இந்திய நன்கொடையாளர் பட்டியல் 2023:
ஹுருன் இந்தியா நிறுவனம் 2022 - 2023 நிதியாண்டில் அதிக நன்கொடை அளித்தவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தனி நபராகவும் குடும்பமாகவும் 119 பேர் ரூ.5 கோடிக்கும் மேல் பல்வேறு உதவிகளுக்காக நன்கொடைகளை வழங்கியுள்ளனர்.
EdelGive Hurun India Philanthropy List 2023 :
- இதில், ரூ.2042 கோடியை அளித்து நாட்டில் அதிக நன்கொடை அளித்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார். நிதியாண்டு கணக்கிற்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.5.6 கோடியை நன்கொடையாக அளித்திருக்கிறார்.
- இரண்டாம் இடத்தில் விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.1,774 கோடி நன்கொடை வழங்கியுள்ளனர்.
- முகேஷ் அம்பானி மற்றும் குடும்பத்தினர் ரூ.336 கோடி அளித்து மூன்றாம் இடத்தில் உள்ளனர்.
- குமார் மங்களம் பிர்லா & குடும்பத்தினர் ரூ.287 கோடி, கௌதம் அதானி ரூ.285 கோடியுடன் நான்காம் மற்றும் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
- இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் நான்கு பேர் அதிக நன்கொடை அளித்தவர்கள் பட்டியலில் உள்ளனர்.
- பட்டியலில் வழக்கமாக இடம்பெறும் நன்கொடையாளர்களைத் தவிர புதிதாக 25 பேர் இணைந்துள்ளனர்.
- இதில், பெரும்பாலானவர்கள் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காகவே நன்கொடைகளை அளித்துள்ளனர். ஆனால், ஷிவ் நாடார் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களுங்காக நன்கொடை செய்திருக்கிறார்.
SOURCE : DINAMANI
No comments:
Post a Comment