LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL

TNPSC PAYILAGAM
By -
0



LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 1

1st October சர்வதேச முதியோர் தினம்: ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளபடி சர்வதேச முதியோர் தினம் (International Day of Older Persons) உலகம் முழுவதும் அக்டோபர் 1 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.அக்டோபர் 1, 1991 இல் இருந்து இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்திய அளவில்-பெற்றோர் மற்றும் மூத்தகுடி மக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டம், 2007, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் தேவையான பராமரிப்பை உறுதி செய்கிறது. இதுவரை 23 மாநிலங்கள், அனைத்து ஒன்றியப் பிரதேசங்களும் இச்சட்டத்தை நடைமுறைபடுத்தி உள்ளன. 

1st October உலக சைவ தினம் World Vegetarian Day : சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விலங்குகள் நலன் மற்றும் உரிமை, தனிப்பட்ட ஆரோக்கிய நன்மைகளை எடுத்துக்கூறி மக்களை விலங்குகளை கொன்று சாப்பிடும் உணவு முறையை கைவிட வலியுறுத்துவது இந்த நாளின் முக்கியத்துவம் ஆகும்.1977ம் ஆண்டு வட அமெரிக்க சைவ உணவு கழகத்தால், உருவாக்கப்பட்ட, 1978ம் ஆண்ட சர்வதேச சைவ உணவுகள் சங்கத்தால், ஒப்புதல் அளிக்கப்பட்டு, உலகம் முழுவதும் அக்டோபர் 1ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

1st October சர்வதேச காபி தினம்:சர்வதேச காபி தினம் சர்வதேச காபி நிறுவனத்தால் (ICO) நிறுவப்பட்டது மற்றும் முதலில் அக்டோபர் 1, 2015 அன்று உலகளாவிய காபி தொழிலை அங்கீகரித்து மேம்படுத்துவதற்காக கொண்டாடப்பட்டது.கருப்பொருள்: "ஒவ்வொரு கோப்பையிலும் நிலைத்தன்மை" (“Sustainability in Every Cup”)

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 2

2nd October உலக வாழ்விட தினம்: வருடந்தோறும் அக்டோபரின் முதல் திங்கள் கிழமைகளில்  உலக வாழ்விட தினம் அனுசரிக்கப்படுகிறது.கருப்பொருள்: “Resilient Urban Economies Cities as Drivers of Growth and Recovery”(நெகிழ்வான நகர்ப்புற பொருளாதாரங்கள். வளர்ச்சி மற்றும் மீட்சியின் இயக்கிகள் நகரங்கள் )

2nd October காந்தி ஜெயந்தி (Gandhi Jayanti) :

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 3

3rd October உலக இயற்கை தினம் (World Nature Day) :அக்டோபர் 3, 2010 அன்று உலக இயற்கை அமைப்பு (WNO) நிறுவிய உலக இயற்கை தினம், நமது சுற்றுச்சூழலை எதிர்கொள்ளும் வலிமையான சவால்கள், முக்கியமாக காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் பற்றிய விழிப்புணர்வை உயர்த்துவதற்கான ஒரு முக்கிய தளமாக உள்ளது. கருப்பொருள்-'காடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள்: மக்களையும் கிரகத்தையும் நிலைநிறுத்துதல்' (Forests and Livelihoods: Sustaining People and Planet’)

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 4

4th October உலக விலங்குகள் நல தினம்- உலக விலங்குகள் தினம் என்ற கருத்தாக்கம் 1925 ஆம் ஆண்டு பிரபல எழுத்தாளரும் வெளியீட்டாளருமான ஹென்ரிச் சிம்மர்மேன் என்பவரால் தொடங்கப்பட்டது. தொடக்க கொண்டாட்டம் ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்றது , இதில் 5000 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். 1931 ஆம் ஆண்டு, இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச விலங்கு பாதுகாப்பு மாநாட்டின் போது, ​​அக்டோபர் 4 ஆம் தேதி உலக விலங்குகள் தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த வரலாற்று முடிவு இந்த நிகழ்வின் உலகளாவிய அங்கீகாரத்தைக் குறித்தது, விலங்குகள் நல வாதத்தில் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.கருப்பொருள்: “Great or Small Love them All”(பெரியவர் அல்லது சிறியவர் அனைவரையும் நேசிக்கவும்" )

4th October உலக விண்வெளி வாரம் (World Space Week) -கருப்பொருள்: “Space and Entrepreneurship”( "விண்வெளி மற்றும் தொழில்முனைவு")

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 5

5th October கங்கை நதி டால்பின் தினம்

5th October உலக ஆசிரியர் தினம்: செப்டம்பர் 5 டாக்டர் சர்வ பள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கருப்பொருள்:“The Teachers we need for the education we want; The global imperative to reverse the teacher Shorage”( நாம் விரும்பும் கல்விக்கு ஆசிரியர்கள் தேவை: ஆசிரியர் பற்றாக்குறையை மாற்றுவதற்கான உலகளாவிய கட்டாயம்” )

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 6

6th October உலக புன்னகை தினம் (World Smile Day) :ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தின் முதல் வெள்ளியன்று அனுசரிக்கப்படுகிறது.கருப்பொருள்: “Radiate Joy”("ஒரு கருணை செயலைச் செய்யுங்கள் - ஒருவருக்கு சிரிக்க உதவுங்கள்")

6th October உலக பெருமூளை பைசி தினம் (World Cerebral Paisy Day) : உலக பெருமூளை வாதம் தினம் அக்டோபர் 6 அன்று அனுசரிக்கப்படுகிறது. பெருமூளை வாதம் என்பது வாழ்நாள் முழுதும் குணப்படுத்த முடியாத ஒரு நோய். 100க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பெருமூளை வாதத்தால் பாதிப்பு அடைந்தவர்களின் குடும்பங்கள், ஆதரவாளர்கள் மற்றும் அமைப்புகளை ஒன்றிணைத்து இந்த நாள் அனுசரிக்கிறது . கருப்பொருள்: “Together Stronger”(“ஒன்றாக வலிமையாக இருப்போம் ) 

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 7

7th October உலக பருத்தி தினம் : உலக பருத்தி தினம், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 7 அன்று அனுசரிக்கப்படுகிறது , குறிப்பாக குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் வேலைகளை உருவாக்குவதிலும் பொருளாதாரங்களை ஆதரிப்பதிலும் பருத்தியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது..உலக பருத்தி தினத்தின் முன்முயற்சி 2019 இல் பிறந்தது, துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் உள்ள நான்கு பருத்தி உற்பத்தியாளர்கள் – பருத்தி நான்கு என்று அழைக்கப்படும் பெனின், புர்கினா பாசோ, சாட் மற்றும் மாலி – உலக வர்த்தக அமைப்பிற்கு அக்டோபர் 7 அன்று உலக பருத்தி தினக் கொண்டாட்டத்தை முன்மொழிந்தனர்.கருப்பொருள், ‘பண்ணை முதல் ஃபேஷன் வரை அனைவருக்கும் பருத்தியை நியாயமானதாகவும் நிலையானதாகவும் மாற்றுதல்’( “Making Cotton fair and sustainable for all; from farm to fashion”  )

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 8

8th October இந்திய விமானப்படை தினம் : இந்திய விமானப் படை நாள் (Indian Air Force Day) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 8 அன்று இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.இந்தியப் பாதுகாப்புப் படையின் ஓர் அங்கமாக இந்திய விமானப் படை, 1932இல் அக்டோபர் மாதம் 8ஆம் நாளில், இந்தியா ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது உருவாக்கப்பட்டது. இந்திய விமானப்படைச் சட்டம் 1932 ன்படி பிரித்தானியா ராயல் விமானப் படையின் ஒரு பகுதியாக இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்பட்டது. தொடக்கத்தில் பிரித்தானியாவின் சீருடை மற்றும் முத்திரைகளையே, இந்திய விமான படையினரும் பின்பற்றினர், இரண்டாம் உலகபோரின்போது சப்பானிய பர்மா படையை தடுத்து நிறுத்தியதில் முக்கிய பங்கு வகித்தது. இந்திய விடுதலைக்கு பின்பு, இந்திய பாதுகாப்பு படையின் ஓர் அங்கமாக இருந்த விமானப்படை உலகின் நான்காவது பெரிய விமானப்படையாக உருப்பெற்றது-(இந்திய விமானப்படையானது "நபம் ஸ்பர்ஷம் தீப்தம்" என்ற முழக்கத்துடன் செயல்படுகிறது, இது "புகழ்வுடன் வானத்தைத் தொடவும்".)

8th October உலக டிஸ்லெக்ஸியா தினம் : உலக டிஸ்லெக்ஸியா தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. டிஸ்லெக்ஸியா என்பது  பொதுவாக கற்றலில் ஏற்படும் குறைபாடாகும். இது படிப்பு மற்றும் எழுதும் திறனைப் பாதிக்கிறது. இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு சரளமாக வாசிப்பதும், எழுதுவதும் சவாலான விஷயமாகும்.உலக டிஸ்லெக்ஸியா தினம், இந்தப் பிரச்சினைகள் பற்றியும் அவற்றை எவ்வாறு சரி செய்வது என்பது பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை, டிஸ்லெக்ஸியா குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை நடத்துகிறது .

8th October உலக ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் செல் தினம்அக்டோபர் 8 ஆம் தேதி கொண்டாடப்படும் உலக ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் செல் தினத்தை முன்னிட்டு, பசுமை மற்றும் நிலையான எரிசக்தி ஆதாரமாக ஹைட்ரஜனின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து பயன்படுத்த இந்திய அரசு திட்டம் ஒன்றினை வெளியிட்டுள்ளது . ரூ.400 கோடி மதிப்பிலான  இந்தத் திட்டம்  பசுமை ஹைட்ரஜனை வணிகமயமாக்கவும், இந்தியாவின் காலநிலை மற்றும் எரிசக்தி இலக்குகளுக்கு பங்களிக்கவும் உதவும்  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான வழிகாட்டலை வழங்க முயல்கிறது.

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 9

9th October உலக தபால் அலுவலக தினம்-கருப்பொருள்: “Together for Trust: Collaborating for a safe and connected futrue”.

9th October உலக பிராந்திய இராணுவ தினம் (World Territorial Army Day:

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 10

10th October தேசிய அஞ்சல் தினம்

10th October உலக மனநல தினம் :கருப்பொருள்: “Mental Health is a Universal Human Right”.

10th October மரண தண்டனைக்கு எதிரான தினம்

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 11

11th October சர்வதேச பெண் குழந்தைகள் தினம் :ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11 அன்று அனுசரிக்கப்படும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம், பாலின சமத்துவமின்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பெண் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் அதிகாரமளித்தலுக்காக வாதிடுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட உலகளாவிய முயற்சியாகும். சர்வதேச பெண் குழந்தைகள் தினம் முதன்முதலில் 2012 இல் கொண்டாடப்பட்டது. பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களில் கவனம் செலுத்துவதற்கும், அவர்களின் அதிகாரமளித்தலை ஊக்குவிப்பதற்கும், அவர்களின் மனித உரிமைகளை நிறைவேற்றுவதற்கும் இந்த நாள் நிறுவப்பட்டது. 2023 ஆம் ஆண்டு சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தின் கருப்பொருள், “பெண் குழந்தைகளின் உரிமைகளில்  முதலீடு செய்யுங்கள்” “பெண் குழந்தைகளின் உரிமைகள்: நமது தலைமை, நமது நல்வாழ்வு” என்பதாகும். “Invest in Girls Rights our Leadership & well – Being”

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 12

12th October உலக மூட்டு வலி தினம் கருப்பொருள்: “Living With an RMD at all stages of life”.

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 13

13th October பேரிடர் குறைப்புக்கான தினம் : பேரிடர் அபாயக் குறைப்புக்கான சர்வதேச தினம், ஆண்டுதோறும் அக்டோபர் 13 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது, இது பேரழிவுகள் மற்றும் சமத்துவமின்மையின் முக்கியமான பிரச்சினைகளுக்கு உலகளாவிய கவனத்தைக் கொண்டுவருகிறது. இந்த நாள் விழிப்புணர்வை உருவாக்குவதற்கும், சமூகங்களுக்கு கல்வி கற்பதற்கும், இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளை எதிர்கொள்வதற்கான ஒரு தளமாக செயல்படுகிறது. பேரிடர் அபாயக் குறைப்புக்கான சர்வதேச தினம் 2023 தீம் பேரிடர் அபாயக் குறைப்புக்கான சர்வதேச தினம் 2023 ஆம் ஆண்டிற்கான ,ஐ.நா.வின் சர்வதேச தினத்தின் கருப்பொருள் “ஒரு நெகிழ்வான எதிர்காலத்திற்கான சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடுவது” என்பதாகும். “Fighting inequality for a resilient future”.

13th October உலக முட்டை தினம் (World Egg Day)  : கருப்பொருள்: “Eggs for healthy future”

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 14

14th October சர்வதேச மின் கழிவு நாள் : மின்னணு கழிவுகளின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அக்டோபர் 14ஆம் தேதி சர்வதேச மின்னணு கழிவுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

14th October உலக தர தினம் (World Standard Day)  : கருப்பொருள்: “shared vision for a better world: Incorporating SDG 3”

14th October உலக இடம்பெயர்ந்த பறவைகள் தினம் (World Migratory Bird Day) : உலக இடம் பெயரும் பறவைகள் தினம் 2023 என்பது ஒரு வருடத்திற்கு இரண்டு முறை கொண்டாடப்படும் ஒரு உலகளாவிய நிகழ்வாகும்.இந்த ஆண்டுஅக்டோபர் 14 அன்று அனுசரிக்கப்படுகிறது மற்றும் இதன் கருப்பொருள் “தண்ணீர்: பறவை வாழ்வை நிலைநிறுத்துதல்” ஆகும் .இந்த தினம் புலம் பெயர்ந்த பறவைகளின் முக்கியத்துவத்தையும் அவற்றின் பாதுகாப்பு முயற்சிகளையும் எடுத்துரைக்கும் நாள் ஆகும் . .உலக இடம் பெயரும் பறவைகள் தினம் ஆண்டுக்கு இரண்டு முறை கொண்டாடப்படுகிறது இந்த ஆண்டு மே 13 மற்றும் அக்டோபர் 14 உலக இடம் பெயரும் பறவைகள் தினமாக கொண்டாடப்படுகிறது கருப்பொருள்: “தண்ணீர்: பறவை வாழ்வை நிலைநிறுத்துதல்”“Water and its importance for Migratory Bird”.

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 15

15th October உலக மாணவர் தினம் :கருப்பொருள்: “Fail: Stands for First Attempt in Learning”.டாக்டர் அப்துல்கலாம் பிறந்தநாளை உலக மாணவர்கள் தினமாக கொண்டாப்பட்டு வருகிறது.

15th October கிராம்புற பெணகளின் சர்வதேச தினம் :கருப்பொருள்: “Rural Women Cultivating Good Food for All”

15th October உலகளாவிய கை கழுவும் தினம் (Global Hand Washing Day):கருப்பொருள்: “Clean hands are within reach”.

15th October உலக வெள்ளைக் குச்சி தினம் : “மாற்றுத் திறனாளிகளுக்கான அணுகல் மற்றும் உள்ளடக்கியத் தன்மையை ஊக்குவிக்கவும், பார்வையற்றோர் தொடர்பான நடத்தை விதிகள் குறித்த பொது விழிப்புணர்வை அதிகரிக்கவும் உலக வெள்ளைக் குச்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. பார்வையற்றவர்களுக்கு, வெள்ளைப் பிரம்புடன் கூடிய சுதந்திரம், அதன் மூலமான செயல்பாடுகள் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை, மாற்றுத் திறனாளிகளின் மேம்பாடு தொடர்பான திட்டங்களை செயல்படுத்தும் துறையாக உள்ளது.

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 16

16th October உலக உணவு தினம் :கருப்பொருள்: “Water is life, Water is Food. Leave no one behind”.

16th October உலக மயக்க மருந்து தினம் (World Anesthesia Day):கருப்பொருள்: “Anesthesia and Cancer Care”.

16th October உலக முதுகெலும்பு  தினம் (World Spine Day):கருப்பொருள்: “Move Your Spine”.

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர்  17

17th October வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினம் : கருப்பொருள்: “தகுதியான வேலை மற்றும் சமூகப் பாதுகாப்பு”.(“Decent work and Social Preotection; putting dignity in practice for all” )

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 20

20th October உலக புள்ளியியல் தினம் : ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20 அன்று அனுசரிக்கப்படும் உலக புள்ளியியல் தினம், மேம்பட்ட, நம்பகமான மற்றும் உயர்தர புள்ளிவிவரங்களின் முக்கிய பங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகளாவிய அனுசரிப்பாகும். உலக புள்ளியியல் தினம் 2010ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஐக்கிய நாடுகள் புள்ளியியல் ஆணையத்தின் 41 வது அமர்வில் முன்மொழியப்பட்டது. 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியை முதல் உலக புள்ளியியல் தினமாகக் ஆணையம் பரிந்துரைத்தது.

20th October உலக ஆஸ்டியோபோரோசிஸ் தினம் (World Osteoporosis Day) :கருப்பொருள்: “Build Better Bone”

20th October தேசிய ஒற்றுமை தினம் (National Solidarity Day) :தேசிய ஒற்றுமை தினம் 1962 ஆம் ஆண்டு சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நடந்த போரை நினைவுபடுத்துகிறது.இந்தப் போரில் இந்தியாவை சீனா தோற்கடித்தது.இந்த போரில் நாட்டின் பல வீரர்களும் வீரமரணம் அடைந்தனர், 1966ல், இந்திரா காந்தி பிரதமராக இருந்தார் அவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. போரில் போரிட்ட வீரர்கள் மற்றும் கடமையின் போது உயிரை தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்களை கவுரவிக்கும் வகையில், அக்டோபர் 20 ஆம் தேதி ‘தேசிய ஒற்றுமை தினம்’ என்று பிரதமர் இந்திரா காந்தியை உள்ளடக்கிய இந்தக் குழு அறிவித்தது.

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 21

21st October தேசிய காவல்துறை நினைவு தினம் (National Police Commemoration Day):ஆண்டுதோறும் அக்டோபர் 21-ல் 1959-ஆம் ஆண்டு லடாக்கில் சீன இராணுவத்தினரால் கொல்லப்பட்ட காவல் துறையினரின் நினைவாக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 23

23th October சர்வதேச பனிச்சிறுத்தை தினம் : ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 23, 2014 முதல் சர்வதேச பனிச்சிறுத்தை தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் பிஷ்கெக் பிரகடனத்தின் ஆண்டு நிறைவை நினைவுகூரும் மற்றும் இந்த அழிந்து வரும் பனிச்சிறுத்தை  கொண்டாடவும், அதன் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும். அக்டோபர் 23, 2013 அன்று, 12 நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து 'பனிச்சிறுத்தைகளைப் பாதுகாப்பதற்கான பிஷ்கெக் பிரகடனத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.

23th October மோல் தினம் :மோல் நாள் (Mole Day) என்பது வேதியியலாளர்களும், வேதியியல் மாணவர்களும் ஆண்டு தோறும் அக்டோபர் 23 ஆம் நாளன்று காலை 06:02 மணிக்கும் மாலை 06:02 மணிக்கும் இடையில் அதிகாரபூர்வமற்ற நிலையில் எடுத்துக் கொள்ளும் ஒரு விடுமுறை நாள் ஆகும்.இந்நாளை அவர்கள் அமெரிக்க முறையில் 6:02 10/23 எனக் குறிக்கிறார்கள். நேரம், நாள் ஆகியன அவகாதரோ மாறிலியைக் (6.02×1023) கொண்டு குறிக்கப்பட்டது. அவகாதரோ மாறிலி என்பது ஒரு மோல் வேதிப் பொருளில் காணப்படும் துணிக்கைகளின் (அணுக்கள் அல்லது மூலக்கூறுகள்) எண்ணிக்கை ஆகும்.

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 24

24th October ஐ.நா. தினம் : 1947ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐநா பட்டய ஆவணத்தின் ஆண்டுவிழாவான அக்டோபர் 24ஆம் நாளை ஐக்கிய நாடுகள் நாளாக "உலக மக்கள் அனைவரும் ஐக்கிய நாடுகளின் நோக்கம், சாதனைகள் குறித்து அறியும் வண்ணமாகவும் அவர்களது ஆதரவைப் பெறும் வண்ணமாகவும் கொண்டாட" தீர்மானித்தது.ஐக்கிய நாடுகள் நாளன்று உலக மக்களிடையே ஐநாவின் நோக்கங்களையும் சாதனைகளையும் குறித்த விப்புணர்வை ஏற்படுத்த பல சந்திப்புகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அக்டோபர் 20 முதல் 26 வரை ஐக்கிய நாடுகள் வாரமாகவும் கொண்டாடப்படுகிறது.

24th October உலக வளர்ச்சி தகவல் தினம் : உலகளவில் முன்னேற்றம் மற்றும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அதனை உலகத் தகவல் வளர்ச்சியில் தீர்க்க வேண்டும் என ஐ . நா . சபை முடிவு செய்தது . 1972 ஆம் ஆண்டு உலக தகவல் வளர்ச்சி தினமாக அக்டோபர் 24 ஐ ஐ . நா . சபை அறிவித்தது . 1973 ஆம் ஆண்டு இத்தினம் கொண்டாடப்படுகிறது . தகவல்களைப் பெருமளவில் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஐ . நா . சபை கூறுகிறது .1972 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, அக்டோபர் 24 அன்று ஐக்கிய நாடுகளின் தினத்துடன் இணைந்து உலக வளர்ச்சித் தகவல் தினத்தை நிறுவ முடிவு செய்தது. ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சிப் பிரச்சனைகள் மற்றும் சர்வதேசத்தை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தை பொதுச் சபை கொண்டிருந்தது. 

24th October சர்வதேச தூதரக தினம்

24th October உலக போலியோ தினம் :உலகில் அமைதி, நல்லுறவை வளர்ப்பது, நோய், வறுமையை ஒழிப்பது உட்பட பல பணிகளில் ஐ.நா., சபை செயல்படுகிறது. இது 1945 அக். 24ல் உருவாக்கப்பட்டது. இதை அங்கீகரிக்கும் விதமாக அக்., 24ல் ஐ.நா., சபை தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகை அச்சுறுத்திய போலியோ நோய்க்கு முதலில் தடுப்பு மருந்து கண்டுபிடித்த ஜோனாஸ் சால்க்கை கவுரவிக்கும் விதமாக அக். 24ல் உலக போலியோ தினம் கடைபிடிக்கப்படுகிறது. இளம்பிள்ளை வாதம் எனும் 'போலியோமியெலிட்டிஸ்' சுருக்கமே 'போலியோ'.உலக போலியோ தினம் 1985 ஆம் ஆண்டில் ரோட்டரி இன்டர்நேஷனல் நிறுவனத்தால், போலியோவுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கிய குழுவின் முன்னணி மருத்துவ ஆராய்ச்சியாளரான ஜோனஸ் சால்கின் பிறந்த நாளை நினைவுகூருவதற்காக நிறுவப்பட்டது. 1955 ஆம் ஆண்டில் முதன்முதலில் பயன்பாட்டிற்கு வந்த போலியோ வைரஸ் தடுப்பூசியை அவர் உருவாக்கியுள்ளார்.

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 27

25th October சர்வேதேச கலைஞர்கள் தினம் (International Artist Day) :அக்டோபர் 25 இன்று சர்வதேச கலைஞர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. கலைஞர்களையும் அவர்களின் அனைத்து பங்களிப்புகளையும் கெளரவிக்கும் வகையில் சர்வதேச கலைஞர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஓவியர், சிற்பி, பீங்கான் கலைஞர், கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர் என பன்முகத் திறமை கொண்ட ஸ்பானிஷ் கலைஞரான பாப்லோ பிக்காசோவைக் நினைவு கூறும் வகையில் அவகலைஞர்கள் சமூகத்திற்கு வழங்கிய பங்களிப்புகளை கொண்டாடும் வகையில் கனடாவைச் சேர்ந்த புகழ்பெற்ற கலைஞரான கிறிஸ் மேக்ளூர் 2004 ஆம் ஆண்டு சர்வதேச கலைஞர்கள் தினத்தைத் தொடங்கினார். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 25 ந்தேதி சர்வதேச கலைஞர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.ரது பிறந்தநாளான அக்டோபர் 25ல் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 27

27th October காலாட்படை தினம் :1947-ல் ஸ்ரீ நகர் விமான நிலையத்தில் நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினரை வெளியேற்றிதன் நினைவாக அனுசரிக்கப்படுகிறது. 76-வது தினத்தை இந்திய ராணுவம் கொண்டாடுகிறது

27th October உலக ஆடியோ விஷுவல் பாரம்பரிய தினம் (World Audiovisual Heritage Day) :எதிர்கால சந்ததியினருக்காக நமது பாரம்பரியத்தை பாதுகாக்கும் ஆடியோ-விஷுவல் பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களை கவுரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27 ஆம் தேதி உலக ஆடியோவிஷுவல் ஹெரிடேஜ் தினம் அனுசரிக்கப்படுகிறது . பதிவுசெய்யப்பட்ட ஒலி மற்றும் ஒலிப்பதிவு ஆவணங்களின் (திரைப்படங்கள், ஒலி மற்றும் வீடியோ பதிவுகள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்) முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2005 ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.கருப்பொருள்: “Your Window to the World-உலகிற்கு உங்கள் சாளரம்".

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 29

28th October சர்வதேச அனிமேஷன் தினம் (International animationDay) :1892 அக்டோபர் 28-ல் சார்லஸ் எமிலி ரொனாஸ்ட் என்பவரால் உலகின் முதல் அனிமேஷன் திரைப்படம்  வெளியிட்டதன் நினைவாக சர்வதேச அனிமேஷன் தினம் அனுசரிக்கப்படுகிறது.

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 29

29th October உலக சொரியாசிஸ் தினம்

29th October சர்வதேச இணைய தினம்

29th October உலக பக்கவாதம் தினம் (World Stroke Day) :கருப்பொருள்: “Together we are#Greater than Stroke”

29th October சர்வதேச பராமரிப்பு மற்றும் ஆதரவு தினம் (International Day of Care And Support) :

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 30

30th October உலக சிக்கன நாள் / உலக சேமிப்பு தினம் :உலக சிக்கன தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது . உலக சிக்கன நாள், பெரும்பாலும் உலக சேமிப்பு தினம் என்றும் அழைக்கப்படுகிறது. இருப்பினும், இந்தியா இதை ஒரு நாள் முன்னதாகவே செய்கிறது, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30 அன்று குறிக்கப்படுகிறது . வீட்டில் பணத்தைப் பூட்டி வைப்பதற்குப் பதிலாக வங்கியில் (நாட்டில் பண விநியோகத்தை வளப்படுத்துவதற்காக) பணத்தைச் சேமிப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாக இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்தது.  கருப்பொருள்: “Savings Prepare You for a Better Future”

LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023-அக்டோபர் 31

31th October தேசிய ஒற்றுமை தினம் :  சர்தார் வல்லபாய் படேலை போற்றும் வகையில் இந்தியாவில் அக்டோபர் 31 தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது இந்த நாள் சுதந்திர இந்தியாவுடன் பல சமஸ்தானங்களை ஒன்றிணைத்த அவரது முக்கிய பங்கிற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது . 2014 ஆம் ஆண்டில் அக்டோபர் 31 அன்று தேசிய ஒற்றுமை தினத்தை கொண்டாட இந்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு ஏற்படும் உண்மையான மற்றும் சாத்தியமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறனை நிரூபிக்கும் வகையில் நாட்டின் இயல்பான வலிமை மீண்டும் உறுதிப்படுத்த இந்த முக்கியமான நிகழ்வு ஒரு வாய்ப்பாக அமைகிறது.  ருப்பொருள்: “Run of Unity ”

31th October உலக நகரங்கள் தினம் :கருப்பொருள்: “Financing sustainable urban future for all”

 

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!