TNPSC GK குறிப்புகள் தமிழில் அக்டோபர் -2023
இந்திய முதியோர் அறிக்கை 2023 (India Aging Report 2023):
2023-ஆம் ஆண்டிற்கான இந்திய முதியோர் அறிக்கையில் இந்திய முதியவர்களில் 40% ஏழ்மையாகவும் அதில் 18.7%பேர் வருமானம் இல்லாமல் இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கை மக்கள் தொகை நடவடிக்கைகளுக்கான ஐ.நா.சபை நிதியமானது வெளியிட்டள்ளது. மேலும் 2050 ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள் தொகையில் 20% முதியோர்களாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜம்மு-காஷ்மீா்: சுற்றுலா தலமாக மாறும் உலகின் உயரமான ரயில் பாலம்:
ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் உலகின் உயரமான ரயில் பாலத்தை சுற்றுலா தலமாக மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் காத்ரா-பனிஹால் இடையிலான 111 கி.மீ. தொலைவு ரயில் வழித்தடத்தில் சேனாப் ஆற்றின் குறுக்கே 359 மீட்டா் உயரத்தில் கட்டப்பட்டு வரும் 1.3 கி.மீ. நீள ரயில் பாலம் உலகின் உயரமான ரயில் பாலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
அதிக நாட்கள் விண்வெளியில் தங்கிய அமெரிக்கர் :
அமெரிக்காவின் ஃபிராங்க் ரூபியோ 371 நாட்களாக விண்வெளியில் தங்கியதன் மூலம் அதிக நாட்கள் விண்வெளியில் தங்கிய அமெரிக்கர் என்ற சாதனையை படைத்துள்ளார்.ஃபிராங்க் ரூபியோவிற்கு முன் மார்க் வந்தே ஹெய் என்பவர் 355 விண்வெளியில் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இரட்டையர் பிரிவில் முதல்முறையாக இந்தியா பதக்கம்:
ஆசிய விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் முதல்முறையாக இந்தியா பதக்கம் வென்றுள்ளது. இந்தியாவின் அய்ஹிகா முகர்ஜி மற்றும் சுதிர்தா முகர்ஜி இணை, கொரிய குடியரசு இணையை தோற்கடித்து வெண்கலம் வென்றுள்ளது.
பி.டி. உஷாவின் சாதனையை சமன் செய்த தமிழக வீராங்கனை:
ஆசிய விளையாட்டுப் போட்டி 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 55.42 வினாடிகளில் இலக்கை அடைந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை வித்யா ராம்ராஜ் சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலமாக கேரளத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை பி.டி. உஷாவின் சாதனையை வித்யா ராம்ராஜ் சமன் செய்துள்ளார்.
1984 ஒலிம்பிக் தொடரில் 55.42 வினாடிகளில் பி.டி. உஷா இலக்கை அடைந்தது சாதனையாக இருந்தது
உலகளாவிய இணையவேக பரிசோதனை குறியீட்டில் இந்தியா 47-ஆவது இடத்துக்கு முன்னேறியிருப்பதாக இணைய வேக பரிசோதனை தளமான ‘ஓக்லா’ தெரிவித்துள்ளது:
இந்தியாவில் ஜியோ மற்றும் ஏா்டெல் நிறுவனங்களால் 5ஜி இணையசேவை அறிமுகப்படுத்தப்பட்டன. 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இந்தியாவின் இணைய வேக செயல்திறன் 3.59 மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு செப்டம்பரில் விநாடிக்கு 13.87 எம்.பி.யாக ஆக இருந்த சராசரி பதிவிறக்க வேகம் கடந்த ஆகஸ்டு மாதத்தில் விநாடிக்கு 50.21 எம்.பி.யாக உயா்ந்துள்ளது. இதன்மூலம், உலகளாவிய இணையவேக பரிசோதனை குறியீட்டில் (ஸ்பீட்டெஸ்ட் குளோபல் இண்டெக்ஸ்) 119-ஆவது இடத்திலிருந்த இந்தியா 72 இடங்கள் முன்னேறி 47-ஆவது இடத்துக்கு வந்துள்ளது.
இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானம்:
இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானம் குறித்து போர்ப்ஸ் நிறுவனம் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியர்கள் சராசரியாக ஆண்டுக்கு ரூ. 9,45,489 வருவாய் ஈட்டுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநில வாரியான மக்களின் ஆண்டு சராசரி வருவாய் பட்டியலில் ரூ.20,720 தொகையுடன் உத்தரப் பிரதேசம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. தமிழகம் ரூ.19,600 பெற்று 7-வது இடத்தில் உள்ளது.
நகரங்களின் பட்டியலில் சோலாப்பூர், மும்பை, பெங்களூர், தில்லி, புவனேஷ்வர், ஜோத்பூர், புணே, ஸ்ரீநகர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் முதல் 10 இடத்தைப் பெற்றுள்ளன. சென்னை இதில் இடம்பெறவில்லை.
இந்திய ஆண்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.19,53,055 ஆகவும் பெண்களின் சராசரி ஆண்டு வருவாய் ரூ.15,16,296 ஆகவும் இருக்கிறது. மேலும், சம்பளங்களில் பெரிய பங்களிப்பை செலுத்தி இந்தியாவில் ஐ.டி. துறையே முதலிடத்தைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் 2023 போட்டிக்கான உலக தூதர்:
இந்தியாவில் நடைபெறும் 13வது ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான உலக தூதராக சச்சின் டெண்டுல்கரை ஐசிசி (ICC) நியமித்துள்ளது.ICC – International Cricket Council
உலகிலேயே மஞ்சள் உற்பத்தி-இந்தியா முதலிடம்:
உலகிலேயே மஞ்சள் உற்பத்தி, நுகர்வோர் மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. 2022-23 ஆம் ஆண்டில், இந்தியாவில் 3.24 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மஞ்சள் பயிரிடப்பட்டு, 11.61 லட்சம் டன் (உலகளாவிய மஞ்சள் உற்பத்தியில் 75% க்கும் அதிகமானது) உற்பத்தி செய்யப்பட்டது.
இந்தியாவில் 30 க்கும் மேற்பட்ட வகையான மஞ்சள் பயிரிடப்படுகிறது, மேலும் இது நாட்டின் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மஞ்சளை அதிகம் உற்பத்தி செய்கின்றன. தேசிய மஞ்சள் வாரியம் அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.
பனங்கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு:
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடன்குடி பனங்கருப்பட்டிக்கு புவிசார் குறியீடானது கிடைத்துள்ளது.புவிசார் குறியீடு பட்டியலில் முதலிடத்தினை தமிழ்நாடும், இரண்டாவது இடத்தை உத்திரபிரதேசமும், மூன்றாவது இடத்தை கர்நாடகாமும் பிடித்துள்ளன.
புளிக்கவைக்கப்பட்ட பால்- யக் சுர்பி-புவிசார் குறியீடு:
அருணாச்சலப் பிரதேசத்தில் இயற்கையாகவே புளிக்கவைக்கப்பட்ட பால் தயாரிப்பான ‘யக் சுர்பி’க்கு மதிப்புமிக்க புவிசார் குறியீடு (GI) அந்தஸ்து கிடைத்துள்ளது.யாக் (Yak) என்பது இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஒரு மாட்டினம் ஆகும் .
முதல் உயர் தொழில்நுட்ப விளையாட்டுப் பயிற்சி மையம்:
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரில் மாற்றுத்திறனாளிக்கான நாட்டின் முதல் உயர் தொழில்நுட்ப விளையாட்டுப் பயிற்சி மையத்தை பிரதமர் திறந்து வைத்தார் இந்த முன்முயற்சியானது விளையாட்டில் சம வாய்ப்புகளை வழங்குதல், திறமைகளை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு விளையாட்டுத் துறைகளில் பங்கேற்பதை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது
மார்பக புற்றுநோய் அறிக்கை :
கடந்த 10 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பானது ஆண்டுக்கு 6 முதல் 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும், 2021-22 தரவுகளின் படி இந்தியாவில் 13,92,179 பேருக்கும், தமிழ் நாட்டில் 81,814 பேருக்கு புற்றுநோய் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்களை விட பெண்களே அதிக அளவில் புற்றுநோய்க்கு ஆளாகின்றன.
பெண்களில் லட்சத்தில் 52 பேருக்கு மார்பகப் புற்று நோயும், 18 பேருக்கு கர்ப்பப்பை வாய் புற்று நோயும், 6 பேருக்கு கருப்பை புற்றுநோய்க்கும் ஆளாகின்றன.
ஆசியப் போட்டியில் இந்தியா -107 பதக்கங்கள் சாதனை:
ஹாங்ஷௌ ஆசியப் போட்டியில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலப் பதக்கங்களுடன் ஒட்டுமொத்தமாக 107 பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. முதன்முறையாக ஆசியப் போட்டி வரலாற்றிலேயே 100 பதக்கங்களுக்கு மேல் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசிய போட்டிகளில் பங்கு பெற்று அனைத்திலும் தங்கம் வென்ற வீராங்கனை:
19 வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் தான் பங்கு பெற்ற அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் தங்க பதக்கங்களை வென்ற வீராங்கனை ஜோதி சுரேகா ஆவார் . வில்வித்தை வீராங்கனை ஆன இவர் 19 வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் தனிநபர்,கலப்பு இரட்டையர் ,பெண்கள் குழு என மூன்று பிரிவுகளிலும் பங்கு பெற்று மூன்றிலும் தங்க பதக்கங்களை வென்றார் .இதன் மூலம் ஆசிய போட்டிகளில் பங்கு பெற்று அனைத்திலும் தங்கம் வென்ற வீராங்கனை என சாதனை படைத்துள்ளார்
இந்திய கடற்படையில் ‘360 டிகிரி மதிப்பீட்டு முறை
இந்திய கடற்படையில் பணி செய்யும் வீரா்கள் பதவி உயா்வு பெறுவதை அவா்களின் குழுத் தலைவா்களே முடிவு செய்து வருகின்றனா். இதனை மாற்றி வீரா்களின் திறன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் ஆய்வு மேற்கொண்டு பதவி உயா்வு வழங்க ‘360 டிகிரி மதிப்பீட்டு முறையை’ இந்திய கடற்படை அறிமுகப்படுத்தியது.
இம்முறையில் பதவி உயா்வு பெற தகுதி உள்ள அனைத்து வீரா்களின் துறைசாா் அறிவு, தலைமைப் பண்புகள், போா் மற்றும் நெருக்கடி நிலை காலங்களுக்குப் பொருத்தமான தன்மைகள், உயா்பதவி வகிக்க தேவையான தகுதிகள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அடங்கிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வீரா்கள் மதிப்பிடப்படுவா். பின்னா் கொடி அதிகாரியின் தலைமையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழு தோா்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு வீரரையும் தனத்தனியே பகுப்பாய்வு செய்யும். அதன் பின்னரே பதவி உயா்வு வழங்கப்படும். இதன் மூலம் கடற்படையில் மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தங்கள் குறித்தும் அறிய இயலும்.
அமைதியான நாடுகள் பட்டியல்:
உலக அமைதியான நாடுகள் பட்டியில் முதலிடத்தை ஐஸ்லாந்து பிடித்துள்ளது.
அடுத்தடுத்த இடங்கள் முறையே டென்மார்க், நியூசிலாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.
இப்பட்டியலை சர்வதேச சிந்தனை குழுவான பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனத்தால் வெளியிட்டுள்ளது.
இப்பட்டியிலில் 2022-ல் 135வது இடத்தை இந்தியா பிடித்துள்ள 2023-ல் 126வது இடத்தை பிடித்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் முதல் சூரியசக்தி நகரமாகும் அயோத்தி:
சூரிய ஆற்றல் கொள்கையின்படி, புதுப்பிக்கத்தக்க மின்சாரம் மூலம் 10 சதவீத மின் தேவையைப் பூா்த்தி செய்யும் நகரம், சூரிய சக்தி நகரமாக கருதப்படும். உத்தர பிரதேசத்தின் லட்சியத் திட்டமான ‘சூரிய சக்தி ஆற்றல் கொள்கை 2022’-யில் நொய்டா மற்றும் 16 நகராட்சிகளை சூரிய சக்தி நகரங்களாக உருவாக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, உலகப் புகழ்பெற்ற ராமா் கோயில் அமைந்துள்ள அயோத்தியை மாநிலத்தின் முதல் சூரிய சக்தி நகரமாக மாற்றுவதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.
சூரிய சக்தி நகரத் திட்டத்தில் முக்கிய வசதியாக ‘என்டிபிசி க்ரீன்’ நிறுவனத்தால் சரயூ நதிக்கரையில் நிறுவப்பட உள்ள 40 மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட சூரிய சக்தி பூங்கா அமைக்கப்பட உள்ளது.
இந்தியாவின் முதல் சூரியசக்தி நகரம் : மத்தியப் பிரதேசத்தின் ரைசன் மாவட்டத்தில் உள்ள உலகப் பாரம்பரியச் சின்னமான சாஞ்சி இந்தியாவின் முதல் சூரிய நகரமாக மாறியுள்ளது.
இந்திய செல்வந்தர்கள் பட்டியல் 2023 :
ஹுகுன் இந்தியா நிறுவனமானது 2023-ம் ஆண்டுக்கான இந்திய செல்வந்தர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது
இப்பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்தியர்கள்
முதலிடம் – முகேஷ் அம்பானி (ரூ.8.08 லட்சம்)
இரண்டாவது இடம் – கெளதம் அதானி (ரூ.4.47 லட்சம் கோடி)
மூன்றாவது இடம் – ஆதார் பூனா வாலா (ரூ.2.78 லட்சம் கோடி)
வெம்பக்கோட்டை அகழாய்வில் திமிலுடன் கூடிய காளை உருவம் கண்டுபிடிப்பு:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் பகுதியில் அகழாய்வு நடந்து வருகிறது. இதில் பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்து வருகின்றன. இங்கு கிடைக்கும் பொருட்கள் அடிப்படையில் இப்பகுதியில் பழங்காலத்தில் தமிழர் நாகரிகம் சிறந்தோங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், வெம்பக்கோட்டை அகழாய்வின் போது, சுடுமண்ணால் ஆன திமிலுடன் கூடிய காளை உருவம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் கூறுகையில், முன்னோர்கள் பல்வேறு வீர விளையாட்டுக்களில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிவித்தார்.
உலக அளவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு பசி குறியீட்டு பட்டியல் 2023-இந்தியா நிராகரித்துள்ளது
உலக அளவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றை ஆய்வு செய்து பசி குறியீட்டு பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு 125 நாடுகள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 111-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளை விட இந்தியா பின்தங்கியுள்ளது. பாகிஸ்தான் 102வது இடத்திலும், வங்காளதேசம் 81வது இடத்திலும், நேபாளம் 69வது இடத்திலும், இலங்கை 60வது இடத்திலும் உள்ளன. கடந்த ஆண்டு 121 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 107வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பசி குறியீட்டு பட்டியல், தவறான மதிப்பீடு என்று இந்தியா தெரிவித்துள்ளது. பட்டியலையும் நிராகரித்துள்ளது.
கோல்டுடிக்கர் ட்ரோஜன் செயலி:
தற்போது கோல்டுடிக்கர் (GoldDigger) என்ற வைரஸ் செயலியால் கடந்த ஆகஸ்ட் மாதம் இணைய மோசடிகள் நடந்துள்ளது வியட்நாமில் கண்டறியப்பட்டுள்ளது. குரூப் - ஐபி எனப்படும் இணைய பாதுகாப்பு ஆராய்ச்சிக் குழு, இத்தகைய மோசடி நடப்பதைக் கண்டறிந்துள்ளது. இது இந்திய பயனர்களிடமும் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த வைரஸ் மூலம் இணைய மோசடி அல்லது பயனர் வங்கிக்கணக்கில் உள்ள பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. செல்போனில் உள்ள வங்கிக்கணக்கு செயலிகளிலிருந்து தரவுகளை எடுப்பதன்மூலம் இது நடத்தப்படுகிறது.
கோல்டுடிக்கர் ட்ரோஜன் செயலி 2023 ஜூன் முதல் கோல்டுடிக்கர் செயல்பாட்டில் உள்ளதாக இணைய பாதுகாப்புக் குழு தெரிவிக்கிறது. இது செல்போனில் உள்ள சாதாரண ஆன்ட்ராய்டு செயலிகளைப் போலவே இருக்கும். இதன் முதன்மை நோக்கம் பயனர்களின் வங்கிக்கணக்கு தரவுகளை எடுப்பதும், அதன்மூலம் பணத்தை கொள்ளையடிப்பதுதான் என இணைய பாதுகாப்புக் குழு எச்சரிக்கிறது.
புஷ் புல் ரயில்:
இரயில்வே நிர்வாகமானது எளிய மக்களும் அதிவேக ரயிலில் பயணிக்க புஷ் புல் ரயில் எனும் திட்டத்தினை அறிமுகம் செய்கிறது.
புஷ் புல் ரயிலின் பெட்டி பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையிலும், புஷ் புல் ரயிலின் எஞ்சின் மேற்கு வங்கத்தின் சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் ஆலையிலும் தயாரிக்கப்படுகிறது.
உலக அளவில் வீடுகள் அதிக விலைபோகும் நகரங்கள் 2023:
உலக அளவில் குடியிருப்பு வீடுகள் அதிகம் விலைபோகும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் 46 நகரங்களில் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நைட் ஃப்ராங்க் (Knight Frank) என்னும் ரியல் எஸ்டேட் நிறுவனம் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
2023 இரண்டாம் காலாண்டில் எடுக்கப்பட்ட தரவுகளின் படி, குடியிருப்பு வீடுகள் அதிக விலைக்கு விற்பனையாகும் நகரங்களின் பட்டியலில் இந்தியாவில் மூன்று நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்:
2023-ஆம் ஆண்டில் இதுவரை தமிழகத்தில் 128பேரிடமிருந்து 733 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
2022-23 ஆண்டுக்கான உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் பிடித்து விருதினை பெற்றுள்ளது.
உறுப்பு தான திட்டத்தின் கீழ் 36,472 பேர் பதிவு செய்துள்ளன. 1,737 பேரிடம் உடல் உறுப்பு தானம் பெறப்பட்டு 10,353 பெறப்பட்டுள்ளன.
பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை (Passenger Shipping Service) :
40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை அக்டோபர் 14-ல் தொடங்கியது.
நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையானது 60 கடல் மைல் தூரமாக அமைந்துள்ளது
இந்த பயணிகள் கப்பலிற்கு செரியபானி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சைக் (Psyche)
சைக் (Psyche) என்ற சிறுகோளினை ஆய்வு செய்வதற்காக நாசா மற்றும் ஸ்பெக்ஸ்-எக்ஸ் நிறுவனம் இணைந்து விண்கலணை விண்ணில் செலுத்தியுள்ளது.
பூமியிலிருந்து சுமார் 50கோடி கி.மீ தொலைவில் அமைந்துள்ள சைக் சிறுகோளானது செவ்வாய்க்கும், வியாழனுக்கும் இடையில் அமைந்துள்ளது.
கின்னஸ் சாதனை
இந்தியாவின் 60 சாதனைகளானது 2024ஆம் ஆண்டுக்கான கின்னஸ் உலக சாதனை புத்தக பதிப்பில் இடம் பிடித்துள்ளன.
தமிழகத்தில் சா்வதேச தகுதியைப் பெறும் முதல் ரயில் நிலையம்:
தமிழகத்தில் சா்வதேச தகுதியைப் பெறும் முதல் ரயில் நிலையம் என்ற பெயரை சென்னை எழும்பூா் ரயில் நிலையம் பெறவுள்ளது. சென்னையில் நூற்றாண்டுகளை கடந்த பாரம்பரிய கட்டங்களில் ஒன்றான எழும்பூா் ரயில் நிலையத்தை, விமான நிலையத்துக்கு இணையான வசதிகளுடன் மேம்படுத்த ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக ரூ.734.91 கோடியில் சா்வதேச தரத்தில் மேம்படுத்தும் வகையில் 2022-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இப்பணியை ஹைதராபாதைச் சோ்ந்த நிறுவனமும், திட்ட மேலாண்மை பணியை ரூ.14.56 கோடியில் மும்பையை சோ்ந்த நிறுவனமும் மேற்கொண்டு வருகின்றன.
இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமம் 2023 :
பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் அமைந்துள்ள நவன்பிண்ட் சர்தாரன் கிராமம் சமீபத்தில் மத்திய சுற்றுலா அமைச்சகத்தால் “இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமம் 2023” என்ற பட்டத்தை வென்றது. தேசிய நெடுஞ்சாலை-54க்கு தெற்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள நவன்பிந்த் சர்தாரன் கிராமம் மாதா வைஷ்ணோ தேவி கோயில், காங்க்ரா, தர்மசாலா, டல்ஹவுசி மற்றும் பிற பிரபலமான சுற்றுலா தலங்களுக்கு இடையே அமைந்துள்ளது.
பாம்புக்கடி – உயிரிழப்பவர்கள் பட்டியல்
பாம்புக்கடியால் உலகளவில் 54 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் இந்தியாவில் ஆண்டுக்கு 58 ஆயிரம் பேர் இறக்கின்றனர்.
தமிழ் நாடானாது இந்தியா அளவில் பாம்புக்கடியால் உயிரிழப்பவர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்துள்ளது.
உலகில் 350 பாம்பு இனங்களில் 60 பாம்பு இனங்கள் மட்டுமே விஷம் கொண்டவையாக உள்ளன.
அமேஸ்-28:
முப்பரிமாண அச்சிடப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்ட முதல் கட்டடமான அமேஸ்-28 என்ற கட்டிடத்தை திறந்து வைப்பதன் மூலம் கட்டுமானத் துறையில் கேரளா குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த புதுமையான கட்டடக்கலை 380 சதுர அடி, ஒரு அறை கொண்ட கோடைகால வீடு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் திறக்கப்பட்டது. இந்தியாவின் முதல் முப்பரிமாண அச்சிடப்பட்ட வீடு IIT-மத்ராஸில் துவஸ்தா என்ற பெயரில் திறக்கப்பட்டது.
நீர்வாழ் விலங்காக தேர்வு
அருகிவரும் இவ்வினங்களான கங்கை நன்னீரில் வாழும் ஓங்கில்கள் (Dolphin) உத்திரபிரதேச மாநிலத்தின் நீர்வாழ் விலங்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேரி கங்கா, மேரி டால்பின் (Mary Ganga, Mary Dolphin) என்னும் பிரச்சாரத்தினை டால்பின்களை பாதுகாக்க மேற்கொண்டுள்ளது.
அசாமின் மாநில விலங்காகவும் இந்தியாவின் நீர்வாழ் விலங்காகவும் (2009) உள்ளது
உலக திறமைகள் தரவரிசை 2023 :
சர்வதேச மேலாண்மை மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள உலக திறமைகள் தரவரிசை-2023 பட்டியலில் இந்தியா 56வது இடம் பிடித்துள்ளது.
மக்களின் வாழ்க்கைதரம், குறைந்தபட்ச ஊதியம், கல்வி ஆகியவற்றின் ஆய்வுகளின் படி 64 நாடுகள் அடங்கியுள்ள பட்டியலானது வெளியிடப்பட்டள்ளது.
முதல் மூன்று இடங்கள் முறையே சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், ஐஸ்லாந்து போன்ற நாடுகள் பிடித்துள்ளன.
“உலகின் மிகவும் சரியான நேரத்தில் செயல்படும் விமான நிலையம் ” :
சிரியம் என்ற நிறுவனத்தின் இன் அறிக்கையின்படி பெங்களூரு சர்வதேச விமான நிலையம் என்றும் அழைக்கப்படும் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் (KIA) கடந்த மூன்று மாதங்களாக “உலகின் மிகவும் சரியான நேரத்தில் செயல்படும் விமான நிலையம் ” என்ற சாதனை படைத்துள்ளது .
இந்தியாவின் முதல் நில வரைபடவியல் அருங்காட்சியகம் திறப்பு :
உத்திரகாண்ட்டின் முசோரியின் பார்க் எஸ்டேட்டில் இந்தியாவின் முதல் நில வரைபடவியல் அருங்காட்சியகமான சர்ஜார்ஜ் அருங்காட்சியகமானது திறக்கப்பட்டுள்ளது.
இருவாச்சி இனப் பறவைகள் :
வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு வால்பாறை பகுதியிலுள்ள (ஆனைமலை புலிகள் காப்பக) இருவாச்சி பறவைகளை பாதுகாக்க வேண்டுமெனக் கூறியுள்ளார்.
உலகில் 55 இருவாச்சி இனப் பறவைகளும், இந்தியாவில் 6 இருவாச்சி இனப் பறவைகளும் மேற்குத் தொடர்ச்சி மலையில் 4 இருவாச்சி இனப் பறவைகளும் உள்ளன.
உலகின் 200 முக்கிய சுற்றுச்சூழல் மண்டலங்களில் ஒன்றான மேற்குத் தொடர்ச்சி மலையில் மலவார் கருப்பு வெள்ளை இருவாச்சி, இந்திய சாம்பல் இருவாச்சி, மலபார் சாம்பல் இருவாச்சி, மலை இருவாச்சி போன்ற 4 இருவாச்சி இனப் பறவைகள் உள்ளன.
“தமிழகத்தில் அழிந்து வரும் இருவாச்சி இனத்தை காக்க வேண்டும் என தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளது.
உலக ஓய்வூதியக் குறியீடு 2023:
15 வது வருடாந்திர மெர்சர் சி. எஃப். ஏ இன்ஸ்டிடியூட் வெளிட்ட அறிக்கையில் உலக ஓய்வூதியக் குறியீடு 2023 இல் 47 நாடுகளில் இந்தியா 45 வது இடத்திற்குச் சரிந்தது 45.9 புள்ளிகள் பெற்றுள்ளது. 2022ல் 44 நாடுகளில் 41வது இடத்திலும், 2021ல் 43 நாடுகளில் 40வது இடத்திலும் இருந்தது. நெதர்லாந்து 85.0 பெற்று முதல் இடத்திலும் , ஐஸ்லாந்து 83.5 பெற்று இரண்டாம் இடத்திலும் மற்றும் டென்மார்க் 81.3 பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளது .அர்ஜென்டினா மிகக் குறைந்த 42.3 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது .
ரயில் மோதல்களில் இருந்து காட்டு யானைகளை பாதுகாக்கும்- (AI) :
ரயில் மோதல்களில் இருந்து காட்டு யானைகளை பாதுகாக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான ஆரம்ப எச்சரிக்கை முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதுமையான திட்டம் எட்டிமடை(கோயம்புத்தூர்) – வாளையார் (பாலக்காட்) ரயில் பாதையில் செயல்படுத்தப்படும்.
இந்தியாவின் மிக உயரமான தேசியக் கொடி :
பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக எழுப்பப்பட்டுள்ள இந்தியாவின் மிக உயரமான தேசியக் கொடியினை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஏற்றிவைத்தார்.
அம்ரித்ஸர் மாவட்டத்தில் உள்ள அட்டாரி - வாகா எல்லைப் பகுதியில் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தால் 418 அடி உயரத்தில் இந்தியாவின் மிக உயரமான தேசியக் கொடி புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் அதிவேக (RRTS-Regional Rapid Transit System) ரயில் :
மாநில நகரங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்தை நவீனமயப்படுத்த இந்த அதிவிரைவு ரயிலுக்கு 'நமோ பாரத்’ என பெயரிடப்பட்டுள்ளது.
ஷாஹிபாபாத் - துஹாய் இடையே 17 கி.மீ. தொலைவு வழித்தடத்தில் ஷாஹிபாபாத், காஜியாபாத், குல்தாா், துஹாய், துஹாய் டிபோட் ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன. உலகத் தரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த ரயில் நிலையங்களில் 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். பயணிகளின் வருகைக்கு ஏற்ப 5 நிமிட இடைவெளியில் ஒரு ரயிலை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக இந்த ரயில்கள் 180 கி.மீ. வேகத்தில் செல்லும். முதல்கட்டமாக ரூ.30,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை பானிபட் வரையில் நீட்டிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பிரீமியம் பேருந்து:
தில்லி மேல்தட்டு மக்களும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் வகையில் பிரீமியம் பேருந்து சேவையை அந்த மாநில அரசு தொடங்கவுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லியில் மாசு அளவைக் குறைக்கவும், தனியார் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கத்தில் பிரீமியம் பேருந்து சேவைக்கான திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்வு :
உலக சுற்றுலா அமைப்பால் (UNWTO) குஜராத் மாவட்டத்தின் தோர்தா கிராமமானது சிறந்த சுற்றுலா கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- தோா்தோ- ஸ்பெஷல்: சிறந்த சுற்றுலா கிராமம் 2023
இரு புயல்கள் :
தேஜ் என்ற பெயரினை அரபிக்கடலில் உருவான புயலுக்கு இந்தியா பரிந்துரை செய்துள்ளது.
தேஜ் என்பதன் பொருள் வேகம் என்பதாகும்.
ஈரான் நாடானது வங்கக்கடலில் உருவான புயலக்கு ஹாமூன் என்ற பெயரினை பரிந்துரை செய்துள்ளது.
தமிழ்நாடு அறிவுசார் நகரம்
ரூ.200 கோடி செலவில் 1703 ஏக்கர் பரப்பளவில் திருவள்ளூவர் மாவட்டத்தின், பெரியபாளையம் ஊத்துக்கோட்டையில் தமிழ்நாட்டின் அறிவுசார் நகரம் அமைய உள்ளது.
ஆபரேஷன் சக்ரா-2 :
சிபிஐ அதிகாரிகளால் இணைய வழி நிதி மேசடி வழக்குகள் தொடர்பான 76 இடங்களில் சோதனையை தொடங்கியுள்ளன.
இதற்கு ஆபரேஷன் சக்ரா-2 என பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சிபிஐ அதிகாரிகள் இன்டர்போல் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து 115 இடங்களில் ஆபரேஷன் சக்ரா-1 என்ற பெயரில் சோதனை நடத்தியுள்ளன.
அதிகம் மாசடைந்த நகரங்களின் காற்றின் தரக்குறியீடு :
அதிகம் மாசடைந்த நகரங்களின் காற்றின் தரக்குறியீடு மதிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
காற்றின் தர மதிப்பு குறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் தில்லி முதலிடத்தில் உள்ளது.
போபால் மகிளா தானா மகளிர் காவல் நிலையம் -ISO சான்றிதழைப் பெற்றது :
போபால் நகரில் அமைந்துள்ள போபால் மகிளா தானா மகளிர் காவல் நிலையம் அதன் செயல்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பில் உயர் தரங்களை பராமரிப்பதற்காக ISO சான்றிதழைப் பெற்றது. ISO சான்றிதழைப் பெற்ற இரண்டாவது காவல் நிலையம் இதுவாகும். மத்தியப் பிரதேசத்தில் உள்ள மிஸ்ரோட் காவல் நிலையம் ISO சான்றிதழைப் பெற்ற முதல் காவல் நிலையமாகும்.
கூகுள் DigiKavach :
இந்தியாவில் ஆன்லைன் நிதி மோசடிகளை எதிர்த்துப் கூகுள் DigiKavach திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. கூகுளின் DigiKavach ஆன்லைன் மூலம் பண மோசடி செய்பவர்கள் கையாளும் உத்திகளைப் புரிந்துகொண்டு எதிர் நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதன் மூலம் இந்த மோசடி நடவடிக்கைகளை எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது
மின்காந்த ரயில் துப்பாக்கி :
உலகிலேயே முதல் மின்காந்த ரயில் துப்பாக்கிகளை ஜப்பான் இயக்கியுள்ளது.இந்த துப்பாக்கிகள கடலோர கப்பலில் இருந்து ஜப்பான் இயக்கியுள்ளது.
சிறந்த பசுமை இராணுவ நிலையம் :
ஜம்மு-காஷ்மீரின் உதாம்பூர் இராணுவ நிலையமானது சிறந்த பசுமை இராணுவ நிலையமாக தேர்வாகியுள்ளது.
முதல் பெண் டி.ஜி :
இந்திய ஆயுதப்படை மருத்துவமனையின் முதல் பெண் டி.ஜி.யாக சதனா சக்சேனா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் பெண் நடுவராக பில்கிஸ் மிர் பணியாற்ற உள்ளார்.இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை :
இந்தியா, சீனா, ரஷியா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு ஐந்து மாதங்களுக்கு விசா தேவையில்லை என்ற தீர்மானத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
பாதுகாப்பன நகரங்கள் பட்டியல் :
செர்பியாவிலுள்ள நம்பியோ தனியார் நிறுவனமானது வெளியிட்டுள்ள பாதுகாப்பு நகரங்கள் பட்டியிலில் இந்திய அளவில் சென்னை நகரமானது முதலிடத்தையும்,உலகளவில் 127வது இடத்தினையும் பிடித்துள்ளது.
மிகவும் குறைந்த வயதில் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் வென்றவர்:
16 வயதான உன்னதி ஹூடா 2023 ஆண்டிற்கான அபுதாபி மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டியில் வெற்றி பெற்றார். .அவர் சக இந்தியரான சாமியா இமாத் ஃபரூக்கியை 21-16, 22-20 என்ற கணக்கில் தோற்கடித்தார். மேலும் மிகவும் குறைந்த வயதில் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் வென்றவர் என்ற வரலாறு சாதனை படைத்தார்.
இந்தியாவின் மிக நீளமான ரோப்கார் சேவை :
முசோரி-டேராடூன் இடையே இந்தியாவின் மிக நீளமான ரோப் கார் சேவையானது (Rope car service) தொடங்கப்பட உள்ளது.
2022-23 ஆம் ஆண்டில் லிக்னைட் உற்பத்தியில் தமிழகம் :
2022-23 ஆம் ஆண்டில் லிக்னைட் உற்பத்தியில் தமிழகம் 22.480 மில்லியன் டன் உற்பத்தி செய்துள்ளதாக நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிலக்கரி அமைச்சகம் தரவுகள் படி உற்பத்தியில் தமிழகம் 49.97% ஆகவும், குஜராத் 26.27% ஆகவும், ராஜஸ்தான் 22.67% ஆகவும் உள்ளது. இந்தியாவில் லிக்னைட் படிவுகள் முதன்மையாக தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் அதிகமாக கிடைக்கின்றன..மேலும் ஒடிசா, கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் குறைவாக கிடைக்கின்றன.
ஆராட்டு' திருவிழா :
திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாப ஸ்வாமி கோவிலில் 'ஆராட்டு' திருவிழா கொண்டாடப்படும் ஒரு வளமான பாரம்பரியம் உள்ளது.
'ஆராட்டு' திருவிழாவின் தனிச்சிறப்பு என்னவென்றால், பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரச குடும்பத்தின் தலைவர் இன்றும் பாரம்பரிய உடையில் ஊர்வலத்தின் போது தெய்வங்களின் சிலைகளை அழைத்துச் செல்வதுதான். ஆராட்டு விழா ஆண்டுக்கு இருமுறை கொண்டாடப்படுகிறது.
மிகப்பெரிய தொலைநோக்கி :
சீனா நாடானது உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியான டிரைடெண்டினை (TRIDENT) நீருக்கடியில் நியூட்ரினோ கண்டறிய தயாரிக்கிறது.
தேர்தல் ஆணைய விளம்பர தூதராக ராஜ்குமார் ராவ் நியமனம் :
வாக்காளர்களை வாக்களிப்பதற்கு ஊக்குவிக்கவும், தேர்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்களை தேர்தல் விழிப்புணர்வுக்கான விளம்பர தூதராக இந்திய தேர்தல் ஆணையம் அவ்வப்போது நியமிக்கும்.
தேசிய அளவில் விழிப்புணர்வு அடையாளமாக கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, நடிகர் அமீர் கான், சமூக சேவகி நிருகுமார், பாடகர் ஜஸ்பீர் ஜசி ஆகியோர் இதற்கு முன்பு நியமிக்கப்பட்டுள்ளனர். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார்.
இதேபோல தமிழ்நாட்டின் தேர்தல் விளம்பரத் தூதர்களாக பாடகி சித்ரா, நடிகர்கள் நிழல்கள் ரவி, ரோபோ சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வரிசையில் நடைபெற இருக்கிற 5 மாநில தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதராக பிரபல இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் நியமிக்கப்பட்டு உள்ளார்.
நிலவு குடிச்ச சிங்கங்கள்-புத்தகம் :
இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் சுயசரிதை நிலவு குடிச்ச சிங்கங்கள் என்ற புத்தகமாக நவம்பரில் வெளியாக இருக்கிறது.
"கலிக்ஸ்கோகா" என்ற தடுப்பூசி :
பிரேசிலில் உள்ள விஞ்ஞானிகள் கோகோயின் மற்றும் கிராக் போதைக்கான ஒரு அற்புதமான சிகிச்சையை "கலிக்ஸ்கோகா" என்ற தடுப்பூசி வடிவில் உருவாக்கியுள்ளனர். இந்த புதுமையான தடுப்பூசி உடலில் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதன் மூலம் கோகோயினின் விளைவுகளை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முதல் மருத்துவக் கல்லூரியைப் பெற்றிருக்கிறது நாகாலாந்து:
மாநிலம் என்ற அந்தஸ்தைப் பெற்று 60 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், முதல் மருத்துவக் கல்லூரியைப் பெற்றிருக்கிறது நாகாலாந்து. அக்டோபர் இரண்டாம் வாரத்தில், நாகாலாந்து மாநிலம் கோஹிமாவில், மிக ரம்மியமான பின்னணியில் அமைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்.
கேரளா-காசர்கோடு :
கேரளா, காசர்கோடு மாவட்டம் நிர்வாகத்திற்காக மரம், மலர், பறவை, மற்றும் இனங்களை தனக்கென சொந்தமாக அறிவித்துள்ளது. இவ்வறிப்பு இந்தியாவில் காசர்கோடு மாவட்டம் அறிவித்துள்ளது.
- மரம் – கஞ்சிரம்
- மலர் – பெரிய பொலதலி
- பறவை – வெண்வயிற்று கடல் பருந்து இனம்
- விலங்கு – கேண்டரின் ராட்சத மென் ஓடு கொண்ட ஆமை
பணக்கார நாடுகளில் குடியுரிமை :
OECD (The Organization for Economic Cooperation and Development) வெளியிட்டுள்ள இடம் பெயர்வு அறிக்கையின்படி பணக்கார நாடுகளில் குடியுரிமை பெறுவதில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியர்கள் 2021-ஆம் ஆண்டில் 1.3 லட்சம் பணக்கார நாடுகளில் குடியுரிமையை பெற்றுள்ளன.
இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கும் நாடுகளில் முறையே அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா இ டம்பிடித்துள்ளன.
தமிழகம் முழுவதும் 6.11 கோடி வாக்காளர்கள்:
தமிழகத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3 கோடி பேர், பெண்கள் 3.10 கோடி பேர், மூன்றாம் பாலினத்தவர் 8,016 பேர் உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6.52 லட்சம் வாக்காளர்களும் குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 1.69 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்.
தொலைநோக்கு இந்தியா@2047 :
“தொலைநோக்கு இந்தியா@2047 என்பது 2047 ஆம் ஆண்டுக்குள் $18,000-$20,000 தனிநபர் வருமானத்துடன் இந்தியாவை $30 டிரில்லியன் பொருளாதாரத்திற்கு உயர்த்துவதற்கான ஒரு விரிவான திட்டமாகும்.
இந்திய அரசாங்கம் ‘தொலைநோக்கு இந்தியா@2047’ எனப்படும் ஒரு விரிவான தேசிய தொலைநோக்குத் திட்டத்தில் செயல்பட்டு வருகிறது. 2047க்குள் நாட்டை வளர்ந்த நாடாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது.
நடுத்தர வருமான வலையில் இந்தியா விழுவதைத் தடுக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்துகிறது. திட்டத்தின் வரைவு டிசம்பருக்குள் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல இந்திய மாநிலங்களும் தங்கள் சொந்த வளர்ச்சிக்கான தொலைநோக்கு திட்டங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
1 வது பழங்குடி டிஜிட்டல் அட்லஸ் :
விலங்குகளின் தோலுக்கு மாற்றாகப் பயன்படுத்தக்கூடிய-மலாய் :
கேரளாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம், விலங்குகளின் தோலுக்கு மாற்றாகப் பயன்படுத்தக்கூடிய தேங்காய் நீரில் இருந்து தயாரிக்கப்படும் மலாய் என்ற மூலப்பொருளை உருவாக்கியுள்ளது .
முதிர்ந்த தேங்காய் மற்றும் பிற தாவரப் பொருட்களிலிருந்து பயன்படுத்தப்படாத தண்ணீரை நொதிக்கச் செய்வதன் மூலம் மாலை தயாரிக்கப்படுகிறது.
குறிப்பு' பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தி:
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) பிரத்யேக 'குறிப்பு' பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது, இது இந்தியாவில் இத்தகைய உற்பத்தியின் முதல் நிகழ்வைக் குறிக்கிறது.
இந்த எரிபொருள்கள் உயர்ந்த விவரக்குறிப்புகளைக் கொண்டுள்ளன மற்றும் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் மற்றும் சர்வதேச தானியங்கி தொழில்நுட்ப மையம் (ICAT) மற்றும் இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் போன்ற சோதனை முகவர்களால் நடத்தப்படும் அளவுத்திருத்தம் மற்றும் சோதனை செயல்முறைகளுக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.
அனைத்து மாவட்டங்களிலும் Hallmark centres கொண்ட -முதல் மாநிலம் :
14 மாவட்டங்களிலும் அடையாள முத்திரை மையங்களைக்(Hallmark centres) கொண்ட முதல் மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அடையாள முத்திரை மையங்களைத் திறப்பது கேரளாவை தங்க வணிகத்தின் மையமாக மாற்றுவதோடு தங்க ஆபரணங்களை வாங்குவதற்கு நாட்டின் மிகவும் நம்பகமான சந்தையாக உருமாற உள்ளது.
“Breaking the Mould : Reimagining India’s Economic Future” :
“Breaking the Mould : Reimagining India’s Economic Future” என்ற புத்தகத்தை எழுதியவர் ரகுராம் ராஜன் மற்றும் ரோஹித் லும்பா ஆவர். மேலும் இது 2023 டிசம்பரில் வெளியாக உள்ளது. இந்தப் புத்தகம் இந்தியாவின் பொருளாதார எதிர்காலத்தைப் பற்றிய யோசனைகளைத் தருகிறது.