54வது சர்வதேச திரைப்பட திருவிழா, கோவா – விருதுகள்:
கோவாவில் நடைபெறும் 54வது சர்வதேச திரைப்பட திருவிழாவில் சிறந்த திரைப்படமாக எண்ட்னஸ் பார்டர் (Endless Borders) தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பெர்சிய மொழியை சார்ந்த இப்படத்திற்கு தங்க மயில் விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த இயக்குநருக்கான வெள்ளி மயில் விருதானது ஸ்டீபன் கோமண்டரேவ்-க்கு Blaga’s Lessons என்ற படத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த ஓடிடி விருதானது பஞ்சாயத்-2 (Panchayat 2) என்ற வெப் சீரியசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
யுனஸ்கோ காந்தி பதக்கமானது டிரிப்ட்டு (Drift) என்ற படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
பிரிவு | படம் | விருது |
சிறந்த திரைப்படம் | எண்ட்னஸ் பார்டர் (Endless Borders) | தங்க மயில் விருது |
சிறந்த இயக்குநர் | ஸ்டீபன் கோமண்டரேவ் (Blaga’s Lessons படத்திற்காக) | வெள்ளி மயில் விருது |
வெப் சீரியஸ் | பஞ்சாயத்-2 (Panchayat 2) | சிறந்த ஓடிடி விருது |
டிரிப்ட்டு (Drift) | யுனஸ்கோ காந்தி பதக்கம் |