தேசிய கோபால் ரத்னா விருதுகள்:
தேசிய கோபால் ரத்னா விருதுகள் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தால் வழங்கப்படுகின்றன. உற்பத்தித்திறன் மேம்பாடு, உள்நாட்டு இனங்களைப் பாதுகாத்தல் மற்றும் பால்பண்ணை கூட்டுறவுகளை திறம்பட நிர்வகித்தல் ஆகியவற்றுக்காக புதுமையான புதிய தொழில்நுட்ப நடைமுறைகளைப் பின்பற்றும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை ஊக்குவிப்பதற்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த விருதுகளுக்கு பொருத்தமான நபர்கள் மற்றும் அமைப்பு களுக்கு பின்வரும் பிரிவுகளில் அடையாளம் காணும்:
நாட்டு மாடுகள் / எருமை இனங்களை வளர்க்கும் சிறந்த பால் பண்ணையாளர்,
சிறந்த பால் கூட்டுறவு / பால் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் பால் பண்ணையாளர் உற்பத்தியாளர் அமைப்பு
சிறந்த செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர் (Artifical Insemination Techiniue ).
தேசிய கோபால் ரத்னா விருது தகுதிச் சான்றிதழ், நினைவுப்பரிசு மற்றும் முதல் இரண்டு பிரிவில் மட்டும் பரிசை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
- ரூ.5,00,000/- (ரூ.5 லட்சம் மட்டுமே) -1-வது இடம்
- ரூ.3,00,000/- (ரூ.3 லட்சம் மட்டுமே)- 2-வது இடம்
- ரூ.2,00,000/- (ரூ.2 லட்சம் மட்டுமே) -3-வது இடம்
சிறந்த செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர் (AIT) பிரிவில், தேசிய கோபால் ரத்னா விருது தகுதி சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு மட்டுமே வழங்கப்படும் . செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர் (AIT) பிரிவில் ரொக்கப் பரிசு வழங்கப்படாது.
No comments:
Post a Comment