Saturday, November 4, 2023

உலக உணவு இந்தியா கண்காட்சி 2023

 


உலக உணவு இந்தியா கண்காட்சி 2023 :

புதுதில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இரண்டாவது ‘உலக உணவு இந்தியா 2023′ என்ற மாபெரும் உணவு கண்காட்சித் திருவிழாவைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03-11-2023) தொடங்கி வைத்தார். சுய உதவிக் குழுக்களை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ஆரம்பகட்ட மூலதன உதவிகளையும் அவர் வழங்கினார். விழாவில் அமைக்கப்பட்ட கண்காட்சியைப் பிரதமர் மோடி பார்வையிட்டார். 

KEY POINTS :World Food India Expo 2023 "

நிகழ்வின் முதல் பதிப்பு 2017 இல் நடைபெற்றது.

குறிக்கோள் - இந்தியாவை ‘உலகின் உணவுக் கூடை” என்று காட்டுவதையும், 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கொண்டாடுவதையும் இந்த நிகழ்ச்சி முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

முதலீடுகள், கூட்டாண்மைகள் மற்றும் நிறுவனங்களை மேம்படுத்த பல்வேறு பங்குதாரர்களுக்கு ஒரு தளத்தை வழங்குதல்.

பங்கேற்பாளர்கள் - முக்கிய உணவு பதப்படுத்தும் நிறுவனங்களின் CEO க்கள் உட்பட 80 க்கும் மேற்பட்ட நாடுகள்.

ஃபுட் ஸ்ட்ரீட் - இது பிராந்திய உணவு வகைகள் மற்றும் பாரம்பரிய இந்திய உணவு வகைகளின் அரச சமையல் பாரம்பரியம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கான அரங்குகள் - இது புதுமைகளை வெளிப்படுத்துவதோடு, நிதி அதிகாரமளித்தல், தர உத்தரவாதம் மற்றும் இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் புதுமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.

ஆயுஷ் ஆஹார் - ஆயுஷ் ஸ்டார்ட்அப்களால் உருவாக்கப்பட்ட ஆயுஷ் தயாரிப்புகளும் காட்சிப்படுத்தப்படும்.

சுய உதவிக் குழுக்களை வலுப்படுத்தும் வகையில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ஆரம்பக் கட்ட மூலதன உதவியை பிரதமர் இந்நிகழ்ச்சியில் வழங்கினார். மேம்பட்ட பேக்கேஜிங் மற்றும் தரமான உற்பத்தி மூலம் சுய உதவிக் குழுக்கள், சந்தையில் சிறந்த விலையைப் பெற இந்த ஆதரவு உதவும். உலக உணவு இந்தியா 2023-ன் ஒரு பகுதியாக உணவு வீதியையும் பிரதமர் திறந்து வைத்தார். இதில் பிராந்திய உணவு வகைகள் மற்றும் அரச சமையல் பாரம்பரிய வகைகள் இடம்பெற்றுள்ளன. இதில் 200 க்கும் மேற்பட்ட சமையல்க் கலை வல்லுநர்கள் பங்கேற்று பாரம்பரிய இந்திய உணவுகளை வழங்குகின்றனர். இது ஒரு தனித்துவமான சமையல் அனுபவமாக இருக்கும். 

இந்தியாவை ‘உலகின் உணவுக்  கூடை‘ என்று எடுத்துக் காட்டுவதையும், 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கொண்டாடுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.  அரசு அமைப்புகள், தொழில்துறை வல்லுநர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் சம்பந்தப்பட்ட  தரப்பினர் ஆலோசனைகளில் ஈடுபடவும், கூட்டுச் செயல்பாடுகளை நிறுவவும், வேளாண் உணவுத் துறையில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயவும் ஒரு கட்டமைப்பு மற்றும் வணிகத் தளத்தை இந்த உலக உணவு இந்தியா 2023 கண்காட்சித் திருவிழா வழங்கும். நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் பங்கேற்கும் வட்டமேசை மாநாடுகள், முதலீடுகள் மற்றும் எளிதாகத் தொழில் தொடங்குவது குறித்து கவனம் செலுத்தும். 

இந்திய உணவுப் பதப்படுத்துதல் துறையின் புதுமைக் கண்டுபிடிப்பு மற்றும் வலிமையை வெளிப்படுத்த பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. உணவுப் பதப்படுத்தும் தொழிலின் பல்வேறு அம்சங்களை மையமாகக் கொண்ட 48 அமர்வுகளுடன் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. நிதி அதிகாரமளித்தல், தர உத்தரவாதம், இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் தொடர்பான பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெறும். 

இந்த நிகழ்ச்சியில் முக்கிய உணவு பதப்படுத்தும் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் உட்பட 80-க்கும் அதிகமான  நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர். இது 80 க்கும் அதிகமான நாடுகளிலிருந்து 1200 க்கும் அதிகமானோர் பங்கேற்கும் விற்பனையாளர் சந்திப்பையும் கொண்டிருக்கும். இதில் நெதர்லாந்து கூட்டு செயல்பாட்டு நாடாக உள்ளது. ஜப்பான் இந்த நிகழ்வுகளில் கவனம் செலுத்தும் நாடாக உள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

CURRENT AFFAIRS IN TAMIL NOVEMBER 2024 (14.11.2024)

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது: