TNPSC GK சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள் 2023-2024

TNPSC  Payilagam
By -
0
Sahitya Akademi Award
சாகித்திய அகாதமி விருது


சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள் 2023-2024

சாகித்திய அகாதமி விருது 1954 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான சாகித்திய அகாதமி விருது 24 மொழிகளில் அளிக்கப்பட்டு வருகிறது. 

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள் 2024:
  • தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது, எழுத்தாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மமாங் தய் எழுதிய 'தி பிளாக் ஹில்'(THE BLACK HILL) என்ற நாவலை 'கருங்குன்றம்' என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்ததற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள் 2023:
  • 2023-இந்தாண்டுக்கான தமிழ் மொழிக்கான சாகித்திய அகாதமி விருது எழுத்தாளர் தேவிபாரதிக்கு அறிவிக்கப்பட்டது.
  • ‘நீர்வழிப்படூஉம்’ நாவலுக்காக விருது பெற்ற தேவிபாரதி என்று அறியப்படுகிற ந.ராஜசேகரன், 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருபவர். ‘நிழலின் தனிமை’, ‘நட்ராஜ் மகராஜ்’ உள்ளிட்ட நாவல்களும் காந்தியின் இறுதி நாளை மையமிட்ட சிறுகதையான ‘பிறகொரு இரவு’ உள்ளிட்ட கதைகளும் அவரைத் தமிழ் வாசகப் பரப்பில் கவனத்துக்குரியவராக மாற்றியுள்ளது.


1955

தமிழ் இன்பம்

ரா. பி. சேதுப்பிள்ளை

கட்டுரைத் தொகுப்பு

1956

அலை ஓசை

கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி)

புதினம்

1957

விருது வழங்கப்படவில்லை.

1958

சக்கரவர்த்தித் திருமகன்

சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி

இராமாயணம் - உரைநடை

1959

விருது வழங்கப்படவில்லை.

1960

விருது வழங்கப்படவில்லை.

1961

அகல் விளக்கு

மு. வரதராசன்

புதினம்

1962

அக்கரைச் சீமையில்

சோமு (மீ. . சோமசுந்தரம்)

பயண நூல்

1963

வேங்கையின் மைந்தன்

அகிலன் (பி. வி. அகிலாண்டம்)

புதினம்

1964

விருது வழங்கப்படவில்லை.

1965

ஸ்ரீ ராமானுஜர்

பி. ஸ்ரீ. ஆச்சார்யா

வாழ்க்கை வரலாற்று நூல்

1966

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

. பொ. சிவஞானம்

வாழ்க்கை வரலாற்று நூல்

1967

வீரர் உலகம்

கி. வா. ஜகந்நாதன்

இலக்கியத் திறனாய்வு

1968

வெள்ளைப் பறவை

. சீனிவாச ராகவன்

கவிதை நூல்

1969

பிசிராந்தையார்

பாரதிதாசன்

நாடகம்

1970

அன்பளிப்பு

கு. அழகிரிசாமி

சிறுகதைத் தொகுப்பு

1971

சமுதாய வீதி

நா. பார்த்தசாரதி

புதினம்

1972

சில நேரங்களில் சில மனிதர்கள்

ஜெயகாந்தன்

புதினம்

1973

வேருக்கு நீர்

ராஜம் கிருஷ்ணன்

புதினம்

1974

திருக்குறள் நீதி இலக்கியம்

. . திருநாவுக்கரசு

இலக்கியத் திறனாய்வு

1975

தற்காலத் தமிழ் இலக்கியம்

இரா. தண்டாயுதம்

இலக்கியத் திறனாய்வு

1976

விருது வழங்கப்படவில்லை.

1977

குருதிப்புனல்

இந்திரா பார்த்தசாரதி

புதினம்

1978

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

வல்லிக்கண்ணன்

இலக்கியத் திறனாய்வு

1979

சக்தி வைத்தியம்

தி. ஜானகிராமன்

சிறுகதைத் தொகுப்பு

1980

சேரமான் காதலி

கண்ணதாசன்

புதினம்

1981

புதிய உரைநடை

மா. ராமலிங்கம்

இலக்கியத் திறனாய்வு

1982

மணிக்கொடி காலம்

பி. எஸ். ராமையா

இலக்கிய வரலாறு

1983

பாரதி: காலமும் கருத்தும்

தொ. மு. சி. ரகுநாதன்

இலக்கியத் திறனாய்வு

1984

ஒரு காவிரியைப் போல

லட்சுமி (திரிபுரசுந்தரி)

புதினம்

1985

கம்பன்: புதிய பார்வை

. . ஞானசம்பந்தன்

இலக்கியத் திறனாய்வு

1986

இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்

. நா. சுப்ரமண்யம்

இலக்கியத் திறனாய்வு

1987

முதலில் இரவு வரும்

ஆதவன் சுந்தரம்

சிறுகதைத் தொகுப்பு

1988

வாழும் வள்ளுவம்

வா. செ. குழந்தைசாமி

இலக்கியத் திறனாய்வு

1989

சிந்தாநதி

லா. . ராமாமிர்தம்

தன்வரலாற்றுக் கட்டுரை

1990

வேரில் பழுத்த பலா

சு. சமுத்திரம்

புதினம்

1991

கோபல்லபுரத்து மக்கள்

கி. ராஜநாராயணன்

புதினம்

1992

குற்றாலக் குறிஞ்சி

கோவி. மணிசேகரன்

வரலாற்றுப் புதினம்

1993

காதுகள்

எம். வி. வெங்கட்ராம்

புதினம்

1994

புதிய தரிசனங்கள்

பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்)

புதினம்

1995

வானம் வசப்படும்

பிரபஞ்சன்

புதினம்

1996

அப்பாவின் சினேகிதர்

அசோகமித்திரன்

சிறுகதைத் தொகுப்பு

1997

சாய்வு நாற்காலி

தோப்பில் முகமது மீரான்

புதினம்

1998

விசாரணைக் கமிஷன்

சா. கந்தசாமி

புதினம்

1999

ஆலாபனை

அப்துல் ரகுமான்

வசன கவிதைகளின் தொகுப்பு

2000

விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்

தி. . சிவசங்கரன்

விமர்சனம்

2001

சுதந்திர தாகம்

சி. சு. செல்லப்பா

புதினம்

2002

ஒரு கிராமத்து நதி

சிற்பி பாலசுப்ரமணியம்

கவிதை நூல்

2003

கள்ளிக்காட்டு இதிகாசம்

இரா. வைரமுத்து

புதினம்

2004

வணக்கம் வள்ளுவ!

தமிழன்பன்

கவிதை நூல்

2005

கல்மரம்

கோ. திலகவதி

புதினம்

2006

ஆகாயத்துக்கு அடுத்த வீடு

மு. மேத்தா

கவிதை நூல்

2007

இலை உதிர் காலம்

நீல பத்மநாபன்

புதினம்

2008

மின்சாரப் பூ

மேலாண்மை பொன்னுசாமி

சிறுகதைத் தொகுப்பு

2009

கையொப்பம்

புவியரசு

கவிதை நூல்

2010

சூடிய பூ சூடற்க

நாஞ்சில் நாடன்

சிறுகதைத் தொகுப்பு

2011

காவல் கோட்டம்

சு. வெங்கடேசன்

புதினம்

2012

தோல்

டேனியல் செல்வராஜ்

புதினம்

2013

கொற்கை

ஜோ டி குரூஸ்

புதினம்

2014

அஞ்ஞாடி

பூமணி

புதினம்

2015

இலக்கியச் சுவடுகள்

. மாதவன்

கட்டுரைத் தொகுப்பு

2016

ஒரு சிறு இசை

வண்ணதாசன்

சிறுகதைத் தொகுப்பு

2017

காந்தள் நாட்கள்

இன்குலாப்

கவிதை நூல்

2018

சஞ்சாரம்

எஸ். ராமகிருஷ்ணன்

புதினம்

2019

சூல்

சோ. தர்மன்

புதினம்

2020

செல்லாத பணம்

இமையம்

புதினம்

2021

சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை

அம்பை

சிறுகதைத் தொகுப்பு

2022

காலா பாணி

மு. ராஜேந்திரன்

புதினம்

2023

நீர்வழிப் படூஉம்

தேவிபாரதி

புதினம்


சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்

தமிழில் சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் நூல்? = ரா.பி. சேதுப்பிள்ளை அவரால் இயற்றிய தமிழ் இன்பம் (1955).

தமிழில் சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் கட்டுரை தொகுப்பு நூல்? = ரா.பி. சேதுப்பிள்ளை அவரால் இயற்றிய தமிழ் இன்பம் (1955).

தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் புதினம் (நாவல்)? = கல்கி இயற்றிய “அலையோசை” (1956)

தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் உரைநடை நூல்? = ராஜாஜி எழுதிய “சக்கரவர்த்தி திருமகள்” (1958)

தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் பயண நூல்? = சோமு அவர்கள் இயற்றிய “அக்கரைச் சீமையில்” (1962)

தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் வாழ்க்கை வரலாற்று நூல்? = பி.ஸ்ரீ. ஆச்சார்யா அவர்கள் இயற்றிய “ஸ்ரீ ராமானுஜர்” (1965)

தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் இலக்கிய திறனாய்வு நூல்? = கி. வா. ஜெகந்நாதன் இயற்றிய “வீரர் உலகம்” (1967)

தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் கவிதை நூல்? = அ. சீனிவாச ராகவன் இயற்றிய “வெள்ளைப் பறவை” (1968)

தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் நாடக நூல்? = பாரதிதாசனின் “பிசிராந்தையார்” நாடகம் (1969)

தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் சிறுகதை தொகுப்பு நூல்? = கு. அழகிரிசாமியின் “அன்பளிப்பு” (1970)

தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் இலக்கிய வரலாறு நூல்? = பி.எஸ். ராமையா அவர்களின் “மணிக்கொடி காலம்” (1982)

தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் தன் வரலாறு நூல்? = லா.ச.ராமாமிர்தம் அவர்களின் “சிந்தாநதி” (1989)

தமிழில் சாகித்திய அகாதமி விருது பெற்ற வசன கவிதை நூல்? = அப்துல் ரகுமானின் “ஆலாபனை” (1999)

தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் விமர்சன நூல்? = தி.க. சிவசங்கரன் எழுதிய “விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்” (2000).

சாகித்திய அகாடமி விருதுகள் இதுவரை ஐந்து முறை தமிழுக்கு வழங்கப்படவில்லை = 1957, 1959, 1960, 1964, 1976.

விருதுகள் கௌரவங்கள் 2023 :

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!