில் ஆஸி.க்கு எதிராக அரவிந்த டி சில்வா அடித்த 107 ரன்கள் கோப்பை வெல்ல உதவியது. 93 டெஸ்ட்களில் 6361ரன்களையும், 308 ஒருநாள் ஆட்டங்களில் 9284 ரன்களையும் விளாசியுள்ளாா்.

ஸ்மார்ட் சிட்டி தரவரிசை (Smart City Ranking):

ஸ்மார்ட் சிட்டி தரவரிசை (Smart City Ranking) பட்டியலில் மதுரை 8வது இடத்தினை பிடித்துள்ளது.

முதல் மூன்று இடங்கள் முறையே சூரத் (குஜராத்), ஆக்ரா (உத்திரப்பிரதேசம்), அகமதாபாத் (குஜராத்) ஆகியன பிடித்துள்ளன.

·        KEY POINTS : ஸ்மார்ட் சிட்டி தரவரிசை (Smart City Ranking):

சம்பூர்ன் குறியீடு அறிமுகம்

இந்திய MSME துறையின் செயல்திறன் பற்றிய நிகழ்நேர தகவலை வழங்கும் சம்பூரன் குறியீட்டை இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) மற்றும் ஜோக்காட்டா (Jocata) இணைந்து அறிமுகம் செய்துள்ளன.

மின்னணு ஆயுட்கால சான்றிதழ் இயக்கம் 2.0:

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை நாடு முழுவதும் மின்னணு ஆயுட்கால சான்றிதழ் இயக்கம் 2.0- 2023, நவம்பர் 1 முதல் 30 வரை நடத்துகிறது நாடு தழுவிய மின்னணு ஆயுட்கால சான்றிதழ் இயக்கம் 2.0 இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 100 நகரங்களில் 500 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புவிசார் குறியீடு:

இமயமலை வனப்பகுதியில் செழித்து வளரும் ஒரு தாவரத்தின் இலைகளிலிருந்து வடிவமைக்கப்பட்ட உத்தராகாண்ட் மாநிலத்தின் பெரிநாக் தேயிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது . 

சின்னம்மை தடுப்பூசி:

பிரிட்டன் அரசு சின்னம்மை தடுப்பூசிகளை (Smallpox vaccine) பொதுமருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு செலுத்த நோய்த் தடுப்புக்கான நிபுணர்கள் கூட்டுக் குழுவிற்கு பரிந்துரை அளித்துள்ளது.

குழந்தைகளின் ஆதார் பதிவினை முழுவதுமாக பதிவு செய்த முதல் மாவட்டம் :

கேரளாவின் வயநாடு மாவட்டமானது மூலம் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் ஆதார் பதிவினை முழுவதுமாக பதிவு செய்த முதல் மாவட்டமாக மாறியுள்ளது.5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பால் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது.

கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதி :

எண்ணெய் திமிங்கலங்களுக்காக உலகின் முதல் கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதியை டொமினிகா நாடானது உருவாக்கியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதமடித்த வீரர் :

நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விராட்கோலி தனது 50வது சதத்தை பதிவு செய்து சச்சின் டெண்டுல்கர் சாதனையை (49) முறியடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதமடித்த வீரர் என்ற பெருமையையும்படைத்துள்ளார்.

முகமதுசமி 7 விக்கெட்கள் வீழ்த்தி ஒரு இன்னிங்ஸ்லில் அதிக விக்கெட் வீழ்த்திய நெக்ரா (6 விக்கெட்) சாதனையை முறியடித்துள்ளார்.  

தமிழக தொழில் துறைகளில் 43% பெண்கள்

இந்திய தொழிலாளர் அமைச்சக (2019-20) ஆய்வின் மூலம் தமிழக தொழில் துறைகளில் 43% பெண்கள் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுஇந்தியாவில் தொழில்துறைகளில் பணிபுரியும் 15.8 லட்சம் பெண்களில் 6.79 லட்சம் அல்லது 43% தமிழ்நாட்டில் உள்ளனர்

உண்மையில், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு (72 சதவீதம்) பேர் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய நான்கு தென் மாநிலங்களில் பணிபுரிகின்றனர்

உற்பத்தித் துறையில் பணிபுரிபவர்களில் பாலின சமநிலையைக் கொண்ட ஒரே மாநிலம் மணிப்பூர். 2019-20ல் மாநிலத்தில் பெண் தொழிலாளர்களின் பங்கு 50.8 சதவீதமாக இருந்தது. மணிப்பூரைத் தொடர்ந்து கேரளா (45.5 சதவீதம்), கர்நாடகா (41.8 சதவீதம்) மற்றும் தமிழ்நாடு (40.4 சதவீதம்) உள்ளன,” 

பார்டன் வங்கி:Bartan Bank

ஒடிசாவின் நுவாபாடா மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்து சமீபத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்க பார்டன் வங்கியை அறிமுகப்படுத்தியது.

சமூக நிகழ்ச்சிகள் மற்றும் சமூகக் கூட்டங்களின் போது ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக எஃகு பாத்திரங்களின் களஞ்சியமாக பார்டன் வங்கி செயல்படும் . 

நெஸ்ட் :

இந்திய பசுமைக் கட்டிடக் கவுன்சிலானது நிலையான வீட்டு வசதிக்கான நெஸ்ட் என்ற புதிய முயற்சியை உருவாக்கியுள்ளது. 

4வது கப்பலான அம்னி-யை அறிமுகம் :

இந்திய கடற்படையானது தமிழ்நாடு காட்டுப்பள்ளியிலிருந்து நீர்மூழ்கி எதிர்ப்பு போர் ஷாலோ வாட்டர் கிராஃப்ட் (ASWSWC) திட்டத்தின் 4வது கப்பலான அம்னி-யை அறிமுகம் செய்துள்ளது. 

தக்ஷின்சிறப்பு மையம்:

உலகாளவிய தெற்கு நோக்கிய நாடுகளின் சிறப்பு மையமான தக்ஷின் (DAKSHIN) மையத்தை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.தெற்கு நோக்கிய நாடுகள் அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, சீனா, பிரேசில் நாடுகள் இடம் பெற்றுள்ளன. 

அரிவாள் செல் நோய்க்கான( Sickle Cell Disease )மரபணு சிகிச்சை

அரிவாள் உயிரணு நோய்க்கான உலகின் முதல் மரபணு சிகிச்சையான “ காஸ்கேவிசமீபத்தில் பிரிட்டனில் அங்கீகரிக்கப்பட்டது.இது Vertex Pharmaceuticals (Europe) Ltd. மற்றும் CRISPR தெரபியூட்டிக்ஸ் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது. 

AI சாட்போட் Bard:

கூகுள் நிறுவனமானது மாணவர்கள் மேம்பட்ட ஆன்லைன் பாதுகாப்புடன் கற்றல் அனுபவத்தை மேற்கொள்ள உரையாடல் சார்ந்த செயற்கை நுண்ணறிவுக் கருவியான AI சாட்போட் Bard-  அறிமுகம் செய்துள்ளது. 

கவ்ரோ டோமா 360:Kavro Doma 360

இது கான்பூரை தளமாகக் கொண்ட MKU லிமிடெட் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட உலக-1 ஸ்டம்ப் துப்பாக்கி பாதுகாப்பு பாலிஸ்டிக் ஹெல்மெட்  (World-1st Rifle Protection Ballistic Helmet) ஆகும்

இது AK-47 MSC, M80 NATO BALL மற்றும் M193 துப்பாக்கி தோட்டாக்கள் போன்ற அச்சுறுத்தல்களுக்கு எதிராக தலையின் அனைத்து 5 மண்டலங்களிலும்(முன், பின், இடது, வலது மற்றும் கிரீடம்சீரான பாதுகாப்பை வழங்குகிறது. 

ஹலோ நாரியல் (Hello Nariyal)– அமைப்பு மையம்:

தென்னை அறுவடை மற்றும் தாவர மேலாண்மை நடவடிக்கையை மேற்கொள்ள தென்னை வளர்ச்சி வாரியமானது ஹலோ நாரியல் அழைப்பு மையத்தினை உருவாக்கியுள்ளது. 

இந்தியாயூனிகார்ன் தரவரிசை:

72 யூனிகார்ன் நிறுவனங்களுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது, மொத்த மதிப்பு $195.75 பில்லியன் ஆகும். ஜர்னலிஸ்டிக் ஆர்க் ஆராய்ச்சியின் படி, நாட்டின் யூனிகார்ன்கள் மொத்த உலகளாவிய யூனிகார்ன் மதிப்பீட்டில் கணிசமான 5 சதவீத பங்களிப்பைச் செய்கின்றன. உலகளாவிய தரவரிசையில் தோன்றிய முதல் இந்திய நிறுவனம் BYJU ஆகும், இது $11.50 பில்லியன் மதிப்பீட்டில் 36வது இடத்தில் உள்ளது. 

தமிழகத்தின் பொருளாதாரம்

தமிழகத்தின் பொருளாதாரத்தை வரும் 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலராக உயர்த்த தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. 

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான இணையதளம்

மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை இணையதளம் வழியாகப் பெற  புதிய இணைய முகவரியான www.mathisandhai.com-யினை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்துள்ளார்.

தமிழக அரசு செயல்படுத்தும் மகளிர் மேம்பாட்டுத்திட்டங்களை அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாத மாத இதழான முற்றம் வெளியிடப்பட்டுள்ளது. 

மிஸ் யுனிவர்ஸ்:

நிகரகுவா நாட்டினைச் சேர்ந்த ஸெய்னனிஸ் பாலசியோஸ் (Nicaragua’s Shenice) 2023-ம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை (Miss Universe) வென்றுள்ளார்.

இவர் நிகரகுவா நாட்டின் முதல் மிஸ்யுனவர்ஸ் ஆவார் 

உலகக் கோப்பை கனவு அணி-ஐசிசி 

உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் உள்ளடங்கிய கனவு அணியை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

ஐசிசி கனவு அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். விராட் கோலி, கே.எல்.ராகுல், ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி ஆகிய 5 இந்திய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். மேலும், ஆஸ்திரேலியா மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா, தென்னாப்பிரிக்கா குயிண்டன் டி காக், ஜெரால்ட் கோட்ஸீ, நியூசிலாந்து டேரில் மிட்செல், இலங்கை தில்ஷன் மதுஷங்க ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். 

ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை 2023 :Player of the Tournament in World Cup 2023

விராட் கோஹ்லி தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை 2023 போட்டியின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். 11 போட்டிகளில் 765 ரன்கள் குவித்து சாதனை படைத்த கோஹ்லி, 2003-ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். சராசரியாக 95.62 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 90.31 உடன், அரையிறுதியில் நியூசிலாந்திற்கு எதிரான முக்கியமான ஒரு சதம் உட்பட மூன்று சதங்களை அடித்தார் 

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா 6-ஆவது முறையாக சாம்பியன்

அகமதாபாதில் நடைபெற்ற 13-ஆவது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்று6-ஆவது முறையாக சாம்பியன் கோப்பையை வென்றது. 

பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பெங்களூரு முதலிடத்திலும், மும்பை இரண்டாவது இடத்திலும் உள்ளது

இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்அப்கள் பெங்களூருவில் உள்ளன, அதைத் தொடர்ந்து மும்பை மற்றும் டெல்லி உள்ளன.

பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் 50 லட்சம் ரூபாய் மானியம் வழங்கிய முதல் மாநிலம் கர்நாடகா.

இந்தியாவில் தற்போது 14 பெண்கள் தலைமையிலான யூனிகார்ன்கள் உள்ளன, பெங்களூரில் உள்ள நியோபேங்க் ஓபன் 100வது யூனிகார்ன் ஆகும். 

மீரா முராட்டி: OpenAI இன் 34 வயதான இடைக்கால CEO:

சாம் ஆல்ட்மேன் திடீரென நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஓபன்ஏஐ இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக மீரா முராட்டி பொறுப்பேற்றார்.

மீரா முராட்டிஅல்பேனியாவில் பிறந்து கனடாவில் வளர்ந்தவர்.

2018 இல் OpenAI இல் இணைந்த மீரா முராட்டி ஆரம்பத்தில் சூப்பர் கம்ப்யூட்டிங் உத்தி மற்றும் ஆராய்ச்சி குழு நிர்வாகத்தில் பணியாற்றினார் 

ஞானோதயா எக்ஸ்பிரஸ்- காலேஜ் ஆன் வீல்ஸ்மனோஜ் சின்ஹா ​​கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில், லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, கத்ராவில் உள்ள வைஷ்ணோ தேவி ரயில் நிலையத்தில் இருந்து, "ஞானோதயா எக்ஸ்பிரஸ்-கல்லூரி ஆன் வீல்ஸ்" என்ற மொபைல் கல்வி முயற்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

தமிழகத்தில் நிலஅளவை மேற்கொள்ள புதிய இணையதளம் :

தமிழகத்தில் நிலஅளவை மேற்கொள்ள இணையதளம் விண்ணப்பிக்க புதிய இணையதள வசதியானாது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இதற்கான http://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்தினை தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.  

கேலக்ஸி லீடா்சரக்கு கப்பலை கடத்தினா் :

இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டைச் சோ்ந்த கேலக்ஸி லீடா்’ சரக்கு கப்பலை செங்கடலில் யேமன் நாட்டின் ஹூதி ஆயுதப் படையினா் 19.11.2023 கடத்தினா். அந்தக் கப்பலில் பணியிலிருந்த 25 மாலுமிகள் பிணைக் கைதிகளாக சிறைபிடித்துச் சென்றனா்.

இஸ்ரேல் நாட்டின் முக்கிய செல்வந்தரான அப்ரஹம் ரமி உங்கருக்குச் சொந்தமான இந்தக் கப்பலை ஜப்பானிய நிறுவனமான என்ஒய்கே லைன் இயக்கி வருகிறது 

08 x ஏவுகணை மற்றும் வெடிமருந்து பார்ஜ் திட்டத்தின் நான்காவது படகு:

இந்திய கடற்படைக்காக விசாகப்பட்டினம் MSME ஷிப்யார்ட், M/s SECON Engineering Projects Pvt Ltd (SEPPL)   கட்டிய 08 x ஏவுகணை மற்றும் வெடிமருந்து பார்ஜ் திட்டத்தின் நான்காவது படகு'Missile Cum Ammunition Barge , LSAM 10 (Yard 78) ' தொடங்கப்பட்டது . , ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரியில் உள்ள குட்டேனாதேவியில் 20 நவம்பர் 2023 அன்று மேற்கொள்ளப்பட்டது  வெளியீட்டு விழாவிற்கு சிஆர்ஓ(கிழக்கு) சிஎம்டி சண்முகம் சபேசன் தலைமை வகித்தார் .  

08 x ஏவுகணை மற்றும் வெடிமருந்து பார்ஜ் கட்டுவதற்கான ஒப்பந்தம் MoD மற்றும் M/s SECON Engineering Projects Pvt Ltd, Visakhapatnam இடையே 19 பிப்ரவரி 21 அன்று கையெழுத்தானது 

இந்தியாவில் மக்கள் தொகை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதல் இடம் :

இந்தியாவில் மக்கள் தொகை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

காலணி, தோல் பொருள்கள் உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடத்தில் தமிழ்நாடு :

நாட்டிலேயே காலணி மற்றும் தோல் பொருள்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வருவதாக தொழில் மற்றும் முதலீட்டுத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருள்கள் கொள்கை 2022 வெளியிடப்பட்டதில் இருந்து ரூ.2,250 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, ரூ.1000 கோடி அளவில் தயாராகி வருகின்றன. கூடுதலாக தோல் மற்றும் தோல் அல்லாத காலணி ஏற்றுமதியில் 48 சதவிகிதம் என்ற பெரும் பங்கைக் கொண்டு நாட்டிலேயே, தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. 

கேரள மாநிலத்தின் மகளிர் கிரிக்கெட் அணியின் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் :

கேரள மாநிலத்தின் மகளிர் கிரிக்கெட் அணியின் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கேரள கிரிக்கெட் சங்கம்(கேசிஏ) நிகழ்வில், மகளிர் அணிக்கான விளம்பர தூதராக கீர்த்தி சுரேஷ் பொறுப்பேற்றுக் கொண்டார். 

உலகளாவிய வர்த்தக மாநாட்டின் மேற்குவங்க விளம்பர தூதராக :

இந்திய கிரிக்கெட் அணி கேப்டனும், வீரருமான சவுரவங் கங்கூலியை உலகளாவிய வர்த்தக மாநாட்டின் மேற்குவங்க விளம்பர தூதராக மேற்கு வங்க முதல்வர் மம்தாபாரன்ஜி நியமனம் செய்துள்ளார். 

தமிழக முன்னாள் ஆளுநர் ஃபாத்திமா பீவி  காலமானார்:

தமிழக முன்னாள் ஆளுநர் ஃபாத்திமா பீவி உடல்நலக் குறைவால் 23.11.2023 காலமானார். அவருக்கு வயது 96. காலமான ஃபாத்திமா பீவிஉச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையைப் பெற்றவர். இவர் கடந்த 1997 முதல் 2001 வரை தமிழக ஆளுநராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும், நீதித்துறையில் பெண்களின் முன்னேற்றத்துக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் ஃபாத்திமா பீவி. நீதித்துறையில் உயர் பதவியை அடைந்து, அதில் தனது தனி முத்திரையையும் பதித்தவர். அதோடு, தமிழக ஆளுநராக பதவி வகித்து, சிறப்பான பணியை ஆற்றினார்

கேரள மாநிலம் பண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் ஃபாத்திமா பீவி. பத்தனம்திட்டாவில் பள்ளிப்படிப்பை முடித்தவர், திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் அறிவியலில் பட்டம் பெற்றார். 

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு ஏப்ரல்-செப்டம்பரில் 2023 :

தொழில் மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 2,048 கோடி டாலராக உள்ளது. இது, கடந்த 2022-23-ஆம் நிதியாண்டின் முதல் 6 மாதங்களோடு ஒப்பிடுகையில் 24 சதவீதம் குறைவாகும். அப்போது இந்தியாவில் 2,691 கோடி டாலா் அந்நிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மதிப்பீட்டு அரையாண்டில் அந்நிய நேரடி முதலீடுகளை ஈா்த்ததில் மகாராஷ்டிரம் முதலிடம் பிடித்தது.

KEY POINTS Foreign Direct Investment in India April-September 2023 

பெங்களூரில் முதன்முறையாக கம்பளா போட்டி :

துளுநாடு எனப்படும் காசா்கோடு முதல் மரவந்தே வரை கடற்கரை பகுதியில் நடத்தப்பட்டு வந்த கம்பளா (எருமை மாடு விரட்டும்) போட்டி, முதன்முறையாக பெங்களூரில் நவ. 25, 26-ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது

கா்நாடகத்தின் கடலோரப் பகுதிகளில் துளு மொழியைப் பேசும் மக்கள் வாழும் காசா்கோடு முதல் மரவந்தே கடற்கரை பகுதி வரை துளுநாடு என்று அழைப்பது வழக்கம். அப்பகுதிகளில், வயற்காட்டில் சேற்றில் எருமை மாடுகளை விரட்டும்கம்பளாபோட்டி மிகவும் பிரபலம். 200 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வரும் இப்போட்டிக்கு வனவிலங்கு துன்புறுத்தல் தடைச்சட்டத்தின் கீழ் சில ஆண்டுகளுக்கு முன் தடைவிதிக்கப்பட்டது. அதன்பிறகு, மத்திய அரசு அளித்த விலக்கின் காரணமாக, இப்போட்டியை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம்: இந்தியா்கள் 3-ஆவது இடம்:

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ளப்யூஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: 2019-ஆம் ஆண்டு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவா்களின் எண்ணிக்கை 1.02 கோடியை எட்டியது. இது 2021-ஆம் ஆண்டு 1.05 கோடியாக அதிகரித்தது. 2021-ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள்தொகையில் 14.1 சதவீதம் போ் வெளிநாட்டவா்கள். இதில் சட்டவிரோதமாக குடியேறிய 1.05 கோடி போ் என்பது அந்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சுமாா் 3 சதவீதமாகவும், மொத்த வெளிநாட்டவா்கள் எண்ணிக்கையில் 22 சதவீதமாகவும் உள்ளது. அதேவேளையில், அந்நாட்டில் சட்டப்படி குடியேறியவா்களின் எண்ணிக்கை 80 லட்சத்துக்கும் அதிகமாக 29 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவா்களில் மெக்ஸிகோ நாட்டைச் சோ்ந்தவா்கள் முதலிடத்தில் உள்ளனா். இரண்டாவது இடத்தில் எல் சால்வடாா் நாட்டைச் சோ்ந்தவா்களும், மூன்றாவது இடத்தில் இந்தியா்களும் உள்ளனா். 

தமிழ்நாட்டின் கருவுறுதல் விகிதம்:

தமிழ்நாட்டின் கருவுறுதல் விகிதம் 2.1 சதவீதத்திலிருந்து 1.4 சதவீதமாகக் குறைந்துள்ளது மேலும் மாநில மக்கள்தொகை கட்டுப்பாட்டில் உள்ளது. 2023 ஆம் ஆண்டில் இந்தியப் பெண்களின் கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு 2.139 குழந்தைகளாகும். இது 2022 ஆம் ஆண்டை விட 0.93% குறைவாகும். 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் பிறப்பு விகிதம் 1,000 பேருக்கு 16.949 பிறப்புகள் ஆகும். இது 2022 இல் இருந்து 1.25% குறைந்துள்ளது.இந்தியாவில் உள்ள ஐந்து மாநிலங்கள் 2.1 என்ற கருவுறுதலின் மாற்று நிலைக்கு மேல் உள்ளன. அவை : பீகார், மேகாலயா, உத்தரபிரதேசம், ஜார்கண்ட், மணிப்பூர். 

உலகின் முதல் முப்பரிமாண அச்சிடப்பட்ட கோயில்:

தெலங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டம் புருகுப்பள்ளியில் உலகின் முதல் முப்பரிமாண அச்சிடப்பட்ட கோயில் கட்டப்பட்டுள்ளது. மூன்று மாத முப்பரிமாண அச்சு செயல்முறை மூலம் அடையப்பட்ட இந்த புதுமையான கட்டுமானம் ஒரு குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப சாதனையை குறிக்கிறது. 

நுழைவு இசைவு (விசா) :

பிரிட்டனில் நுழைவு இசைவு பெறும் நாடுகளின் பட்டியிலில் இந்தியா, நைஜீரியா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

கல்வி உதவித் தொகையுடன் கூடிய உயர்கல்வி நுழைவு இசைவு பெறுபவர்களில் இந்தியர்கள் 27% பங்கு வகிக்கின்றன.

சுற்றுலா நுழைவு இசைவு பெறும் நாடுகள் வரிசையில் இந்தியா (27%), சீனா (19%) துர்கிஷ் (6%) போன்ற நாடுகள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

தன்னைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களை பிரிட்டனுக்கு அழைத்து வரும் நாட்டினர் எண்ணிக்கையில் நைஜிரியா (60,506 நுழைவு இசைவு) முதலிடமும், இந்தியா (43,445 நுழைவு இசைவு) இரண்டாம் இடமும் பிடித்துள்ளன.  

புதிய வகை தவளை இனம் Music Frog

அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் நிதிரானா நோவா டிஹிங் இனத்தை சேர்ந்த புதிய மியூசிக் தவளை இனமாது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்குநோவா டிஹிங் நதியின் பெயர் இடப்பட்டுள்ளது.

ஆண் தவளைகள் 1.8-2.3 அங்குல நீளம் கொண்டவையாகவும் பெண் தவளைகள் 2.4-2.6 அங்குல நீளம் கொண்டவையாகவும் உள்ளன. 

கேம்பிரிட்ஜ் அகராதி 2023ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தை:

கேம்பிரிட்ஜ் அகராதியின் சார்பில் 2023ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக hallucinate என்ற வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

விசா இல்லாமல் நுழைய 6 நாடுகளுக்கு சீனா அனுமதி:

சீனா ஐந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் மலேசியாவிற்கும் விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதியளித்துள்ளது. வரும் டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாண்டு, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாட்டு மக்கள் விசா இல்லாமல் சீனாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சீனாவிற்குள் 15 நாள்கள் விசா இல்லாமல் தங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சோதனை முயற்சி ஒரு வருடத்திற்கு செயல்படுத்தப்படவுள்ளது. சீன மற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் பரிமாற்றத்தில் வளர்ச்சி மற்றும் வெளி உலகிற்கான உயர் மட்டத் திறப்பை ஏற்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும் 

உலகளாவிய சர்க்கரைத் துறையை வழிநடத்த இந்தியா 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச சர்க்கரை அமைப்பின் (ISO) தலைவராகிறது:

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச சர்க்கரை அமைப்பின் (.எஸ்.) 63-வது கவுன்சில் கூட்டத்தில், 2024ம் ஆண்டிற்கான இந்த அமைப்பின் தலைவராக இந்தியா தேர்வுசெய்யப்பட்டது இது உலகளாவிய சர்க்கரைத் துறையை வழிநடத்துவதற்கும், வளர்ந்து வரும் அந்தஸ்தின் பிரதிபலிப்புக்கும் மிகப்பெரிய சாதனையாகும்

உலகிலேயே சர்க்கரையின் மிகப்பெரிய நுகர்வோர் மற்றும் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக இந்தியா இருந்து வருகிறது.உலகளாவிய சர்க்கரை நுகர்வில் சுமார் 15 சதவீதத்தையும் உலகளாவிய சர்க்கரை உற்பத்தியில் சுமார் 20 சதவீதத்தையும்  இந்தியா கொண்டுள்ளது.

ISO (International Sugar Organisation) என்பது லண்டனை தளமாகக் கொண்ட 90 உறுப்பு நாடுகளைக் கொண்ட அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும் , இது 1968 இன் சர்வதேச சர்க்கரை ஒப்பந்தத்தால் நிறுவப்பட்டது

அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்குப் பிறகு எத்தனால் உற்பத்தியில் உலகின் 3-வது பெரிய நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு சதவீதம் 2019-20 ஆம் ஆண்டில் 5 சதவீதத்திலிருந்து 2022-23 ஆம் ஆண்டில் 12 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எத்தனால்  உற்பத்தி 173 கோடி லிட்டரிலிருந்து 500 கோடி லிட்டருக்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது.

விவசாயிகளுக்கு அதிக கரும்பு விலையை வழங்கும் நாடு என்ற தனிச்சிறப்பு இந்தியாவிற்கு உண்டு 

கருணா பட்டு :

ஒடிசா மாநிலத்தில் எரி என்னும் பட்டுப்புழுக்களிலிருந்து பட்டு ஆடைகளை உருவாக்கும் கருணா பட்டு என்ற முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இம்முறையில் பட்டுபூச்சிகளை கொல்லாமல் கிடைக்கும் பட்டு இழைகளை பயன்படுத்தி இப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. 

புவிசார் குறியீடு :

ஜம்மு & காஷ்மீரின் கிஷ்த்வார் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடானது (GI Tag) வழங்கப்பட்டுள்ளது. 

வாட்டர் ஸ்மார்ட் கிட் பிரச்சாரம்’ :

மேகாலயாவில் இளைஞர் நீர் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காகவாட்டர் ஸ்மார்ட் கிட் பிரச்சாரம்தொடங்கப்பட்டுள்ளதுஜல் ஜீவன் திட்டத்தின் (JJM) கீழ் செயல்படும் இந்த முயற்சி நீர் சேமிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி குழந்தைகளுக்கு கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

உலகின் மிகப் பெரிய23பனிக்கட்டி:

வேடல் கடல் பகுதியில் சிக்கியிருந்த உலகின் மிகப் பெரிய23பனிக்கட்டி30 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக நகரத் தொடங்கியுள்ளது. இது குறித்துபிபிசிஊடகம் தெரிவித்துள்ளதாவது: அன்டாா்டிகா கண்டத்தின் எல்லையிலிருந்து கடந்த 1986-ஆம் ஆண்டு உடைந்து நகரத் தொடங்கிய 23 பனிக்கட்டி, சிறிது காலத்திலேயே வேடல் கடல் பகுதியில் தரைதட்டி நின்றது. அதன் பிறகு அந்தப் பனிக் கட்டி மிகப் பெரிய பனித் தீவாக திகழ்ந்து வந்தது. சுமாா் 4,000 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட அந்தப் பனிக்கட்டி, உலகிலேயே மிகப் பெரியது ஆகும். தில்லியைப் போல் இரண்டரை மடங்குக்கும் மேல் பெரிய இந்தப் பனிக்கட்டி, 400 மீட்டா் உயரம் கொண்டது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) 2005ன் வரம்பில் இருந்து கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழுவுக்கு (சிஇஆர்டி-இன்) மத்திய அரசு சமீபத்தில் விலக்கு அளித்தது :

Computer Emergency Response Team (CERT-In)

CERT-In , 2004 இல் நிறுவப்பட்டது, கணினி பாதுகாப்பு சம்பவங்கள் நிகழும்போது அவைகளுக்கு பதிலளிப்பதற்கான தேசிய நோடல் ஏஜென்சி ஆகும்.இது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது .

RTI சட்டத்தின் படி, RTI சட்டத்தின் அட்டவணை II இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

இதன் மூலம், IB, R&AW, அமலாக்க இயக்குநரகம், தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு போன்ற 27 உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் ஆர்டிஐயின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. 

கிருஷி சாகிஸ் (விவசாயி நண்பர்கள்):Krishi Sakhis (Farmer's Friends) :

கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் இணைந்து இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக கிரிஷி சாகிஸ் பயிற்சியை துவக்கியது.

கிரிஷி சாகிகள் சமூக விவசாய பராமரிப்பு சேவை வழங்குநர்கள் (CASPs-Community Agriculture Care Service Providers ).

அவர்கள் விரிவாக்க வல்லுநர்கள் மற்றும் அடிமட்ட அளவில் விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டவர்கள்.

கிரிஷி சாகிஸ் முயற்சி தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய கிராமப்புற வாழ்வாதாரத்தின் கீழ் தொடங்கப்பட்டது . 

தாந்தலம்/டான்டாலம் என்ற அரிய உலோகம்:

பஞ்சாபின் ரோபார் நகரில் அமைந்துள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், சட்லஜ் ஆற்றில் தாந்தலம் என்ற அரிய உலோகம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

தாந்தலம் ஆனது மின்னணுவியல் மற்றும் குறைக்கடத்திகளில் பெருமளவில் பயன்படுத்தப் படுகிறது.

ஓர் அரிய உலோகமான தாந்தலம் என்பது மற்றும் சாம்பல் நிற, கனமான, மிகவும் கடினமான, மேலும் துரு எதிர்ப்புத் திறன் கொண்ட உலோகங்களில் ஒன்றாக அறியப் படுகிறது.

இதனை உடையாமல் நீட்டி, இழுத்து, மெல்லிய கம்பி அல்லது இழை போன்று மாற்றலாம்.

இது மிக அதிக உருகுநிலை கொண்டது.

தாந்தலம் ஆனது முதன்முதலில் ஆண்டர்ஸ் குஸ்டாஃப் எகன்பெர்க் என்ற சுவீடன் நாட்டு அறிவியலாளரால் 1802 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. 

டி20 போட்டிகளில் இந்திய அணி புதிய சாதனை:

டி20 போட்டிகளில் இந்திய அணி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி  (நவம்பர் 23) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான  போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.  இந்திய அணி துரத்திப் பிடித்த 209 ரன்களே இந்திய அணியால் வெற்றிகரமாக துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்காகும். இதற்கு முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 208 ரன்களை துரத்திப் பிடித்ததே இந்திய அணியால் துரத்திப் பிடிக்கப்பட்ட ரன்களே அதிகபட்ச இலக்காக இருந்தது.

டி20 போட்டிகளில் 200 மற்றும் அதற்கு மேற்பட்ட ரன்களை வெற்றிகரமாக அதிகமுறை துரத்திப் பிடித்த அணியாகவும் இந்தியா மாறியுள்ளதுஇதுவரை 200-க்கும் அதிகமான ரன்களை இந்திய அணி 5 முறை வெற்றிகரமாக துரத்திப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் 4 முறை 200 மற்றும் அதற்கும் அதிகமான ரன்களை துரத்திப் பிடித்து தென்னாப்பிரிக்கா 2-வது இடத்தில் உள்ளது.  

துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25மீ ரேப்பிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் :

கத்தாரில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலக கோப்பை ஃபைனல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25மீ ரேப்பிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் அனீஷ் பன்வாலா (Anish Bhanwala) வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25மீ ரேப்பிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமயை பெற்றுள்ளார்.

புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி:

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் குஜராத் முதலிடத்தையும், தமிழகம் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.கடந்த அக்டோபர் வரை தமிழகத்தின் சூரிய சக்தி மின் உற்பத்தி திறனானது 7,146.59 மெகா வாட்டாக உள்ளது.புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையால் இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சொற்குவை தளம் -Sorkuvai

சொற்குவை தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட சொற்களின் எண்ணிக்கை 14 லட்சத்தை கடந்துள்ளது.சொற்குவை தளமானது தமிழக அரசின் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.சொற்குவை தளத்திலுள்ள சொற்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் 3 லட்சத்தினை கடந்துள்ளது

அஸ்ஸாம் ஆராய்ச்சி நிறுவனம் (ARRI) :

அஸ்ஸாம் ஆராய்ச்சி நிறுவனமானது ஜோஹா அரிசியை (Joha Rice) உருவாக்கும் பணியினை மேற்கொண்டுள்ளது.இவ்வகை அரிசியானது அதிக மகசூல் தரும் உயர்தர நறுமண அரிசி ரகமாகும்.1923-ல் அஸ்ஸாம் ஆராய்ச்சி நிறுவனமானது 45-க்கும் மேற்பட்ட அரிசி ரகங்களை உருவாக்கியுள்ளது.

கின்னஸ் சாதனை :

இந்தியாவின் கல்பனா பாலன் வழக்கமாக இருக்கும் 32 பற்களை விட கூடுதலாக 6 பற்களை கொண்டு உலகிலேயே அதிக பற்களையுடையவராக திகழ்கிறார்.உலகிலேயே அதிக பற்களையுடைய நபர் என்ற கின்னஸ் சாதனையை புரிந்துள்ளார்.

புதிய புயலுக்குமைச்சாங்என்று பெயரிடப்பட்டுள்ளது:

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய புயலுக்குமைச்சாங்என்று பெயரிடப்பட்டுள்ளது. தெற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி  தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. இது மேலும் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதால்மியான்மர் நாடு பரிந்துரைத்தமைச்சாங்’ என்ற பெயர் வைக்கப்படவுள்ளது

ஆரோரா (Aurora) திட்டம் :

அமேசான் இந்தியா நிறுவனம் இந்தியாவில் கற்றல்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ஆரோரா (Aurora) திட்டத்தைத் துவங்குயுள்ளது. வணிக உலகின் ஜாம்பவானாகத் திகழும் அமேசான் நிறுவனம் மும்பையில் உள்ள சோல் ஏஆர்சி (Sol ARC) எனும் இலாப நோக்கமற்ற நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. மும்பை, தில்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், ஆகிய இடங்களில் உள்ள விநியோக நிலையங்களில் கற்றல்திறன் குறைபாடு உள்ள இளம் வயதினருக்காக இந்தத் திட்டத்தை செயல்படுத்தியது.



TNPSC GK குறிப்புகள் தமிழ் நவம்பர் - 2023:

FILE SIZE : 1MB

PAGES: 25


DOWNLOAD :TNPSC GK குறிப்புகள் தமிழ் நவம்பர் - 2023 PDF



SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:

  1. SUMMITS AND CONFERENCES JUNE 2023 IN TAMIL
  2. SUMMITS AND CONFERENCES JULY 2023 IN TAMIL
  3. SUMMITSAND CONFERENCES AUGUST 2023 IN TAMIL
  4. SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023 IN TAMIL
  5. SUMMITS AND CONFERENCES - OCTOBER 2023 IN TAMIL
  6. SUMMITS AND CONFERENCES - NOVEMBER 2023 IN TAMIL





Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!