சிறந்த சுற்றுலா கிராமம் 2023 :
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள தோா்தோ கிராமத்தை சிறந்த சுற்றுலா கிராமமாக உலக சுற்றுலா அமைப்பு (டபிள்யூ.டி.ஓ) அறிவித்துள்ளது.
தோா்தோ- ஸ்பெஷல்:
- குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்திருக்கும் இந்த தோர்தோ கிராமத்துக்கு அப்படி என்னதான் ஸ்பெஷல் என்று பார்த்தால், கண்ணுக்கு எட்டியவரை வெள்ளை வெளேறென்று காணப்படும் வெள்ளை மணல்தான். உப்பு சதுப்பு நிலப்பரப்பான ஒட்டுமொத்த கிராமமும் நிலவொளியில் காணப்படும்.
- தார் பாலைவனத்தை ஒட்டிய உப்பு சதுப்பு நிலப்பரப்பாக இருந்தாலும், இதனை சுற்றுலா பயணிகள் கொண்டாடித் தீர்க்கின்றனர். இதற்கெல்லாம் உச்சமாக ஆண்டுதோறும் நடைபெறும் ரன் உற்சவம் என்ற திருவிழா மூன்று மாதங்களுக்கு களைகட்டும். இந்த ரன் உற்சவத்தில் பங்கேற்கும் மக்களுக்கு நிச்சயம் வாழ்வில் ஒரு புதிய அனுபவம் கிடைக்குமாம்.
- பிற நாள்களிலும்கூட இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பான காட்சிகள் காத்திருக்கும். எங்குப் பார்த்தாலும் வெள்ளைநிற மணல்,, எப்போதும் சாயம் போகாத காட்சிகளுடன், ரன் உற்சவம் அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை நடைபெறுகிறது.
- உலகின் வேறு எங்குமே காண முடியாத ஒரு காட்சியை இங்குக் காண முடியும் என்பதால், உலகம் முழுவதிலும் இருந்து இங்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்துகொண்டே இருக்கிறார்கள். இங்குள்ள சிறு குடில்களை வாடகைக்கு எடுத்து ஒரு சில நாள்கள் தங்கியிருப்பது பேரனுபவமாக இருக்குமாம்.
- இங்கு பகல் பொழுதைவிடவும், இரவு நேரம் மிக அழகாக இருக்கும் என்றும், நட்சத்திரங்கள் மின்னும் வானமும், வெள்ளை வெளேறென்ற மணல் பரப்பும் ரம்மியமான காட்சியாக இருக்குமாம்.
உலக சுற்றுலா அமைப்பு (UNWTO):
ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு (UNWTO), நிலையான வளர்ச்சிக்கான சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக செயல்படும் ஐக்கிய நாடுகளின் அமைப்பாகும். இது கடந்த வியாழன் அன்று, உலகளவில் உள்ள சிறந்த சுற்றுலா கிராமங்கள் - 2023 பட்டியலை அறிவித்தது. சிறப்பான நிலப்பரப்புகள், கலாசார பன்முகத்தன்மை மற்றும் சமையல் மரபுகளைப் பாதுகாக்கும் அதே வேளையில் கிராமப்புறங்களின் வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் கிராமங்களுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது என்று உலக சுற்றுலா அமைப்பு வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
SOURCE : DINAMANI