முதல்வரின் காவல் பதக்கம் 2023:
இந்த ஆண்டுக்கான மாண்புமிகு முதல்வர் பதக்கம் குறித்த அறிவிப்பு சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி கடந்த ஜூன் 26ம் தேதி காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
சென்னை வடக்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க்சென்னை வடக்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க்,கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ. பத்ரி நாராயணனுக்கும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷுக்கும், சேலம் உட்கோட்ட இருப்புப் பாதை காவல் துணை கண்காணிப்பாளர் மா. குணசேகரனுக்கும், நாமக்கல் மாவட்ட காவல் உதவி ஆய்வாளர் சு. முருகனுக்கும், நாமக்கல் மாவட்டத்தில் முதல் நிலை காவலராகப் பணியாற்றும் இரா. குமாருக்கும் மாண்புமிகு முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன.
மேலும் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக செயல்பட்ட முன்னாள் மதுரை தென் மண்டலக் காவல்துறைத் தலைவரும், தற்போது சென்னை வடக்கு கூடுதல் ஆணையராகப் பணியாற்றி வரும் அஸ்ரா கர்க் பணியை அங்கீகரித்து ரொக்கப் பரிசு இல்லாமல் சிறப்பு பதக்கம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த விருது மற்றும் பதக்கங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் காவலர்களுக்கு வழங்க உள்ளார்.
முதலமைச்சர் விருது : காவல் அதிகாரிகள் உள்பட 6 பேர் தேர்வு
- சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் அஸ்ரா கார்க்,
- கோவை மாவட்ட எஸ்.பி., பத்தி நாராயணன்,
- தேனி மாவட்ட எஸ்.பி -பிரவீன் உமேஷ் டோங்கரே,
- சேலம் ரெயில்வே டி.எஸ்.பி-குணசேகரன்,
- நாமக்கல்லைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் முருகன்,
- காவலர் குமார்
No comments:
Post a Comment