TODAY CURRENT AFFAIRS IN TAMIL 03.11.2023

TNPSC PAYILAGAM
By -
0



TODAY CURRENT AFFAIRS IN TAMIL 03.11.2023

 அன்பாடும் முன்றில் திட்டம்

தமிழகத்தில் முதன் முறையாக திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி மாணாக்கர்களிடையே நல்லலிணக்த்தை ஏற்படுத்த அன்பாடும் முன்றில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கொசுக்களின் மாதிரியில் ஜிகா வைரஸ் :

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளபூர் மாவட்டத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட கொசுக்களின் மாதிரியில் ஜிகா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, மாநிலம் முழுவதும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. சித்லகட்டா தாலுகா, தலகயலபேட்டா கிராமத்தில் கடந்த செப்டம்பர் மாதம் சேகரிக்கப்பட்ட கொசுக்களின் மாதிரியில் ஜிகா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் சிக்கபள்ளபூர் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று வருகிறார்கள். 

இந்த நிலையில், ஜிகா வைரஸ் தடுப்பு எச்சரிக்கைகள் மாநிலம் முழுவதும் விடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 68 இடங்களில், பல்வேறு வகைகளிலும் கொசுக்களின் மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில் ஜிகா வைரஸ் கடந்த ஒரு சில மாதங்களாகவே பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜிகா வைரஸ் என்பது கொசுக்களால் பரவும் வைரஸ் ஆகும், இது 1947 இல் உகாண்டாவில் ரீசஸ் மக்காக் குரங்கில் கண்டறியப்பட்டது, அதைத் தொடர்ந்து 1950 களில் பிற ஆப்பிரிக்க நாடுகளில் மனிதர்களுக்கு தொற்று மற்றும் நோய்க்கான சான்றுகள் உள்ளன.

முதல்வர் சிறு விளையாட்டு அரங்கம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட உள்ள 9 முதல்வர் சிறு விளையாட்டு அரங்குகளுக்கும் (Principal Mini Sports Hall) சென்னையில் கோபாலபுரத்தில் அமைக்கப்பட உள்ள குத்துச் சண்டை அகாடமிக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார்.

கொலீஜியம் குழு பரிந்துரை

சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதனை மேகலாய உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்  தலைமையிலான கொலீஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது.

கொலீஜியம் அமைப்பானது 1993-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் 10000 வீடுகள்:

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், அந்நாட்டின் அதிபா் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துப் பேசினாா். 

கொழும்பில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் 15 மில்லியன் டாலா் மதிப்பிலான பல்வேறு திட்டங்களின் அமலாக்கம் குறித்து இருவரும் ஆலோசித்தனா். மேலும், கொட்டக்கலை பகுதியில் மவுன்ட் வொ்னன் தேயிலைத் தோட்டத்தின் கீழ் பகுதியில் இந்திய நிதியுதவியுடன் 10,000 வீடுகள் கட்டும் திட்டத்துக்கு இருவரும் அடிக்கல் நாட்டினா்.

இளம் தலைவர்கள் மாநாடு

பெங்களூருவில் இந்தோ-ஜெர்மனி இளம் தலைவர்கள் மாநாடானது நடைபெற்றுள்ளது.

இக் கூட்டமைப்பான 2017-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

நாய் – கருத்தடை

பூடானில் அனைத்து தெரு நாய்களுக்கும் கருத்தடை செய்யப்பட்டுள்ளது.

சிறைக் கைதிகள், பாா்வையாளா்களுக்கு ஆதாா் கட்டாயம்:

சிறைக் கைதிகளின் பாதுகாப்பான காவலை உறுதிப்படுத்தும் மத்திய அரசின் முயற்சியாக அனைத்து கைதிகள், அவா்களின் பாா்வையாளா்களின் அடையாளம் அறிய ஆதாா் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. சிறைக் கைதிகள் மற்றும் அவா்களுடைய பாா்வையாளா்களின் அங்கீகாரத்துக்காக ஆதாரைப் பயன்படுத்த மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சிறைத் துறைகளுக்கு தேவையான அரசிதழ் அறிவிப்புகளை கடந்த மாா்ச் மற்றும் செப்டம்பா் மாதங்களில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. 

இதுதொடா்பாக அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிா்வாகங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘அனைத்து சிறை அதிகாரிகளின் வசதிக்காக சிறைக் கைதிகள், அவா்களின் பாா்வையாளா்களுக்கு ஆதாா் இணைப்பு அல்லது ஆதாா் அங்கீகாரத்துக்கான வழிகாட்டு நடைமுறையை (எஸ்.ஓ.பி.) தேசிய தகவல் மையமும், எண்ம-சிறைகள் குழுவும் தயாரித்துள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து ஒரு புதிய காளான் இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்:

திருவனந்தபுரத்தில் உள்ள பலோடேவில் உள்ள ஜவஹர்லால் நேரு வெப்பமண்டல தாவரவியல் தோட்டம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (JNTBGRI) வளாகத்தில் தேனீ-மஞ்சள் நிற 'தொப்பி கொண்ட ஒரு சிறிய, மென்மையான தோற்றமுள்ள காளான் ஒன்று புதிய இனமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்புகள்:

இந்த புதிய உயிரினம் இனத்தைச் சேர்ந்தது. கேண்டோலியோமைசஸ்

அதன் பைலஸ் அல்லது தொப்பியில் வெள்ளை கம்பளி அளவு போன்ற அமைப்புகளுக்காக இந்த இனத்தின் பெயர்

காண்டோலியோமைசஸ்அல்போஸ்குவாமோசஸ் 'அல்போஸ்குவாமோசஸ்' என்று பெயரிடப்பட்டது.

மென்மையான கட்டமைப்பில் உள்ள இந்த காளான் சுமார் 58 மிமீ உயரத்திற்கு வளரும் தன்மை உடையது

கொழும்பு பாதுகாப்பு மாநாடு (CSC)

இது இந்தியப் பெருங்கடல் பகுதியில் செயல்படும் இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையே ஒரு முத்தரப்பு கடல் பாதுகாப்பு குழுவாக உருவாக்கப்பட்டது.

இது கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாதத்தை எதிர்த்தல் மற்றும் சைபர் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

2020 ஆம் ஆண்டில், மொரிஷியஸ் குழுவில் உறுப்பினராக சேர்க்கப்பட்டது, பங்களாதேஷ் மற்றும் சீஷெல்ஸ் பார்வையாளர்களாக இருந்தன.

பங்களாதேஷ் மற்றும் சீஷெல்ஸ் பார்வையாளர்கள் மற்றும் குழுவில் சேர அழைக்கப்பட்டு முழு உறுப்பினர்களாக சேர வாய்ப்புள்ளது.

EdelGive Hurun இந்தியா பரோபகாரப் பட்டியல் 2023

Hurun India மற்றும் EdelGive ஆகியவை EdelGive Hurun இந்தியா பரோபகாரப் பட்டியல் 2023ஐ வெளியிட்டன.

HCL டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார், முன்னணி இந்திய பரோபகாரராக முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார்.

2023ஆம் நிதியாண்டில் ரூ.5 கோடிக்கு மேல் நன்கொடை அளித்த பரோபகாரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் .


LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :

SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:

  1. SUMMITS AND CONFERENCES JUNE 2023 IN TAMIL
  2. SUMMITS AND CONFERENCES JULY 2023 IN TAMIL
  3. SUMMITSAND CONFERENCES AUGUST 2023 IN TAMIL
  4. SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023 IN TAMIL
  5. SUMMITS AND CONFERENCES - OCTOBER 2023 IN TAMIL

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!