அதிகம் மாசடைந்த நகரங்களின் காற்றின் தரக்குறியீடு :
அதிகம் மாசடைந்த நகரங்களின் காற்றின் தரக்குறியீடு மதிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
தில்லியில் கடந்த சில நாள்களாக காற்றின் தரம் குறைந்து, அதிகம் மாசடைந்து வருகிறது. அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் பட்டாசு வெடித்தல், பந்தம் ஏற்றுதல் போன்றவைகளால் காற்று மாசு அதிகரிக்கிறது. இதனிடையே காற்றின் தர மதிப்பு குறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் தில்லி முதலிடத்தில் உள்ளது. கடந்த (16.10.23) தில்லியில் தரக் குறியீடு 83 ஆகவும், (17.10.23) 117 ஆகவும் இருந்தது. கடந்த (18.10.23) இந்த குறியீடு மிதமான அளவில் இருந்தது. தொடர்ந்து மோசமடைந்த காற்றின் தரக் குறியீடு (22.10.23) 313 ஆக அதிகரித்தது.
காற்றின் தர மதிப்பு குறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் தில்லி முதலிடத்தில் உள்ளது.
சமீபத்திய CPCB தரவுகளின்படி மோசமான AQI உள்ள முதல் 10 நகரங்கள் இங்கே:
- கிரேட்டர் நொய்டா 354
- ஃபரிதாபாத் 322
- டெல்லி 313
- முசாபர்நகர் 299
- பகதூர்கர் 284
- மனேசர் 280
- கைதல் 269
- பல்லப்கர் 264
- பரத்பூர் 261
- பிவாடி 261