OCTOBER -TNPSC CURRENT AFFAIRS AWARDS HONOURS 2023 / விருதுகள் 2023

TNPSC PAYILAGAM
By -
0

 

OCTOBER -TNPSC CURRENT AFFAIRS AWARDS HONOURS 2023 / விருதுகள் 2023


TNPSC UNIT II:  நடப்பு விவகாரங்கள் விருதுகள் கௌரவங்கள் 2023

UNIT - II: CURRENT EVENTSHistory – Latest diary of events – National symbols – Profile of States – Eminent personalities and places in news – Sports – Books and authors. Polity – Political parties and political system in India – Public awareness and General administration – Welfare oriented Government schemes and their utility, Problems in Public Delivery Systems. Geography – Geographical landmarks. Economics – Current socio – economic issues. Science – Latest inventions in Science and Technology.

நடப்பு நிகழ்வுகள் : அண்மை நிகழ்வுகளின் தொகுப்பு – தேசியச் சின்னங்கள் – மாநிலங்கள் குறித்த விவரங்கள் – செய்திகளில் இடம் பெற்ற சிறந்த ஆளுமைகளும் இடங்களும் – விளையாட்டு – நூல்களும் ஆசிரியர்களும்.நலன் சார் அரசுத் திட்டங்கள் – தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் கட்சிகளும் மற்றும் ஆட்சியல் முறரகளும்.அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள் – புவியியல் அகடயாளங்கள் – தற்போதைய சமூக பொருளாதார பிரச்சிகனைகள்.

விருதுகள் கௌரவங்கள் 2023 :

தமிழ்நாடு அரசு விருதுகள் 2023

  • 2023 ஆம் ஆண்டுக்கான பாரிவேந்தர் பைந்தமிழ் விருது- தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி
  • புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது -தமிழ்செல்வி (சிலாவம் )
  • பாரதியார் கவிதை விருது ரவி சுப்பிரமணியன் (நினைவின் ஆழியில் அலையும் கயல்கள் )
  • அழ . வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது அருண் (பெரிய தாத்தா ) மற்றும் சி . சரிதா (கடலுக்கு அடியில் மர்மம் )
  • ஜி .யூ .போப் மொழிபெயர்ப்பு விருது-  எம் . பூபதி (பாஸ்டியன் பட்டு )
  • ஏ .பி .ஜே . அப்துல்கலாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருது - க. மகதமூடி (இதம் தரும் இதயம் )
  • பரிதிமாற் தமிழ் அறிஞர் தமிழ் ஆய்வு அறிஞர் தமிழ்மல்லன் (தனித்தமிழ் இயக்கம் -ஒரு நூற்றாண்டு வரலாறு )
  • முத்தமிழறிஞர் கலைஞர் சமூக நீதி விருது சிவ. இளங்கோ (நிலத்தியில்பின் அரசியல் )
  • சுதேசமித்ரா தமிழ் இதழ் விருது மானுடம் இதழ் நிறுவனம்
  • தொல்காப்பியர் தமிழ் சங்க விருது மயிலை திருவள்ளுவர் தமிழ் சங்கம்
  • அருணாச்சல கவிராயர் விருது - மறத்தமிழன் கலைக்குழு.


உலகளாவிய தலைமைத்துவத்திற்கான விருது :இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான டி.ஒய் சந்திரசூட்டிற்கு ஹார்வர்ட் சட்டப் பள்ளியின் உலகளாவிய தலைமைத்துவத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.இவர் இந்தியாவின் 50வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆவார்

சிறந்த வனஉயிர் புகைப்பட கலைஞர் விருது 2023 :2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த வனஉயிர் புகைப்பட கலைஞர் விருதை ஸ்ரீராம் முரளி வென்றார் . இவர் தமிழ்நாட்டின் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோடிக்கணக்கான மின்மினி பூச்சிகளின் ஒளிர்வை படம் பிடித்தற்காக இந்த விருது வழங்கப்பட்டது .

குளோபல் இந்தியன் விருதை வென்ற முதல் பெண்மணி:குளோபல் இந்தியன் விருதை வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை சுதா மூர்த்தி பெற்றார்.இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தியின் மனைவியும், புகழ்பெற்ற எழுத்தாளரும், பரோபகாரருமான சுதா மூர்த்தி, கனடா இந்தியா அறக்கட்டளையின் குளோபல் இந்தியன் விருதைப் பெற்றுள்ளார்.குளோபல் இந்தியன் விருது, $50,000 மதிப்பிலானது, அந்தந்த துறைகளில் சிறந்து விளங்கும் இந்தியர்களுக்கு வழங்கப்படுகிறது.
புரஸ்கார்" எனப்படும் புதிய தேசிய விருது : அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறையில் "ராஷ்ட்ரிய அறிவியல் புரஸ்கார்" எனப்படும் புதிய தேசிய விருதுகளை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

அன்னை தெராசா விருது-2023 :அமைதிக்கான நோபல் பரிசு 2023-ஐ பெற்ற நர்கீஸ் முகமதிக்கு (Narges Mohammadi) சமூக நீதிக்கான 2023-ஆம் ஆண்டிற்கான அன்னை தெராசா விருது வழங்ப்பட்டுள்ளது

உலகளாவிய தலைமைத்துவத்திற்கான விருது :இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான டி.ஒய் சந்திரசூட்டிற்கு ஹார்வர்ட் சட்டப் பள்ளியின் உலகளாவிய தலைமைத்துவத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.இவர் இந்தியாவின் 50வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆவார்

சிறந்த வனஉயிர் புகைப்பட கலைஞர் விருது 2023 :

2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த வனஉயிர் புகைப்பட கலைஞர் விருதை ஸ்ரீராம் முரளி வென்றார் . இவர் தமிழ்நாட்டின் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோடிக்கணக்கான மின்மினி பூச்சிகளின் ஒளிர்வை படம் பிடித்தற்காக இந்த விருது வழங்கப்பட்டது .

நோயாளிகள் பாதுகாப்பு சேவை: தமிழகத்துக்கு ‘சஃகுஷால்’ விருது 2023:நோயாளிகள் பாதுகாப்பு சேவையில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழகத்துக்கு மத்திய அரசு விருது வழங்கி கெளரவித்துள்ளது. சா்வதேச நோயாளி பாதுகாப்பு தினம் ஆண்டு தோறும் செப். 17-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 

உலகளாவிய இந்தியர் விருதானது : கனடா இந்தியா அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் உலகளாவிய இந்தியர் விருதானது எழுத்தாளரும், சமுக சேவகருமான சுதா மூர்த்திக்கு  வழங்கப்பட்டுள்ளது.

அம்பைக்கு 2023 ஆம் ஆண்டிற்கான டாடா இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது:தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளில் அம்பை குறிப்பிடத்தக்கவர். 1944ல் கோவையில் பிறந்த இவரது இயற்பெயர் சி.எஸ்.லட்சுமி. வரலாற்றாசிரியர். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். நாற்பது ஆண்டுகளாகப் பெண்கள் வரலாறு, வாழ்க்கை பற்றிய ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.


தங்க மயில் விருது : கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் (REC) இடர் மேலாண்மையில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியதற்காக மதிப்புமிக்க தங்க மயில் விருதைப் பெற்றுள்ளது. 1991 ஆம் ஆண்டில் இந்திய இயக்குநர்கள் நிறுவனத்தால் (IOD) நிறுவப்பட்ட தங்க மயில்விருதுகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் சிறப்பிற்கான சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரமாக உருவெடுத்துள்ளன. கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் ஜூலை 1969 இல்அமைக்கப்பட்டது .இந்த நிறுவனம் மகாரத்னாஅந்தஸதை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 


2023 ஆம் ஆண்டின் சிறந்த ஆண்களுக்கான தடகள வீரர் விருது: 2023 ஆம் ஆண்டின் சிறந்த ஆண்களுக்கான தடகள வீரர் விருதுக்கு நீரஜ் சோப்ராவை உலக தடகள அமைப்பு அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்துள்ளது. இந்த கௌரவம், ஈட்டி வீசுதல் துறையில் நீரஜின் குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் அவரது தங்கப் பதக்க வெற்றியை வலியுறுத்துகிறது.

வாழ்நாள் சாதனை விருது : 2023 நவம்பரில் கோவாவில் நடைபெறும் 54வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஹாலிவுட் நடிகரான மைக்கேல் டக்ளஸ் (Michael Douglas)-க்கு சத்திய ஜித்ரே வாழ்நாள் சாதனை விருது (Sathya Jitre Lifetime Achievement Award) வழங்கப்பட உள்ளது.

புதுமைப்பித்தமன் நினைவு விருது – 2022 : 2022-ஆம் ஆண்டுக்கான புதுமைப்பித்தமன் நினைவு விருதானது ஆய்வறிஞர் பொ.வேல்சாமி, எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் விளக்கு இலக்கிய அமைப்பானது இவ்விருதினை வழங்குகிறது.


TNPSC CURRENT AFFAIRS AWARDS HONOURS 2023:
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!