உலக அளவில் வீடுகள் அதிக விலைபோகும் நகரங்கள் 2023:
உலக அளவில் குடியிருப்பு வீடுகள் அதிகம் விலைபோகும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் 46 நகரங்களில் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நைட் ஃப்ராங்க் (Knight Frank) என்னும் ரியல் எஸ்டேட் நிறுவனம் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
2023 இரண்டாம் காலாண்டில் எடுக்கப்பட்ட தரவுகளின் படி, குடியிருப்பு வீடுகள் அதிக விலைக்கு விற்பனையாகும் நகரங்களின் பட்டியலில் இந்தியாவில் மூன்று நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
அதில் மும்பைக்கு 19வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. 2022 இரண்டாம் நிதியாண்டில் 95வது இடத்தில் மும்பை இருந்தது. தற்பொது 76 இடங்கள் முன்னேறியுள்ளது. இங்கு ஆண்டுக்கு 6% விலையேற்றம் நடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பைக்கு அடுத்தபடியாக பெங்களூரு நகரம் 22வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 77வது இடத்தில் இருந்த நிலையில், 5.3% விலையுயர்வு இருப்பதால், தற்போது உலக அளவில் 22 இடம் பிடித்துள்ளது.
தில்லி நகரம் இந்திய அளவில் மூன்றாவது இடத்திலும் உலக அளவில் 25வது இடத்திலும் உள்ளது. இங்கு குடியிருப்பு வீடுகளுக்கான விலையேற்றம் ஆண்டுக்கு 4.5% ஆல உள்ளது.
இந்திய அளவில் சென்னை, கொல்கத்தா நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன. உலக அளவில் சென்னை 39வது இடத்திலும், கொல்கத்தா 40வது இடத்திலும் உள்ளது. இங்கு 2.5% விலையுயர்வு இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் முதலிடத்தில் துபை உள்ளது. அதற்கு அடுத்தபடியாக 2.டோக்கியோ, 3,மணிலா, 4.மியாமி, 5.ஷாங்காய் ஆகிய நகரங்கள் முறையே அடுத்தடுத்து உள்ளன.
SOURCE : DINAMANI