TODAY CURRENT AFFAIRS IN TAMIL 28.11.2023 :
பசுமை சாம்பியன்’ விருது:
சென்னை வா்த்தக மையத்தில் பசுமைக் கட்டுமான அமைப்பு சாா்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ‘பசுமை சாம்பியன்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் நிறுவனம் சிறந்த சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக கடந்த ஏப்.24-ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் ‘பசுமை உலகம்’ விருதுடன் வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது. தொடா்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக நவ.20-ஆம் தேதி லண்டனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ‘க்ரீன் ஆப்பிள்’ விருதுடன் தரவரிசையில் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
“உங்களை தேடி உங்கள் ஊரில்” :
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “உங்களை தேடி உங்கள் ஊரில்” என்னும் திட்டத்தை துவக்க உள்ளார். இந்த திட்டமானது ஒவ்வொரு மாதமும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தாலுகாக்களுக்கு மாவட்ட ஆட்சியர் செல்ல வேண்டும் என்பதாகும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஏதாவது ஒரு வட்டத்தில் மாதத்தில் ஒரு நாள் தங்க வேண்டும்.இந்த புதிய திட்டம் டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.இந்த திட்டம் களத்தில் முதல்வர் திட்டத்தின் அடுத்த கட்டமாக கருதப்படுகிறது.
மாநிலங்கள் வாரந்தோறும் வெளியிடும் கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விகிதம்:
தங்களுக்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்காக மாநிலங்கள் வாரந்தோறும் வெளியிடும் கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விகிதம் கடந்த வாரம் 7.67 சதவீதமாக உள்ளது. முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் இது 4 அடிப்படைப் புள்ளிகள் குறைவாகும். இது, நடப்பு 2023-24-ஆம் நிதியாண்டில் அதிகபட்ச வாராந்திர வட்டி விகிதமாகும். கடந்த வாரத்துக்கான ஏலத்தில், நாட்டின் 11 மாநிலங்கள் அரசுப் பத்திரங்களை (எஸ்ஜிஎஸ்) வெளியிட்டதன் மூலம் ரூ.11,600 கோடி திரட்டின. இது, அந்த மாநில அரசுகள் ஏற்கெனவே நிா்ணயித்திருந்த இலக்கான ரூ.15,000 கோடியை விட 22 சதவீதம் குறைவாகும்.
“புதிய இந்தியாவுக்கான புதிய கல்வி” :
ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் பிரம்மா குமாரிகள் நடத்திய ‘புதிய இந்தியாவுக்கான புதிய கல்வி’ பிரச்சாரத்தை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார்.மாணவர்களிடையே ஒழுக்க மதிப்புகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த இயக்கம் சிறந்த சமூகத்தை உருவாக்குவதற்கு பங்களிக்கிறது. “புதிய இந்தியாவுக்கான புதிய கல்வி” என்ற இயக்கத்தின் துவக்கம் கல்வி முறையில் தார்மீக விழுமியங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு இந்திய அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது..
இந்தியா – பெயர் மாற்றம் :
தேசிய மருத்துவ ஆணையத்தின் National Medical Commission இலச்சினையில் பொறிக்கப்பட்டிருந்த இந்தியா என்னும் பெயரானது பாரத் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உடல் நலம் வேண்டி வழிபடும் தன்வந்திரியின் உருவமும் இணைக்கப்பட்டுள்ளது.
ஆசியான்-இந்தியா சிறுதானிய திருவிழா 2023:
2023 ஆம் ஆண்டின் ஆசியான்-இந்தியா சிறுதானிய திருவிழா இந்தோனேசியாவில் நடைபெற்றது .இது சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நிலையான விவசாயத்தை ஊக்குவிக்கவும் ஒரு தளமாக செயல்படுகிறது. இந்த சிறுதானிய திருவிழா ஆசியான் நாட்டிற்கான இந்திய தூதரகம் மற்றும் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். சிறுதானியங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சமையல் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கவும், நிலையான விவசாயத்தை வளர்க்கவும் இந்த விழா ஒரு தளமாக செயல்படுகிறது.
நியூஸிலாந்தின் 42-ஆவது பிரதமராக கிறிஸ்டோஃபா் லக்ஸன்:
நியூஸிலாந்தின் 42-ஆவது பிரதமராக கிறிஸ்டோஃபா் லக்ஸன் பொறுப்பேற்றாா். 53 வயதாகும் முன்னாள் தொழிலதிபரான அவரது தேசியக் கட்சி, கடந்த மாதம் 14-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தோ்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றியது. அதையடுத்து, 2 சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அவா் ஆட்சிமைத்துள்ளாா்.
ரைத்து பந்து திட்டம் (Rythu Bandhu Scheme):
தெலுங்கானாவில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதால் ரைத்து பந்து திட்டம் (Rythu Bandhu Scheme) தேர்தல் ஆணையத்ததால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
2018-ல் இத்திட்டம் விவசாயிகளுக்கு வருடம் இருமுறை ரூ.5,000 வழங்கும் திட்டமாகும்.
இந்தியாவின் மிகப்பெரிய புலிகள் காப்பகம்:
மத்தியபிரதேசத்தில் தாமோ மாவட்டத்தில் நெளராதேகி வனவிலங்கு சரணாலயம், ராணி துர்காவதி வனவிலங்கு சரணாலயம் இணைந்து இந்தியாவின் மிகப்பெரிய புலிகள் காப்பகமாக உருவாக்கப்பட்ட உள்ளது.
9வது தேசிய அளவிலான மாசு தடுப்பு ஒத்திகை:
இந்திய கடலோரக் காவல்படையால் குஜராத்தின் வாடினாரில் 9வது தேசிய அளவிலான மாசு தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. தேசிய எண்ணெய் கசிவு பேரழிவு தற்செயல் திட்டத்தின் விதிகளைப் பயன்படுத்தி கடலில் எண்ணெய் கசிவைச் சமாளிக்க பல்வேறு வள முகமைகளுக்கு இடையிலான தயார்நிலை மற்றும் ஒருங்கிணைப்பின் அளவைச் சோதிக்கும் நோக்கத்திற்காக இந்த பயிற்சி நடைபெற்றது .
31 எம்க்யூ-9பி ப்ரிடேட்டா் ட்ரோன்கள் பெற அமெரிக்காவுடன் ஒப்பந்தம்:
அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் 31 எம்க்யூ-9பி ப்ரிடேட்டா் ட்ரோன்கள் (ஆளில்லா விமானம்) கொள்முதல் ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா திட்டமிட்டுள்ளது. நீா்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிராக போா்புரிதல், கடல் பரப்பில் கண்காணிப்பு உள்பட பல்வேறு பணிகளை எம்க்யூ-9பி ப்ரிடேட்டா் ட்ரோன்கள் மேற்கொள்ளும். அதிக உயரத்தில் நீடித்து உழைக்கும் அந்த ட்ரோன்கள், வானில் 35 மணி நேரத்துக்கும் மேலாக பறக்கக் கூடியவை. அந்த ட்ரோன்களால் 4 ஹெல்ஃபையா் வகை ஏவுகணைகள், சுமாா் 450 கிலோ வெடிகுண்டுகளை சுமந்து செல்லமுடியும். இந்நிலையில், அமெரிக்காவிடம் இருந்து 31எம்க்யூ-9பி ப்ரிடேட்டா் ட்ரோன்களை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்புத் தளவாட கொள்முதல் கவுன்சில் கடந்த ஜூனில் ஒப்புதல் அளித்தது. 31 ட்ரோன்களில் இந்திய கடற்படைக்கு 15 ட்ரோன்கள், ராணுவம் மற்றும் விமானப் படைக்குத் தலா 8 ட்ரோன்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
Mapping of Archieves In India:புத்தகம்
இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் ((IGNCA) கலாநிதி பிரிவின் இயக்குநர் ரமேஷ் சந்திர கவுர் எழுதிய இந்திய ஆவணக்காப்பக வரைபடம்(Mapping of Archieves In India). இந்த புத்தகம் இந்தியா முழுவதும் செயலில் உள்ள காப்பகங்கள் மற்றும் அவற்றின் சேகரிப்புகளின் கலைக்களஞ்சியமாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது
டேவிஸ் கோப்பை ஆடவா் டென்னிஸ் போட்டி:
டேவிஸ் கோப்பை ஆடவா் டென்னிஸ் போட்டியின் 111-ஆவது சீசனில் இத்தாலி 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை சாய்த்து சாம்பியன் பட்டம் வென்றது. வைல்டு காா்டு வாய்ப்பு மூலம் போட்டிக்கு வந்த இத்தாலி, டேவிஸ் கோப்பை வெல்வது இது 2-ஆவது முறையாகும். அதுவே கடந்த 47 ஆண்டுகளில் இது முதல் முறை
ஜோதிபா பூலே:
நவம்பர் 28-ல் காந்தியடிகளுக்கு முன்பே மகாத்மா என்னும் பட்டம் பெற்ற ஜோதிராவ் புலே நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
1873-ல் சத்யசோதக் சமாஜம் அமைப்பை தொடங்கியவர் குலாம்கிரி என்னும் நூலினையும் எழுதியுள்ளார்.
ஜோதிராவ் புலேவின் மனைவியான சாவித்திரிபாய் புலே முதல் பெண் ஆசிரியர் ஆவார்.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN NOVEMBER 2023 IN TAMIL
நவம்பர் 28 - சிவப்பு கிரக தினம்
ரெட் பிளானெட் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 28 அன்று அனுசரிக்கப்படுகிறது. நவம்பர் 28, 1964 இல் மரைனர் 4 விண்கலம் ஏவப்பட்டதை நினைவுகூரும் ரெட் பிளானட் தினம்.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN OCTOBER 2023 IN TAMIL :
- NOVEMBER 2023 - LIST OF IMPORTANT DAYS AND DATES IN NOVEMBER 2023 IN TAMIL
- இந்திய தேசிய தினங்கள் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
- யுனெஸ்கோவில் அனுசரிக்கப்படும் சர்வதேச தினங்கள்
- 2023 ஆம் ஆண்டின் தமிழ் முக்கிய நாட்கள் மற்றும் தேதிகள் பட்டியல்
SUMMITS AND CONFERENCES 2023 IN TAMIL:
- SUMMITS AND CONFERENCES JUNE 2023 IN TAMIL
- SUMMITS AND CONFERENCES JULY 2023 IN TAMIL
- SUMMITSAND CONFERENCES AUGUST 2023 IN TAMIL
- SUMMITSAND CONFERENCES SEPTEMBER 2023 IN TAMIL
- SUMMITS AND CONFERENCES - OCTOBER 2023 IN TAMIL