TNPSC CURRENT AFFAIRS AWARDS HONOURS NOVEMBER 2023 :
TNPSC UNIT II: நடப்பு விவகாரங்கள் விருதுகள் கௌரவங்கள் 2023
விருதுகள் கௌரவங்கள் 2023 :
ரோகினி நய்யார் பரிசு : சத்தீஸ்கரில் உள்ள பஸ்தாரில் பழங்குடியின பெண்களுக்கு அதிகாரம் அளித்ததற்காக தீனாநாத் ராஜ்புத் என்பவருக்கு ரோகினி நய்யார் பரிசு 2 வது பதிப்பு வழங்கப்பட்டது .40 வயதுக்குட்பட்ட, கிராமப்புற இந்திய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, இளம் இந்தியர்களின் முன்மாதிரியான பங்களிப்பை அங்கீகரிப்பது ஒரு பரிசு.மறைந்த பொருளாதார நிபுணர்-நிர்வாகி டாக்டர் ரோகிணி நய்யாரின் நினைவாக இந்த பரிசு வழங்கப்பட்டது.
பாலோன் டி’ஓர் விருது – 2023 : கால்பந்து விளையாட்டில் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வழங்கப்படும் பாலோன் டி’ஓர் 2023 (Ballon d’or) விருதானது அர்ஜென்டினாவின் மெஸ்ஸிக்கும், ஸ்பெயினின் – அயிட்டானா பொர்மதிக்கும் வழங்கப்பட்டுள்ளது.இவ்விருதினாது மெஸ்ஸி 8வது முறையாக வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த தமிழ் உச்சரிப்பு விருது 2023:தமிழ் வளர்ச்சிதுறை சார்பில் தமிழ்நாடு அரசின் சிறந்த தமிழ் உச்சரிப்பு விருதானது (Best Tamil Pronunciation Award) செல்வக்குமார், பொற்கொடி, சுஜாதா பாபு, திவ்ய நாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கேரள ஜோதி விருது 2023:2021-ம் ஆண்டிலிருந்து கேரள அரசால் வழங்கப்படும் கேரளாவின் உயரிய குடிமை விருதான கேரள ஜோதி விருதுக்கு எழுத்தாளர் டி.பத்மநாபன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலகாளவிய பொறுப்பு சுற்றுலா விருது :2023-ஆம் ஆண்டிற்கான உலகாளவிய பொறுப்பு சுற்றுலா விருதினை கேரள மாநிலம் பெற்றுள்ளது.
ஹஸ்முக் ஷா நினைவு விருது 2023:ஆல்வின் ஆன்டோ சூழலியல் ஆய்வுகளுக்கான ஹஸ்முக் ஷா நினைவு விருதை வென்றார்.திரு. ஆன்டோ, லட்சத்தீவுகளில் உள்ள பவளப்பாறைகளின் மீள்தன்மை பற்றிய விரிவான ஆராய்ச்சிக்காக அங்கீகரிக்கப்பட்டவர், (ICAR-Central Marine Fisheries Research Institute (CMFRI))காலநிலை மாற்றம் மற்றும் மனிதனால் தூண்டப்பட்ட பிற காரணிகளால் இந்த முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்கொள்ளும் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எடுத்துக்காட்டுகிறது. ஹஸ்முக் ஷா நினைவு விருது, குஜராத் சூழலியல் சங்கத்தால் நிறுவப்பட்டது மற்றும் கச்சனார் அறக்கட்டளை மூலம் நிதியளிக்கப்பட்டது, ஆராய்ச்சி, மேம்பாடு அல்லது புதுமையான சுற்றுச்சூழல், தொழில்நுட்ப அல்லது சமூக தீர்வுகளை செயல்படுத்துவதன் மூலம் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த நபர்களை கௌரவிப்பதற்கும் வெகுமதி அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது
உலகாளவிய பொறுப்பு சுற்றுலா விருது :
2023-ஆம் ஆண்டிற்கான உலகாளவிய பொறுப்பு சுற்றுலா விருதினை கேரள மாநிலம் பெற்றுள்ளது.
நற்றமிழ் பாவலர் விருது 2022
தமிழக வளர்ச்சி துறையால் வழங்கப்படும் நற்றமிழ் பாவலர் விருதானது (Natramil Pavalar Award) எழில்வாணன், சுடர்த்தமிழ்ச்சோழன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டுக்கான ஆப்பிள் மியூசிக் விருது :
2023-ம் ஆண்டுக்கான ஆப்பிள் மியூசிக் விருது அமெரிக்காவைச் சேர்ந்த இசை கலைஞர் டெய்லர் ஸ்விஃப்ட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் ஆப்பிள் மியூசிக்கில் நாள்தோறும் அதிகமாக கேட்கப்பட்ட 100 பாடல்கள் பட்டியலில் டெய்லர் ஸ்விஃப்ட்டின் 65 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.
சமீபத்தில் டெய்லர் ஸ்விஃப்டின் ‘தி எராஸ் டூர்’ என்கிற கான்செர்ட் படம் வெளியாகி உலகளவில் வசூலில் சாதனை புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வானவில் வாக்குச் சாவடி மையம் ((Rainbow Polling Centre) உருவாக்கப்பட்டுள்ளது.
கலாகர் புரஸ்கர் விருது:
மங்களூருவில் நடைபெற்ற 19வது கலாகர் புரஸ்கார் விழாவில் கொங்கணி பாடகரும், பாடலாசரியரும், இசையமைப்பாளரான அபோலினரிஸ் டிசோவிற்கு கலாகர் புரஸ்கர் விருது (Kalakar Puraskar Award) வழங்கப்பட்டுள்ளது.
கலாகர் புரஸ்கார்’ விருது :
புகழ்பெற்ற19 வது ‘கலாகர் புரஸ்கார்’ விருது பிரபல கொங்கணி பாடகர், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளரான அபோலினரிஸ் டிசோசாவுக்கு வழங்கப்பட்டது. 2005-ம் ஆண்டு முதல் ‘கலாகர் புரஸ்கார்’ விருது வழங்கப்பட்டு வருகிறது. இசை, நடனம், நாடகம், நாட்டுப்புறவியல் மற்றும் சினிமா உள்ளிட்ட கொங்கணி கலாச்சாரம் தொடர்பான பல்வேறு துறைகளில் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த வருடாந்திர விருது கர்நாடகா பகுதியைச் சேர்ந்த நபர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஐசிசி-யின் 2023 ஆண்டிற்கான அக்டோபர் மாத விருது :
ஐசிசி-யின் 2023 ஆண்டிற்கான அக்டோபர் மாத விருதிற்கு நியூசிலாந்தின் வீரரான ரச்சின் ரவீந்திரா-வும் மேற்கிந்திய தீவுகள் வீராங்கனையான ஹெய்லி மேத்யூஸ்-யும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
முகம் விருது 2023 :
இந்திய வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் சுதாராமனுக்கு முகம் விருது 2023 வழங்கப்பட்டுள்ளது
வாழ்நாள் அமைதியை சீர்குலைக்கும் விருது :
இந்தியாவினைச் சேர்ந்த பிரிட்டிஷ் நாவலர் சல்மான் ருஷ்டிக்கு உலகில் முதன் முதலாக வாழ்நாள் அமைதியை சீர்குலைக்கும் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
ஜேசிபி இலக்கியப் பரிசு:2023
இந்திய எழுத்தாளர்களின் நேரடி புனைவு அல்லது அவர்களின் மொழிபெயர்க்கப்பட்ட புனைவு நூலுக்கு வழங்கப்பட்டு வரும் ஜேசிபி நிறுவனத்தின் இந்த விருது 2018-ல் தொடங்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டுக்கான ஜேசிபி விருது தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘ஆளண்டாப் பட்சி’ நாவலின் மொழிபெயர்ப்பான ‘ஃபயர் பேர்ட்’ நூலுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதினைப் பெறும் முதல் தமிழ்ப் படைப்பு என்கிற பெருமையும் ‘ஆளண்டாப்பட்சி’ நாவலுக்கு உண்டு. இதற்கான விருது தொகை ரூ.25 லட்சம். மொழிபெயர்ப்பாளருக்குக் கூடுதலாக ரூ.10 லட்சம் ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப்படும்.
இது புதுதில்லியில் அறிவிக்கப்பட்டது. இந்த புத்தகத்தை பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா வெளியிட்டது.
இந்த விருதினை முந்தைய வருடங்களில் மலையாள எழுத்தாளர்கள் பென் யாமின், எஸ்.ஹரீஷ், ஜெயஸ்ரீ களத்தில் உள்ளிட்டோர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
லண்டனின் கிரீன் ஆப்பிள் விருது:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு லண்டனின் கிரீன் ஆப்பிள் விருது கிடைத்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய பிறகு, பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்குவது குறைந்திருக்கிறது.
கிரீன் ஆப்பிள் விருதின் கார்பன் குறைப்பு பிரிவில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது.
உணவுத் திருவிழா விருது 2023 :
புதுதில்லியில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் பிரதமரின் உணவுப் பதப்படுத்தம் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தில் சிறந்து விளங்கிய தமிழ்நாட்டிற்கு விருது வழங்பபட்டுள்ளது.
டாக்டர் பிரீதம் சிங் டிரான்ஸ்பர்மேஷனல் லீடர் விருது2023:
2023 ஆம் ஆண்டில், OP ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான பேராசிரியர் டாக்டர். சி ராஜ் குமாருக்கு இது வழங்கப்பட்டது .
டாக்டர் பிரீதம் சிங் டிரான்ஸ்ஃபார்மேஷனல் லீடர் விருது, இந்திய உயர்கல்விக்கு பங்களிக்கும் தலைமைத்துவ சிறப்பிற்காக பணியாற்றும் துணைவேந்தர் / இயக்குனருக்கு வழங்கப்படுகிறது.
'மிகவும் நம்பகமான டைல் பிராண்ட்' :
குடோன் டைல்ஸ் (Qutone Tiles ) 'மிகவும் நம்பகமான டைல் பிராண்ட்' எனத் தேர்ந்தெடுக்கப்பட்டது, மாதுரி தீட்சித்திடம் இருந்து Global Excellence Awards விருதைப் பெற்றது.
உலக பாரம்பரிய நீர்ப்பாசன கட்டமைப்புக்கான சர்வதேச விருது :
150 ஆண்டுகள் பழமையான ஸ்ரீவைகுண்டம் அணைக்கு (தூத்துக்குடி) உலக பாரம்பரிய நீர்ப்பாசன கட்டமைப்புக்கான சர்வதேச விருது வழங்கப்படுகிறது.
இவ்விருதானது சர்வதேச நீர்பாசனம் மற்றும் வடிகால் ஆணையம் சார்பில் வழங்கப்படுகிறது
இந்திரா காந்தி பரிசு 2023:
2022 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான இந்திரா காந்தி பரிசு இந்திய மருத்துவ சங்கம் (IMA) மற்றும் இந்திய பயிற்சி பெற்ற செவிலியர்கள் சங்கத்திற்கு வழங்கப்பட்டது. இந்த விருது இந்தியாவில் கோவிட் -19 வீரர்களின் இடைவிடாத முயற்சிகளுக்களுக்காக வழங்கப்பட்டது . இந்த பரிசு 25 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசைக் கொண்டுள்ளது. அமைதிக்கான இந்திரா காந்தி பரிசு முதன்முதலில் 1986 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
சர்வதேச இலக்கிய விருதான தஹான் பரிசைப் பெற்ற முதல் பெண்மணி :
மொஹாலியைச் சேர்ந்த தீப்தி பாபுதா, பஞ்சாபி மொழியில் புனைகதை புத்தகங்களுக்கான மிகப்பெரிய சர்வதேச இலக்கிய விருதான தஹான் பரிசைப் பெற்ற முதல் பெண்மணி ஆனார். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் பஞ்சாபி இலக்கியத்திற்கான தஹான் பரிசை வென்றார் தீப்தி பாபுதா.
பாபுதா தனது சிறுகதைத் தொகுப்பான 'புக் இயோன் சா லைண்டி ஹை' ('பசி இப்படித்தான் சுவாசிக்கிறது')க்காக இந்த விருதைப் பெற்றுள்ளார். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் உள்ள நார்த்வியூ கோல்ஃப் மற்றும் கன்ட்ரி கிளப்பில் நடைபெற்ற விழாவில் அவருக்கு $25,000 CAD ரொக்க விருதும் கோப்பையும் வழங்கப்பட்டது.
நகைச்சுவைக்காக 51 வது சர்வதேச எம்மி விருது:
நகைச்சுவைக்காக 51 வது சர்வதேச எம்மி விருதை வீர் தாஸ் வென்றார் மேலும் இந்திய தயாரிப்பாளர் ஏக்தா கபூருக்கு நியூயார்க்கில் சர்வதேச இயக்குநரக விருது வழங்கப்பட்டது.
பசுமை சாம்பியன்’ விருது:
சென்னை வா்த்தக மையத்தில் பசுமைக் கட்டுமான அமைப்பு சாா்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ‘பசுமை சாம்பியன்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் நிறுவனம் சிறந்த சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக கடந்த ஏப்.24-ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் ‘பசுமை உலகம்’ விருதுடன் வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது. தொடா்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக நவ.20-ஆம் தேதி லண்டனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ‘க்ரீன் ஆப்பிள்’ விருதுடன் தரவரிசையில் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
54வது சர்வதேச திரைப்பட திருவிழா, கோவா – விருதுகள்:
- KEY POINTS : International Film Festival 2023
நான்சென் விருது 2023
கென்யாவில் பரந்து விரிந்து கிடக்கும் முகாம்களில் வாடும் தனது தோழர்களுக்கு புத்தகங்கள் மற்றும் கல்வியைக் கொண்டு வரும் முன்னாள் சோமாலிய அகதி அப்துல்லாஹி மிரே ஐநா அகதிகள் அமைப்பின் மதிப்புமிக்க நான்சென் விருதை வென்றவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நான்சென் அகதி விருது என்பது ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையரால் (UNHCR- United Nations High Commissioner for Refugees) ஆண்டுதோறும் வழங்கப்படும் பதக்கம் ஆகும் .அகதிகள், இடம்பெயர்ந்தவர்கள் அல்லது நாடற்றவர்களுக்காக சிறந்த பங்களிப்பைச் செய்த தனிநபர்கள், குழுக்கள் அல்லது அமைப்புகளை இந்த விருது அங்கீகரிக்கிறது.இந்த விருதை UNHCR அமைப்புகளின் முதல் உயர் ஆணையர், Gerrit Jan van Heuven Goedhart 1954 இல் Fridtjof Nansen க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நிறுவப்பட்டது . Fridtjof Nansen அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் ,
விருதுகள் கௌரவங்கள் 2023 :
- சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள் 2023
- TAMIL NADU GOVERNMENT AWARDS LIST 2023 / தமிழக அரசு விருதுகள்: 2023
- தமிழகத்துக்கு ‘சஃகுஷால்’ விருது 2023:
- நோபல் பரிசு 2023 வெற்றியாளர்கள் முழுமையான பட்டியல்2023
- புரஸ்கார்" எனப்படும் புதிய தேசிய விருது :
- தமிழக அரசுக்கு ‘சஃகுஷால்’ விருது 2023
- கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது 2023
- STATE AWARD FOR BEST IMPLEMENTATION OF SMART CITIES PROGRAMME 2023
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல் | முக்கிய தினங்கள்
- நாட்டின் 69-வது தேசிய விருதுகள் 2023
- நாட்டின் சிறந்த திட்டத்துக்கான விருது 2023
- நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் விருது 2023
- சுதந்திர தின விழாவில் தமிழக அரசு விருதுகள்: 2023
- முதல்வரின் காவல் பதக்கம் 2023
- தி கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர் விருது 2023