இந்திய செல்வந்தா்கள் பட்டியல் 2023:
ஹுருன் இந்தியா’ வெளியிட்டுள்ள இந்திய செல்வந்தா்களின் பட்டியலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2019-இல் 6-ஆவது இடத்தில் இருந்த அதானியின் சொத்துகள் நிகழாண்டு 5 மடங்கு அதிகரித்து இரண்டாம் இடத்தில் உள்ளாா். முகேஷ் அம்பானியின் சொத்துகள் கடந்த 5 ஆண்டுகளில் 2.1 மடங்கும், மூன்றாம் இடத்தில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் தலைவா் அதாா் பூனவாலாவின் சொத்து மதிப்பு (ரூ.2.78 லட்சம் கோடி) மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைவா் சிவ நாடாரின் சொத்து மதிப்பு 23 சதவீதம் அதிகரித்து (ரூ.2.28 லட்சம் கோடி) நான்காவது இடத்தில் உள்ளாா். இந்தியாவில் மொத்தம் 1,319 செல்வந்தா்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். கடந்த ஆண்டு ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கு 2 புதிய கோடீஸ்வரா்கள் இந்தியாவில் உருவாகி வந்தனா். தற்போது இந்த எண்ணிக்கை 259-ஆக உள்ளது. இது கடந்த 12 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகமாகும்.
இந்தியாவில் 51 செல்வந்தா்களின் சொத்துகள் நிகழாண்டு இரட்டிப்பாகி உள்ளது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 24-ஆக இருந்தது. மும்பையில் சோ்ந்த 328 பேரும், தில்லியில் 199 பேரும், பெங்களூரில் 100 பேரும் செல்வந்தா்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா். செல்வந்தா்களை உருவாக்கும் முதல் 20 நகரங்களில் முதல் முறையாக திருப்பூரும் இடம்பெற்றுள்ளது.
முதல் 10 செல்வந்தா்களின் சொத்து மதிப்பு (லட்சம் கோடியில்)
1. முகேஷ் அம்பானி ரூ.8.08
2. கெளதம் அதானி ரூ.4.47
3. அதாா் பூனவாலா ரூ.2.78
4. சிவ நாடாா் ரூ.2.28
5. கோபிசந்த் ஹிந்துஜா ரூ.1.76
6. திலீப் சங்வி ரூ.1.64
7. எல்என் மித்தல் ரூ.1.62
8. ராதாகிருஷ்ணன் தாமினி (டிமாா்ட்) ரூ.1.43
9. குமாா்மங்களம் பிா்லா ரூ.1.25
10. நீரஜ் பஜாஜ் ரூ.1.20
No comments:
Post a Comment